“சொல்லுங்க.. இவ்வளவு தூரம் என்னை தேடி வந்து இருக்கீங்ன்கனா கண்டிப்பா ஏதாவது இருக்குமே..” சோபாவில் கால் மேல் கால் போட்டு அவன் தோரணையாக அமர்ந்தபடி கேட்டான்.
அவனது தோரணையில் தேவகிக்கு விக்கிக் கொண்டு வந்தது. விழிகள் எல்லாம் கலங்கிப் போனது.
“அவங்க சொல்ல தயங்குறாங்க.. நீங்க சொல்லுங்க ப்பா” என்று தகப்பனை பார்த்தான்.
“எனக்கு என்னப்பா தெரியும். உங்க அம்மா கிளம்பி வர சொன்னாங்க. நான் வந்தேன். அவ்வளவு தான் தெரியும். எனக்கு எப்பவோ இந்த வீட்டுல முடிவெடுக்குற உரிமை போயிடுச்சு ப்பா. அதனால எதா இருந்தாலும் நீ அங்கேயே பேசிக்க.. நான் கொஞ்ச நேரம் படுக்குறேன்” என்று அவனது அறைக்குள் நுழைந்துக் கொண்டார்.
அதிரல் வீட்டுக்கு வந்த பொழுது அவளிடம் நடந்துக் கொண்ட முறையை பார்த்த பிறகு தேவகியிடம் முற்றிலுமாக தன் பேச்சை நிறுத்திக் கொண்டார் ஆளவந்தான்.
தேவகி எவ்வளவோ பேச முயன்ற பொழுதும் அவர் வாயே திறக்கவில்லை. தேவை என்றால் கூட அவர் பேச மறுக்க தேவக்கிக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.
ஆனால் ஆளவந்தான் கொஞ்சமும் கண்டுக் கொள்ளவே இல்லை. அறையை கூட மாத்திக் கொண்டு போய் விட தேவகி உள்ளுக்குள் அத்தனை கலங்கிப் போனார். அதற்கு ஏற்றார் போல அவன் மகன் ஐம்பது பீஸ் அமெரிக்கன் வாஸ் அனுப்பி விட என்னடா என்று போனது.
நான் ஏதும் தவறு செய்துட்டானா? உள்ளுக்குள் கேள்வி எழுந்தது. ஆனால் அதை அவர் உணரும் முன்பே மூத்த மகனின் பெண் பார்க்கும் வேலை ஆரம்பிக்க அதிரலை பற்றிய சிந்தனையே கொஞ்சமும் இருக்கவில்லை.
இப்பொழுது கூட பெண் வீட்டுக்கு போக தான் அவனை அழைக்க வந்து இருக்கிறார்.
“சொல்லுங்க என்ன ரீசனா என்னை தேடி வந்து இருக்கீங்க?” ஆணித்தரமாக அவன் கேள்வி கேட்க,
“அது வந்து..” என்று எச்சில் விழுங்கியவர், தன் மக்கள் இருவரையும் பார்த்தார். வெற்றியோ ‘நீயாச்சு அண்ணனாச்சு என்னவோ பண்ணுங்க’ என்று நழுவிக் கொண்டான்.
தாராவோ, “அண்ணன் கிட்ட என்னால எல்லாம் திட்டு வாங்க முடியாது.. நீயே ஏதா இருந்தாலும் டீல் பண்ணிக்க” என்று போனை நோண்ட ஆரம்பித்து விட்டாள்.
“ஸ்பீக் அவுட்” என்று அவன் அழுத்தமாய் சொல்ல, இதற்கு மேல் பேசாமல் இருந்தால் டென்ஷன் ஆகி விடுவான் என்று எண்ணி தேவகி,
“அது வந்து... உனக்கு பொண்ணு பார்த்து இருக்கேன் தீரா.. இன்னைக்கு பொண்ணு பார்க்க குடும்பத்தோட வரோம்னு சொல்லி இருக்கேன். அதான்” என்றவரை பார்த்து சிரித்தவன்,
“ஓ..” என்றவன் யோசனையுடன் தாயை பார்த்தான்.
“என்ன திடிர்னு..” கேட்டவனை கொஞ்சம் பயந்து போய் பார்த்தவர்,
“அது உனக்கு குழந்தை மேல ஆசை வந்திடுச்சோன்னு..” என்று இழுத்தார்.
“பாடர்ன்” என்று சொன்னவனை அழுத்தமாக பார்த்த தேவகி,
“நீ அந்த குட்டி பையன் கிட்ட ஆசையா பழகுன இல்லையா? ஒரு வேலை உனக்கு பிள்ளை ஆசை வந்துடுச்சோன்னு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணேன்” என்றார்.
“ஓ...! குழந்தை ஆசை வந்தா ஐவிஎப் பண்ணிட்டு போறது.. அதை விட்டுட்டு எதுக்கு கல்யாணம்?” நக்கலாக கேட்டவனை புரியாமல் பார்த்தவர்,
“என்ன தீரா. என்ன சொல்ற எனக்கு புரியலையே..” என்றார். வெற்றி திடுக்கிட்டு போய் அண்ணனை பார்த்தான். தீரனிடம் எந்த சலனமுமே இல்லை. அடிப்படை கோவம் இருக்குமோ என்று பார்த்தான். ஆனால் தீரனின் முகத்தில் ஏகத்துக்கும் நக்கல் தான் இருந்ததே தவிர வேறு எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
புரியாமல் கேட்ட தாயை கண்டுக் கொள்ளாமல், “ஆமா உங்க அமெரிக்கன் வாஸ் வந்திடுச்சா?” மேலும் நக்கலாக விசாரித்தான் தீரன்.
“வந்திடுச்சு ப்பா” என்றவர், “ஆனா நீ எதுக்கு ப்பா வாங்கிக் குடுத்த.. அதுவும் அத்தனை எதுக்கு.. யாரோ ஒரு பொண்ணோட பிள்ளை உடைச்சதுக்கு நீ எதுக்கு கை காசு போட்டு வாங்கி குடுத்த” என்றார் புரியாமல்.
அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் சிரித்த தீரன்,
“இப்ப ஹேப்பி தானே..” என்றான் தாயை பார்த்து.
அவர் புரியாமல் தலையை அசைத்தார்.
“குட்” என்றவன் அறைக்குள் நுழைந்துக் கொள்ள,
“தம்பி பொண்ணு பார்க்க போகணுமே..” அவனை தடுத்து நிறுத்தினார்.
“போகலாமே..” என்றவன், நிறுத்தி நிதானமாக தாயை பார்த்து,
“இந்த பொண்ணுக்கு எல்லா தகுதியும் இருக்கான்னு நல்லா விசாருச்கிட்டீங்காளா?” கேட்டான்.
“நம்ம பணத்துக்கும் வசதிக்கும் ஈக்குவலான இடத்துல தான் பார்த்து இருக்கேன் தீரா” பெருமையாக சொன்னார்.
“ஓ.. எதுக்கும் நம்ம வீட்டு நடு ஹால்ல நிற்க தகுதி இருக்கான்னு பார்த்துக்கோங்க.. இல்லன்னா பின்னாடி ரொம்ப கஷ்ட்டமா போயிடும்” என்றவனின் பேச்சில் இருந்த பொருள் புரிய கொஞ்சம் தாமதாமாகியது தேவகிக்கு.
“தீரா என்ன ப்பா இப்படி பேசுற..”
“நீங்க இதெல்லாம் பார்க்கிறவங்க தானே.. அதனால தான் சொன்னேன்” என்றவன் உள்ளே போக,
“கிளம்பலாமா தீரா” தவிப்பாக மகனை பார்த்தார்.
“நாட் இன்ட்ரெஸ்ட்” சொன்னவன் அறைக்குள் நுழைந்து முகத்தில் அடிப்பது போல கதவை அடித்து சாற்றிக் கொண்டான்.
மேற்கொண்டு அவனை அழைக்க இவருக்கு துணிவு இல்லை.
“வெற்றி என்னடா உன் அண்ணன் இப்படி சொல்லிட்டு போறான்” என்ற நேரம் செல்வா தன் குடும்பத்தை கூட்டிக்கொண்டு தாம்பூல தட்டோடு அந்த வீட்டில் நுழைந்தான்.
அவனை பார்த்த தாராவுக்கு முகம் சுருங்கிப் போனது. எல்லோரையும் பார்த்து சிரித்து, வரவேற்று விட்டு இன்னொரு அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
“இவன் எதுக்கு இங்க வந்து இருக்கான்.. நல்லா அண்ணன் கிட்ட வாங்கி கட்ட போறான்.. பொறம்போக்கு” முணகிக் கொண்டவளின் அருகில் அவளின் அக்கா வந்து அமர்ந்தாள்.
“அக்கா என்ன இது திடுதிப்பின்னு” என்று புகாராய் அவள் சொல்ல,
“நீ வேறடி.. தேவாகுக்கு இதுல கொஞ்சுமும் விருப்பம் இல்ல. ஆனா செல்வா தான் அவங்க பெத்தவங்க கிட்ட சொல்லி கம்பெல் பண்ணி என்னையும் உன் மாமாவையும் கூட்டிட்டு வந்துட்டாரு..” என்றாள் எரிச்சலாக.
“ப்ச் எத்தனை முறை சொன்னாலும் ஏன் தான் இவன் இப்படி இருக்கானோ.. கடுப்பா வருது க்கா.. மாமா முகத்துக்காக மட்டும் தான் இவனை சும்மா விட வேண்டியதா இருக்கு” என்றவளின் கையை பிடித்துக் கொண்ட கயல்,
“அண்ணன் இருக்கும் வரை நீ எதுக்கும் கவலை படாதடி. எல்லாத்தையும் அண்ணன் பார்த்துக்குவாறு” என்றவளுக்கு பெரும் வேதனையாகிப் போனது.
எங்கே பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் சண்டை வந்து விடுமோ.. அதனால் தன் வாழ்க்கை பாதிக்குமோ என்று அச்சமாக இருந்தது.




