Notifications
Clear all

அத்தியாயம் 58

 
Admin
(@ramya-devi)
Member Admin

கண்ணீர் மல்க அவனிடம் கையெடுத்து கும்பிட்டு நின்றாள் ‘இதுக்கு மேல எந்த வார்த்தையும் பேசிடாதே... அதை தாங்க என்னால முடியாது’ என்பது போல...

அதை கண்டவன் எதையாவது கொண்டு தன்னை தானே காயப்படுத்திக்க துடித்தான்.

இருகூறாய் வெட்டி போடும் அவளது நினைவுகளையும் காதலையும் மறக்க அவன் மனம் ஆளாய் பறக்க... உதாசீனத்துடன் அவளை பார்த்தவள்

“என் காதலுக்காக நீ ரொம்ப ஏங்குவடி.. அப்போ நான் நினைச்சா கூட என் காதல் உனக்கு கிடைக்காது. உன்னால காயம் கொண்ட மனதை உன்னால கூட சரி செய்ய முடியாது. அந்த அளவுக்கு என் மனசை காய படுத்தி வச்சு இருக்க...”

“உன்னை காண காண தோற்று போன என்னோட அன்பு தாண்டி என் கண்ணு முன்னாடி வந்து நிக்குது... இனி தயவயு செஞ்சு என் முன்னாடி வந்துடாத.. இது தான் நான் உன்னை பார்க்கிற கடைசி நாள்...” என்று தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்றவன்,

“ய்யா....இதுக்கு முன்னாடியும் சொல்லி இருக்கேன் தான். ஆனா அப்போ கூட உன்னை இழந்து விட கூடாதுன்னு மழுங்கி போய் உன்கிட்ட வந்தேன். ஆனா இப்போ சொல்றேன் இந்த ஆதி தேவனுக்கு இந்த அகம்பாவம் பிடிச்ச மயூரா தேவி தேவையில்லை...” என்றவன் தொடர்ந்து,

“உன் பேர் உன் புகழுக்காக நீ என்ன வேணாலும் செய்வன்னு இந்த ஒரு காரியத்திலே நிருபிச்சுட்ட... ஆனா நான் தான் இன்னும் மக்காவே இருக்கேன். உன் காதல் எனக்கு வேணும்னு நான் தான் பையித்தியம் மாதிரி உன்னை மட்டுமே சுத்தி வந்துகிட்டு இருக்கேன்... தட்ஸ் ரைட்... அதுக்கு நீ ரொம்ப சரியா பதிலடி குடுத்துட்ட... தேங்க்ஸ் பார் ஆல்...” என்றவன் வேகமாய் அவளது கழுத்தில் இருந்த செயினை பறித்தான்.

அதை அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

“ஆதி என்ன பண்றீங்க... அதை குடுங்க என்கிட்ட” என்று பதறிப்போய் அவனிடமிருந்து அதை பறிக்க பார்த்தாள்.

அவளது பதற்றத்தை பார்த்து ஏளனமாய் சிரித்தவன்,

அவளின் முகத்துக்கு நேராக அந்த ஜெயினை தூக்கி தொங்கவிட்டு அதில் கோர்த்து இருந்த துளி தங்கத்தால் ஆன தாலியை பார்த்துவிட்டு அவளது முகத்தை பார்த்து

“இந்த துளி தங்கத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்குற.... ஆனா அதை கட்டிய என்னை மட்டும் எவளுக்கோ தாரை வார்த்து குடுக்குற... நல்லா இருக்குடி உன் லாஜிக்...” என்றவன்,

“நான் தேவையில்லாத மாதிரி இதுவும் தேவையில்லை உனக்கு...” என்றவன் சற்றே சிரித்து,

“ஆல்ரெடி உனக்கு தேவையில்லன்னு தானே நீ இதை கட்டிய அன்னைக்கே தூக்கி எறிந்த... பாரேன் நீ அன்னைக்கே ரொம்ப தெளிவா இருந்து இருக்க... நான் தான் யோசிக்காம விட்டுட்டேன். அதுக்கு தான் செவிட்டுல அறைஞ்ச மாதிரி இன்னைக்கு புரியவச்சுட்டியே... எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி...”

“மேடம் இனி நீங்க என்னை பார்த்து கும்பிடலாம் வேணாம்... நீங்க என்னை கும்பிட்டு கேக்குறது என்னை என்னவோ ராட்ச்சசன் போல தோன வைக்குது. ஏதோ நான் தான் உங்களை ரொம்ப கொடுமை படுத்துற மாதிரியும் இருக்கு. சோ ப்ளீஸ் கைன்ட் ரெக்வெஸ்ட்.  இனி இப்படியெல்லாம் பண்ண வேண்டாம்... அது என்னை தான் ரொம்ப வருத்துது...” என்று விருட்டென்று அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டான்.

அவன் பேசிய பேச்சில் வெட்டு பட்ட உயிராய், கடைசி நிமிட எப்படி உயிரை தக்க வைக்க துடிதுடிக்குமோ அது போல துடிதுடித்து உடலை நீங்கும் உயிராய் துடிதுடித்து போனாள்.

“அய்யோ ஆதி...” என்று அவள் கதறின கதறல் ஆதியின் காதுகளை சென்று தழுவாமல் சுவரில் மோதி காற்றோடு கலந்து போனது.

எதற்கோ அவ்விடம் வந்த ரஞ்சனி அவள் துடிப்பதை கண்டு, வேகமாய் அவளிடம் விரைந்தாள்.

“மயூ என்ன ஆச்சு... ஏன் இப்படி கதறிக்கிட்டு இருக்க...” அவளை தூக்கி நிறுத்த முயன்றவளின் முயற்ச்சிகள் எல்லாம் தோல்வியில் முடிய,

“மயூ...” என்று அவளை தட்டிக்கொடுக்க முனைய... வேகமாய் அவளது கரத்தி விலக்கிவிட்டு எழுந்து தன்னுடைய அறைக்கு சென்று கதவடைத்துக்கொண்டாள்.

சீதா வந்து “என்ன” என்று கேட்க...

ரஞ்சனி, “எனக்கும் ஒன்னும் தெரியல அத்தை... கேட்டா எதுவும் சொல்ல மாட்டிக்கீறாங்க... ஆனா அழுதுக்கிட்டே இருக்காங்க.” என்றாள்.

“சரி விடு. கத்திரிக்கா முத்தினா சந்தைக்கு தானே வரும். அப்போ பார்த்துக்கலாம்... இப்போ வா நாம் ரெண்டு பேரும் புதுசா திறக்க இருக்கிற அந்த ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்க்கு போயிட்டு வருவோம்...”

“திறப்பு விழாவை அட்டென் பண்ண மாதிரியும் இருக்கும். ஏதாவது பொருள் வாங்கின மாதிரியும் இருக்கும்...” என்று அவளை இழுத்துக்கொண்டு, ஷாப்பீங் காம்ப்ளெக்ஸ் ஓனர் சீதாவை கடையை திறந்து வைக்க வர சொல்லி இருக்க... கிளம்பிவிட்டார் திறப்பு விழாவிற்கு.

யார் எப்படி போன எனக்கென்னன்னு கிளம்பிய சீதாவை அவரது பிள்ளைகள் நால்வரும் முறைக்க அதையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாமல் அழகாய் மேக்கப் போட்டுக்கொண்டு ஒய்யாராமாய் செல்ல.. எதிரே வந்த ஆதி அவரை கூர்ந்து பார்த்தான்.

அதில் அவருக்கு அடிவயிறு பக்கென்று பத்திக்கொள்ள... திருட்டு முழி முழித்து இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று கண நேரத்தில் யோசித்தார்.

அவரது மேக்கப்பும், சிங்காரமாய் ஒய்யாரமாய் இருந்த அவரது தோற்றத்தையும் கண்ட ஆதிக்கு பத்திக்கொண்டு வந்தது.

‘இங்க வீடே பத்திகிட்டு எரியுது. இதுல இந்தம்மா உலை வைக்க கொள்ளியை எடுக்க பார்க்குது...’ முணகியவன் அவரை முறைத்து பார்த்தான்.

அதில் ‘ஹிஹிஹி’ என்று வழிந்தவர்,

“அது ஒரு ஜுவல்ஸ் கடையை திறந்து வைக்கனும்னு கூப்பிட்டாங்க...” என்று அவர் ராகம் போட்டு இழுத்து சொல்லும் முன்பே

“நம்ம வச்சு இருக்குற ஷாப்பிங் மாலுக்கு ஆப்போசிட் ல தான் அவன் கடை வச்சி இருக்கான். அதை தான் நீ திறந்து வைக்க போற... உன்னால நம்ம பிசினேஸ்ல தான் ஒரு உதவியும் கிடையாது. அட்லீஸ்ட் இப்படி நம்ம பிசினேஸ்க்கு எதிரா எதுவும் செய்யாமலாவது இருக்கலாம்ல...” திட்டியவன்,

“எப்போ தான் பொறுப்பு வருமோ...” இன்னும் சாடியவன் வெளியே கிளம்பிவிட்டான் அவருக்கு முன்...

சீதா பாவமாய் அனைவரையும் பார்த்தார். எல்லோர் முகத்திலும் அடக்கப்பட்ட புன்னகை இருப்பதை கண்டு “ச்சை நான் பெத்ததுங்களும் சரியில்லை. என் அண்ணி பெத்ததுங்களும் சரியில்ல...” முணகியவர் ஆதி தேவன் பேசிய பேச்சையெல்லாம் தூசு போல தட்டிவிட்டு ரஞ்சனியோடு ஷாப்பிங் கிளம்பி சென்றுவிட்டார்.

Loading spinner

Quote
Topic starter Posted : November 27, 2026 8:49 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top