அத்தியாயம் 61

 
Admin
(@ramya-devi)
Member Admin

கலங்கிப் போனாலும் “எல்லாம் சரி என்னை ஏன் உங்க அண்ணா போக சொன்னாரு கதிர். இத்தனைக்கும் மாசமா இருக்கேன்னு தெரிஞ்சும்” என்று கண்கள் கலங்க ஏந்திழை கேட்க,

“சாரி அண்ணி அதுக்கு காரணம் என் மனைவி தான்” என்றான்.

“என்ன சொல்ற கதிர்” என்று அவள் திகைக்க,

“ஆமாம் அண்ணி நீங்க மாசமா இருக்கிறதுக்கு முன்னாடியே அண்ணனுக்கு தெரியும்” என்றான்.

“வாட்?” என்று அவள் அதிர,

“ம்ம்ம்... நீங்க குழந்தை பெத்துக்கிற வரை உங்க கூடவே இருக்கணும்னு தான் முழுமூச்சா அவ்வளவு வேலையையும் இழுத்து போட்டு செய்தாரு. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு செய்ய இருந்த வேலையை எல்லாம் ஷெட்யூல் போட்டு கம்ப்ளீட் பண்ணாரு...” என்று அவன் சொல்ல வாயடைத்துப் போனாள் இழையாள்.

“அப்புறம் எதுக்கு என்னை போக விட்டாரு” என்று அவள் கோவப்பட்டாள்.

“ஏன்னா பெண்கள் மாசமா இருக்கிற நேரம் அவங்க தாயை தான் அதிகம் தேடுவாங்கன்னு என் பொண்டாட்டி சொன்னா. அது தான் உங்களை உங்க வீட்டுல இருக்கிறதுக்காக டிராமா செய்து இருப்பாருன்னு எனக்கு தோணுது அண்ணி” என்றான்.

“உன் மனைவி” என்று அவள் கேள்வியாக நிறுத்த,

“ம்ம்ம் அண்ணன் ஸ்வீட் பாக்ஸோட எங்க வீட்டுக்கு வந்தாரு... உங்களுக்கு தெரியிறதுக்கு முன்னாடியே அண்ணன் கெஸ் பண்ணி இருப்பாருன்னு நினைக்கிறேன். அது தான் நீங்க ஆபிஸ் வருவதற்கு முன்னாடியே எனக்கு ஸ்வீட் கொண்டு வந்து குடுத்தாரு. அப்போ தான் என் மனைவி அண்ணன் கிட்ட இந்த விசயத்தை சொன்னா” என்றான்.

“ப்ச்” என்று தலையில் கைவைத்துக் கொள்ள அவளால் சட்டென்று எதையும் பிரித்தறிய முடியவில்லை.

 

“இந்த விசயத்தை சொல்ல தான் இவ்வளவு நாளும் இந்த கோயில் பக்கமா உங்க வீட்டு பக்கமா சுத்திட்டு இருந்தேன்...” என்று பெருமூச்சு விட்டவன்,

“அண்ணி நீங்க இல்லன்னா அண்ணன் இல்ல... ப்ளீஸ் அவரை விட்டு போயிடாதீங்க... அவருக்கு எல்லாமே நீங்க தான்... இவ்வளவு நாள் தனியா இருந்துட்டாரு.. இனிமேலாவது அவரு குடும்பம் குழந்தை குட்டின்னு வாழணும். அது தான் என் கடைசி ஆசை” என்று சொல்ல,

“ப்ச் என்ன பேச்சு இது வெள்ளிக்கிழமை அதுவுமா?” என்று கண்டித்தாள்.

“நீங்களும் அண்ணனும் சேரணும் அண்ணி... எனக்கு அது போதும். என்னை வளத்தவருக்கு ஏதோ என்னால செய்ய முடிஞ்சது இது தான்” என்றவன் ராசசிங்கன் அட்மிட் ஆகி இருந்த மருத்துவமனையை சொல்லிவிட்டு அவன் போய் விட்டான்.

அதற்குள் யுகேஷ் கோயிலுக்கு பூவோடு வர சட்டென்று கதிர் கோயில் நந்தவனத்துக்குள் புகுந்துக் கொண்டான்.

அதன் பிறகு சாமி கும்பிட்டு விட்டு வந்தவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது... என்ன செய்வது என்று.

கணவனை போய் பார்க்க மனம் துடியாய் துடித்தது. ஆனால் எப்படி போவது. என்ன சொல்லிட்டு போவது.. வீட்டுல விடுவாங்களான்னு தெரியலையே... மனம் கலங்கிப் போனாள்.

அவளை இன்னும் கலங்க வைப்பது போல தொலைக்காட்சியில் அடுத்து வந்த செய்தி ஓடியது.

அதுவும் எக்ஸ்லூசிவாக வந்தது.

‘பிரபல தொழிலதிபர் மிஸ்டர் ராசசிங்கன் உடல்நலம் குன்றி மிக மிக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்’ என்று அவனது புகைப்படம் போட்டு செய்தி ஓடிக்கொண்டு இருக்க காலுக்கு அடியில் நிலம் நழுவியது. பிடிமானம் இன்றி சரிந்தாள். கதிர் சொல்லும் பொழுது கூட ஒரு சதவீதம் நம்பிக்கை இருந்தது.

இப்பொழுது மீடியவுக்கே தெரிகிறது என்றால் மிகவும் மோசமான நிலையில் அல்லவா சிங்கன் இருக்கிறான். அதனால் தானே எல்லோருக்கும் நியூஸ் ஸ்ப்ரெட் ஆகி இருக்கிறது என்று எண்ணியவளுக்கு தன் கணவனின் நிலையை எண்ணி சுருண்டவளுக்கு வயிற்றில் சுருக்கென்று வலி வர எங்கே அதிர்ச்சியில் வயிற்றில் இருக்கிற அவனது பிள்ளை கலங்கி விடுமோ என்று பயந்துப் போனவளுக்கு லேசாய் உதிரம் கசிவது போல இருக்க அடுத்து அடுத்து வந்த இடியில் நிலைக்குழைந்துப் போனாள்.

“உன் அப்பா தான் என்னை ஒரு பக்கம் படுத்தி எடுக்கிறார்னா நீ வேற ஏன்டா என்னை படுத்துற.. நீங்க ரெண்டு பேரும் இல்லன்னா நானும் இல்லடா” என்று கண்கள் கசிந்தவள், அழுத்தமாக வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு அறைக்கு திரும்பப் பார்க்க, மீண்டும் அதிர்ச்சியான செய்தி வந்தது.

‘தற்பொழுது தான் பிரபல தொழிலதிபர் மிஸ்டர் ராசசிங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்கிற நிலையில் அடுத்ததாக அவரின் பியே கதிர் கோரவிபத்தில் சிக்கி இருக்கிறார்’ என்றும் ‘அவர் பிழைப்பது மிகவும் கடினம்’ என்றும் வர மேலும் அதிர்ச்சி அடைந்தாள்.

சட்டென்று மருத்துவமனைக்கு போகணும் என்று கண்ணீரை அழுந்த துடைத்தவள்,

படி ஏறி மேலப் போக அங்கே,

“என்ன மாமா சொன்னது போல பக்காவா ப்ளான் பண்ணி முடிச்சுட்டீங்க போல” என்று சுந்தரம் கேட்க,

“இல்லையா பின்ன அந்த கதிர் பய என்ன ஆட்டம் போட்டான் அது தான் வச்சேன் பாரு ஆப்பு.. இனி அவன் எழுந்து நடமாடக் கூட விட மாட்டான். நேரா கோமா ஸ்டேஜ். இல்லன்னா டெத்.. இது ரெண்டுல எதாவது ஒன்னு” என்று பெரிய மாமா சிரிக்க,

“ஆனா தலை இருக்க வாலுக்கு இதெல்லாம் செஞ்சி என்ன பயன்” என்று சின்ன மாமா வருத்தப் பட,

அவரை பொருள் நிறைந்த பார்வை பார்த்தார் கண்ணன்.

“என்ன மச்சான் நீங்க பார்க்கிற பார்வையை பார்த்தா என்னவோ ப்ளான் பண்ணிட்ட மாதிரி இருக்கு” என்று அவர் கேட்க,

“ப்ளான் பண்ணல சின்ன மச்சான்.. இம்ப்ளிமேன்ட்டே பண்ணியாச்சு” என்றார் கண்ணன்.

“மச்சான்” என்று இரு மாமன்மார்களும் அவரை வியந்துப் பார்க்க,

சுந்தரம் தான் வாயை திறந்தார். “ராசசிங்கனுக்கு ரொம்ப நாளா வளையை விரிச்சு வச்சு இருந்தோம். அவன் சிக்கவே இல்லை. இழை நம்மக்கிட்ட வந்த உடனே அவன் போதை பொருள் எடுத்துக்க ஆரம்பித்தான். அது தான் அதுலையே உயிரை குடிக்கிற அதிக அளவு போதை பொருளை கலந்து வச்சாச்சு.. இனி அவன் பிழைக்கிறது ரொம்ப கஷ்ட்டம்.. அவனால எழவே முடியாது” என்று இழையாளின் தந்தை சொல்ல ஏந்திழையாளாள் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

“சின்ன மச்சான் செம்ம... நின்னு நிதானமா அடிச்சுட்டீங்க” என்று சிலாகித்தவர், “யாருக்கிட்ட நம்மக்கிட்டயேவா எவ்வளவு ஆட்டம் காட்டினான் அவன் இன்னைக்கு இருக்கிற இடம் தெரியாம போயிட்டான்” என்று அவர் கொக்கரிக்க,

“ப்ச் அவன் என்ன நமக்கு ஆட்டம் காட்டுறது. நாம என்ன நூலில் கட்டுன பொம்மையா அவன் ஆட்டி வைக்கிறதுக்கு நாம ஆடுறது..” என்று சொன்ன கண்ணனின் விழிகள் இருந்தது அவ்வளவும் பழிவெறி மட்டும் தான். அதை மறைந்து இருந்து பார்த்தவளுக்கு பக்கென்று ஆனது.

“அவனை அதுக்காக எல்லாம் கொல்ல முயற்சிக்கல மச்சான்... எவ்வளவு தைரியம் இருந்தா அவன் நம்ம வீட்டு பெண் மேலையே கை வைப்பான். கல்யாணம் செய்துக்க கேட்டு வந்து இல்லன்னு நாம மறுத்து பேசிய பிறகும் நம்ம பெண்ணையே வளைத்து போட்டு கல்யாணமும் செய்துக்கிட்டான். அது போதாதுன்னு நமக்கு மட்டும் உரிமையான வழி வழியா தலைமுறை தலைமுறையா வந்த சொத்துல பங்கு போட்டு எடுத்துக்கிட்டான். அவனோட பிறப்பு என்ன, குலம் என்ன, கோத்திரம் என்ன.. பணம் இருந்துட்டா குடும்ப பாரம்பரியம் எதுவும் வேணாமா?

Loading spinner

Quote
Topic starter Posted : April 28, 2026 9:16 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top