ATHTHIYAAYAM 45

 
Admin
(@ramya-devi)
Member Admin

“அது மட்டும் இல்லை நம்ம இழையோட சேர்ந்து அவன் சில வீடியோ எடுத்து வச்சு இருக்கான்” என்று கண்கலங்கினார்.

“அண்ணா”

“அப்பா”

“தாத்தா...” என்று அதிர்ந்துப் போனார்கள்.

“ம்ம்ம் திருமணத்துக்கு ஒத்துக்கலன்னா அந்த வீடியோ எல்லாம் ஊடங்களுக்கு போயிடும்னு மிரட்டினான்” என்றார்.

“இதை எல்லாம் ஏன் எங்க கிட்ட இருந்து மறைச்சிங்க தாத்தா... நாங்க அப்பவே அவன் முகத்தை பேர்த்து இருப்போமே” என்று கார்த்திக் ஆத்திரத்தில் கத்தினான்.

“ப்ச்... இது பிசினெஸ் விஷயம் இல்ல கார்த்திக்.. எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ய... குடும்பம்டா. இதுல ஒரு செங்கல் விரிசல் விட்டாலும் என்னால தாங்க முடியாது” என்றார்.

“நீங்க ஒரு விரிசலை பார்க்குறீங்க தாத்தா.. ஆனா இங்க மொத்த சுவரும் ஆட்டம் கண்டு நிக்கிது அந்த ராசசிங்கனால” என்று வெடித்தான் வருண்.

“அப்படி தான் நானும் நினைச்சேன் வருண். ஆனா அவன் எனக்கு ஒரு உறுதி குடுத்து இருக்கான். இனி ஏந்திழையாளை தவிர அவனது வாழ்க்கையில் வேறு எந்த பெண்ணுக்கும் இடமில்லை என்று” என்றார்.

“அதுக்கு என்ன விலை கேட்டான் அந்த பொறுக்கி” என்று யுகேஷ் சரியாக ராசசிங்கனின் நாடியை பிடித்தான்.

பெருமூச்சு விட்ட வேல்முருகன்,

“நம்ம கம்பெனி சேர்ஷ் கேட்டு இருக்கான்” என்றார்.

“நான் நினைச்சேன் அந்த அயோக்கியன் செயலுக்கு பின்னாடி நம்ம கம்பெனி சேர்ஷ் மட்டும் தான் காரணமா இருக்கும்என்று. அதே போல அவன் டிமேண்ட் பண்ணி இருக்கிறான்” என்றான் ஆத்திரம் மிக.

“என் பேத்தி வாழ்க்கை முக்கியமா இல்ல கம்பெனி சேர்ஷ் முக்கியமான்னு வந்த நிலையில என் பேத்தி தான் முக்கியமா பட்டா யுகேஷ். அதனால தான் அவன் டிமேண்ட் பண்ணினதை அவனுக்கு செய்து குடுக்கலாம்னு” என்றார் கண்கள் கலங்க...

கண்ணனும் சுந்தரமும் எதுவும் பேசவில்லை. வெறுமென பார்வையாளர்களாக மட்டுமே இருந்தார்கள். இனி என்ன பேசி என்ன ஆகப் போகிறது என்று மௌனம் காத்தார்கள்.

“எப்போ ரெஜிஸ்ட்ரேஷன்?” சின்ன தாத்தா கேட்டார்.

“நல்ல நாள் பார்த்துட்டு ராசசிங்கனே சொல்றேன்னு சொல்லி இருக்கான்” என்றார். காரில் ஆழ்ந்த அமைதி... யாரும் எதுவும் பேசவில்லை.

அனால் ராசசிங்கனுக்கு தகுந்த பதிலடி மட்டும் தந்தே ஆகவேண்டும் என்று அனைவரின் மனத்திலும் ஆழ பதிந்துப் போனது.

இங்கு வீட்டுக்கு வந்த மணமக்களை ஆராத்தி கரைத்து வரவேற்றவர்கள் ராசசிங்கன் பணிப்பெண்களை ஏந்திழையாளிடம் அனுப்பினான்.

அவளை ஒரு அறையில் கொண்டு வந்து விட்டவர்கள் அவளின் அணிகலன்களை தலை அலங்காரம் கலைக்க உதவி செய்தார்கள். அதில் இலகுவாக முயன்றாள்.

கல்யாண புடவையை கழட்டி விட்டு வேறு புடவை உடுத்திக் கொண்டாள்.

“தூங்குங்க மேடம்” என்று அவளுக்கு தனிமை கொடுத்து விட்டு அனைவரும் வெளியே போய் விட்டார்கள். இவளுக்கு எல்லாமே மிரட்சியாக இருந்தது.

இந்த வீட்டில் ஒருத்தரை கூட தெரியவில்லை. அத்தையாவது அக்காவாவது உடன் இருப்பார்கள் புதிதாக திருமணம் ஆகும் பெண்ணவளுடன். இங்கு இவளுக்கு அதுவும் இல்லை.

தனிமை அவளுக்கு பெரும் அச்சுறுத்துதலை கொடுத்தது. பொட்டு கூட தூக்கம் வரவில்லை. அப்படியே அந்த அறையின் நீள அகலத்தை அளந்துக் கொண்டு இருந்தாள்.

உச்சிப்பொழுது உணவும் அவளை தேடி இங்கேயே வந்தது. மாலை நேர ஸ்நேக்ஸ் காபி என அதுவும் அறைக்கே வந்து விட இவளுக்கு வெளியே போகும் தேவை எதுவும் அமையவில்லை.

அதோடு ராசசிங்கனை பார்க்க வேண்டிய அவசியமும் வரவில்லை. அதுவே அவளுக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுத்தது. ஆனால் இரவு நெருங்க நெருங்க பயம் பிடித்துக் கொண்டது ஏந்திழையாளுக்கு. உதவிக்கு என்று இருந்த பெண்ணோடு கதிரின் மனைவியும் அவளுடன் இருந்தாலும் யாருடனும் அவளுக்கு இயல்பாக பேச முடியவில்லை.

ராசசிங்கனை தனிமையில் சந்திக்க வேண்டும் என்கிற உணர்வே அவளை பெரிதும் அலைக்கழித்தது. இரவு மொத்தமும் எனக்கு வேணும் என்று முன்பே கூறி இருந்தான் அவளின் காதோடு.

அதை எண்ணுகையில் இப்பொழுதே குளிர் காய்ச்சல் வரும் போல இருந்தது. பேசாமல் காய்ச்சல் அடிக்கிறது என்று தூங்கிவிடலமா என்று கூட யோசித்தாள். அனால் எவ்வளவு காய்ச்சல் அடித்தாலும் சிங்கன் விட்டு விடுவானா என்ன..?

அவனை பார்த்தால் ஹைபீவர் கூட பின்னங்கள் பிடரியில் பட ஓடி விடும். அந்த அளவுக்கு அரக்கன். என்று எண்ணியவளுக்கு பீரியட்ஸ் என்று சொல்லி விடலாமா என்று தோன்றியது.

அதுவும் இயலாது. ஏனெனில் இன்னும் நான்கு நாட்களில் அவளுக்கு அது வந்துவிடும். அப்பொழுது கண்டிப்பாக மாட்டுவோம் என்று அதையும் ஒதுக்கி வைத்து விட்டு வேறு எதையாவது யோசிக்கலாம் என்று முடிவெடுத்தவள் தன் சிந்தையிலே உழன்றுக் கொண்டு இருந்தாள்.

அந்த நேரம் அவளின் தோளில் ஒரு கை படர தூக்கிவாரிப் போட்டது. திரும்பி பார்த்தாள். கதிரின் மனைவி நின்று இருந்தாள் நட்பு புன்னகையோடு. ஆனால் ஏந்திழையாளால் தான் புன்னகைக்க முடியவில்லை.

அவள் அதை கண்டு கொண்டதாகவும் தென்படவில்லை..

“நல்ல நேரம் பத்து மணிக்கு... அதுக்குள்ள குளிச்சுட்டு வந்திடுங்க. சேரி அறைக்கு உள்ளயே எடுத்து வச்சு இருக்கேன். லைட்டா டச்சப் பண்ணனும்னாலும் அங்கேயே எல்லாமே இருக்கு... பார்த்துக்கோங்க” என்றவளுக்கு தலையை மட்டும் ஆட்டியவளை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய அறைக்கு சென்றாள்.

உள்ளே நுழைந்தவள் ஒரு கணம் அந்த அறையின் வேலை பாட்டை கண்டு திகைத்துப் போனாள்.

“இது இது யாருடைய அறை” என்று திக்கி திணறினாள்.

“இது எங்க பாஸோட அறை. இனி உங்களோட அறையும் கூட” என்று சிரித்தவள் அவளை உள்ளே விட்டு கதவை சாத்தி விட்டு போய் விட்டாள்.

உள்ளே நுழைந்தவளுக்கு பயத்தில் மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது. அங்கிருந்த மலர் அலங்காரமும் விளக்கு அலங்காரமும் இனிய நறுமணம் வீசும் கேண்டில்ஸ் ப்லேவர்ஸ் என அவளை இன்னும் சிறிது நேரத்தில் இங்கு என்ன நடக்கும் என்பதை படம் போட்டு காட்டியது..

வியர்த்து கொட்டுவது போல இருந்தது. ஏசி புல் ஸ்பீடில் இருந்தது. அது போதாது என்று எல்லா பக்கமும் பேன் வேற...

மிகப் பெரிய ராசப் படுக்கையில் அவள் உடுத்த வேண்டிய உடை இருக்க கண்டு தேகம் மொத்தமும் நடுங்கிப் போனது.

அந்த நேரம் அறையின் உள்ளே இருந்த டெலி காம் அடிக்க கைகள் நடுங்க அதை எடுத்தாள்.

ராசசிங்கன் தான் பேசினான்.

“பேந்த பேந்த முழிக்காம ஒழுங்கா அங்க இருக்குற சேலையை கட்டிட்டி தயாரா இரு... ரெடியா இல்லன்னா அப்புறம் நடக்குறதே வேற” என்று அச்சுறுத்தினான் அரக்கன்.

அதில் பயந்துப் போனவள் வேறு வழியின்றி உடைய எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

உடல் மொத்தமும் உதறியது.. மிடறுகுழி வறண்டு நெஞ்சுக்குழி படபடவென்று அடித்துக் கொள்வது போல உணர்ந்தாள். லேசாக தடுமாறவும் செய்தாள்.

அப்படி இப்படி என்று தன்னை சமாளித்துக் கொண்டு குளித்து வெளியே வந்தாள். அவளை அலங்காரம் செய்ய இரு பெண்கள் வந்து நிற்க,

“நானே பார்த்துக்குறேன்” என்று அவர்களை வெளியே போக சொல்லி அறைக்கதவை அழுந்த சாற்றிவிட்டு சிறிது நேரம் அந்த கதவிலே சாய்ந்து நின்றாள்.

நெஞ்சம் படபடவென்று துடித்தது.. ஒரு கையால் தன் நெஞ்சை அழுத்தி பிடித்துக் கொண்டாள். அப்பொழுதாவது இந்த படபடப்பு குறையுமா என்று. ஆனால் அது குறைவேனா என்று அடம் பிடித்தது.

ஆசுவாசமாக அப்படியே இருந்தவள் பின் சுதாரித்து கட்டில் மேல் இருந்த உடையை எடுத்து அணிய ஆரம்பித்தாள். மெலிதான சந்தன நிற ட்ரான்ஸ்பரன்ட் சேலை... சேலையின் கரை முழுவதும் ஆரி ஒர்க் செய்து இருந்தது. அது அத்தனையும் வெள்ளி தங்க இழைக்களால் ஆனது. ரவிக்கை சிக்கென அவளுக்கு பொருந்தி இருந்தது.

அவள் எப்பொழுதும் அணிவது போல கையில்லா ரவிக்கை. பின் பக்கம் முழுவதும் ஒப்பன் தான். வெறும் கற்கள் பதித்த கரை மட்டுமே அவளின் பின் புறம் தழுவி இருந்தது. முன் பக்கம் கீழே இறக்கி தைக்கப் பட்டு இருக்க என்னடா இது என்று ஆனது.

Loading spinner

Quote
Topic starter Posted : April 16, 2026 9:51 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top