அத்தியாயம் 79

 
Admin
(@ramya-devi)
Member Admin

ராசசிங்கனை தேடி வந்த அனைவரையும் “ஏன் வந்தீங்க?” என்று யாரையும் அவன் காயப்படுத்தவில்லை. இவர்களை காயப்படுத்தி என்ன ஆகப் போகிறது. இவர்களுக்கும் நடந்து முடிந்த எந்த சம்பவங்களுக்கும் கொஞ்சம் கூட தொடர்பு இல்லையே.. அதனால் யாரையும் அவன் காயப்படுத்தவில்லை.

வருண் அவனிடம் அண்ணன் என்று இயல்பாக பழக யுகேஷ் மற்றும் கார்த்தி எதுவும் பேசவில்லை. பிரகாசும் நடாஷும் கூட ஓரிரு சொற்கள் இயல்பாக பேசினார்கள் ஆனால் இவங்க ரெண்டு பேரும் வாயையே திறக்கவில்லை.

சிங்கனும் அதை கண்டு கொள்ளவில்லை. ஏந்திழையாள் தான் புருவம் சுருக்கி மூவரையும் கண்காணித்தாள்.

“என்னடி உன் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு?” என்று இரவு அவளிடம் விசாரித்தான் சிங்கன்.

“இல்ல அண்ணனுங்க ரெண்டு பேரும் உங்கக்கிட்ட பேசலையே... அது தான்” என்றாள்.

“ஏன் நீ தான் போய் சமாதானம் செஞ்சு வையேன்” என்றான் நக்கலாக.

“உங்க கிட்ட போய் சொன்னேன் பாருங்க என்னை சொல்லணும்” என்றவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்து விட,

“கடுப்பு எத்தாம மேல வந்து படுடி” என்றான்.

“அப்படி எல்லாம் படுக்க முடியாது... பொண்டாட்டி கோவிச்சுட்டு போனா பின்னாடியே வந்து சமாதனம் செய்ய துப்பு இல்லை... இதுல இவருக்கு கஞ்ச கேக்குதோ கஞ்சா.. எனக்கு சக்காலாத்தி வெளில இருந்து யாரும் வர வேணாம். ஒரு அவுன்ஸ் கஞ்சாவே போதும்..” என்று முறைத்தவள்,

“என்னை தேடி வராம கஞ்ச அடிச்ச ஆள் தானே நீங்க... போங்க போய் அந்த கொக்கினையே கட்டி பிடிச்சு படுங்க... ரொம்ப சுகமா இருக்கும்” என்றாள் கோவமாக.

“நீ இப்போ என் மேல வரலன்னா அதை தான்டி செய்வேன்” என்று வீம்பு பண்ணினான் சிங்கன். படுத்தவள் வேகமாக எழுந்து வந்து,

“ஓ..! இவ்வளவு பட்டும் திருந்த மனம் வரல.. மறுபடியும் அந்த கஞ்ச பக்கமே போறேன்னு என்ன தைரியம் இருந்தா என் கிட்டயே சொல்லுவீங்க. உங்களுக்கு என்னா கஞ்சா அடிச்சுட்டு ஆள் மயக்கத்துக்கு போயிடுவீங்க. நான் தான் ராப்பகலா கிடந்து அல்லாடனும்..” என்று அவனை முறைத்தாள்.

“அப்படி தான்டி போவேன். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணுடி” என்று இவன் மல்லுக்கு நிற்க,

“என்னால என்ன பண்ண முடியுமான்னா கேக்குறீங்க” என்றவள் கோவத்தில் அவனது வெற்று உடம்பில் தன் நகங்களை வைத்து கீறல் போட்டு, பற்களால் அவனது நெஞ்சை கடித்து என ஆவேசம் தீர அவனை துவம்சம் செய்தாள். அவளின் செயல்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து இவன் மல்லாந்து படுத்து இருந்தான்.

சிறிது நேரம் கழித்தே தன்னிலை உணர்ந்தவள் அவனை விட்டு நீங்கப் பார்க்க அவளை அலேக்காக தூக்கி தன் நெஞ்சில் போட்டுக் கொண்டவன்,

“மை பேபி” என்று கொஞ்சியவன் அவளை தன்னுள் தாங்கிக்கொண்டு அவளை தூங்க வைத்து தானும் தூங்கிப் போனான்.

மருத்துவர் அவளை ஐந்து மாதம் வரை நெருங்க கூடாது என்று சொல்லி வைத்திருக்க அவளின் மீது படரக் கூட சிங்கன் பயந்தான். அதனாலே தினமும் அவளை தன் நெஞ்சில் போட்டு தூங்குவான். அவளின் நெருக்கம் இல்லாத நாட்களில் அவன் அடைந்த துன்பம் கொஞ்ச நஞ்சம் இல்லையே.. அதனால் அவளை எங்கும் நீங்காமல் தன்னுடனே வைத்துக் கொண்டான்.

வேல்முருகன் கூட இங்கேயே இருக்கட்டுமே என்று அந்த வீட்டில் ஏந்திழையாளை வைத்துக் கொள்ள கேட்க, முடியவே முடியாது என்று தன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டான் அவளை. அதனால் அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது.

அதோடு மனம் விரும்பியே ராசசிங்கனுண்ட சில நாட்கள் வாழ ஆசைக் கொண்டு எல்லா உறவுகளும் வந்து விட்டது. 

கண்ணனையும் சுந்தரத்தையும் அடைத்து வைத்திருந்த இடத்துக்கு ராசசிங்கன் புலியின் உறுமலோடு சென்றான். அவனது கண்களில் தீப்பிழம்பு கொழுந்து விட்டு எரிய அதை பார்த்த இருவருக்கும் அடிவயிற்றில் பயம் சூழ்ந்தது. 

“வேணாம் ராசசிங்கா எங்களை விட்டுட்டு” என்று அவர்கள் கெஞ்ச அவனோ அவர்களை கொஞ்சமும் இரக்கமில்லாமல் பார்த்தான். இரையே தேடி வேட்டையாடி தன் முன் துச்சமாக போட்ட சிங்கத்தின் தோரணையோடு அவர்களை பார்த்துக் கொண்டு இருந்தான் ராசசிங்கன்.

ராசசிங்கனுக்கு கற்றுக் கொடுத்த பாடமே ‘பணம் மட்டும் தான் பிரதானம் இந்த உலகில். உன்னை அசைக்க முடியாத இடத்தில் நிலை நிறுத்திக் கொண்டால் மட்டுமே உன் பேச்சை இந்த உலகம் கேட்கும். அதை விட உன்னை யாராவது காயப்படுத்தினால் நீ அதை விட பல மடங்கு அவர்களை திருப்பி காயப்படுத்து என்பது தான்.’

சோபனாவின் கணவர் தான் அவனை முழுவதும் கவனம் எடுத்து பார்த்துக் கொண்டது. சிம்பிளாக சொல்வது என்றால் கார்டியன். அவனது அப்பா அம்மாவுக்கு நிகழ்ந்தவைகளை ஒன்று விட்டாமல் அவனது நெஞ்சில் காயாத வடுவாக்கி ஏற்றிவிட்டார்.

ஷோபனா கூட “இதெல்லாம் வேணாமேங்க.. அவனுக்கு மறுபடியும் அவர்களால் ஆபத்து வந்தால் என்ன செய்வது” என்று எவ்வளவோ சொல்லி பார்த்தும் அவர் கேட்கவே இல்லை.

“என் நண்பன் அப்படி என்ன தவறு செய்து விட்டான். அவனுக்கு இந்த நிலைக்கு ஆளாக்கிய கயவர்களை அப்படியே எப்படி விட முடியும்.. என்னால அவனது இறப்பை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. சாகுற வயசா அவனுக்கும் அவனது மனைவிக்கும். இந்த பிள்ளை நாம இல்லன்னா இந்நேரம் எந்த சிக்னல்ல பிச்சை எடுத்துக்கிட்டு இருக்குமோ தெரியல.. நாம் இருக்கவும் சரியா போச்சு இல்லன்னா...” என்று தன் மனைவியிடம் காய்ந்தவர்,

“இவனுக்கு போர் குணம் வேணும் சோபனா.. அது இருந்தால் மட்டுமே இவனால் அவர்களை பழித்தீர்க்க முடியும். அவனை பெற்றவர்களுக்காக இவன் இதை செய்து தான் ஆகணும்” என்று உறுதியாக சொன்னார்.

அதை கேட்டுக் கொண்டு இருந்த ராசசிங்கனுக்கு அந்த சிறுவயதிலே பழிவாங்கும் வெறி உள்ளுக்குள் விதை விட்டு வேர் விட ஆரம்பித்து விட்டது.

“உன் காலுக்கு கீழ் அனைத்தயும் கொண்டு வா. நீ தான் இங்க ராசா... நீ தான் எல்லாமே” என்கிற மமதையை அவனது மனதில் பதிய வைத்து விட்டார் சோபனாவின் கணவன் ஆரம்பத்தில் இருந்து. அதிலே ஊறி போய் இருந்தவனுக்கு யாருடைய உணர்வுகளையும் புரிந்துக் கொள்ள இயலாமல் போய் விட்டது. ஆனால் அதையும் மீறி தன் அவன் விழுந்த ஒரே இடம் ஏந்திழையாள் தான்.

அவளை பார்த்த கணமே அவள் அவனுள் நுழைந்து விட்டாள். அதை ஒத்துக்கொள்ள முடியாமல் சில வருடங்களை கழித்தான். ஆனால் அவனையும் மீறி அவளிடம் அவனது மனம் மயங்குவதை கண்டு தன்னை தானே காயப்படுத்திக் கொள்ள ஆரம்பிக்க,

கீர்த்தியின் அப்பா அவனை சரியான வழியில் வழி நடத்தினார்.

“அந்த பெண்ணோட அப்பா தான் தவறே தவிர, அந்த பெண் தவரானவள் இல்லன்னு உனக்கு நல்லாவே தெரியும். அப்படி இருக்கும் பொழுது ஏன்டா உன்னை நீயே வருத்திக்கிற... உன் மனது என்ன சொல்லுதோ கேளு. அது படி நடந்துக்க பழகு” என்று அறிவுரை கூறியவரின் பேச்சை மனதில் ஏற்றிக் கொண்டவன் ஏந்திழையாளுக்கு தெரியாமலே அவளை பாலோ செய்ய ஆரம்பித்தான்.

Loading spinner

Quote
Topic starter Posted : May 13, 2026 2:47 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top