Notifications
Clear all

அத்தியாயம் 61

 
Admin
(@ramya-devi)
Member Admin

கொந்தளிக்கும் மனதுடன் அவன் இருக்க, தீரனே எல்லாவற்றையும் முன் நின்று பேசி திருமணத்துக்கு தேதியும் குறித்து விட்டான்.

அதன் பிறகே தாரா நிம்மதியாக மூச்சு விட்டாள். அவளின் கைகளை பற்றிக் கொண்ட கயலுக்கும் நிம்மதியாக இருந்தது.

தேவகிக்கு தலையை நிமிர்த்த முடியவில்லை. அத்தனை அவமானமாக இருந்தது. பெண் பார்க்க வரேன்னு சொன்னவன் திடிர்னு இப்படி தான் பார்த்த பெண்ணை செல்வாவுக்கு முடிப்பான் என்று கொஞ்சமும் எதிர் பார்க்கவே இல்லை. பெண் வீட்டு ஆட்களை நிமிர்ந்துப் பார்க்கவே முடியவில்லை.

செல்வாவின் வசதியை கேட்டு பெண் வீட்டு ஆட்களும் திருமணத்துக்கு ஒத்துக் கொள்ள இவரால் எதுவும் பேச முடியவில்லை.

எப்படா அங்க இருந்து போவோம் என்ற நிலையில் இருந்தார் தேவகி. ஆளவந்தானிடம் அவர் மனம் குமுற, அவரை கொஞ்சமும் கண்டுக் கொள்ளவே இல்லை அவரின் கணவன்.

தேவகியின் மீது இருந்த கோவம் கொஞ்சமும் குறையவில்லை அவருக்கு. அவரின் கண் முன்னாள் அவமானப்பட்டு கூனி குறுகி கைப்பிள்ளையோடு வீட்டை விட்டு போன அதிரலின் முகமே வந்து வந்து போய்க் கொண்டு இருந்தது.

சும்மா இருந்த பிள்ளையை கூப்பிட்டு வச்சு அவமானப் படுத்திட்டமே என்று உள்ளுக்குள் அவருக்கு அத்தனை வேதனையாக இருந்தது. அவள் வர மாட்டேன் என்று சொன்ன பொழுதும் இவர் தானே பிடிவாதம் பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தது.

அப்படியே கோயிலோடு பார்த்து பேசிட்டு விட்டு இருந்து இருக்கலாம். தேவை இல்லாமல் வீட்டுக்கு வச்சு அந்த பெண்ணை அவமானப் படுத்த விட்டுட்டோமே என்று உள்ளுக்குள் அதே எண்ணம் தான் திரும்ப திரும்ப ஓடிக் கொண்டே இருந்தது.

அதை பற்றி எல்லாம் தேவகிக்கு கொஞ்சமும் கவலை இல்லாமல் மகனுக்கு ஓவர் நைட்டில் பெண்ணை பார்த்து திருமணத்தை பேசி முடித்து விடத்தில் ஆளவந்தானுக்கு அத்தனை கடுப்பு.

சும்மாவே முகத்தை திருப்பிக்கிட்டு இருக்கார். இப்போ சொல்லவும் வேண்டுமா? தேவகியை தூசியாய் கூட மதிக்கவில்லை. முழுவதுமாக ஒதுங்கி விட்டார்.

அதை எண்ணி கவலை கொள்ளாமல்

--

“பாருங்க உங்க மகன் என்ன காரியம் செய்து வச்சு இருக்கான்னு.. எப்படி என்னால வெளில தலை காட்ட முடியும். நாளைக்கு லேடிஸ் க்ளப்ல இதை பத்தி தான் பேசுவாங்க” என்றவை கண்டுக் கொள்ளாமல், வெற்றி புறம் திரும்பிக் கொண்டார்.

அவரின் செயல் முகத்தில் அடித்தது போல இருக்க இன்னும் அவமானமாக உணர்ந்தார்.

தீராவோ தனக்கு வந்த பாலை செல்வா பக்கம் திருப்பி விட்டு அதை சிறப்பாக முடித்து வைக்கவும் செய்தவன் தன் தங்கையின் வாழ்க்கையையும் ஒரே பாலில் காப்பாற்றி விட்டான்.

பெண் வீட்டை விட்டு வெளியே வந்தவன், கார் கதவை திறந்து ஏற, ஒரு கணம் நின்று திரும்பியவன் செல்வாவின் அப்பா அம்மாவை அழுத்தமாக பார்த்து,

“தாராவுக்கு ஆல்ரெடி நான் மாப்பிள்ளை பார்த்துட்டேன். சோ இனி உங்க மரியாதையை நீங்க காப்பாதிக்காங்க.. இன்னைக்கு மாதிரி பொறுமையா இருக்க மாட்டேன். என் ஸ்டைல்ல பதில் சொன்னா உங்க மகன் தாங்க மாட்டான். பெட்டர் அவனுக்கு நல்ல புத்தி மதி சொல்லி அந்த பெண்ணோட வாழ சொல்லுங்க. அதை விட்டுட்டு என் தங்கச்சி பின்னாடி சுத்துனான்னா காலம் முழுக்க முடமா தான் திரியனும்” அதிராமல் எச்சரித்தான்.

“என்ன தீரா உனக்கு மட்டும் தான் மிரட்ட தெரியுமா? நான் மிரட்டுனா நீ தாங்க மாட்ட” என்ற செல்வாவை நிதானமாக பார்த்த தீரன்,

“சரி மிரட்டு நான் பார்க்கிறேன்” என்று கதவை அடித்து சாத்தியவன் அதன் மீதே இருக் கைகளையும் கட்டிக் கொண்டு சாய்ந்து நின்றான். அவனிடம் அத்தனை தெனாவட்டு மிளிர்ந்தது.

“ஏன் மறந்து போயிட்டியா? நீ கோமாவுக்கு போனதே என்னால தான்” என்றான் ஆத்திரமாக.

அதை கேட்ட அத்தனை பேரும் திகைத்துப் போய் செல்வாவை பார்க்க, அவனோ யாரை பற்றியும் கவலை படமல்,

“பெருசா எல்லாம் ப்ளான் பண்ணல. ஜஸ்ட் வார்னிங் மாதிரி குடுக்கலாம்னு நினைச்சேன்.. ஆனா உன் துரதிஷ்ட்டம் நீ கோமாவுக்கு போயிட்ட” என்றவனை அடிக்க வந்த வெற்றியை தடுத்து நிறுத்திய தீரன்,

“அது எனக்கு ரெண்டு வருடத்துக்கு முன்னாடியே தெரியும் செல்வா. ஆனா ஏன் உன்னை விட்டு வச்சேன் தெரியுமா? நீ தேவா மாப்பிள்ளையோட தம்பின்ற ஒரே காரணத்துக்காக தான். மத்தபடி உன் மேல எனக்கு துளி கூட இரக்கம் இல்லை..” என்று சொன்ன தீரன்,

“இதுக்கு மேலையும் என் லைன்ல நீ வந்தா ரொம்ப கஷ்ட்டம். புது மாப்பிள்ளை கோலம் கலையும் முன்னாடியே ...” செண்டன்ஷை பினிஷ் பண்ணாமல் தோளை குலுக்கி விட்டு காரில் ஏறி போய் விட்டான்.

தீத்திரள் தீரன் ஒன்று சொன்னான் என்றால் அதை கண்டிப்பாக செய்து விடுவான் என்று எல்லோருக்குமே தெரியும். அதனால் போகும் அவனை பயத்துடன் பார்த்தார்கள் அனைவரும்.

அதை விட கோவமாக செல்வாவை திரும்பி பார்த்தார்கள். அவன் யாரையும் கண்டு கொள்ளாமல் கிளம்பி விட, பெரியவர்களுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. பெருத்த அமைதியுடன் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.

செல்வாவின் மீது அத்தனை பேருக்கும் வெறுப்பு தட்டியது. தேவா கயலுக்கு சொல்லவே வேண்டாம். அன்றையோடு அவனிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள். அவனின் பெற்றவர்களும் தேவைக்கு பேசினார்களே தவிர வாயையே திறக்கவில்லை.

செல்வாவிற்கு அதை பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலையே இல்லை. தாராவை மீண்டும் எப்படி தன் வாழ்க்கையில் கொண்டு வரலாம் என்று திட்டம் தீட்டினான்.

தாராவுக்கு பார்த்த மாப்பிள்ளை பற்றிய தகவல் அறிய அவனும் எவ்வளவோ முயற்சி செய்தும் ஒரு பொட்டு கூட கண்டு பிடிக்க முடியவில்லை.

எவனா இருக்கும்.. என்று அவன் போட்டு குழப்பிக் கொண்டே இருந்தான். தீரன் அவன் வீட்டு ஆட்களுக்கே சொல்லவில்லை. பிறகு எங்கிருந்து இவனுக்கு தெரிய..

ஒரு வேலை சும்மா சொன்னானா? என்று யோசித்தான் செல்வா. தீரன் அப்படி சும்மா சொல்கிற ஆள் இல்லையே.. சோ தாராவுக்கு கல்யாணம் உறுதி. ஆனா எப்போ யார் மாப்பிள்ளை என்று எதுவும் தெரிய வரவில்லை.

இருக்கட்டும் எங்க போயிடுவா.. பார்த்துக்குறேன் என்று அவன் கறுவிக் கொண்டான்.

தேவகியோ பெரும் ஆத்திரத்துடன் வீட்டுக்கு வந்தவர், தீரனை நாலு கேள்வி கேட்க துடிக்க, வேகமாய் அவன் இருக்கும் இடம் தேடி விரைந்தார்.

Loading spinner

Quote
Topic starter Posted : November 26, 2026 6:38 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top