அத்தியாயம் 80

 
Admin
(@ramya-devi)
Member Admin

“அந்த பெண்ணோட அப்பா தான் தவறே தவிர, அந்த பெண் தவரானவள் இல்லன்னு உனக்கு நல்லாவே தெரியும். அப்படி இருக்கும் பொழுது ஏன்டா உன்னை நீயே வருத்திக்கிற... உன் மனது என்ன சொல்லுதோ கேளு. அது படி நடந்துக்க பழகு” என்று அறிவுரை கூறியவரின் பேச்சை மனதில் ஏற்றிக் கொண்டவன் ஏந்திழையாளுக்கு தெரியாமலே அவளை பாலோ செய்ய ஆரம்பித்தான்.

அவளின் மென்மையான குணத்தை கண்டு,

“உன் மருமக உன்னை போல ம்மா” என்று தன் தாயிடம் பேசிக் கொள்வான்.

அதன் பிறகே அவளை நெருங்கினான். கட்டாயத்தின் பேரில் அவளை சிறை எடுத்து தனக்குள் சுருட்டிக் கொண்டான். அவன் அதற்கு அவளிடம் விளக்கமும் சொல்லி இருக்க ஏந்திழையாள் அதை பெரிது பண்ணவே இல்லை.

ஏனெனில் ராசசிங்கன் கொண்ட காயத்தின் வீரியம் அப்படியாயிற்றே... அதனால் அவனை எதற்கும் விளக்கம் சொல்ல அவள் விடவும் இல்லை. நீங்க எப்படி இருந்தாலும் நான் உங்களை நேசிப்பேன் அவள் காட்டி விட்டாளே. இதை விட அவனுக்கு வேறு என்ன வேண்டுமாம்.

மொத்த குடும்பமும் அவனை தேடி அவனுடன் வந்து விட்டது. ஆனால் இவனுக்கு தான் மூச்சு முட்டுவது போல இருந்தது.

“இப்பொழுதே எல்லாம் ஏத்துக்கணும்னு அவசியம் இல்லை சிங்கா... உன் மனது போல நடந்துக்க. ஆனா எங்களை எல்லாம் வெளிய போக மட்டும் சொல்லாதடா. என் பொண்ணை பறிகொடுத்த வலியே இன்னும் காயல. எனக்கு நீ இருக்கிறதே தெரியாதுடா. இல்லன்னா உன்னை தேடி அப்பவே வந்து இருப்பேன்” என்றார் வேல்முருகன் அவனை அணைத்துக் கொண்டு.

“ப்ச் நான் யாரையும் வெளில போக சொல்ல மாட்டேன்.. ஆனா என்னை யாரும் நெருங்க வேணான்னு சொல்லிடுங்க” என்று எச்சரித்து விட்டு தன் தாய் மாமனுங்களை காண வெறியுடன் கிளம்பி வந்து விட்டான்.

வேல்முருகன் அதை வந்து எல்லோரிடமும் சொல்ல,

“அதெப்படி இவ்வளவு தான் தனியா இருந்தான். இப்ப தான் நாங்க இருக்கமே. இப்பவும் ஒட்டாம இருந்தா எப்படி... அப்படி எல்லாம் தனியா விட முடியாது” என்று இரு பாட்டிகளும் அவரின் மகள்களும் முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு ராசா சிங்கனை கவனிக்க தயாராக இருந்தார்கள்.

சின்ன தாத்தா தன் அண்ணனிடம் மல்லுக்கு நின்றார்.

“என்கிட்டே நீங்க ஒரு சொல் சொல்லி இருந்து இருக்கலாமே அண்ணா.. நான் இந்த பசங்களோட சேர்ந்துட்டு அவனது தொழிலை வீழ்த்த ஏற்பாடு பண்ணிட்டு இருந்தேன்” என்றார் மனம் நொந்து.

“ராசசிங்கனை நான் முதல் முறை அடையாளம் கண்டு கொண்ட போதே அவன் என்னை எச்சரித்து விட்டான்டா. நான் யார்கிட்டயும் வாயை திறக்கவே கூடாதுன்னு... என்னால வேற என்ன பண்ண முடியும் சொல்லு. அதை விட அவன் என் பெண்ணோட மகன்னு தெரிஞ்சா கண்டிப்பா அவனையும் கொன்னு போட்டுடுவானுங்க இவனுங்கன்னு தான் நான் யார்க்கிட்டயும் எதுவும் சொல்லல... உன் கிட்ட சொல்ற நேரம் கூட அவனுங்க ஒட்டுக் கேட்டு இதனால சிங்கனுக்கு ஏதவாது ஆபத்து வந்துடுமோன்னு ரொம்ப பயந்துட்டேன்டா. இல்லன்னா நான் உன்கிட்ட சொல்லாமா  இருப்பேனா?” என்று தன் மனக்குமுறலை சொல்ல அண்ணனை அனைத்துக் கொண்டார் அவர்.

கதிரும் சிங்கனின் வீட்டிலே இருக்க அவனுக்கு தான் பெரும் சங்கடமாய் இருந்தது. ஏதோ அவனுக்கு மட்டும் யாரும் இல்லாதது போல உணர்ந்தான். ஆனால் ஏந்திழையாளின் வீட்டில் இருந்த பெண்கள் அவனை அப்படி நினைக்க விடாமல் அவனையும் அவனது மனைவியையும் தங்களின் பிள்ளைகள் போல பார்த்துக் கொள்ள அதன் பிறகு அவனுக்கு அந்த தனிமை உணர்வே வரவில்லை.

வருண் கூட கதிரிடம் வந்து, “உங்க ரெண்டு பேரையும் தொழில்ல வீழ்த்தலாம்னு தான் நினைச்சோம். ஆனா இப்படி பண்ணனும்னு நாங்க நினைச்சி கூட பார்க்கல.. சீக்கிரம் தேரி வாங்க கதிர். எல்லாமே நல்லதுக்கு தான்னு நினைச்சுக்குவோம். ரெண்டு பக்கமும் லாஸ் தான்..” என்று நட்புடன் கை பற்றிக் கொண்டான்.

கதிரும் பெரிதாக பாராமுகம் எல்லாம் காட்டவில்லை. வருணிடம் இயல்பாகவே பேசிக் கொண்டான்.

அதே போல பிரகாஷும் நடாஷும் வந்து சொல்லி விட்டு போக யுகேஷும் கார்த்தியும் படுக்கையில் இருந்ததால் கதிரை வந்து பார்க்கவில்லையே தவிர போன் காலில் மூவரும் கான் காலில் பேசிக் கொண்டார்கள்.

எல்லோரிடமும் நல்ல நட்பு இருக்க தன் சித்தியின் கணவன் மார்களை கொத்தாக தூக்கி காரில் போட்டவன், தாய் மாமனுங்களை அடைத்து வைத்து இருக்கும் இடத்துக்கு கொண்டு வந்து போட்டான்.

வீட்டில் இருந்தவர்கள் யாரும் எதுவும் கேட்கவில்லை. இவ்வளவு நாளும் ரெட்டை வேடம் அல்லவா போட்டு இருந்து இருக்கிறார்கள் இந்த நால்வரும். வீட்டில் இருத ஒருவருக்கு கூட இவர்களின் இந்த கோரமுகம் தெரியவில்லையே. அவ்வளவு சமார்த்தியமாக அல்லவா பார்த்துக் கொண்டார்கள்.

“எத்தனை குடும்பத்தை அடியோட அழிச்சு அவங்க சாபத்தை எல்லாம் கொட்டிட்டு இருந்து இருப்பாங்க. அவங்க எவ்வளவு வேதனையில இருந்து இருப்பாங்க. எல்லாத்துக்கும் சேர்த்து அனுபவிக்கட்டும். இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் சும்மாவே விடக்கூடாது.. ஆணவப் படுகொலைன்னு செய்தி கேட்டாலே உள்ளமெல்லாம் பதறுது. ஆனா அதை நமக்கு தெரியாம நம்ம வீட்டு ஆளுங்களே செய்துக் கொண்டு இருக்கிறதை எண்ணி சீரணிக்கவே முடியல...” என்று பெண்கள் மாய்ந்துப் போனார்கள்.

“எங்களை பற்றி எல்லாம் கவலை பட வேண்டாம் சிங்கா... உனக்கு என்ன தோணுதோ அதை செய். இவங்களை உயிரோட விட்டா இன்னும் எத்தனை எத்தனை குடும்பங்களை அழிப்பாங்களோ தெரியல. போதும் இவங்களால எங்க பிள்ளைங்களுக்கு தான் அந்த சாபம் எல்லாம் வந்து விடியும்... இதுக்கு மேலையும் அவங்களால யாருக்கும் எதுவும் ஆகிடக் கூடாது. அதுக்கு பேசாம கொன்னுடு” என்று அவனது சித்திமார்களும் இரண்டு மாமியார்களும் இரு பாட்டியும் அழுத்துக் கொண்டே முழு ஒப்புதல் கொடுத்து விட்டார்கள்.

அதிலே ராசசிங்கனின் மனம் சற்றே குளிர்ந்துப் போனது. ஆனால் அதற்காக அவர்களை அப்படியே விட முடியுமா என்ன..

இதோ பழிவெறிக் கொண்ட சிங்கமாய் அவர்களின் முன்பு அமர்ந்து இருக்கிறான். நரசிம்மனின் அவதாரமாய் இருந்த அவனை கண்டு நால்வருக்கும் தொண்டை குழியில் நீர் வற்றிப்போனது. சோபனாவின் கணவரும் அவனுக்கு அருகில் அமர்ந்து இருந்தார்.

“என் வளர்ப்பு சரியா இருக்குன்னு பெருமையா இருக்கு சிங்கா... உன் குடும்பம் உன்னை தேடி வந்திடுச்சு... உனக்கு வஞ்சகம் செய்தவர்களை நீ உன் காலுக்கு கீழ கொண்டு வந்துட்ட” என்று ராசசிங்கனின் காலுக்கு கீழ் நால்வரையும் முட்டிப் போட வைத்து கட்டி இருந்தார்கள் சிங்கனின் ஆட்கள். அதை சுட்டிக் காட்டியவர்,

“உன் அப்பாவுக்கும் உன் அம்மாவுக்கும் நீ செய்யிற கடமைடா இது... அவங்களை மாதிரி எத்தனை பேர் ஆணவப்படுகொலைல உயிரிழந்து இருக்காங்க. எத்தனை பேர் உயிரை கொஞ்சம் கூட கூசாம எடுத்து இருப்பாங்க.. அவங்களுக்கு எல்லாம் நீதி செய்ததா இருக்கட்டும். இனிமேல் இவங்களால ஒரு உயிர் கூட இன வெறிக்காக போகக் கூடாது சிங்கன்” என்றார் நவீன சாணக்கியனாய்.

அவரின் சொல்லுக்கு தலையை ஆட்டிய ராசசிங்கனின் கண்கள் வெறியில் சிவந்துப் போய் இருந்தது. அதுவும் அவன் கையில் இருந்த பெரிய இரும்பு குழாயை கண்டு சர்வமும் அடங்கிப் போனது அந்த நால்வருக்கும்.

“என் அப்பாவும் என் அம்மாவும் உங்களுக்கு என்னடா பண்ணாங்க.. அநியாயமா உங்க ஆணவத்துக்கும் இனவெறிக்கும் பலியாக்கிட்டீங்களே.. உங்களுக்கு எல்லாம் இரக்கமே இல்லையா? இன்னும் எத்தனை குடும்பங்களை நீங்க அழிக்கப் போறீங்க?” என்று ஒற்றை சொல் கூட அவர்களிடம் அவன் கேட்கவில்லை.

இரும்பு கம்பியை தரையில் இரண்டு தட்டு தட்டி தனக்குள் ஒரு கணம் தன் அப்பா அம்மா எண்ணியவன் மறுகணம் இரும்பு உலக்கையை எடுத்து ஒரே போடுதான் போட்டான் அதற்கே தாக்கு பிடிக்க முடியாமல் உதிரம் பீச்சிக்கொண்டு அடித்தது சுந்தரத்துக்கு.

அதை பார்த்த மற்ற மூவருக்கும் ஈரக்குழை அறுந்துப் போனது போல ஆனது.

சுந்தரத்தின் குருதி படிந்து இருந்த உலக்கையை எடுத்து அதே போல மற்ற மூவரையும் அடி வெளுக்க அவர்களின் உதிரம் அந்த தரையில் சிந்தி அந்த இடமே இரத்தக் களரியானது.

ஆத்திரம் தீரும் மட்டும் அவர்களின் காலிலே அடி வெளுத்து எடுத்தான். நால்வரின் கால்களும் சிதைந்து போனது. அதை பார்த்துக் கொண்டு இருந்த கீர்த்தியின் அப்பா எதுவும் சொல்லவில்லை. அவன் கொண்ட உணர்வுகளின் வீரியத்தை தன்னுள் உணர்ந்துக் கொட்னவரின் விழிகள் நண்பனுக்காக கண்ணீர் சிந்தியது.

Loading spinner

Quote
Topic starter Posted : May 13, 2026 2:49 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top