அடுத்த நாள் காலை யாருக்கும் காத்திருக்காமல் அழகாய் விடிய மயூ எழுந்து தன்னை சீர் செய்துக்கொண்டு தன் அறைக்கு வந்து குளித்தவள், சாமி அறைக்கு சென்று கண்களில் நீ மல்க வேண்டியவள் தோட்ட வீட்டை நோக்கி சென்றாள்.
ஆதி இன்னும் வந்து இருக்கவில்லை. அவனுக்காக காபி போட்டு காத்திருந்தவள் சிறிது நேரத்திலே ஆதி வந்தான். உள்ளே நுழையும் போதே காபியின் மனம் அவனை தாக்க... ஆதியின் மனம் குதியாட்டம் போட்டது...
“வாவ்… மேடம் எனக்கு முன்னாடியே வந்து காத்துக்கிட்டு இருக்கீங்க போல... வெறி நைஸ்... இது தான் என்னோட மயூ...” என்று ஜன்னலோரம் நின்று இருந்தவளை பின்னோடு அணைத்தவன் அவளது கழுத்தில் முகம் புதைத்து, தன் மூச்சு காற்றை அவளது செவியோரம் ஊதி சிலிர்க்க வைத்தான்.
அவனது தொடுகையில் தேகம் சிலிர்த்தவள் கண்களை மூடிக்கொண்டாள். கடைசியாய் அவனது தொடுகையை உள்வாங்குபவள் போல ஏற்றுக்கொண்டாள்.
காலையில் குளித்து வெளிர் பச்சை வண்ண சில்க் காட்டன் புடவையில் இருந்தவளை காண காண மனம் அதி மோகம் கொண்டது. இதழ்களும் முரட்டு மீசையும் கொண்டு அவளை வதைக்க எண்ணியவன், தன் இரு கரங்களையும் அவளது இடையோடு கட்டிக்கொண்டு வயிற்றில் இருந்த புடைவையை விலக்கி தன் கரத்தை அங்கே பதித்துக்கொண்டான்.
குளிர்ந்து இருந்த அவளது மேனி அவனை இன்னும் ஈர்க்க... ஈரமாய் இருந்த அவளது கூந்தல் அவனை மேலும் இம்சிக்க.. தன் முகத்தை அவளது கூந்தல் காட்டில் புதைத்து சற்றே அவளது சிகை வாசனையை நுகர்ந்தவன் கண்களை மூடிக்கொண்டான்.
“எனக்கு இந்த வாசனையை விட உன் கழுத்துல முகம் புதைக்கும் போது வரும் வாசனை தான் ரொம்ப பிடுச்சு இருக்குடி...” என்றவன் மறுபடியும் அவளது கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டான்.
“ம்ம்ம்... அரோமாடி... இந்த வாசனைக்கு ஈடு இணையே இல்ல மயூ...” என்று தன் இதழை புதைத்து முத்தமிட்டவன், தன்னோடு அவளை இன்னும் இருக்கிகொண்டான்.
அவளது குளிர்ந்த மேனி அவனை மிகவும் இம்சிக்க... அவளை அப்படியே தன் கைகளில் என்திக்கொண்டவன் படுக்கை அறைக்கு தூக்கி சென்றான் வந்த வேலை மறந்து.
அவனது போக்குக்கு விட்டவள் விழிகளை மூடிக்கொண்டாள் எந்த எதிர்ப்பும் காட்டாமல். கட்டிலில் கிடத்தியவன் அவள் மீது பரவி படர... அவனது மொத்த எடையையும் தன்னுள் வாங்கி அவனை தாங்கி கொண்டாள்.
உதடுகளும் கரங்களும் சில சில்மிஷ விளையாட்டில் ஈடு பட... கூச்சம் கொண்டு அவனை தடுக்க எண்ணிய கரங்களை அடக்கிகொண்டு விழிகளில் நீர் பெருக அவனை கூட கட்டி அணைக்காமல் மெத்தையின் விரிப்பை பற்றிக்கொண்டு படுத்து இருந்தாள்.
மோகத்தின் வசமிருந்த ஆதிக்கு அவளது மாற்றம் புரியாமல் போக... இன்னும் தனது முகத்தை கீழே இறக்கி அவளது மார்பில் புதைத்துக்கொண்டான்.
அப்பொழுதும் கூட அவனை தடுக்க விழையாமல், இனிமேல் அவனை பார்க்கவோ பேசவோ முடியாது என்ற நிதர்சனத்திலும், உயிருக்கு உயிரானவனை, உயிரில் கலந்தவனை பிரிய போகிறோம் என்ற எண்ணமே அவளை மேலும் வருத்தியது, அதில் கண்களில் இருந்து பெருகியது கண்ணீர்.
ஆதி எதையோ அந்தரங்கமாய் கேட்க மயூ அவனது பிரிவை எண்ணி கலங்கிக்கொண்டு இருந்ததில் அவளால் அவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை. முதல் முறை வெட்கம் என்று எண்ணியவன், அடுத்ததும் அந்தரங்கமாய் பேசினான்.
அதற்கும் மயூவிடமிருந்து எந்த எதிர் வினையும் இல்லாமல் போக அவளிடமிருந்து நகர்ந்து எழுந்தவன் அவளது முகத்தை பார்த்தான்.
தன் மீதிருந்து ஆதி எழுந்தது கூட தெரியாமல் அவனது பிரிவை எண்ணி அழுதுக்கொண்டு இருந்தாள். அப்பொழுது தான் ஆதிக்கு விசயமே புரிந்தது.
அவள் இப்பொழுது வரை தன்னை அணைக்கவே இல்லை என்று. அதிலே மனம் விட்டு போனவன் அவளது கண்ணீரை கண்டு இன்னும் நொறுங்கி போனான்.
“மேடம் வேறொரு முடிவு எடுத்துட்டு தான் இங்க வந்து இருக்காங்க போல...?” எண்ணியவனுக்கு மனமெல்லாம் பாலைவனமாய் வறண்டு போனது.
விருட்டென்று அவளின் அருகில் இருந்து எழுந்த போது அவனது கரம் பட்டு கண்ணாடி குவளை ஒன்று சிலிர் என்று விழுந்து சத்தமிட்டது.
அதில் கலைந்தவள் தன் மேல் பாரமில்லாமல் இருப்பதை உணர்ந்தவள் வேகமாய் ஆதியை தேடினாள். அவளின் எதிரில் அவன் ஆங்காரத்தின் மொத்த உருவமாய் நின்றிருப்பதை கண்டவளுக்கு மொத்த சித்தமும் கலங்கி போனது.
“ஆதி...” மிக மெல்லமாய் வாயசைத்து பயத்துடன் அவனை அழைக்க...
“என்ன முடிவு எடுத்து இருக்க...” எதற்கும் அசையாமல் நின்று கேட்டவனின் உறுதியை கண்டு இன்னும் பயந்தவள், மௌனமாய் தலை குனிந்துக்கொண்டாள்.
“எனக்கு பொறுமையே கிடையாதுடி... ஆனா உன் விசயத்துல நான் எவ்வளவு பொறுமையா போக முடியுமோ அதை விட பொறுமையா போய்கிட்டு இருக்கேன். ஆனா நீ என்னை ரொம்ப சீண்டி விட்டுகிட்டு இருக்க... சொல்லு என்ன முடிவு எடுத்து இருக்க...” சிங்கத்தின் சீற்றத்துடனும் கர்ஜனையுடனும் கேட்டான்.
அதில் அவளது உடல் தூக்கிவாரிப்போட்டது. “ஆதி அது...” தயக்கத்துடன் இழுத்தவளை காண காண அவனது பொறுமை எல்லை கடந்து செல்ல அவள் மீது காட்ட முடியாத கோவத்தை அங்கிருந்த கண்ணாடி பொருட்களின் மீது காட்டினான். அந்த அறையே போர்களம் போல காட்சி அளித்தது.
அவனது இந்த கோவத்தில் மயூவின் உடம் இன்னும் பயத்தில் தூக்கிவாரிப்போட்டது. கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டவள் அதித உக்கிரமாய் இருந்தவனை காண பயந்தாள். அவனது ஆவேசமான செயல் ஒவ்வொன்றிலும் அவள் மனம் நடுக்கத்தில் சுருண்டு விழுந்தது.
அவளின் பயத்தை கண்டு இன்னும் அதிக கோவம் கொண்டவன் வேகமாய் அவளிடம் நெருங்கி அவளை ஆவேசமாக பற்றி,
“கண்ணை திறந்து பாருடி... நான் மிருகம் இல்ல... மனுஷன். குருதியும் சதையுமா, உணர்வும் உயிருமா இருக்குற சாதாரண மனிதன் தான். ஆனா உனக்கு தான் நான் ஜடமா தெரியுறேன்.”
“உனக்கு என்னோட உணர்வுகள் புரியவே இல்லையா மயூ... அதனால தானே என்னோட உணர்வுகளை இவ்வளவு உதாசீன படுத்துறியா...?” வேதனையுடன் கேட்டவனை கண்டு இன்னும் வேதனை கொண்டவள் இப்படியே அவனது கரத்தில் மடிந்து போய்விட மாட்டமா..? என்று கலங்கி போய் நின்றாள்.
கண்ணீர் மல்க அவனிடம் கையெடுத்து கும்பிட்டு நின்றாள் ‘இதுக்கு மேல எந்த வார்த்தையும் பேசிடாதே... அதை தாங்க என்னால முடியாது’ என்பது போல...
அதை கண்டவன் எதையாவது கொண்டு தன்னை தானே காயப்படுத்திக்க துடித்தான்.




