அத்தியாயம் 64

 
Admin
(@ramya-devi)
Member Admin

“என் குழந்தை பத்திரமா என் வயித்துல தான் இருக்கும் டாக்டர். அவனுக்கு ஒன்னும் ஆகாது.. ஏன்னா இது ராசசிங்கனோட வாரிசு. அவனை அழிக்க யாராலும் முடியாது... எந்த காரணியாலும் முடியாது. குறிப்பா உங்க சொல்லாலும்” என்று அவள் திடமாக சொல்ல, அந்த டாக்டர் அவளை ஏளனமாக பார்த்தார்.

“நீ சிங்கனோட மனைவியா?” என்று கேலியாக கண்களை விரித்துக் கேட்டார்.

“ம்ம்ம்” என்றவள் தன் போனை எடுத்து அதில் மிக இரகசியமாக வைத்து இருந்த கல்யாண புகைப்படத்தை காட்டினாள். வாங்கிப் பார்த்தவருக்கு கண்கள் கலங்கியது. அதை சாதூரியமாக மறைத்துக் கொண்டவரை பார்த்தவள்,

“உங்களுக்கு என் கணவரை தெரியுமா?” என்று கேட்டாள் தன் வலியை பொறுத்துக் கொண்டு. அங்கு இருந்த நர்சை வெளியே போகச் சொன்னவர் கதவை அழுந்த தாளிட்டு விட்டு,

“ம்ம்ம் என் கணவர் தான் இவனுக்கு ட்ரீட்மென்ட் குடுக்குறாரு” என்றவர் அவளுக்கு ஸ்கேன் பண்ண ஆரம்பிக்க,

“ப்ளீஸ் நான் அவரை ஒரே ஒரு முறை மட்டும் பார்க்கலாமா?” என்று அவள் தவியாய் தவித்துப் போய் கேட்க,

“எதுக்கு குறை உயிரா இருக்கிறவனை முழுசா முடிக்கவா?” என்று அவர் இரைய,

அவரின் கையை பற்றிக் கொண்டவள், “சத்தியாமா இல்லைங்க டாக்டர்...” என்றவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

“போதும்... அவன் வேணான்னு தானே நீ விட்டுட்டுப் போன. இப்போ என்ன அக்கறை. அவன் இருந்தா உனக்கு என்ன செத்தா...” என்று முடிக்கும் முன்பே அவள் அலறிவிட்டாள்.

“ப்ளீஸ் டாக்டர் அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. அவரு இன்னும் நூறு வருடத்துக்கு நல்லா இருக்கணும்... ப்ளீஸ் தப்பி தவறிக் கூட அப்படி சொல்லிடாதீங்க” என்று அவரை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.

“இவ்வளவு அக்கறை இருக்குறவ எதுக்கு அவனை விட்டுட்டு போன” என்று கேட்டார் ஆத்திரமாய்.

“போறேன்னு சொன்னா இவர் ஏன் என்னை போக விட்டாரு.. நான் வேணும்னு நினைச்சா என்னை இழுத்து பிடிக்கனுமா இல்லையா? அவருக்கு என் மேல காதலே இல்லை” என்று அவள் மனம் பொறும,

“உன் தலை” என்று முறைத்தார் அவர்.

“டாக்டர்” என்று அதட்டினாள்.

“என்ன ரொம்ப தான் குரல் உசத்துற, நான் அப்படி தான் பேசுவேன்...” என்று சொன்னவர் அவளுக்கு கிளீன் பண்ணி விட்டு ஸ்கேன் பண்ண,

குழந்தையின் ஹாட்பீட் நன்றாக கேட்டது.

“டாக்டர்” என்று அவள் மகிழ்வுடன் கூவ,

“ப்ச் நீயே காட்டி குடுத்துடுவ போல...” என்று பெருமூச்சு விட்டவர்,

“இந்த குழந்தையை காப்பாத்தணும் பொண்ணே” என்றார் அவர்.

“ஆமா டாக்டர்...” என்றவள்,

“ஆமாம் என் வீட்டுக்காரரை உங்களுக்கு தெரியுமா? எப்படி தெரியும்?” என்று கேட்டாள்.

“ம்ம் என் பொண்ணு பேர் தான் கீர்த்தி” என்று அவர் சொல்ல,

“ஓஒ...!” என்றவளுக்கு நிம்மதியாய் இருந்தது.

“எங்க வீட்டு ஆளுங்களால அவரோட உயிருக்கு ஆபத்து இருக்கு மேடம். அதோட என் வயித்துல இருக்குற பிள்ளைக்கும் ஆபத்து... எப்படியாவது என் பிள்ளையையும் என் கணவனையும் காப்பாத்தி குடுங்க மேடம்..” என்று கெஞ்சியவள்,

“அவரு அவரு... எப்படி இருக்காரு மேடம்” என்று உதடுகள் நடுங்க தன்னவனின் நலம் விசாரித்தாள்.

“என்னத்த சொல்ல மயக்க நிலைக்கு போய் இப்போ கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜுக்கு போற நிலையில் தான் இருக்கான். எல்லாம் உன் அப்பனால” என்று அவர் சிடுசிடுக்க,

“இதெல்லாம் இப்படி ஆகும்னு எதுவும் தெரியாது மேடம்” என்று அவள் கண்கள் கலங்க,

“ப்ச் தெரிஞ்சுக்கணும்... அவன் உன் மேல உயிரையே வச்சு இருக்கான் அதாவது தெரியுமா தெரியாதா?” என்று அதித கடுப்புடன் அவர் கேட்டார்.

“இல்லையே...” என்று அவள் பாவமாய் சொல்ல,

“உனக்கு என்ன தான் தெரியும்...?” எரிச்சல் பட்டார். அதில் கண்களில் இருந்து நீர் மணி உருண்டது.

“ப்ச்... அழாம முதல்ல உனக்கு முன்னாடி, உன்னை சுத்தி, உனக்கு பின்னாடி என்ன நடக்குதுன்னு ஊன்றி கவனிச்சு இருக்கணும். அதை விட்டுட்டு இப்படி எல்லாத்தையும் இழுத்து விட்டு வச்சா என்ன பண்றது” என்று அவர் சொல்ல

“நான் என்ன மேடம் பண்ணினேன்?” என்றாள் பாவமாய்.

“முதல்ல நீ அவனை விட்டு போயே இருந்து இருக்கக்கூடாது. அதால வந்தது தான் இவ்வளவு பிரச்சனையும்... உன்னை யாரு அவனை விட்டு போகச் சொன்னது. பெருசா தாலியை மட்டும் கழுத்துல போட்டுக்கிட்டா போதாது. புருசனோட சேர்ந்து வாழ்றது தான் வாழ்க்கை” என்றார் கடுப்பாக.

“சும்மா எரிச்சலை கிளப்பிக்கிட்டு... நீ மட்டும் அவனோட இருந்து இருந்தா அவன் போதை பொருளை மீண்டும் தொட்டு கூட இருந்து இருக்க மாட்டான். ஒரு மாசம் ஆனாலும் அவன் தூக்கமே வரலன்னு சொல்லும் பொழுது நான் தான் அவனுக்கு கொஞ்சமா இதை கொடுத்தேன். மருந்தா தான் இவ்வளவு நாளும் எடுத்துக்கிட்டான். ஆனா நீ போனதுக்கு பிறகு அவனால அந்த மருந்தை எடுத்துக் கொண்டான். ஆனால் தூக்கம் தான் வரல. கீர்த்தி தான் இன்னும் கொஞ்சம் டோஸ் வச்சு குடுத்தா.. ஆனா அதுல நாங்க யூஸ் பண்றதி விட அதிக வீரியம் மிக்க போதையை மிக்ஸ் பண்ணி வச்சு இருக்கான் உன் அப்பன்” என்று அவர் சொல்ல சொல்ல மனம் உடைந்துப் போனாள்.

“யார மன்னிச்சாலும் உன் அப்பனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் நான்” என்றவர் கண்களில் அவ்வளவு சினம் இருந்தது.

“அப்படி என்ன பழி வெறி அவனுக்கு... இத்தனை வருடம் போயும் அவனுக்கு இந்த பழி வெறி அடங்கவே இல்லையா?” என்று கேட்க ஏந்திழையாளுக்கு ஒண்ணுமே புரியவில்லை.

“மேடம் என்ன சொல்றீங்க?” என்று அவள் மிரள,

“ப்ச் ஒன்னும் இல்லை” என்றவர்,

“ஆமா இன்னும் எத்தனை நாளுக்கு இந்த விசயத்தை மறைக்க போற” என்று கேட்டார்.

“என்னால முடிஞ்சவரை மறைக்கணும் டாக்டர்” என்றவள், தான் வீட்டில் சொல்லி இருந்த கட்டி விசயத்தை சொல்ல,

“பரவாயில்லை நல்லாவே சமாளிச்சு இருக்க..” என்றவர் நான் முதல்ல இந்த ப்ளீடிங் ஸ்டாப் ஆகுறதுக்கு மருந்து போடுறேன். நான் சொல்றதை அப்படியே கேட்டுக்கோ” என்றவர்,

“நீ இன்னும் ரெண்டு வாரத்துக்கு அசையவே கூடாது. மாடிப்படி ஏறி இறங்கவே கூடாது.. அப்படி நீ ஏதாவது செய்தா நான் பொறுப்பு இல்லை. உனக்கு உன் சிங்கனோட குழந்தை வேணும்னா நான் சொன்னதை கேட்டு அப்படியே செய்” என்றார்.

தலையை ஆட்டிக் கொண்டவள்,

“டாக்டர் ப்ளீஸ் என்னை ஒரே ஒரு வாரத்துக்கு இங்க ஹாஸ்பிட்டல்ல வச்சுக்குறீங்களா?” என்று மன்றாடினாள்.

“நீ எதுக்கு கேக்குறன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்.. அதுக்கு வாய்ப்பே இல்லை. நான் சிங்கன் விசயத்துல ரிஸ்க் எடுக்க விரும்பல” என்றார் அவர் காரராக.

“ப்ளீஸ் டாக்டர்... என்னால அவரை பார்க்காம போகவே முடியாது. அதோட இந்த ஹாஸ்பிட்டலுக்கோ இல்ல வெளிய வருவதற்கோ இது தான் கடைசி வாய்ப்பு. அதுக்கு பிறகு என்னை வெளில விடவே மாட்டாங்க... கோயிலுக்கு போறதுக்கே அவ்வளவு செக்யூரிட்டி” என்று பட்டென்று அவரது காலில் விழுந்தே விட்டாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : May 5, 2026 6:24 pm
Sowmya reacted
(@gowri)
Reputable Member

சிங்கன்....இழை ஓட சொந்தமா என்ன????

 

Loading spinner

ReplyQuote
Posted : May 5, 2026 10:35 pm
Sowmya reacted
(@sowmya)
Active Member

@gowri ama siz enaku kuda apidi than feel aguthu.

Looks like singan avaluku athai payan mari also indha doctor is that athai or andha athai oda frnd mari 🤔 

Loading spinner

ReplyQuote
Posted : May 5, 2026 11:16 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top