அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“என்னடி?” என்று அவன் கேட்க,
“இப்படி இலகுவா என்கிட்டே பேசமாட்டீங்கலான்னு எத்தனை நாட்கள் ஏங்கி இருக்கேன் தெரியுமா?” என்று அவனது நெஞ்சில் அடித்தாள்.
“ப்ச் அதுக்கெல்லாம் காரணம் உங்கப்பன் தான்டி. நான் மட்டும் உன்னை நல்ல வச்சு இருந்தேன்னு வை. அப்பவே நீயும் நானும் க்ளோஸ். அதுவும் உனக்கு தான் ஆபத்து அதிகம். நீ வேற எல்லாத்தையும் ரொம்பவே நம்புவ. வாம்மா என்னை ஒரு முறை கூட நீ பார்க்கவே வரலையே ன்னு உன் அப்பன் நீலி கண்ணீர் வடிச்சா நீ உடனே போய் அவங்க வலையில சிக்கி என்னையும் சிக்க வச்சி இருப்ப. அதனால தான் உன்கிட்ட என் அன்பை காண்பிக்காம உன்னை சொத்துக்ககவும் குடும்ப கெளரவத்துக்க்கவும் திருமணம் செய்துக் கொண்டதா காட்ட வேண்டி இருந்தது.
அப்பாவும் உன்னை ஒரு எல்லையிலே நிறுத்த காரணமும் அது தான். எரிஞ்சி விழவும் அது தான் காரணம். நீயும் நானும் மனது விட்டு பேசக் கூட முடியாத சூழ்நிலையில் தான் அப்போ இருந்தோம். முதல்ல உன் அப்பனுக்கும் பெரியப்பனுக்கும் முடிவுரை எழுதனும். அதுக்கு பிறகு தான் உன் கிட்ட என் மனதை திறக்கணும்னு இருந்தேன்டி” என்றான் அவன்.
“ஆமால்ல.. இல்லன்னா நானும் மாட்டி உங்களையும் மாட்ட வச்சு இருப்பேன்” என்று அவனது நெஞ்சில் புதைந்துக் கொள்ள,
“நான் இங்க ஒருத்தி இருக்கிறேன் நிக்கிறேன்டா” என்றார் ஷோபனா.
“உங்களை யாரு இங்க நிக்க சொன்னா.. நாங்க கூப்பிடும் பொழுது நீங்க வந்தா போதும்” என்று சிலிர்த்துக் கொண்டு ஏந்திழையாள் சொல்ல,
“நேரம் தான்... அவனுக்கு எடுக்க வேண்டிய செக்கப் எல்லாம் பெண்டிங்ல இருக்கு... அவனை கொஞ்சம் விடு. பிறகு நீயே உன் புருசனை வச்சுக்க. யாரும் பங்குக்கு வர மாட்டாங்க” என்றவர் கையோடு ராசசிங்கனை கூட்டிக் கொண்டு போக,
“நானும் வரேன்” என்று அவள் கட்டிலை விட்டு காலை கீழே வைக்க,
“காலை கீழ வச்ச உன்னை கொன்னுடுவேன்டி...” என்று முறைத்தான் சிங்கன்.
“ஏங்க” என்று அவள் பாவமாய் பார்க்க,
“என்னால ரியாக்ட் தான் பண்ண முடியலையே தவிர, உணர்வுகள் எல்லாம் இருந்துச்சுடி... உன் நிலை எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். படுக்கையை விட்டு கீழ இறங்க கூடாதுன்னா நீ ஒவ்வொரு ராத்திரியும் என்ன ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்த.. அடி வெளுத்திடுவேன். நான் வர்ற வரை நீ கட்டில்ல தான் இருக்கணும்” என்று முறைத்து விட்டு அவன் போக
“போங்க ரொம்ப தான் பண்றீங்க” என்று உதட்டை சுளித்துக் கொண்டு மீண்டும் படுத்துக் கொண்டாள்.
அவளை அப்படியே விட்டு செல்ல மனமில்லாமல், “இனி எப்பவும் உன் கூட தான்டி... எங்கயும் போக மாட்டேன். நீயும் நம்ம பிள்ளையும் எனக்கு முக்கியம். அதனால பூரணமா ரெஸ்ட் எடு” என்று அவளின் நெற்றியில் முத்தம் வைத்து விட்டு,
“சீக்கிரமா வந்திடுறேன்” என்று விடை பெற்றுக் கொண்டு வெளியே சென்றான்.
அரக்கனும் முரட்டு தனமும் நிறைந்த ராசசிங்கனா இவன்... இல்லையே... இவன் முழுக்க முழுக்க காதலால் நிறைந்தவன் என் கணவன் என்று அவளின் மனம் அவனின் பால் நெகிழ்ந்து கரைந்துப் போனது.
அடுத்து வந்த நாட்களில் மருத்துவ வாசம் முடித்துக் கொண்டு ஏந்திழையாளை கூட்டிக்கொண்டு தன் வீட்டுக்கு வந்து விட்டான். கதிர் அபாய கட்டத்தை தாண்டியதோடு அவனின் ஆரோக்கியம் முன்னேற்றம் காண, நடக்க மட்டும் ஒரு மாத காலம் ஆகும் என்று சொல்லி வீட்டுக்கு கூட்டிட்டுப் போக சொல்லி சொல்ல, அவனை தன் வீட்டுக்கே கூட்டிக் கொண்டு வந்து விட்டான் சிங்கன்.
“வேணாம் அண்ணா” என்று அவன் மறுக்க, ராசசிங்கன் ஒரே ஒரு முறை தான். வாயை கப்பென்று மூடிக் கொண்டான் கதிர்.
தன் வீட்டில் தனிப்பட்ட ஆண் நேர்ஸ் மூன்று பேரை வைத்து சிப்ட் போட்டு பார்த்துக்க ஏற்பாடு செய்து இருந்தான்.
ராசசிங்கனின் உடளில் எந்த சிக்கலும் இல்லை என்று தெளிவாக ரிபோர்ட் வர அதன் பிறகே அனைவருக்கும் நிம்மதியானது. வேல்முருகன் தன் பேரனை மாரோடு தழுவிக் கொண்டு பாக்கியத்தை கூட்டிக்கொண்டு அவனது வீட்டுக்கே வந்து விட்டார். பேத்தி முழுகாம இருக்கும் பொழுது எப்படி தனியாக விட என்று வீட்டுக்கு பெரியவராய் வந்து விட்டார்.
ராசசிங்கனை அந்த வீட்டுக்கு அழைத்தால் அவன் எப்படியும் வரமாட்டான் என்று புரிய தன்னை வந்து அழைத்துப் போக சொன்னார். அவர்களோடு அத்தைமார்களும் அன்னை மார்களும் கிளம்பி விட்டார்கள். அப்பொழுது அவரின் இரு மாப்பிள்ளைகளும் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,
“மெயின் கல்ப்ரிட் அவங்கன்றதுனால தான் நீங்க தப்பிச்சீங்க. இல்ல உங்க ரெண்டு பேரையும் அவங்களோட சேர்த்து அடைச்சிடுவேன்” என்று அப்பட்டமாக மிரட்டினான் சிங்கன்.
“என்னடா பயம் காட்றியா?” என்று இருவரும் எகிற, வருணை ஒரு பார்வை பார்த்தான் ராசசிங்கன்.
“நீங்க போங்கண்ணா நான் பார்த்துக்குறேன்... இவங்களுக்கு எப்படி புத்தி சொல்லணுமோ நான் அப்படி புத்தி சொல்லிக்கிறேன். இனி இவங்க தேவையில்லாத விசயத்துக்கு வர மாட்டாங்க..” என்று அவன் சொல்ல, தலையை ஆட்டி விட்டு கிளம்பி விட்டான்.
சின்ன தாத்தாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. முழு காரண கர்த்தா இவர் என்று சொல்லி விட முடியாது. யார் என்று தெரியாமல் பேத்தியை எப்படி கொடுப்பது என்று தான் யோசித்தரே தவிர அவரின் மனதில் இந்த இன வேறுபாடோ எதுவுமே இல்லை.
ஆனால் ராசசிங்கனிடம் தானாக பேசவும் அவரால் முடியவில்லை. அதனால் அவர் ஒதுங்கி இருந்தார். அவரை சிங்கன் கண்டுக் கொள்ளவே இல்லை. சின்ன பாட்டியும் கிளம்பி வந்து விட்டார் சிங்கனின் வீட்டுக்கு.
இளைய தலைமுறையினரும் வந்து விட குதூகலத்துக்கு சொல்லவே வேண்டாம். ஏந்திழையாளின் வீட்டை விட இது மிகப் பெரியது என்பதால் இன்னும் இளைய தலைமுறையினரின் கொள்ளுப் பேரப் பிள்ளைகள் வந்தாலும் தங்கி வாழும் அளவுக்கு மிகப் பெரியதாக இருந்தது சிங்கனின் வீடு.
இதற்கு இடையில் தன் இரண்டு தாய் மாமன்களையும் போய் பார்த்தான். கண்களில் தீ பறந்தது அவனுக்கு. என்ன ஆறுதல் சொன்னாலும் தன் தாய் தந்தையை சிதைத்து அல்லாமல் இதோ அவனின் மனைவி மகனையும் அழிக்க முயன்ற கயவர்களை அவனால் அவ்வளவு எளிதாக விட்டுவிட மனம் வரவில்லை.
இதை விட வீட்டில் இருப்பவர் யாரும் அவர்கள் இருவரும் என்ன ஆனார்கள் என்று ஒருவர் கூட கேட்கவில்லை எனபது தான் இன்னும் சிறப்பு..
கார்த்தியும் யுகேஷும் கூட மருத்துவமனையின் வசம் சில நாட்கள் இருந்து விட்டு ராசசிங்கனின் வீட்டுக்கு வந்து விட்டார்கள்.





