“உன் புருசனுக்கு ரொம்ப பிடிவாதம் பாப்பா” என்றார் சேகரன்.
“நீங்க தானே வளர்த்தீங்க ப்பா” என்று நமட்டு சிரிப்பு சிரிக்க,
“அதை சொல்லு” என்று நொந்துக் கொண்டவரின் முகம் பிரகாசமாய் இருந்தது. அது பெருமிதம் அல்லவா.. நான் வளர்த்த பிள்ளை.. என்னை பெருமை பட வைக்கிறதே..
அதன் பிறகு கதிரவனின் வீட்டுக்கு சென்று அங்கும் விளக்கு ஏற்றி பால் பழம் குடுத்து அவர்களை ஓய்வு எடுக்க விட்டார்கள்.
பின்ன கல்யாணம் என்றால் சும்மாவா... காலையில் இருந்து எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கி, சபையில் இணையாக நின்று எல்லோரிடமும் பேசி சிரித்து, புகைப்படம் எடுத்து என கொஞ்சமும் ஓய்வு இருக்கவில்லை இருவருக்கும்.
ஒரு நொடி உட்கார கூட நேரம் இருக்கவில்லை. உணவு உண்ணும் நேரமே மத்தியம் ஆகி இருந்தது. அந்த நேரம் மட்டுமே இருவரும் சிறிது நேரம் அமர்ந்து இருந்தார்கள். மற்ற நேரம் எல்லாம் நின்றுக் கொண்டே தான் இருந்தார்கள்.
துளசி திருமணத்தின் போதே இவளுக்கு கால் வலி எடுத்து இருந்தது. இப்பொழுது இவளுக்கே திருமணம்.. கால் வலிக்கு சொல்லவும் வேண்டுமா? வலி பின்னி எடுத்து விட்டது. அதுவும் நின்று இருந்ததில் முதுகு வலியும் எடுத்து இருந்தது. ஆனால் கதிரவனிடம் அவள் காட்டிக் கொள்ளவே இல்லை.
அன்றிரவு அவனது அறை எந்த அலங்காரமும் இல்லாமல் எப்பொழுதும் போல இருக்கக்கண்டு கேள்வியாய் அவனை பார்த்தாள் பனிநிலவு.
“இயல்பா நடக்கட்டும்டி.. இன்னைக்கு உடம்பு எல்லாம் எப்படி வலிக்கும்னு எனக்கும் தெரியும். அதனால ரெஸ்ட் எடுப்போம்” என்று சொல்லி விட்டு அவளின் காலை மடியில் வைத்து அழுத்தி விட ஆரம்பித்தான் கதிரவன்.
அவனின் இந்த அன்பில் தானே முழுமையாக சுருண்டு போகிறாள் பெண்ணவள்.
“இருந்தாலும் எனக்காக ரொம்ப பார்க்குறீங்க மாமா” என்றாள் அவனை காதலுடன் பார்த்துக்கொண்டே..
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடி.. நீயா கண்டதையும் நினைச்கிக்காத” என்றவன் பதமாக அவளின் கழுத்தை அழுத்தி விட்டான்.
“அப்படியா..” நக்கலாக கேட்டவள், “உங்க அம்மாவுக்கு கால் வலிக்குதாம், உங்க அக்காவுக்கு அதை விட கால் வலிக்குதாம். போய் அழுத்தி விடுங்க” என்றாள்.
அவளை முறைத்துப் பார்த்தான்.
“ஏன் முறைக்கிறீங்க.. இப்போ தெரியுதா நான் மட்டும் தான் இந்த கதிரவனுக்கு ஸ்பெஷல்னு” என்றபடியே அவனை நெருங்கி வந்து அவனின் மீசையை பிடித்து இழுத்தாள்..
அவளை இடையோடு இழுத்து தன் அருகில் இன்னும் நெருக்கமாக சேர்த்துக் கொண்டவன் அவளின் விழிகளோடு விழி வைத்து, “அது இப்போ தான் உனக்கு புருஞ்சுதா?” அழுத்தமாக கேட்டான்.
“ம்ஹும்” என்று தலையை ஆட்டினாள். அவள் தலையை ஆட்ட ஆட்ட காதில் அணிந்து இருந்த வைர ஜிமிக்கி அழகாய் மின்னி ஆடி அசைந்து அவளின் கன்னத்தை உரசிச் சென்றது.
அதை இரசனையுடன் ஒரு கணம் பார்த்தவன்,
“அப்போ எப்போ தெரியும்?” அழுத்தமாக கேட்டான்.
“பல முறை விரட்டி அடிச்சும், செக்யூரிட்டி திட்டி அனுப்பி விட்ட பொழுதும் எனக்காக நான் இடம் மாறும் போதெல்லாம் ஒவ்வொரு ஹாஸ்ட்டல் வாசல்லயும் கொஞ்சமும் அசையாம கால் கடுக்க வந்து நின்னீங்களோ அப்பவே எனக்கு தெரியும்.. இந்த கதிரவனுக்கு நான்னா ரொம்ப ஸ்பெசல்னு” என்றவள்,
“ரொம்ப தவிக்க வச்சு தேட வச்சு காத்திருக்க வச்சுட்டேன் இல்ல” என்று தவிப்புடனும் குற்ற உணர்வுடனும் கேட்டாள்.
ஏனெனில் அவளை பத்தாவது படிக்கும் பொழுதே கண்டு பிடித்துத் விட்டான். ஆனால் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. காரணம் பனி முரண்டு பண்ணிக் கொண்டு அவனை பார்க்கக் கூட மாட்டாள்.
தன் வீட்டிலும் சரி சேகரன் வீட்டிலும் சரி அவளை யாரும் ஏற்றுக் கொள்ள முன் வராததும் ஒரு காரணம். இவனும் அவளாக வர வேண்டும் என்று காத்திருக்க முடிவு செய்து இருந்தான். பனியின் கோவத்திற்கு மதிப்பு குடுத்து அவளை அழைக்க வில்லையே தவிர அவளுடன் ஒவ்வொரு பொழுதும் இருந்தான்.
ஹாஸ்ட்டல் வெளியே நிற்பான். வாரத்துக்கு ஒரு முறை வந்து அவளை பார்த்து விட்டு போவான். ஆனால் அவள் அவள் பத்தாவது, பன்னிரண்டாவது கல்லூரி படித்து முடித்த பிறகும் கூட அவளுக்கு மனம் இறங்கவில்லை. இதற்கு மேலும் விட்டால் இவள் தங்களுக்கு கிடைக்க மாட்டாள் என்று அதிரடியாக முடிவெடுத்து விட்டவன் துளசியின் திருமணத்தை முன் வைத்து வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான்.
அழைத்து வந்தான் என்பதை விட, அவளை கொத்தாக தூக்கி விட்டான் என்பதே உண்மை.
அதை பனிநிலவு நினைவுப் படுத்த கதிரவன் பெண்ணவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு,
“பெற்றவர்கள் இப்படி உன்னை தனியா விட்டுட்டாங்கன்னு உனக்கு கோவம். இந்த கோவத்தை கூட நீ காட்டலன்னா நீ மரமா போய் இருப்படி.. உனக்குள்ளும் உணர்வுகள் இருக்குன்னு அந்த கோவம் தான் காட்டி குடுத்தது..” அவளின் கோவத்தை கூட நியாயப்படுத்தியவனை இன்னும் காதலிக்க தொன்றியது.
“சச்ச ஒன்டர்புல் பெர்சென் கதிரவா நீங்க” அவனின் நெஞ்சில் தன் முகத்தை புரட்டியவள், உறுத்தலாக இருந்த அவனது சட்டையை கண் காண்பித்தாள்.
அவள் கண்ணால் இட்ட வேலையை உடனடியாக செய்து முடித்தவன், தன் வெற்று மார்பில் பெண்ணவளை சாய்த்துக் கொண்டான்.
காலையில் அவன் அவளின் கழுத்தில் கட்டிய மஞ்சள் கயிறில் கோர்த்து இருந்த தாலி வெளியே அவளின் நெஞ்சின் மீது கிடக்க, அதை தொட்டு தடவிப் பார்த்தவன்,
“கனவு போல இருக்குடி” என்றான்.
“ம்ம்” என்றவள்,
அவனின் நெஞ்சு முடியை சுறுட்டி இழுத்து விளையாடியவள்,
“சப்போஸ் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கலன்னா என்ன பண்ணி இருப்பீங்க மாமா”
“கட்டாய தாலி கட்டியாவது உன்னை என் பக்கத்துல கொண்டு வந்து இருப்பேன்டி” என்றான்.
“அடப்பாவி” என்று வாயை பிளந்தவள்,
“இப்போ தெரியுதா நீங்க சரியான அடாவடி முரட்டு பேரன்பர்னு” சொன்னவள்,
“ஆனா இந்த அடங்காத முரட்டு பேரன்பு என் வாழ்நாள் முழுக்க என் கடைசி மூச்சு இருக்குற வரை வேணும் கதிரவா..” கண்கள் கலங்க சொன்னவள்,
“அதே அன்பை நானும் என் மாமாவுக்கு கொடுக்கணும்” சொன்னவள் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். அவள் பார்க்கவும் இவன் கீழே குனிந்து அவளின் பார்வையை எதிர்க் கொண்டான் ஒற்றை புருவ ஏற்றலுடன்.
“மூச்சு முட்ட ஒரு டீப் கிஸ் வே...ணும்” முடிக்கும் முன்பே அவளின் இதழ்களை முரட்டுத் தனமாக கவ்விக் கொண்டான் கதிரவன்.
ஆணவனின் இதழ் போரில் சிக்கித் தவித்துப் போனவளுக்கு மூச்சு முட்டிப் போனது. ஆனாலும் அதில் விரும்பி அவள் தொலைய, கதிரவனின் கை மெல்ல அவளின் இடையில் இருந்து சற்றே நகர்ந்து, மேல் நோக்கி பயணித்தது.
அதில் ஜெர்க் ஆகியவள் லேசாக அவனிடம் இருந்து நகர பார்க்க,
“அளந்து பார்த்து சரியான அளவு சொல்லவாடி..?” அவளின் காதோரம் கேட்டு அவளை சிவக்க வைத்தவன் அவளின் மெல்லிய புடவையை உருவினான்.
“எதுவும் வேணான்னு சொன்னீங்க?”
“அதுக்காக விரதம் இருக்கணும்னு அவசியம் இல்லடி.. மீல்ஸ் தான் வேணான்னு சொன்னேன். பட் ஸ்பைசியா கொஞ்சம் வேணும்” என்று அவளின் கழுத்தில் அழுத்தமாக புதைந்தான்.





