ராசசிங்கன் இந்த அளவுக்கு பலசாலியா இருப்பான் என்பதை எதிர் பார்க்காத கண்ணன் ஒரு கணம் திகைத்துப் போனார். ஆனால் தன் வியப்பை ஓரமாக மூட்டை கட்டி வைத்து விட்டு சுவரில் முட்டி மோதியதால் ஏற்பட்ட வலித்த தன் மண்டையை அழுத்தாமாக தேய்த்து விட்டுக் கொண்டு எழுந்த சுந்தரம் தன் இடுப்பில் இருந்த கன்னை எடுத்து அவனை குறிப் பார்த்தார்.
“இப்ப காட்டுடா உன் வீரத்தை..” என்று கொக்கரித்த சுந்தரம் அவனது இதயத்துக்கு குறிப் பார்த்தார். எல்லோரும் அலறி அலண்டு போக, வேகமாய் தன் கணவனை அணைத்துக் கொள்ள வந்த பெண்ணவளை தடுத்து நிறுத்தினான் சிங்கன்.
ஏன் என்பது போல அவள் அடிபட்ட பார்வை பார்த்தாள்.
“உன் அப்பாவுக்கு ஒரு முடிவை கட்டிட்டு வந்து உன்னை கட்டிக்கிறேன்” என்று கண்ணடித்தவன், யாரும் சுதாரிக்கும் முன்பு,
“ஹேய் கதிர்.. அந்த துப்பாக்கியை தூக்கிப் போடு.. இவனுங்களுக்கு ஒரு முடிவு கட்டலாம்” என்று கதவுக்கு வெளிப்பக்கமா பார்த்து சொல்ல,
பட்டென்று எல்லோரும் வாசலை பார்க்க அந்த நேரம் சுந்தரத்தின் கையில் இருந்த கன்னை தன் கைக்கு மாற்றிக் கொண்டவன், சுந்தரத்தின் பின்னந்தலையில் அதன் முனையை வைத்து ட்ரிகரை அழுத்தினான்.
அப்பொழுது தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதையே உணர்ந்துக் கொண்டார் சுந்தரம். ச்சை இப்படி ஏமாந்துடமே... என்று தன்னையே நொந்துக் கொண்டார்.
“வேணாம் சுட்டுடாத” என்று கண்ணன் அலற,
“ஏன் உன் தொம்பி உசுருன்னா மட்டும் சக்கரை.. மத்தவங்க உசிருன்னா உனக்கு வெறும் மயிரா?” என்று கேட்டவன் சுந்தரத்தின் நடு முதுகிலே நச்சென்று தன் முட்டியை மடக்கி ஒரு குத்து விட அவரின் முதுகெழும்பு பொல பொலவென்று உடைந்து சிதறுவது போல இருந்தது.
“என்னை விட்டுடு சிங்கன்.. இல்லன்னா உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியாது” என்று அப்பொழுதும் சுந்தரம் வாயை விட, எழ முடியாத அளவுக்கு அவரை போட்டு அடி வெளுத்து விட்டான்.
அதற்குள் கண்ணன் அவனை அடிக்க பாய, அவரையும் தன் காலுக்கு கீழே தள்ளி மிதி மிதி என்று மிதித்து இருவரையும் செல்லாக் காசாக்கி சக்கையாக போட்டவன் கட்டில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு தோரணையாக இருவரையும் ஒரு பார்வை பார்த்தவன்,
“எங்க இப்ப என் பொண்டாட்டியை நெருங்குங்கடா பார்க்கலாம்” என்று ஆவேசமாக கேட்டான். சுந்தரம் மற்றும் கண்ணனால் அசையக் கூட முடியவில்லை. ஆனால் அவர்களின் சீற்றம் மட்டும் கண்ணில் குறையவே இல்லை.
“எவ்வளவு பட்டாலும் உங்க ஜாதி வெறி, கெளரவ வெறி மட்டும் போகவே போகாதுல்ல... உங்க இன வெறிக்காக எத்தனை பேரை கொலை செய்து இருப்பீங்க... த்தூ... இப்படி மனங்கெட்ட பொழைப்பு பொழைக்க தூக்குல நீங்க தொங்கலாம்... எவ்வளவு தான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் உங்களை போன்ற ஆளால தான் இந்த சமூதாயம் பின்னலையே நிற்குது..” என்று கத்தியவனை நெருங்கி நின்ற சோபனா, அவனது காலுக்கு கீழ் விழுந்து கிடந்த சுந்தரத்தை பார்த்து,
“நீ போட்ட விதை... எப்படி ஆலமரமா முளைச்சு இருக்கு பார்த்தியா?” என்று கேட்டார்.
“புரியல இல்ல.. உன் மூத்த தங்கச்சி காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு ரெண்டு வருடம் ஆனாலும் உங்க பழி வெறி அடங்காம அவளை தேடி வந்து வெட்டுனிங்களே அவளோட குல வாரிசு... வேற யாருமில்ல இந்த ராசசிங்கன் தான். உங்க தங்கச்சி மகன்.. உன்னையும் உன் அண்ணனையும் கருவறுக்கவே இவனை வளர்த்தேன்” என்றார் நிமிர்வாக.
அவர்களால் நம்பவே முடியவில்லை. தங்கை மகனா இவன் என்று பார்த்து, இவனை எப்படி மிஸ் பண்ணினோம் என்று அண்ணனும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அவர்களின் பார்வையின் பொருளை உணர்ந்த எல்லோருக்கும் அவர்கள் இருவரின் மீது கட்டுக் கடங்காத அருவெறுப்பு தோன்றியது.
ச்சீ இதுங்க எல்லாம் திருந்தவே திருந்தாது ராசசிங்கன். நீ உன் முடிவு படி இவங்களை என்ன செய்யணுமோ அதை செய்...” என்றார் சோபனா.
“முதல்ல என் மச்சினனுங்களுக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க டாக்டர்.. இவனுங்களுக்கு முடிவுரை நான் எழுதுறேன்” என்றான் ஆவேசமாக.
“டே வேணான்டா எங்களை பகைச்சுக்காத.. உனக்கும் சரி உன் எதிர்காலத்துக்கும் சரி அது நல்லது இல்ல” என்று இருவரும் கொக்கரிக்க அவர்களை எழவே விடாமல் நொறுக்கி எடுத்தவன்,
முதலில் கீழே விழுந்து கிடந்த யுகேஷ்க்கு கைக் கொடுத்து தூக்கி விட்டான். அதன் பிறகு கார்த்தியையும் தூக்கி விட்டவன் ஷோபனாவை பார்க்க,
“ஸ்டேக்ஷர் வந்துட்டு இருக்கு சிங்கன்..” என்றார். அதற்குள் அங்கிருந்த எல்லா கன்ரோலையும் சிங்கனின் ஆட்கள் கையகப்படுத்திக் கொண்டார்கள். சுந்தரத்தையும் கண்ணனையும் தங்களின் இடத்துக்கு கொண்டு செல்ல சொன்னவன் தேவகியை பார்த்தான்.
அவர் எதுவும் சொல்லவில்லை. ஓடி வந்து தன் மகளை கட்டிக் கொண்டு அழுதார். ராசசிங்கன் மட்டும் எழுந்திரா விடில் இந்நேரம் தன் மகள் உயிரோடு இருந்திருக்க மாட்டாளே... முழு அரக்கனாய் மாறி இருந்த தன் கணவனை கண்டு ஸ்தம்பித்து நின்றது எல்லாம் சில கணங்களே.. யுகேஷையும் கார்த்தியையும் கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் கொள்ளப் பார்த்தவர்களின் மீது அவருக்கு மட்டும் என்ன இரக்கம் பெரிதாக வந்துவிடப் போகிறது. அதன் பிறகு அவரின் தொப்புள் கொடி பாசம் இழுக்க கணவனாவது ஒன்னாவது..
பிள்ளைகளுக்காக அவரின் இதயம் துடியாய் துடித்துப் போனது. அதில் கணவனுக்கு ஒரு தவிப்பும் எழவில்லை என்பது தான் பரிதாபம்.
சடுதியில் அந்த இடமே மாறிப்போய் விட்டது. எல்லாமே ராசசிங்கனின் கட்டுப் பாட்டில் வந்து இருந்தது. அதை ஒரு ஆச்சரியத்துடன் பார்த்த ஏந்திழையாள் தனக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அறைக்குப் போக பார்த்தாள். சோபனா தேவகி இருவரும் அவளை வியந்துப் போய் பார்த்தார்கள். இவ்வளவு நேரம் அவளின் கணவனுக்காக போராடிய போராட்டம் என்ன.. இப்போ அவனை விட்டுவிட்டு போவது என்ன... அதனால் அவளிடம்
“ஏன் மா” என்று கேட்டார்கள்.
“எனக்கு இங்க எந்த வேலையும் இல்லை.. என் வேலை முடிஞ்சிடுச்சு.. நான் போய் ரெஸ்ட் எடுக்கணும்” என்று அவள் பாட்டுக்க சொல்லி விட்டு போய் விட, திகைத்துப் போய் ராசசிங்கனை பார்த்தார்கள் இருவரும்.
அவனது முகத்தில் மெல்லிய சிரிப்பு இளையோடியது.
“அவ போறா.. நீ சிரிச்சுக்கிட்டு நிக்கிரடா” என்று சோபனா திகைக்க,
“அதெல்லாம் அப்படி தான் டாக்டர்” என்று சொன்னவன், “ஓகே எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. கிளம்புறேன்” என்று வெளியேப் போக பார்க்க,
“உதை விழும்டா படவா ராஸ்கல். ஒழுங்கா எல்லா டெஸ்ட்டும் எடுத்து முழுதா செக் பண்ணதுக்கு பிறகு தான் உன்னை வெளியே விடுவேன்” என்று ஸ்ட்ரிக்ட்டாக சொன்னவரை மீற முடியாமல்,
“சரி” என்று முழு செக்கப்புக்கும் ஒத்துழைப்பு கொடுத்தவன், கதிரை பற்றி விசாரித்தான்.
“அபாய கட்டத்தை தாண்டிட்டான். ஆனா ரெண்டு மாதம் முழுமையா ஓய்வுல இருக்கணும் சிங்கன்” என்றார்.
“அதுக்கென்ன பூரண ஒய்வு குடுத்துடலாம்” என்றான்.
“அவனை பற்றி விசாரிக்கிறியே... உன் பொண்டாட்டி பிள்ளையை பற்றி விசாரிக்கலையாடா?” என்றார் சற்றே அழுத்தமாக.
மெல்லிய சிரிப்புடன், “எல்லாத்தையும் அவளே சொல்லிட்டா டாக்டர். சோ தனியா தெரிஞ்சுக்க வேணாம்” என்றான் முடிவாக.
“ம்ம்” பெருமூச்சு விட்டவர் வெளியே போய் விட தேவகி என்ன செய்வது என்று தெரியவில்லை. தன் மகளோடு போய் இருக்கலாம் தான் ஆனா இவன் கிட்ட உடல் நிலையை பற்றி விசாரிக்காமல் போக தயக்கமாக இருக்க அவனை பார்த்தார்.
“என்ன சொல்லணும்?” என்று அவன் கேட்க,
இல்ல என்று தலையை அசைத்தார்.
“நான் உங்க பெரிய நாத்தனார் பையன்” என்றான் தகவலாய்.
“தெரியும்” என்றார் அவர் நெகிழ்வாக.
“சரி வேறென்ன?” என்றான் இவன்.
இப்படி பேசுகிறவனிடம் வேறு என்னத்தை பேசுவது என்று புரியாமல், “நான் பாப்பா கிட்ட இருக்கவா? உங்களுக்கு எப்படி இருக்கு உடம்பு” என்று தயங்கி தயங்கிக் கேட்டார்.
“ம்ம்” என்று இரண்டு கேள்விக்கும் ஒன்றாக பதில் சொல்ல விட்டால் போதுமென்று ஓடிப்போய் விட்டார் அவர்.
அது எப்படிங்க ரைட்டர்...இவனை எவளோ திட்டி இருப்பேன்....
இப்ப இவனையே இவளோ ரசிக்க வைக்கறீங்க🤩🤩🤩🤩🤩🤩🤩
Pure magic of writing❤️❤️❤️❤️
என்னவாம் இப்ப இவளுக்கு😉😉😉😉😉





