Notifications
Clear all

அத்தியாயம் 56

 
Admin
(@ramya-devi)
Member Admin

“இனி நான் உயிரோட வாழ்றதும் ஜடாம வாழ்றதும் உன்கையில தான் இருக்கு. உனக்கு முழு ப்ரீடம் குடுக்குறேன். என்னோட வாழ விருப்பம் இருந்தா நாளைக்கு காலையில நம்ம தோட்டத்து வீட்டுக்கு வா...”

“இல்லையா வராதா...” என்றவன் ஒரு அறைக்குள் நுழைந்து கதவை பட்டென்று சாத்திக்கொண்டான்.

நூலிலையில் அவளது மனம் ஊசலாடிக்கொண்டு இருந்தது. என்ன முடிவு எடுப்பது என்று குழப்பமாய் இருந்தது. போன முறை தான் செயலை எண்ணி பார்த்தவளுக்கு நெஞ்சமெல்லாம் புண்ணாகி போய் இருக்கிறது.

இதில் மறுபடியும் அதே சூழலில் அதே நிலையில் தன்னை தள்ளி இருக்கும் ஆதியை எண்ணி வருத்தமுற்றவள் என்ன செய்வது என்று அறியாமல் அப்படியே நின்றாள்.

ஒரு பக்கம் தன் மனதின் நாயகன் ஆதியின் கனவு வாழ்க்கை... இன்னொரு பக்கம் சின்ன சிறு கருவின் வாழ்வு.. இதில் எதை எடுப்பது எதை விடுவது என்று கலங்கி போனாள்.

ஏதாவது ஒன்றை மட்டுமே எடுக்கும் சூழல்... கொஞ்ச காலம் சென்றால் ரஞ்சனியே ஆதியின் வாழ்விலிருந்து விலகி கொள்ளுவாள். ஆனால் அது வரை ஆதி பொருக்க மாட்டான்.

அவனை பொறுத்த வரை வாழ்க்கை ஒருவரோடு மட்டுமே... அதுவும் மயூவுடன் மட்டுமே என்று எண்ணுபவன். இப்படி இருக்கையில் அவளால் எந்த முடிவை தான் எடுக்க முடியும்.

உலகை காணவே பெரும் போராட்டம் பண்ணிக்கொண்டு இருக்கும் ஒரு இன்ச் அளவு உள்ள உயிர்... என்னும் போதே கண்ணீர் பெருக அந்த கணமே முடிவெடுத்து விட்டாள்.

ஆனால் அதை ஆதியிடம் கூறத்தான் அவளால் முடியாமல் போனது. தன் காரை எடுத்துக்கொண்டு சென்றவள் அவர்களது தோட்ட வீட்டில் சென்று தங்கி கொண்டாள்.

காதினோரம் ஆதியின் காதல் மொழிகள் ஒலிக்க அதை அடக்க முயன்றாள். ஆனால் அவளால் முடியவில்லை. அவளையும் மீறி அவனது உரம் மிகுந்த காதலின் உரைகள் அவளது மனதை தீண்டி நினைவு அடுக்குகளில் இருந்து வெளி வர ஆரம்பிக்க சோர்ந்து போனவள் கண்களை மூடிக்கொண்டு அவனது வார்த்தைகளை மறுபடியும் தேடி பிடித்து உள்வாங்க தொடங்கினாள்.

இருவரும் மட்டுமே இருந்த, அழகான க்ரீன் ஹில்ஸில் அருவி கரையோரம் அமைந்து இருந்த, சின்ன குடிலின்  திண்ணையில் இருவரும் அமர்ந்து, மாலை நேர தே தண்ணீரை ரசித்து குடித்துக்கொண்டு இருந்தார்கள்.

நீர் விழும் அழகையும், அதில் தெறித்து விழும் சாரலில் நணைந்த படியும் மயூ ஆதியின் தோளில் சாய்ந்த படி இருந்தார்கள்.

அவளின் கைவிரலை பற்றி இருந்த ஆதி... அவளது கைகளில் சிறு அழுக்கு கூட இல்லாமல் பாலிஷ் போட்டு மிக உயர் தரம் வாய்ந்த பூச்சுகளை கொண்டு அழகாய் அவளது நகங்களை செம்மை படுத்தி இருந்ததை பார்வையிட்டான். அதில் ஒரு நளினம் இருப்பதையும் கண்டவனுக்கு அவளது ரசனையின் மீது சிறிதாய் ஒரு கர்வம் பிறந்தது.

இது மட்டுமல்லாது அவள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு நளினம் மிளிரும்... அதில் ஆதி தேவனின் காதல் மனம் கட்டறுத்து திரியும் கன்று குட்டி போல திரியும் இயல்பாய்.

“எப்படிடி மெயின்டைன் பண்ற...” என்றபடி அவளது நகங்களை வருடி விட்டான்.

“ம்ம்ம்.. இதுக்கெல்லாம் தன் கவனம் வச்சுக்க மாட்டேன். சீதா அத்தை தான் அதை பண்ணு இதை பண்ணுன்னு சொல்லி எல்லா ஏற்பாடும் பண்ணுவாங்க... நான் ஜஸ்ட் ஒத்துழைப்பு குடுப்பேன். அப்புறம் பிரியா இருக்கும்போது சில டிசைன் மட்டும் பார்த்து வச்சுக்குவேன். நேரம் வரும் போது அதன் படி செய்ய சொல்லிவிட்டு கண்களை மூடி நல்லா தூங்கிடுவேன்.

அவங்களும் சரியா வேலையை முடிச்சுட்டு போய்டுவாங்க...” என்றாள்.

“சோ நீ மேக்கப் பண்ணிக்கிற நேரத்தை ஒய்வு நேரமா டுயல் ஒண்ணா மாத்திக்கிற இல்லையா...?” என்று சிரித்தான்.

“ஆமா... இல்லன்னா இந்த டெரர் பீஸ்கிட்ட, நான் மேக்கப் பண்ண போறேன். எனக்கு ரெண்டு மணி நேரம் குடுங்கன்னு சொல்ல முடியுமா...?” என்று அவனது தாடையை பிடித்து ஆட்டி சொன்னவளை கர்வம் பொங்க பார்த்தன்.

அவனது பார்வையில் இருந்த கர்வத்தை கண்டவள் “என்னவாம்...” என்று காதல் பொங்க கேட்டாள்.

முதல் முதலாய் அவனிடம் இந்த மாதிரி பேசியதில் அவனது கண்களில் மின்னல் வந்து சென்றது.

அவளது கையை இருக்க பற்றி இன்னும் தன்னோடு நெருக்கி இருக்கியவன்,

“உன் காதல் மட்டும் தான் என்னை வாழ வைக்கும் காரணி... நீ இல்லன்னா நான் இல்லவே இல்லடி...”

“ஆனா நீ அதை புருஞ்சுக்காம ரஞ்சனிக்கிட்ட தூக்கி குடுத்துட்ட... அது கூட பரவால... ஆனா அதுக்கு முன்னாடி ஒரு செயலை செஞ்சியே செத்துட்டேண்டி...”

“ஆனாலும் உன்னை என்னால விட்டுகுடுக்கவே முடியல... நீ செஞ்ச செயல் எனக்கு பெரும் வலியை குடுத்து ஆரா ரணமா இருக்கு. ஆனாலும் உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியல... இது தான் காதல்னு அப்போ புருஞ்சது...”

“அந்த நிமிஷம் தான் தெருஞ்சது காதலோட ஆழம் என்னன்னு.. வெறுக்க கூடிய காரணம் வலுவா இருந்தாலும், மனம் வெறுக்க முடியாத நிலையில இருக்கும்னு... அதை நல்லா உணர்ந்தேன்டி... அந்த நிமிசத்துல இருந்து.. இதோ இப்போ வரை அதை உணர்ந்துக்கிட்டே இருக்கேன்..”

“விதை எப்படி மண்ணுக்குள்ள விழுந்த பிறகு உயிராகுதோ அது போல தான்டி நானும். மண்ணுக்கு மேல இருக்குற வரை அதுக்கு உயிர் இருக்காது. ஆனா மண்ணுக்குள்ள ஒரு முறை உள்ள போயிடுச்சுன்னா அது உயிர் பெறுவது உறுதி. நானும் உனக்குள்ள உள்ள வந்துட்டேன்னா உயிரோட இருப்பேன். உன்னோட நேச மழையில நனைஞ்சேன்னா போதும்... துளிர் விடும் இலை போல உயிர் பெற்று வாழ தொடங்கி விடுவேன் மயூ...”

“ஆனா அதுவே வேற யார் கிட்ட போனாலும் ஆரோக்கியம் அற்ற விதை போல... இல்லன்னா மண்ணுக்கு மேல இருக்குற விதை போல எந்த பயனும் இல்லாம ஜடம் போல வாழ்ந்து முடுச்சுடுவேன்...”

“நான் உயிர் பெறுவதும், இல்ல ஜடமாய் போவதும் உன் முடிவுல தான் இருக்கு...” என்றான் அழுத்தம் திருத்தமாய்...

அதை கேட்டவளுக்கு அவன் தன் மீது வைத்துள்ள அன்பின் ஆழம் மிக தெளிவாய் புரிந்து போனது. அவளும் அந்த நிலையில் தானே இருக்கிறாள். அவன் வாய் விட்டு சொல்லிவிட்டான். அவள் சொல்லவில்லை. அவ்வளவு தான் வித்தியாசம்...

ஆனாலும் இருவரின் காதலும் மிக ஆழமாய் இருவரின் மனதிலும் ஊடுருவி பிடுங்கி ஏரிய முடியாத அளவில் இதயத்தை பற்றிக்கொண்டு இருக்கிறது...

அதை பிடித்து பிடுங்கும் சூழல் வந்து இருப்பதை எண்ணி பெரிதும் கலங்கி தான் போனாள். ஆதியின் பேச்சை கேட்ட மயூ என்ன முடிவு எடுப்பாளோ....?

Loading spinner

Quote
Topic starter Posted : November 20, 2026 9:46 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top