“அதுக்காக விரதம் இருக்கணும்னு அவசியம் இல்லடி.. மீல்ஸ் தான் வேணான்னு சொன்னேன். பட் ஸ்பைசியா கொஞ்சம் வேணும்” என்று அவளின் கழுத்தில் அழுத்தமாக புதைந்தான்.
அழுத்தமாக புதைந்தவனின் தலையை இறுக்கமாக தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவளின் காதில் தன் மீசையை வைத்து உரசி, கன்னத்து பக்கம் சென்று, கன்னத்தை குத்தி கிழித்து மறுபடியும் கழுத்தில் படிந்து கூச செய்து, பற்களால் காயம் செய்துக் கொண்டு இருந்தவன்,
“எனக்கு உன் உடை ரொம்ப உறுத்துதுடி..” சொல்லிக் கொண்டே எட்டி விளக்கை அணைத்தவன், அவளின் உடைகளை நாகரீகம் மறந்து போய் கலைத்து பெண்ணவளை வாரிக் கொண்டான் ஆதி வாசியாய்.
--
அடுத்த நாள் காலையில் கண்ணை திறக்கவே முடியவில்லை பனிக்கு. உடலெல்லாம் அத்தனை பாரமாய் இருந்தது. அதுவும் அவளின் காலில் அத்தனை குடைச்சல் இருந்தது..
“என்னடா இது” என்று தலையை உதறி கண் விழித்தவளின் நெஞ்சில் ஒரு பாரம். கீழே குனிந்துப் பார்த்தாள். கதிரவன் தான் அவளின் மார்பில் தலை வைத்து அவளின் மீது மொத்தமாக கவிழ்ந்து தூங்கிக் கொண்டு இருந்தான்.
அவனின் தலையை கலைத்து விட்டவளுக்கு அப்பொழுது தான் புரிந்தது.. ஏன் உடம்பு பாரமாக இருந்தது என்று.. ஆனால் கால் முட்டியில் அப்படி ஒரு குடைச்சல்.. குதிங்கால் அப்படி ஒரு வலி குடுத்தது..
நேற்று இரவு நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.. சின்ன சின்ன அத்துமீறல், உயிரை கரைத்து குடிக்கும் இதழ் முத்தங்கள் அதை தாண்டி பெரிதாக எதுவும் நடக்கவில்லை. கதிரவனின் சின்ன சின்ன அத்துமீறலிலே அதிகம் சிவந்துப் போய் அவனை அடக்க முடியாமல் அவனின் நெஞ்சிலே சாய்ந்துக் கொண்டது எல்லாம் நினைவுக்கு வர,
அவனின் தலை முடியை கலைத்து விட்டு அவனின் நெற்றியில் குனிந்து முத்தம் கொடுத்தாள். அதோடு அவளை வருடி விட்டே தூங்க வைத்தான். நல்ல தூக்கத்தில் இருந்த நேரம் அவளுக்கு காலும் இடுப்பும் வலி எடுக்க “மாமா காலை தூக்கி இடுப்புல போடுங்க” என்று சொன்னவுடன் அவனும் தூக்கி போட்டு விட்டு மறுபடியும் அவளின் முதுகில் புதைந்து தூங்கிப் போனான்.
அவன் கால் வெயிட்டில் சிறிது நேரம் மட்டுமே கால் வலி கேட்டது. மறுபடியும் வலி எடுக்க ஆரம்பிக்க,
“மாமா” என்று சிணுங்கினாள்.
“என்னடி?” அவனுக்கும் கண்களை திறக்கவே முடியவில்லை. அத்தனை அசதியாக இருந்தது.
“ரெண்டு காலையும் தூக்கி போடுங்க” என்றாள்.
“ம்ம்” என்றவன் அவள் மீது மொத்தமாக ஏறி படுத்து விட்டான். முதுகு வலிக்கும் கால் வலிக்கும் அது ரொம்ப இதமாக இருக்க நன்றாக தூங்கிப் போனாள். கதிரவனுக்கும் அவள் மீது தூங்குவது நன்றாக இருக்க அசந்து தூங்கிப் போய் விட்டாள்.
இதோ இப்பொழுது தான் கண் விழிக்கிறாள். அவன் மேல படுத்து இருக்கவும் வலி தெரியாமல் தூங்கிப் போனவளுக்கு இப்பொழுது மறுபடியும் வலி எடுத்தது.
கதிரவனை மெதுவாக புரட்டி கீழே போட்டவள் எழுந்துக் கொள்ள,
“எங்கடி போற?” தூக்கத்திலே கேட்டான்.
“குளிச்சுட்டு வரேன் மாமா”
“ம்ம்” என்றவன் மீண்டும் தூங்கிப் போனான்.
வெகு நேரம் ஆகியும் அவள் வராமல் போக, கதவை தட்டினான்.
“ம்ம் வரேன் மாமா” என்றவள் வெளியே வந்தாள். அவளால் நிற்கவே முடியவில்லை.
“ஏன்டி தடுமாறுற?” அவளை கூர்ந்துப் பார்த்தவன் அவளின் கால் விரல்கள் எல்லாம் வீங்கிப் போனது போல இருக்கக் கண்டு திகைத்துப் போனான்.
“என்னடி இது கால் இப்படி வீங்கிப் போய் இருக்கு.. என்னை கூப்பிட்டு சொல்ல மாட்டியா?” லேசாக டென்ஷன் ஆகி விட்டான்.
“ப்ச் மாமா இப்போ எதுக்கு டென்ஷன்.. நானும் இப்போ தான் எழுந்தேன்” என்றவளை சட்டென்று கையில் தூக்கிக் கொண்டான்.
“நடப்பேன் மாமா” என்று அவள் சிரிக்க,
“சிரிக்காதடி.. வலின்னு முன்னவே எழுப்பி இருந்து இருக்கலாம் இல்லையா?” அவளை படுக்கையில் அமரவைத்து பின்னாடி சாய விட்டவன் காலை நன்றாக நீட்டி விட்டான்.
“அம்மாவ கூட்டிட்டு வரேன்” என்று வெளியேப் போக,
“ப்ச் மாமா கொஞ்சம் நில்லுங்க” அவனை தடுத்தாள்.
“நீ என்ன சொன்னாலும் சரி.. இந்த கை வைத்தியம் எல்லாம் எதுவும் வேணாம்.. நான் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறேன். அதுக்கு முன்னாடி உனக்கு சாப்பிட எதாவது குடுக்க சொல்றேன்” என்று அவன் படபடக்க,
“அதை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் முதல்ல நீங்க சட்டையை எடுத்து போடுங்க” என்றாள்.
“ஏன்?” கீழே குனிந்துப் பார்க்க அவன் வெற்று மார்புடன் கீழே பட்டு வெட்டியுடன் இருந்தான்.
“ஷிட்” என்று நெற்றியை நீவி விட்டுக் கொண்டான். அதோடு அவள் அணிந்து இருந்த நகைகள் அங்கும் இங்கும் குத்தி காயம் செய்து இருந்தது. நகைகள் மட்டுமா இல்லையே பெண்ணவளின் நகங்களும் பற்களும் கூட அல்லவா காயம் செய்து இருந்தது.
அவள் வைத்து இருந்த குங்குமம் வேறு அவனின் மார்பிலும் முகத்திலும் வர்ணம் தீட்டி இருந்ததே..
“குளியல் போட்டுட்டு வந்திடுறேன்” என்று குளியல் அறை பக்கம் போனவன் மீண்டும் அவளிடம் வந்து குனிந்து அவளில் இதழ்களில் அழுத்தமாக முத்தம் வைத்து விட்டு அதன் பிறகே குளிக்க சென்றான்.
அதில் பெண்ணவளின் முகம் அந்தி வானமாய் சிவந்துப் போனது. இதழ்களில் இரகசிய புன்னகை மிளிர்ந்தது. குளியல் அறையில் அவனது துண்டை ஏற்கனவே எடுத்து போட்டு இருந்தாள். குளித்து விட்டு அவன் துண்டுடன் வெளியே வந்தவன் அப்பொழுது தான் அவள் தனக்கு பிடித்த நிறத்தில் புடவை அணிந்து இருப்பதே பார்த்தான்.
அது அவளுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதை பார்த்து,
“செம்மையா இருக்கடி” அவளுக்கு அருகில் வந்து அவளின் கன்னத்தில் முத்தம் வைத்தவன், ஈரத்துண்டில் முடிந்து இருந்த கூந்தலை அவிழ்த்து விட்டான்.
“தலை ஈரமா இருக்குடி ஹேர் ட்ரையர் போடுறியா?” கேட்டான்.
“ம்ஹும்” என்றவள் அவனை தன்னருகில் அமரவைத்து, அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள். அவனின் மார்பு முடியை சுறுட்டி இழுத்தவள்,
“வேணாமா?” என்று மட்டும் கேட்டாள். அவள் எதை கேட்கிறாள் என்று புரிந்துக் கொண்டவன், அவளை முறைத்தான்.
“கால் வீங்கி போய் இருக்கு.. இந்த நேரம் இதெல்லாம் தேவையா? சும்மா இருக்க மாட்டியாடி.. ஏத்தமாடி உனக்கு”
அவனின் நெஞ்சில் இன்னும் அழுத்தமாக தன் முகத்தை வைத்து புதைந்துக் கொண்டவள்,
“எனக்கு வேணும்” என்றாள்.
“அடி வாங்காம இருக்க முடியாதுன்னு நினைக்கிறேன்டி” என்றவனின் நெஞ்சில் தன் இதழ்களை வைத்து அலுத்தியவள், மெல்ல முத்தமும் குடுக்க தன் கட்டுப்பாட்டை இழந்து தவித்துப் போனான் கதிரவன்.
“விடிஞ்சு போச்சுடி”
“அதனால என்ன.. ஐ நீட் கதிரவன்” என்றாள்.
“பேர் சொல்லாதடி”
“சரி சொல்லல.. ஆனா எனக்கு நீங்க வேணும்” என்றவளை வன்மையாக முத்தமிட்டவன்,
“உனக்கு இல்லாம நான் எங்க போறேன். ஆனா இப்போ வேணான்டி உன் காலை நினைச்சா எனக்கு பீலிங்க்சே வர மாட்டிக்கிது” என்றான்.





