“முதல்ல நீங்க இந்தியாவுல இருங்க... அப்புறம் அவன் உங்க கிட்ட சொல்லன்னு குற்றம் சொல்லலாம்.” என்று சீதா நொடித்துக்கொள்ள... அசடு வழிந்தார் கேசவன்.
“ம்கும் ரொம்ப தான்... இந்த பிளானை முன்னாடியே எக்ஸ்சிகியுட் பண்ணி இருந்தா இந்த மந்த ப்ராபிட் எக்கச்சக்கமா வந்து இருக்கும். நாலு நல்லதையும் சேர்த்து செஞ்சு இருக்கலாம்.” என்று கேசவனை மேலும் நொடிக்க
“சரி விடு... இது தான் ரீசன்னா செஞ்சு இருக்க வேண்டியது தானே.. ஏன் மயூ உனக்கு சரின்னு பட்டா செய்ய வேண்டியது தானேடா..?” மயூவிடம் கேட்டார் கேசவன்.
“அது நீங்க ஒப்புதல் குடுக்காம... நான் எப்படி மாமா”
“அதுக்குன்னு உனக்கு சரின்னு பட்டதை கூட விடணுமா...? இதையா நான் உனக்கு ட்ரைன் பண்ணேன். உனக்கு சரின்னு பட்டா அது எந்த தடை வந்தாலும், எத்தனை பேர் குறுக்க நின்னாலும் நீ அதையெல்லாம் தாண்டி போய் ஜெயிச்சு காட்டனும். சரியா...?” கேசவன் தன் மருமகளிடம் கேட்க...
ஒப்புதலாய் தலையாட்டினாள்.
ஆதியின் அதிரடியான செயலில் மயூ தன்னவனை பெருமையாக பார்த்தாள். அவனால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமாக்கப்பட்டு இருக்கிறது. இல்லையென்றால் இந்த திட்டம் செயலாக்கம் பெறாமல் இன்னும் தூங்கிக்கொண்டே இருக்கும்.
அத்தனைக்கும் காரணம் தன்னவன் இல்லையா...? மனம் பெருமையாக தன்னவனை நினைத்துக்கொண்டது. இதெல்லாம் சரி தான். ஆனால் பிடிவாதம் பிடித்துவிட்டால் அவ்வளவு தான்.
அதிலிருந்து அவ்வளவு எளிதாக அவனை வெளியே எடுக்க முடியாது. அவன் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று அதிலே நிர்ப்பான். அது தான் அவனிடம் உள்ள குறை.
“ம்ஹும்... இவ்வளவு பெரிய நிர்வாகத்தை கட்டி ஆள்வது ஒன்றும் சுலபம் இல்லையே... இந்த பிடிவாதம் இல்லை என்றால் இந்த நிர்வாகம் இத்தனை அழகா செயல் படுவது என்பது சாத்தியமா? என்பது கேள்வி குறிதான்... எண்ணியவளுக்கு பெருமூச்சு வந்தது.
மாலை நேரம் ரஞ்சனி கால் பண்ணி பார்க்குக்கு வர சொல்ல... ஆதி அவளை விட மறுத்து போனிலே என்ன விஷயம் என்று கேட்க செய்தான்.
“எதுக்கு ஆதி இவ்வளவு பிடிவாதம்...” சற்று கோவமாகவே கேட்டாள்.
“எல்லாம் இதுக்கு தான்” என்றவன், சட்டென்று அவளை வளைத்து பிடித்து அவளது கழுத்தில் முகம் புதைத்து தன் முகத்தை அங்கும் இங்கும் பிரட்ட... அவளுக்கு ஜிவ்வென்று இருந்ததுடன், உணர்வு குவியல்கள் பெரிதும் அலைக்கழித்தது...
“ஆதி...” முணகியவளின் முணகல்கள் எல்லாம் அவனது இதழ்களுக்குள்ளே அடங்கி போனது.
மேலும் தன்னோடு அவளை நெருக்கியவன், அவளது காதில்...
“உன்னோட நான் இருக்கும் நேரம் எனக்கு மட்டும் தான் சொந்தம்னு சொன்னது மறந்து போயிடுச்சா...?” கேட்டபடி அவளது காது மடல்களை இம்சித்தான்.
“மறக்கலங்க... ஆனா அவங்...” மேற்கொண்டு அவளை பேசவே விடவில்லை.
“இப்பவும் நீ என்னை பத்தி பேச மாட்டிக்கிற...” என்றவன் அவளது இதழ்களுக்கு தண்டனை கொடுக்க ஆரம்பித்தான். அதன் பின் எங்கே ரஞ்சனியை பற்றி நினைப்பது.. எல்லாம் ஆதி தேவனின் கைவசமாகி போனது.
அதை எண்ணி பார்த்தவளுக்கு அவனின் பிடிவாத குணம் சற்றே பயத்தை விளைவித்தது. ஆனாலும் அது வெளியே தெரியாதபடி இயல்பாக இருப்பது காட்டிக்கொண்டாள்.
ஆதி அவளை அறிந்தவன் தான் என்றாலும் அவனது பிடிவாதத்தை அதுவும் மயூவின் விசயத்தில் விட்டுக்கொடுக்க அவனால் முடியாது...
இருவரும் தங்களது நினைவுகளில் இருந்து சற்றே மீண்டு இயல்புக்கு திரும்ப உணவு மேசைக்கு சென்று அனைவருடனும் இரவு உணவை முடித்துக்கொண்டு அவரவர் அறைக்கு செல்ல... சீதா மயூவை நிறுத்தி அவளது முடிவை கேட்டார்.
அவளுக்கு மாலை ரஞ்சனியுடன் வெளியே செல்ல முடியாமல் தொலை பேசியிலே இன்னது தான் விஷயம் என்று பகிரப்பட்டதுடன், அவள் இருக்கும் சூழ்நிலை தெளிவாக தெரிய, ஆதி தன்னிடம் அதிக ஒட்டுதலுடன் இருப்பதையும் கணக்கிட்டு சம்மதம் என்று மனமே இல்லாமல் அவருக்கு ஒப்புதல் அளித்தாள்.
அதை கேட்டு ஒரு கணம் சீதா துடித்தாலும் இதுவும் நல்லதுக்கே என்று எண்ணி அவர் அடுத்தடுத்த வேலைகளை செய்ய தொடங்கினார்.
அவரது செயலில் ஆதி அடிபட்ட சிங்கமாய் கருவறுக்க காத்திருந்தான் தன்னவளையும், தன் பெற்றவளையும்....
ஆதியின் காதல் நிறைவேறுமா...? இல்லை சீதாவின் முடிவு நிறைவேறுமா...? அல்லது மயூவின் தியாகம் வெற்றி பெறுமா...? மூன்று விதமான வியூகங்கள்...
யாரு யாரை வெல்லுவார்களோ...? யாரின் வாழ்க்கை யாரோடு முடியுமோ...? யார் இதில் தோல்வியை தழுவுவார்களோ....? இவற்றிற்கான விடைகள் அனைத்தும் அடுத்த பாகத்தில்...
அடுத்த பாகம் மிக விரைவில்...
நன்றி..
வணக்கம்...




