Notifications
Clear all

அத்தியாயம் 35

 
Admin
(@ramya-devi)
Member Admin

ஆதியின் வதனத்தில் மெல்லிய புன்னகை ஒன்று தவழ்ந்தது...

அவர் சொல்லியது போல இவருடைய உடைகளும் சற்று ஒன்று போலவே இருந்தது. அவள் அணிந்து இருந்த சில்க் சேரி அடர் பச்சை மற்றும் வெண்மை நிறம் கலந்து வைர கற்கள் ஒளி வீசியபடி இருந்தது. அதற்க்கு தோதாக அவளது அணிமணிகளும் இருக்க...

அதை போலவே ஆதியும், அடர் பச்சை வண்ணத்தில் சட்டையும், வெள்ளை நிற பேண்டும், அவனது சட்டை பொத்தான்கள் ஒவ்வொன்றும் வைரத்தில் மின்னியது. கூடவே அவன் அணிந்து இருந்த கை செயின், கழுத்து சங்கிலி, வாட்ச், ஒற்றை காதில் அவன் அணிந்து இருந்த ஒற்றைக் கல் ஸ்டேட், மோதிரம்...  முதலியன எல்லாமே வைரத்தில் மிளிர்ந்து இருந்தது.

அதை பார்த்த உடனே இருவரும் சொல்லி வைத்தது போல உடை அணிந்தது போலவும், கூடவே உலகில் தலை சிறந்த ஜோடி இவர்கள் தான் என்று முத்திரை குத்தும் அளவுக்கு அவர்களின் தோற்றம் இருந்தது.

“சார், சிரிச்சா நீங்க இன்னும் ரொம்ப அழகா இருக்கீங்க... அதுக்காக சிரிச்சே பதில் சொல்லாம ப்ளீஸ்.. எங்களுக்கு தெளிவா ஒரு பதிலை சொல்லுங்களேன்..” ரொம்பவும் விவரமாய் ஒரு நிருபர் கேட்க...

அதற்கும் புன்னகைத்தவன், “பியூச்சர பத்தி இன்னும் எந்த முடிவும் எடுக்கல... சோ எதா இருந்தாலும் நீங்க கொஞ்சம் காத்திருக்க தான் வேண்டும்...” என்று சொன்னவன்... அதன் பின் சில விசயங்களை அவர்களோடு பகிந்துக்கொண்டு நாளைய செய்தி எப்படி வர வேண்டும் என்பதை தெளிவாக சொல்லிவிட்டு, சுடசுட செய்தியாக வரும் தொலைக்காட்சி சேனலுக்கும் சில தகவல்களை சொல்லிவிட்டு மயூவை கை பிடித்து அழைத்து சென்றான்.

அவனது கூற்று படி ஆதியும், மயூவும் எதிர் காலத்தில் திருமணம் செய்ய வாய்ப்பு இருப்பது போல ஒரு யூகத்தை பரப்பி விட்டனர் சுட சுட செய்தியாக செய்தியாளர்கள். அதை தன் போனில் ஆதிக்கு காட்டிய மயூ கடும் கோவத்தில் இருந்தாள்.

“நீங்க எதை நினைச்சு இந்த மாதிரி எல்லாம் பண்றீங்க ஆதி... நிஜமா உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு செயலை நான் எதிர் பார்க்கவே இல்லை..” வேதனையுடன் சொன்னவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“ஏண்டி நீ சொன்னா நான் உடனே அவளை கல்யாணம் பண்ணிக்குவனா...? அது இந்த ஜென்மம் மட்டும் இல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நடக்காது. உன்னோட விதி அது என்னோட தான். என்னோட விதி அது உன்னோடதான்...”

“சோ தேவையில்லாத கற்பனையில சுத்தாம போ போய் புள்ளைங்களுக்கு பாடம் எடுக்குற வேலையை பாரு...” என்று மிக ஏளனமாய் சொன்னவனை கண்டு ஆத்திரம் கட்டுகடங்காமல் வந்தது.

“அப்போ இவ்வளவு நாள் எனக்காக ஒத்துழைப்பு கொடுத்தது எல்லாம் நடிப்பா...?”

“அதை அப்படி கேட்க கூடாதுடி என் செல்ல பொண்டாட்டி... அத்தனையும் நடிப்பா ஆதி... நடிப்பா...? அப்படி கேக்கணும். எங்க மறுபடியும் கேளு...” என்று மேலும் கிண்டல் பண்ண மயூவுக்கு பத்திக்கொண்டு வந்தது.

“ஆதி...” என்றபடி அவனை அடிக்க வர, அவளது இரு கரங்களையும் தன் ஒற்றை கையில் அடக்கிவிட்டு அவளின் முகம் நோக்கி குனிந்தவன்... தன் மூச்சு காற்றை அவளின் முகம் மீது ஊதி,

“மயூ நீ என்னை விட்டு ஒரு அடி எடுத்து வச்சா... என்னை விட்டு நீ போகவே முடியாத அளவுக்கு நான் இரும்பு கயிறு போட்டு எனக்குள்ள உன்னை கட்டி வச்சுக்குவேன்... இது தெரியாம நீ என்கிட்டயே முட்டுற, மோதுற... தோல்வி ரொம்ப அதிகமா வரும்... எதுக்கும் ஸ்டாக் வச்சுக்கோ உன்னோட கோவத்தை. அதிகமா யூஸ் பண்ணி பண்ணி தீர்ந்துட போகுது...” கேலி செய்தவன் சட்டென்று அவளது இதழ்களை வன்மையாக முத்தமிட்டு,

“இதை விட அதிகமாக உன்னை எனக்குள்ள பினைச்சு வச்சுக்குவேன்... என்னை தாண்டி போய் தான் நீ என்னை வேறு யாருக்காவது தாரை வார்த்து தர முடியும்... அதுக்கு நான் உயிரோட இருக்க....” சொல்லி முடிக்கும் முன் தன் கரங்களை கொண்டு அவனது வாயை பொத்த முயன்றாள்.

ஆனால் கைகள் இரண்டும் அவனது பிடியில் இருக்க, கைகளை விடுவிக்க முயன்றாள். அதனால் அது முடியாமல் போக, தன் இதழ்களை கொண்டே அவனது வார்த்தைகளை வெளியே வர முடியாமல் முடித்து வைத்தாள். 

அதில் உடல் சிளிர்த்தவன் கண்கள் மின்ன தன்னவளை பார்த்தான். அவனது பார்வையில் எரிச்சல் உற்றவள்,

“நான் அந்த வார்த்தையை நீங்க முடிக்க கூடாதுன்னு தான் அப்படி பண்ணினேன்..” முக சிவப்போடு சற்றே கோவத்தோடும் சொல்ல... அதை இரசித்தவன்,

“எப்படி பண்ணுனா என்ன...? எதுக்காக பண்ணுனா என்ன...? எனக்கு சேரவேண்டியது வந்துடுச்சு... சோ... இனி நீ என்ன பேசுனாலும் அது ஆட்டத்தில் சேராது...” என்றவன் மிக தீவிரமாக அவனது முத்திரையை அவளது இதழ்களில் மீண்டும் பதித்தவன், சற்று நேரத்தில் கிளம்பிவிட்டான் அவளை அவளுடைய கல்லூரி மேனேஜ்மென்டில் விட்டுவிட்டு..

புயல் வந்து தாக்கியது போன்ற உணர்வை தந்தவனை மனதிலே திட்டிக்கொண்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்தவள் அன்றைக்கு உண்டான வேலைகளை பார்வையிட்டாள்.

அப்பொழுது மேசையில் உள்ள போன் அடிக்க எடுத்து பேசினாள்.

“வணக்கம்...”

“மயூ நான் ரஞ்சனி...” தயக்கமாய் பேசினாள் ரஞ்சனி. அவளது குரலை கேட்டு சங்கடப்பட்டவள்,

“சாரி ரஞ்சனி... ஆதி இப்படி பண்ணுவாருன்னு நான் எதிர் பார்க்கல...” என்று வெகுவாய் வருந்தியவளிடம் சின்ன சிரிப்புடன்,

“ஆதி சரியா தான் செஞ்சு இருக்காரு. ஆதி என்ன பண்ணாலும் அது சரியா தான் இருக்கும் மயூ. நான் இப்போ அதுக்காக கால் பண்ணல. நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் மயூ. வர்றியா...?” கேட்டாள்.

“இப்பொழுதே வரணுமா ரஞ்சனி... கொஞ்சம் வேலை இருக்கே...”

“ஈவினிங் பார்க்கலாம் மயூ... நோ ப்ராப்ளம்..” என்றாள்.

அவள் சம்மதம் கொடுத்த பின் அன்றைய வேலைகளை நிதனானமாய் செய்து முடித்தவள் மத்திய உணவு வேலையின் போது ஆதியிடமிருந்து அழைப்பு வந்தது.

“சாப்பிட வெளிய போகலாமா...?” என்று கேட்டான் ஆதி.

“என்னால வர முடியாது... எனக்கு சாப்பாடு இங்கவே வந்துடுச்சு...” முறுக்கி கொண்டாள் அவனிடம்.

“நோ ப்ராப்ளம்..” என்றபடி கதவை திறந்துக்கொண்டு வந்தவனை கண்டு லேசாய் அதிர்ந்து தான் போனாள்.

“வொர்க் இல்லையா...? இங்கவே சுத்திகிட்டு இருக்கீங்க...?”

“புல் டைம் உன்னை மட்டுமே சுத்தி வர்றது மட்டும் தான் என்னோட வேலை இனிமே... கொஞ்ச நாள் கண்டுக்காம விட்டதுக்கு தான் ஒரு முழ நீளத்துக்கு சொருகுனியே ஆப்பு அடி வயித்துல... அதனால இனி பொண்டாட்டிக்கு பிறகுதான் வேலை...”

“வேலை புருஷ லட்சணம்...” நொடித்தாள்.

“அதான் எனக்கும் சேர்த்து நீயே பாக்குறியே...” என்றவன் அவளை சீட்டிலிருந்து எழுப்பி விட்டு தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.

 

Loading spinner

Quote
Topic starter Posted : October 27, 2026 9:12 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top