“உன்னை யாரு ஒட்டி உரசுனா? நான் என் மகனை தான் தொட்டு வருடுறேன்” என்றவன் அவளின் புடவையை நகர்த்தி விட்டுட்டு தன் கையை அவளின் வெற்று வயிற்றில் வைத்து வருடி விட அவளுக்கு தேகம் மொத்தமும் சிலிர்த்தது.
எங்கே அவனை கட்டிக் கொண்டு கதறி விடுவமோ என்று பயந்துப் போனவள் அழுத்தமாக கண்களை மூடிக் கொண்டாள். மூடிக் கொண்டவளின் கண்களில் சூடான முத்தம் விழ அவளின் கண்ணீர் மூடிய இமைகளின் வழியே ஓரமாக வழிந்தது.
“ப்ச் அழாதடி” என்று அவளின் கண்ணீரை அவன் இதழ் கொண்டு துடைக்க,
“அழக் கூட உரிமை இல்லையா எனக்கு?” என்று வெடித்தாள்.
“நீ உங்கப்பனுக்கு மகளா இருந்து இருந்தா அழலாம். நீ ராசசிங்கனோட பொண்டாட்டிடி.. என் பொண்டாட்டி எதுக்கும் அழக் கூடாது..” என்றான்.
“வேணாம் சும்மா பொண்டாட்டி பொண்டாட்டின்னு சொல்லி கடுப்பை கிளப்பாம ஒழுங்கா இங்க இருந்து கிளம்பிடுங்க ஆமா சொல்லிட்டேன்” என்றாள் கோவமாக.
“டாக்டர் என்னவோ இருந்து செக்கப் முடிச்சுட்டு போக சொன்னாங்க. நீ என்னன்னா இப்பவே போக சொல்ற.. சரி விடு இதுலையவது உன் பேச்சை கேட்கிறேன்” என்று அவன் வெளியேப் போக பார்க்க,
“அச்சோ...” என்று பதறியவள், “நீங்க எங்கயும் போக வேணாம். முதல்ல செக்கப்பை நல்ல படியா முடிங்க. மத்ததை பிறகு பார்த்துக்கலாம்” என்றாள் அவரசமாக.
“இல்லடி நீ தானே போக சொன்ன” என்று அவன் போவது போல படம் காட்ட,
“ப்ச்...அது தான் போக வேணான்னு சொன்னேன்ல” என்றவள் அவனை இழுத்து அவளுக்கு அருகில் போட்டாள்.
அவளின் அருகில் படுத்துக் கொண்டவன் திரும்பி அவளை பார்த்தான். அவளும் அவனை தான் பார்த்தாள்.
இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை ஆனால் இருவரின் கண்களும் இதயமும் பேசிக் கொண்டு இருந்தது.
மெல்ல அவளின் முகத்தை நோக்கி தன் முகத்தை நகர்த்த விழிகளை மூடிக் கொண்டாள்.
மூடிய விழிகளில் முன்பு போலவே முத்தம் கொடுத்தவன், அவளின் நெற்றியில் மிக அழுத்தமாக முத்தம் வைத்தான். அதை எதிர் பார்க்காதவள் திகைத்து அவனை விழி விரித்துப் பார்த்தாள். அவள் கேட்ட நெற்றி முத்தம் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் அவளுக்கு அவன் கொடுக்க உயிர் நிறைந்துப் போனது பெண்ணவளுக்கு. உயிரை உருக்கும் பார்வை அவன் மீது செலுத்த அவளின் பார்வையில் சுகமாக தொலைந்தவன் அவளை அப்படியே அள்ளி எடுத்துக் கொண்டான்.
அவளின் முகம் எங்கும் முத்தம் கொடுத்தவன் அவளின் முகத்தோடு முகம் புதைத்துக் கொண்டு ஆசுவாசம் ஆக,
“கோவமெல்லாம் போயிடுச்சாடி?” என்று கேட்டான்.
“ம்ஹும்..” என்று சொன்னவள்,
“முன்பை விட கோவம் இன்னும் அதிகமா ஆகி இருக்கு” என்றாள்.
“ஏனாம்...?” உல்லாசம் பிறந்தது அவனிடம்.
“பின்ன காதலிக்கிறது என்னை. ஆனா என்னை தவிர மத்த எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கு” என்றாள் தாங்களாக.
அவளின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவன்,
“நான் கொண்ட காதல் நீயும் என் மேல வைக்கணும்னு தான்டி. இதே நான் தான் உன் அத்தை மகன் நீ என்னை கல்யாணம் செய்துக்கோன்னு சொன்னா உடனே நீ என் மேல இறக்கப் பட்டு, அச்சோ இவனுக்கு நம்மை விட்டா யாருமே இல்லன்னு உடனே கல்யாணம் செய்துக்குவ. ஆனா எனக்கு அப்படி எதுவும் வேணாம்னு தான் இப்படி உன்னை ப்ரோச் பண்ணினேன். எங்கயும் உன் மானத்துக்கும் கௌரவத்துக்கும் பங்கம் வர மாதிரி நான் நடந்துக்கல தானே” என்று கேட்டான்.
அவள் தலையை ஆட்டினாள்.
“ஆனா என்ன பேச்சு எல்லாம் பேசுனீங்க” என்று முறைத்தாள்.
“பின்ன உன் அப்பன் மட்டும் என்னை என்ன சும்மாவா விட்டான். பொண்ணு கேட்டதுக்கு போய் அந்த பேச்சு பேசினானே. அதுக்கு தான். அதோட நான் உன்னை காதலிக்கிறேன்னு தெரிஞ்சா உன்னோட என்னையும் சேர்த்து பலி போட்டு இருப்பான். அது தான் என் பதவி அதிகாரத்தை பயன் படுத்தி உன் இளகுன மனதையும் பயன்படுத்தி நான் நினைச்சதை சாதிச்கிக்கிட்டேன்” என்றான்.
“அது சரி.. ஆனா என்னை ஏன் யா தவிக்க விட்ட...?” என்று கலங்கியவளை தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டவன்,
“உன்னை தவிக்க விடலன்னா மேடம் என்னை பத்தி யோசிச்சு கூட இருக்க மாட்டீங்க.. கேட்குறதுக்கு முன்னாடியே நான் எல்லாம் செஞ்சுட்டா பிறகு என்னை பற்றி உன் சிந்தனையே இருக்காதுன்னு தான் நெற்றி முத்தம் குடுக்கவே இல்லைடி. ஆனா நான் நினைச்சது போலவே என் நெற்றி முத்தத்தை நீ எதிர் பார்த்து இருக்க பாரேன்.. செம்மடி” என்றவன்,
மீண்டும் அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தம் குடுத்தான்.
அவனது கண்களை அழுந்தப் பார்த்தவளுக்கு உதடு நடுங்கியது அழுகையில்.
“ஐ மிஸ் யூ சோ மச் சிங்கா.. எங்க நீங்க எழுந்துக்காம போயிடுவீங்களோன்னு ரொம்ப பயந்துட்டேன். இந்த பக்கம் உங்க மகன் வேற பயமுருத்துறான்” என்று அவள் கதறி அவனது நெஞ்சில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
“அப்படி எல்லாம் உன்னை விட்டு போக மாட்டேன்டி.. என் பிள்ளையும் போக மாட்டான். நாங்க ரெண்டு பேரும் வரம் வரம் வாங்கி வந்து இருக்கோம்டி உன்கூட வாழ” என்று சொல்லி அவளை இறுக்கமாக கட்டிக் கொண்டான்.
“உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ...
இது நான் காணும் கனவா நிஜமா
மீண்டும் உன்னை காணும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே..
விழியில் விழுந்தால் எண்ணில் எண்ணத்தால் நானே
இல்லை எண்ணம் முழுவதும் நீ தானே என் கண்ணே..
அன்பே உயிராய் தொடுவேன்
உன்னை தாலாட்டுதே பார்வைகள்
உன்னை சேரும் நாளை தினம் ஏங்கினேனே
நான் இங்கு தனியாக அழுதேன்
விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இங்கு தினம் ஏங்குது
மனம் உருகிடும் நிலை இது
எந்தன் முதல் முதல் வரும்
உயிர் காதலில்...
உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ..
இது நான் காணும் கனவின் நிஜமோ...
மீண்டும் உன்னை காணும் மனமே
எனக்கே மனமே மனமே...”
என்று எங்கோ பாடல் சத்தம் கேட்டது. அது அப்படியே இருவருக்கும் பொருந்துமாறு இருக்க ஒருவரை ஒருவர் பொருள் நிறைந்த பார்வை பார்த்துக் கொண்டார்கள்.
அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொண்டவளுக்கு கண்களில் நீர் நெகிழ, அதை தலை அசைத்து மறுத்து துடைத்து விட்டான் ராசசிங்கன்.
அந்த நேரம் அவனை தேடி ஷோபனா வந்தார் அறைக்கு உள்ளே.
வந்தவர் இருவரையும் முறைத்துப் பார்க்க, அவனது நெஞ்சில் இன்னும் வாகாக சாய்ந்துக் கொண்டு,
“இந்த டாக்டர் என்னை எப்போ பாரு என்னை முறைச்சுக்கிட்டே இருக்காங்க ங்க.. நீங்க என்னன்னு கேளுங்க” என்று சலுகையாக புகார் படித்தாள்.
“அவங்களுக்கு நான் கீர்த்தியை கல்யாணம் செய்துக்கனும்னு ஆசை. ஆனா அது நடக்கல. நான் உன்னை கை காண்பிச்சேன். அது தான் இந்த கோவம்.”
“ஏதே..?” என்று அவள் பட்டென்று அவனது நெஞ்சில் இருந்து எழுந்து அவனை பார்க்க,
“ப்ச் படுடி” என்று அவளை இழுத்து மீண்டும் அணைத்துக் கொண்டவன்,
“ஆனா அவளோடயே வளர்ந்ததுனால என்னால அவளை அப்படி பார்க்க முடியாதுன்னும் அதோட என் மாமன் பொண்ணு எனக்காகவே இருக்கா. அவளை தான் கல்யாணம் செய்துக்குவேன்னு தெளிவா சொல்லிட்டேன். அது தான் உன்னை முறைக்கிறாங்க” என்றான் இரகசிய சிரிப்புடன்.
“அதுக்கு நான் என்ன பண்ணுவேன்?” என்று அவள் அவனது தோளை சுரண்ட,
“நீயும் பதிலுக்கு அவங்களை முறைச்சிடு” என்றான் அவளின் காதோரம்.
அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“என்னடி?” என்று அவன் கேட்க,
“இப்படி இலகுவா என்கிட்டே பேசமாட்டீங்கலான்னு எத்தனை நாட்கள் ஏங்கி இருக்கேன் தெரியுமா?” என்று அவனது நெஞ்சில் அடித்தாள்.
Aww ரெண்டு epis உம் 🥰🥰🥰🥰🥰





