“அடியேய் அவன் செஞ்சதுக்கு என்னடி எப்ப பாரு என்னையவே குத்தம் சொல்லிட்டு திரியிற. அவன் ஒழுங்கா வளரமா என்னை திட்டிட்டு இருக்க.. வந்தேன்னு வை இடுப்பு எலும்பை உடைச்சுடுவேன் பார்த்துக்க”
“ம்ம் இப்படி ரவுடி மாதிரி பேசுங்க செய்யிங்க, பின்ன அவன் கையில கத்தி எடுக்காம மணப்பானா?” கேட்டாள்.
“கைய்ஸ்” என்று மருத்துவர் சத்தம் போட, இருவரும் கொஞ்சம் அமைதியானார்கள்.
“அதனால தான் சொல்றேன்.. நீங்க அவன் விசயத்துல விளையாடாம கொஞ்சம் கவனமா இருங்க. பெட்டர் அவனை கண்ணாடி பாத்திரம் போல கையாளுங்க கொஞ்ச நாளைக்கு. பிறகு என்ன ஏதுன்னு பார்த்து சரியான ட்ரீட்மென்ட் குடுத்து மாத்திடலாம். ஆனா அவனுக்கு ஒவ்வொரு இன்சிட்டேன்ட்டுக்கும் நாம ட்ரீட்மென்ட் எடுத்துட்டே இருக்கக் கூடாது.. அந்த அளவுக்கு கொண்டு வாங்க” என்றவர்,
“வேரல் உனக்கு அவன் மேல உண்மையான பாசம் இருந்தா மிஸ்டர் கங்குவனை கல்யாணம் பண்ணிக்க. அது மட்டும் தான் அவனை காப்பாத்தும் ஒரே வழி. இல்லன்னா அவனை காப்பத்துறது ரொம்ப கஷ்ட்டம்..” என்று அவர் அறிவுறுத்த, எதுவும் சொல்லாமல் பிள்ளையை நோக்கி போய் விட்டாள்.
பீசை கொடுத்துட்டு அவர்களிடம் வந்தான் கங்குவன். இருவரும் ப்ளே ஸ்டேஷனில் விளையாண்டுக் கொண்டு இருக்க,
“நீ என்ன இங்கா பாப்பாவா. இப்ப தான் அவனோட விளையாண்டுட்டு இருக்க.. எழுந்து வா நேரம் ஆகுது.. உன்னை கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு தான் நாங்க எங்க வீட்டுக்கு போகணும்” என்றான் கடுப்பாக.
இவளுக்கு சுள்ளுன்னு கோவம் வந்தது.
“சொல்றதை சரியான டோன்லையே சொல்ல மாட்டீங்களா? எப்ப பாரு அதட்டி உருட்டிட்டே இருக்கீங்க. இப்படி இருந்தா இவன் எப்படி ஒழுங்கா வளருவான். பெட்டர் அவனை என்கிட்டே குடுத்துடுங்க. நானே வளர்த்துக்குறேன். பெருமைக்கு பிள்ளை பெத்து காண்டா மிருகம்னு பேரு வச்ச கதையா இருக்கு” என்றவளை சீற்றத்துடன் பார்த்தவன்,
“என்னடி நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். சும்மா சும்மா சல்லுன்னு சல்லுன்னு விழுந்துக்கிட்டு இருக்க.. என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு.. இல்ல அவனுக்கு என்னை பார்த்தா எப்படி இருக்கு. ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு ர்ரொம்ப தான் பண்ணிட்டு இருக்கீங்க” கோவத்தில் அவான் கத்த,
“சார் உங்க புருசன் பொண்டாட்டி சண்டை எல்லாம் வீட்டுல போய் போட்டுக்கோங்க. இது ஹாஸ்பிட்டல். குறிப்பா இது ப்ளே ஸ்டேஷன். இங்க சின்ன பிள்ளைங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்க நீங்க ரெண்டு பேரும் சண்டை போடுறதை பார்த்து மனசளவுல ரொம்ப பாதிப்பு அடிவாங்க. சோ இங்க இருந்து முதல்ல கிளம்புங்க” என்று ஒரு நர்ஸ் சொல்ல,
“ஏதே புருசன் பொண்டாட்டியா?” கங்குவன் கண்கள் சிவக்க கர்ஜிக்க,
“ஷ்..” என்று அவனின் கையை பற்றி தடுத்தவள்,
“போய் காரை ஸ்டார்ட் பண்ணுங்க.. நான் சாமோட வரேன்” என்று அவனை அடக்கி வெளியே போக வைத்தவள், சாமை கிளப்பி கூட்டிக்கொண்டு காருக்கு வந்தாள்.
வந்தவளுக்கு முன் புறம் கதவை திறந்து விட, அவள் பின் பக்கம் போக முனைய,
“காரை எடுக்கவே மாட்டேன்டி” கத்தினான்.
“இந்த மனுசனோட நமக்கு இம்சை” வாய்க்குள் முணகிக் கொண்டு பிள்ளையை மடியில் வைத்துக் கொண்டு முன்புறம் வந்து அமர்ந்தாள்.
பிள்ளை மட்டும் ஏதோ பேசிக் கொண்டு வந்தான். கங்குவன் எதுவும் பேசவில்லை. அமைதியாக காரை ஓட்டினான். அவள் வீடு இருக்கும் புறமாக வண்டியை விட,
“சாமை தூங்க வச்சுட்டு அப்புறமா நான் வந்துக்குறேன். நேரா உங்க வீட்டுக்கு விடுங்க” என்று வேரல் சொல்ல,
“ஐ அம்மான்னா அம்மா தான்” என்று அவளின் இரு கன்னத்தையும் பிடித்து சின்னவன் கொஞ்ச, கங்குவனுக்கு தான் காதில் புகை வந்தது.
“ரெண்டு பேரும் ரொம்ப தான் பண்ணிட்டு இருக்கீங்க” என்று முணு முனுத்தவன் நேராக அவனது வீட்டுக்கு வண்டியை விட்டான்.
ஹாஸ்பிட்டலில் இருந்து வந்து சாமை குளிக்க வைத்தாள் தானும் முகம் கைக்கால் கழுவி விட்டு வெளியே வர, வெறும் பாஸ்ரோடு வந்து நின்றான் கங்குவன்.
“கொஞ்சம் கூட வெட்கமே இருக்காது இவருக்கு” திட்டியவள், மகனுக்கு உடை போட்டு விட,
“ம்மா நேனாம்” என்று அவன் சிணுங்கி அவனும் வெறும் ட்ரவுசரோடு திரிய, கங்குவனை முறைத்துப் பார்த்தாள்.
“எல்லாமே அவன் உங்கக்கிட்ட இருந்து தான் கத்துக்குறான். அது உங்களுக்கு புரியுதா இல்லையா?” கேட்டாள்.
“ஏன்டி எனக்கு கசகசன்னு இருக்கு. அதனால நான் போடல. அவன் சட்டை போடாததுக்கும் என்னை குறை சொல்லிட்டு இருக்க.. இல்ல உனக்கு என்னை பார்த்தா எப்படிடி இருக்கு.. எதுக்கெடுத்தாலும் ஆவாத மருமகளை குறை சொல்ற மாதிரி என்னை குறை சொல்லிட்டே இருக்க” கர்ஜித்தவனை முறைத்துப் பார்த்தவள் எதுவும் சொல்லாமல் சாமை தூக்கிக் கொண்டு டைனிங் ஹாலுக்கு சென்றாள்.
அவர்களின் பின்னோடு இவனும் போக, இருவருக்கும் அவள் பரிமாற,
“ம்மா ஊட்டி” என்று கேட்டான்.
“சரிடா கண்ணா” என்றவள், அவனுக்கு ஊட்டி விட,
“புதுசு புதுசா பழக்காதடி” அதட்டல் போட்டான்.
“அவன் என்ன பெரிய பிள்ளையா இப்பவே எல்லாமே தானே பண்ணிக்க.. நீங்க பேசுறது தான் விதாண்டாவதமா இருக்கு..” என்றாள் அவள்.
“ஆமான்டி எனக்கு வேற என்ன வேலை. விதாண்டாவாதம் பேசுறதை தவிர” முறைத்தான்.
“உங்கக்கிட்ட போய் பேசுனேன் பாருங்க என்னை சொல்லணும்” என்றவள், பிள்ளைக்கு ஊட்டி விட்டுக் கொண்டே கங்குவனுக்கு என்ன வேண்டும் என்று பரிமாற,
“நீ எந்த ஆணியும் புடுங்க வேண்டாம்” என்றான்.
‘வேணான்னா போங்க” என்றாளே தவிர அவனது தட்டில் குறைவதை பார்த்து பார்த்து மீண்டும் வைத்துக் கொண்டு தான் இருந்தாள்.
அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு உணவு உண்டான். பிள்ளைக்கு ஊட்டி விட்டு தானும் போட்டு உண்டவள், பணியாளர்களிடம் எல்லாவற்றையும் எடுத்து வைக்க சொல்லி விட்டு, மகனை உறங்க வைக்க முயல,
அவளின் சேலை முந்தானையை எடுத்து போர்த்திக் கொண்டு அவளுக்கு அருகில் சின்ன சிட்டாய் சுருண்டுக் கொண்டவனை கண்டு வேரலுக்கு நெஞ்சில் பிள்ளையின் மீது அத்தனை பாசம் எழுந்தது.
அவனின் தலை முடியை கோதி விட்டுக் கொண்டே அவள் கதை சொல்ல, ம்ம் கொட்டிக் கொண்டே அவளின் நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டு தூங்க தொடங்கினான்.
காலை அவள் மீது போட்டுக் கொண்டு இடுப்பை இறுக்கமாக கட்டிக் கொண்டு பிள்ளை தூங்கிவிட, அவன் மீது இருந்து முந்தானையை எடுத்துக் கொண்டு இருந்த நேரம், வாசற்படியில் வந்து நின்றான் கங்குவன்.
அவனது கண்கள் ஏகத்துக்கும் சிவந்துப் போய் இருந்தது. அவனது தோற்றம் கண்டு இவளுக்குள் பெரும் பிரளையமே வந்தது.
“இங்க என்ன பண்றீங்க?” என்ற நேரமே அவனும் அந்த அறையின் உள்ளே வந்தான்.




