Notifications
Clear all

அத்தியாயம் 20

 
Admin
(@ramya-devi)
Member Admin

“அடியேய் ப்ராஜெக்ட் இருக்குன்னு சொன்னியே..”

“ஹும் எழுதணும்.. நீ எழுதி தர்றிய துளசி” கெஞ்ச,

“பின்னிடுவேன்டி நானே இப்ப தான் கொஞ்ச நாளா அந்த எழுத்துல இருந்து தப்பிச்சு இருக்கேன். ஓடிடு”

அப்படியே பேசி பேசி மூவருக்குள்ளும் நல்ல பாண்டிங் வந்து இருந்தது.

“சரி வா  காலை நல்லா தேச்சு கழுவிட்டு வா சாப்பிட போகலாம்” துளசி எழுந்துக் கொள்ள, மகாவும் “ஆமா பனி சீக்கிரம் வா.. போய் சாப்பிடலாம்” என்று அவளும் எழுந்துக் கொண்டாள்.

அதன் பிறகு மூவரும் வெளியே வர, கதிரவன் மாடியின் கூடத்தில் அமர்ந்து இருந்தான் லேப்டாபோடு. அவனோடு சேர்ந்து சாப்பிட்டு பழகியவள் அவனை விட்டு போக மனமில்லாமல்,

“நீங்க முன்னாடி போங்க. நான் இதோ வரேன்” என்று சொல்லியவள் தேங்கி கதிரவனிடம் வந்து நின்றாள்.

அவள் வரவும் எழுந்துக் கொண்டவன்,

“கொஞ்சம் வேலை.. போரடிச்சதா?” கேட்டுக் கொண்டே இரு கையையும் தூக்கி சோம்பல் முறித்தான்.

“இல்ல சித்தியும் மகாவும் கூட இருந்தாங்க” என்றாள்.

“ஓகே வா” என்று அவளை அழைத்துக் கொண்டு கீழே  சென்றான்.

எல்லோரும் சாப்பிட அமர்ந்து இருக்க, இவனும் அவளை அமரவைத்த பிறகு தானும் அமர்ந்துக் கொண்டான்.

ரேவதியும் துளசியும் அவளுடன் பேசிக் கொள்ள, அதை பார்த்த சிங்காரத்துக்கும் மங்கைக்கும் அவ்வளவு கோவம் வந்தது.

அதுவும் ரேவதி பேசுவது தான் இன்னும் கோவத்தை கிளப்பி இருந்தது.

“நேற்றைக்கு அந்த குதி குதிச்சுட்டு போனா.. ரோஷமா தம்பிட்ட சண்டை போட்டுட்டு வந்தா.. இன்னைக்கு அந்த பொண்ணோட அவ்வளவு ஜாலியா சிரிச்சு பேசுறதை பார்த்தா இவளும் அவன் பக்கம் சாஞ்சுட்டா போலையே.. எல்லாம் கழுத்தை அருக்குறதுலையே குறியா இருக்குங்க” பொடுபொடுத்துக் கொண்டு இருந்தார் சிங்காரம்.

“விடுங்க எந்த அளவுக்கு போகுதுன்னு பார்க்கலாம்.. எப்படியும் அண்ணன் கிட்ட நாளைக்கு நான் பேசத்தான் போறேன். நீங்களும் வெளி வேலையை விட்டுட்டு பதினோரு மணி போல டெப்போக்கு வந்திடுங்க. அங்க வச்சு இதுக்கு ஒரு முடிவு கட்டலாம்” என்று மங்கை ஆசுவாசப் படுத்தினார்.

“அப்பா நாளைக்கு தேங்காய் லோடு ஏத்தனுமே” உண்டுக்கொண்டே கேட்டான்.

“ஆமாப்பா.. நேத்திக்கும் இன்னைக்குமா எல்லாத்தையும் பறிச்சு போட்டாச்சு.. வண்டி வந்ததும் ஏத்த வேண்டியது தான்”

“நாளைக்கு வேலை எதுவும் இருக்கா ப்பா” என்று அவன் கேட்ட தோரணையே வயலுக்கு போங்கன்ற மாதிரி இருந்தது.

“இல்ல தம்பி நானும் அய்யாவும் வயலுக்கு போய்க்கிறோம். தம்பி குடோனுக்கு போகட்டும்” என்று பொன்னன் சொல்ல,

“இல்லப்பா சித்தப்பாவுக்கு வேற வேலை இருக்கு” என்றவன்,

“சித்தப்பா” என்றான். அதுவரை சாப்பாட்டில் தலையை குடுத்து இருந்தவர்,

“நீ சொல்றபடியே போறேன் தம்பி” என்றார் அவர்.

அவரை பார்த்து முறைத்தவன்,

“நான் இன்னும் சொல்லவே சித்தப்பா” என்றான்.

“சாரி.. நீ சொல்லு தம்பி” என்றார் அசடு வழிந்து தேவன்.

“இவரு இருக்காரே” என்று கலா தான் முணுமுணுத்தார். இவரை விட சின்ன பையனுக்கு எதுக்கு தான் இந்தா பயம் படுறாரோ.. புலம்பிக் கொண்டார்.

“நாளைக்கு அப்பா வயல்ல வேலை முடிஞ்சு வந்த பிறகு நைட் நீங்களும் அப்பாவும் போய் எம்எல்ஏவ பார்த்து பேசிட்டு வாங்க.. பெரம்பலூர்ல புதுசா திருந்து இருக்கிற பஸ் ஸ்டாண்ட்ல நம்ம பஸ் டைம் எல்லாம் மாத்தி போட்டு இருக்காங்க. அது சரி வராது.. முன்னாடி இருந்த அந்த டைமையே கேட்டு பாருங்க.. இல்லன்னா சங்கத்துல பேசிக்கலாம்” என்றான்.

“தம்பி அது சரியா வருமா?” தேவன் தயங்கினார்.

“அதுக்கு தானே காசு குடுக்குறோம். அப்போ நாம சொல்றாபடி செய்ய சொல்லுங்க.. இல்லன்னா பார்த்துக்கலாம்..” என்றவன் உணவில் கவனம் வைக்க, பனிக்கு அப்பொழுது தான் நினைவு வந்தது.

“கஞ்சா கேஸ் என்னங்க ஆச்சு?” மெதுவாக கேட்டாள் கதிரவனிடம்.

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தவன்,

“சாப்பிட்டுட்டு மொட்டை மாடிக்கு வா சொல்றேன்” என்று முடித்து விட்டான்.

அவளுக்கு அருகில் அமர்ந்து இருந்த ரேவதி திடுக்கிட்டுப் போனார்.

“யார் கிட்டயும் எதையும் சேர் பண்ணாதவன் உன் கிட்ட இதெல்லாம் சொல்றானா?” என்று வியந்து போய் கேட்டார்.

“ஹும் ஆமாம்” என்றாள் திணறலாக.

“ரைட்.. ரைட்..” என்று சிரிப்புடன் சொன்னவருக்கு கவலை. இதென்ன புதுசா கஞ்சா பிரச்சனை. இத்தனை நாள் இது மாதிரி எதுவும் இல்லையே.. என்று உள்ளுக்குள் கலங்கிப் போனார்.

சாப்பிட்டுவிட்டு தம்பியை பிடித்துக் கொண்டார் ரேவதி.

“என்ன தம்பி என்னென்னவோ கேள்வி பட்டனே” கலங்கி இருந்தது அவரின் கண்கள்.

“ரேவதி” என்றான் அழுத்தம் திருத்தமாய்.

“கஞ்சா அது இதுன்னு பனி உன்கிட்ட பேசினாளே” சொல்லும் பொழுதே கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.

--

பனியும் அந்த நேரம் மேலே வந்தவள் ரேவதி கலங்கிய கண்ணுடன் இருப்பதை பார்த்து,

“ப்ச் என் மேல தான் தப்பு. எல்லோரும் இருக்கும் நேரம் கேட்டு இருந்து இருக்க கூடாது” தன்னையே நொந்துக் கொண்டாள்.

திரும்பி போக பார்க்க, “இங்க வா நிலா” என்று அழைத்தவன், தன் அருகில் அவளை அமர்த்திக் கொண்டான்.

“பனி சொன்னது உண்மை தானே?” கேட்ட அக்காவின் கையை பற்றிக் கொண்டவன் நடந்ததை இருவருக்கும் சொன்னான்.

“ஆக்சுவலி அவன் பர்ப்பசா தான் நம்ம கொரியர் குடோனுக்கு கொண்டு வந்து இருக்கான். எதிராளிக்காக இவன் இந்த வேலை பார்த்து இருக்கான்.” என்று அவன் சொல்ல,

“யாரு தம்பி அது”

“வேற யாரு நம்ம ஒன்னு விட்டு பங்காளி முருகேசன் தான்” என்று பெருமூச்சு விட்டவன், “நம்மளை மாட்டி விட்டு, மக்கள் மத்தியில இருக்குற நம்ம செல்வாக்கை சரிக்க பார்க்கிறான். இவ்வளவு நாளா ட்ரான்ஸ்போர்ட்ல அவன் வேலையை காண்பிச்சான்.. அவன் பாட்சா பலிக்கல. இப்போ கொரியர் மூலமா அவன் வேலையை காட்ட ஆரம்பிச்சு இருக்கான்..” என்றார்.

“இப்போ என்னடா தம்பி செய்யிறது?” கவலையுடன் கேட்டவரை அணைத்துக் கொண்டவன்,

“அதெல்லாம் நான் பார்த்துக்குவேன் அக்கா. நீ கவலை படாத.. ஆளை தூக்கி விசாரிச்சாச்சு.. ப்ராப்ளம் சால்வ். நீ போய் தூங்கு” என்று சொன்னவன் ரேவதி கிளம்பிய பிறகும் அவன் இடத்தை விட்டு அசையவில்லை.

பனியும் அவனோடு அமர்ந்து இருந்தாள்.

“பெரிய பிரச்சனை ஆயிடுச்சா?” அவளின் குரலில் இருந்த கவலை கண்டு சிரித்தவன்,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. பட் அது நம்ம இடத்துல இருக்குற வரை டென்ஷன் ஓயவே இல்ல.. மண்டை முழுக்க பிரஷர் தான்” என்றான்.

அமைதியாக கேட்டுக் கொண்டாள்.

“சரி அதை விடு.. நாளைக்கு ரெடியா இரு.. ட்ரெஸ் எல்லாம் தைக்க குடுக்க போகலாம்” என்றான்.

“நீ..நீங்க எதுக்கு கூட.. நான் சித்தியோட போய்க்குறேன்” படபடத்துப் போனாள்.

“அவ கல்யாணப் பொண்ணு.. அடிக்கடி எல்லாம் வெளில கூட்டிட்டுப் போக முடியாது. அதுவும் உன் கொள்ளு பாட்டி வெரி டேஞ்சர். சோ நான் தான் கூட வரணும். கிளம்பி இரு” என்றான் அழுத்தமாய்.

“ம்ஹும் நான் வரல மாட்டேன்” என்றாள்.

“அப்போ வேறும் புடவைய தான் கட்டிக்கப் போறியா?” அவன் கேட்க, திகைத்துப் போனாள்.

“திசிஸ் டூ மச்.. ரொம்ப எல்லை மீறுறீங்க நீங்க”

“அதனால தான் சொல்றேன்.. போய் ப்ளவுஸ் தைக்க குடுக்கலாம்னு” விடாமல் அவன் சொல்ல, இவளுக்கு முகம் சிவந்துப் போனது.

Loading spinner

Quote
Topic starter Posted : April 28, 2026 9:10 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top