Notifications
Clear all

அத்தியாயம் 36

 
Admin
(@ramya-devi)
Member Admin

திடிரென்று ஆதி மயூவின் அறைக்கு வர... திகைத்து தான் போனாள். அதுவும் அவளை இழுத்து மடியில் அமர்த்திக்கொள்ள மயூவுக்கு பெரும் சங்கடமாய் போனது.

“ஆதி இது காலேஜ்...” என்றாள் பெரும் தயக்கத்துடுடன்.

அவனோ ரொம்பவும் கூலாக “சோ வாட்..”

“யாராவது வந்தா என்ன பண்றது...?”

“கதவு லாக் ல இருக்கு. அதுவும் இல்லாம உன் அனுமதி இல்லாம யாரும் கதவை திறக்க மாட்டாங்க...” என்றவன் அவள் பார்த்துக்கொண்டு இருந்த பைலை பார்வையிட்டான்.

“இது ஏன் இன்னும் ப்ராசஸ் ஆகாம இருக்கு. பெண்டிங்க்ள போட்டியா...?” என்படி அவளது வேலையை பார்வையிட ஆரம்பித்தான்.

“அது மாமா தான்...” தயக்கமாய் இழுத்தவளை முறைத்தான்.

“அவரு என்ன சொன்னாலும் கேட்கனும்னு அவசியம் இல்லன்னு உன்கிட்ட ஏற்க்கனவே சொல்லி இருக்கேன்ல... அப்புறம் ஏன் இன்னும் தயங்கி கிட்டே இருக்க.. ரொம்ப பேட் ஹாபிட் மயூ...” என்றவன் அந்த கோப்புகளை மீண்டும் சரி பார்த்தான்.

அது ஆதரவு அற்ற மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.. அதில் சில விதிமுறைகளோடு வேலை வாய்ப்பு, மற்றும் தங்கும் வசதிகளையும் உள்ளடக்கிய கோப்பு. அந்த கல்லூரியில் படித்த பின் இருவருடங்களுக்கு மட்டுமே இந்த சேவை தொடரும். அதன் பின் அவரவர் திறமையில் வளர்ந்து வெளி கிளம்பிட வேண்டும்.

முதலில் அவர்களது கல்லூரியில் படித்த மாணாக்கர்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தை உருவாக்கி இருந்தாள் மயூ. அதுக்கே கேசவன் முணுமுணுத்த படி ஒப்புதல் கொடுத்தார்.

அதன் பின் மயூ வெளி கல்லூரி மாணாக்கர்களுக்கும் இந்த திட்டத்தை அறிமுக படுத்தலாம் என்று மயூ சொல்ல கேசவன் பெரிதாக ஆட்ச்சேபனை செய்தார்.

அப்பொழுது ஆதி அங்கு இல்லை. அதனால் இந்த திட்டம் அப்படியே பெண்டிங்லயே இருந்தது. அதை எடுத்து வருத்தத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள் மயூ. அந்த நேரம் ஆதி வர பைலில் இருந்த திட்டம் செயல் வடிவம் பெற்றது...

உணவை கூட மறந்து தன் செயலாளர்களிடம் அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த விஷயம் தெரியும் படி செய்ய சொன்னான். அதோடு இல்லாமல் அனைத்து ஊடகங்களுக்கும் இந்த விஷயத்தை தெரிவித்து ப்ளாஷ் நியூசாக வர செய்து விட்டே ஓய்ந்தான். கூடவே கல்வி மந்திரி அவனுக்கும் மயூவுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

அதையெல்லாம் தன் டபிள் பார்த்துக்கொண்டு இருந்த கேசவனுக்கு கடும் கோவம் வந்தது. உடனடியாக அவனை தொடர்பு கொண்டார்.

“ஆதி நீ செய்யிறது எதுவும் சரியில்லை... ஒழுங்கா நீ சொன்னதை எல்லாம் மாத்தி ஒரு ஸ்டேட்மென்ட் குடு...” என்று கத்த... போனை தன் காதைவிட்டு விலகி வைத்து ஸ்பீக்கரில் போட்டவன்

“நைட் டின்னர் உங்க கூட ஏற்பாடு பண்ணி இருக்கேன்... சார்ப்பா நைன் தேர்ட்டி. நம்ம வீட்டு ஹால்ல... வந்துடுங்க. அங்க பேசிக்கலாம்” என்று முடித்துக்கொண்டான்.

அதை கேட்டு இன்னும் குதித்த கேசவன் சீதாவுக்கு போன் போட்டு கத்து கத்து என்று கத்த... அவரோ தன் போனை தன் செயலாளரிடம் கொடுத்துவிட்டு நிலுவையில் உள்ள கணக்குகளை சரி பார்க்க தொடங்கினார்.

சீதாவிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக,

“பொண்டாட்டி மதிச்சாதானே பிள்ளை மதிக்க... இங்க ரெண்டும் ரெண்டு விதம்...” திட்டியவர் விரைவாக வீடு வந்து சேர்ந்தார்.

ஆனால் அவரின் நேரமோ என்னமோ அன்று அனைவருக்கும் வேலை முடிய சற்று நேரம் இழுத்தது.

அதுவும் அவரின் கோவத்தை தூண்டிவிட... பெருகிய சினத்தோடு கூண்டு புலியாய் வீட்டின் கூடத்தில் அமர்ந்து இருந்தார்.

ஒன்பது மணிக்கு மேல் ஒவ்வொருவராய் வீடு வந்து சேர, ஆதியும் மயூவும் ஒன்பதைரை மணிக்கு வீடு வந்து சேர்ந்தார்கள்.. மயூவின் முகத்தில் இருந்த சோர்வே ஆதி இன்றைக்கு அதிகமாக அவளை வாட்டி இருக்கிறான் என்று சொல்ல... கேசவனுக்கு மனம் தங்கவில்லை.

ஆதி வந்தும் வராததுமாக “எதுக்குடா மயூவை இந்த பாடு படுத்துற.. உனக்கு தான் அவளை பிடிக்காதுல்ல... பிறகென்ன அவ கிட்ட எப்போ பாரு வம்புக்கு நின்னுக்கிட்டே இருக்க... இது தான் கடைசி முறை. நீ அவளை வம்பு இழுப்பது...” என்று மயூவுக்கு பரிந்துக்கொண்டு வர, சீதாவுக்கு ஐயோ என்று இருந்தது.

‘இந்த மனுசனை யாரும் பஞ்சயாத்து பண்ண கூப்பிட்டாங்களா..? சும்மாவே அவன் ஆடுவான். இதுல இவரு ரொம்ப ஓவரா பேசுறாரு... மயூ பாடு திண்டாட்டம் தான்..’ எண்ணியவர் தன் கணவனை முறைத்து பார்த்தார்.

மனைவி தன்னை பாசமாக! பார்ப்பதை கண்டு கண்களிலே “என்னடி” என்றான். 

“முக்கும் பேசுறதெல்லாம் பேசிட்டு இப்போ வந்து என்னடி நோன்னடி ன்னு கேளுங்க...” நொடித்துக்கொண்டவர் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு

“கொஞ்ச நேரம் எதுவும் பேசாம அமைதியா இருங்க..” என்றார்.

“ஏய் என்ன ஏண்டி சும்மா இருக்க சொல்ற...  நான் என்ன பண்ணுனேன்...” முணுமுணுத்தவரை கண்களிலே எரித்த சீதா...

“ஆதி என்ன சொல்ல வரான்னு முதல்ல கேளுங்க பிறகு உங்க பாயின்ட்டை வைங்க...” என்று சொன்னவர் ஆதியின் உரைக்காக காத்திருக்க ஆர்மபித்தார்.

“வேலை வாய்ப்பு மற்றும் தாங்கும் வசதியை மத்த மாணவர்களுக்கு எதுக்கு பிரிச்சி குடுத்து இருக்கேன்னா...? என்று நிறுத்தியவன் தன் தந்தையை நோக்கி ஒரு சல்யூட் அடித்தவன்

“நம்ம கல்லூரியோட இந்த ஸ்கீம் முடிக்க எனக்கு விருப்பம் இல்ல... அதோட இந்த ஸ்கீம் மூலமா இன்னும் பல மாணவர்கள் அதுவும் ப்ரெஷ் கேண்டிடேட் நம்ம தொழில் துறையில உள்ள வருவாங்க..”

“நாம் அதிகமா சம்பளம் குடுக்காம இருப்பிட வசதியும் உணவு வசதியும் செஞ்சு குடுத்தம்னா அவங்க கிட்ட இருந்து எட்டு மணி நேர வேலையோட கூட சேர்த்து பார்ட் டைம் ஜாபாவும் இல்லன்னா ஓடி மாதிரின்னு சொல்லி வேலை வாங்கிக்கலாம்.”

“இது மட்டும் இல்லாம மக்கள் மத்தியில நம்ம க்ரூப் கம்பெனிஸ் இன்னும் பிரபலமாகும், அதோட நம்ம காலேஜ் நேம் மனசுல பதிஞ்சு நிக்கும்.”

“நாம அடுத்த செய்யிற ஒவ்வொரு செயலுக்கும் புதிய தலைமுறை ஒத்துழைக்கும். கஷ்ட படும் மக்களுக்கு வேலை குடுத்த மாதிரியும் ஆச்சு. அவங்களை வச்சு நாம கேயின் பாத்த மாதிரியும் ஆச்சு. டுயின் ஒன்...” என்று சொன்ன விளக்கத்தை கேட்டு ஆதியின் தகப்பன் புத்திரனின் அறிவு திறனில் எப்பொழுதும் போல திகைத்து தான் போனார் கேசவன்.

“இதை முன்பே சொல்றதுக்கு என்னடா...” என்று அவனிடம் கேள்வி கேட்க,

“முதல்ல நீங்க இந்தியாவுல இருங்க... அப்புறம் அவன் உங்க கிட்ட சொல்லன்னு குற்றம் சொல்லலாம்.” என்று சீதா நொடித்துக்கொள்ள... அசடு வழிந்தார் கேசவன்.

Loading spinner

Quote
Topic starter Posted : October 27, 2026 9:14 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top