Notifications
Clear all

அத்தியாயம் 49

 
Admin
(@ramya-devi)
Member Admin

“என்னடி ரொம்ப பேசுற.. ஆமா நான் அப்படி தான் திட்டுவேன். நீ திட்டு வாங்கி தான் ஆகணும். இல்லன்னு வை உன் தங்கச்சியை இங்க சென்னைக்கு மாத்திடுவேன்” என்றான் எகத்தாளமாக.

“இதை சொல்லி சொல்லியே பயம் காட்டுங்க” முணகியவள், “என்ன வேலை?” என்று கேட்டாள்.

“எப்பவும் போல தான் எனக்கு அசிஸ்ட் பண்ணு” என்றான்.

“இதுக்கு நான் பாழுங்கிணத்துலயே விழலாம்” அவனுக்கு கேட்கா வண்ணம் முணகியவள்,

“வேணாம் சார்.. வேற டிப்பார்ட்மென்ட்ல வேலை குடுங்க” என்றாள்.

“உங்கக்கிட்ட சாய்ஸ் கேட்டனா நானு?” அவளை முறைத்தவன், “ஒழுங்கா சொன்ன வேலையை செய்டி” அதட்டினான்.

“ம்கும்.. நீங்க சொன்ன வேலையை செய்ய பார்த்தா உங்க பியே என்னவோ அவரோட இடத்தை நான் பிடுச்சுக்கிட்ட மாதிரி என்கிட்டே பிகேவ் பண்றாரு. அவரும் சொல்லி தர மாட்டேங்குறாரு. சரி நானா பைலை எடுத்து செக் பண்ணலாம்னு பார்த்தா அதையும் அலவ் பண்ண மாட்டிக்கிறாரு.. அதனால எனக்கு உங்க பியே வேலை வேணாம்.. வேற ஏதாவது டிப்பார்ட்மென்ட்ல வேலை குடுங்க..” என்றாள்.

“இனி அப்படி நடந்துக்க மாட்டான்..” என்றான் உறுதியாக.

“கேர் டேக்கர்” என்று அவள் ஆரம்பிக்க,

“மானிட்டர் பண்ணி நேத்திக்கே அவனை வார்ன் பண்ணிட்டேன்டி.. இனி உனக்கு தொல்லை தர மாட்டான் போதுமா?” கடுப்படித்தான்.

“ம்கும் ரொம்ப தான்” முணகியவள் அவனின் அறையில் இருந்த மேசையில் போய் அமர்ந்துக் கொண்டாள்.

சிறிது நேரத்திலே செல்வா வந்து அவளை அழைக்க அவனுடன் சென்றாள்.

அவன் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் சொல்லிக் குடுக்க ஆரம்பிக்க மலைத்துப் போனாள்.

“செல்வா சார்” என்று அவனை அழைக்க,

“சாரி மேம்.. நான் நேத்திக்கு அப்படி நடந்திருக்க கூடாது.. ரியலி சாரி.. எனக்கு என்னல்லாம் தெரியுமோ அது எல்லாத்தையும் உங்களுக்கு நான் சொல்லிக் குடுத்துடுறேன்” என்றவன் மேற்கொண்டு அவளிடம் எதையும் பேசாமல் அவளுக்கு சொல்லிக் குடுக்க ஆரம்பித்தான்.

அவளும் கற்பூரபுத்தியாய் எல்லாவற்றையும் நன்றாக கவனித்துக் கொண்டாள். சில பைல்களை கொடுத்து அவற்றை பார்க்க சொன்னான்.

“ஓகே சார்” என்றவள், தன் இடத்துக்கு வந்து பைல்களை பார்க்க ஆரம்பித்தாள். தீத்திரள் தீரன் அறையில் இல்லை. ரவுன்ஸ் போய் இருப்பான் என்று எண்ணிக் கொண்டவள் வேலையில் ஆழ்ந்தாள்.

அன்றைய நாள் அப்படியே சென்றது. இடை இடையே மகனை போய் பார்த்துக் கொண்டவள் அவனுக்கு அவளே உணவை கொடுத்து ஊட்டி விட்டு வந்தாள். மத்திய உணவும் பிள்ளையோடு அமர்ந்து உண்டுவிட்டு வந்தாள். தீரன் காலையில் போனவன் தான் அதன் பிறகு அவனை பார்க்கவே முடியவில்லை.

ஐந்து மணி ஆக பிள்ளையை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள். கூடவே கேர் டேக்கரும் வந்து விட்டார். வந்து அவளை விட்டுட்டு அவர் கிளம்பி விட, ஐந்து மணியில் இருந்து இன்னொரு கேர் டேக்கர் வந்தார். இரண்டு ஷிபிட் போட்டு இருந்தான்.

காலையில் இருந்து மாலை வரை ஒருவரும், மாலையில் இருந்து இரவு பத்து மணி வரை ஒருவரும் என்று ஏற்பாடு செய்து இருந்தான் தீரன்.

அதன் படி இன்னொருவர் வர, அவரிடம் பிள்ளையை கொடுத்து விட்டு பிரெஷப்பாக அறையின் உள்ளே நுழைந்தாள்.

ஷவரை திறந்து விட்டு நீரில் நின்றவளுக்கு காலையில் இருந்து செய்த வேலையால் மிகுந்த களைப்பாக இருந்தது. அப்படியே நின்றவள் பின் அலுப்பு போக குளித்து விட்டு வெளியே வந்து வேறு சேலைக்கு மாறியவள், பிள்ளையை இடுப்பில் வைத்துக் கொண்டு சமைக்க ஆரம்பித்தாள்.

“நான் பார்த்துக்குறேன் மேம்” என்று அவர் சொல்ல,

“இல்ல கொஞ்ச நேரம் நான் மகனோட இருக்கணும் சிஸ்ட்டர்” என்று மறுத்து விட்டவள் மகனோடு கதை பேசிக் கொண்டே சமையல் செய்து விட்டு அவனுக்கு ஊட்டி விட்டவள்,

கேர்டேக்கருக்கு  ஒரு கப் காபி கொடுத்தவள் தானும் அமர்ந்து காபி அருந்தினாள்.

“இங்க பக்கத்துல எங்கும் பார்க் இருக்கா?” விசாரித்தாள்.

“இருக்கு மேம்.. கொஞ்ச தூரம் தான்” என்றார் அவர்.

“அப்போ வாங்க கொஞ்ச நேரம் நக போயிட்டு வரலாம்” என்று சொல்லி அங்கே போய் பிள்ளையை விளையாட விட குட்டி வாண்டுக்கு ஒரே ஜாலி.. காலையில் இருந்து நாலு சுவற்றுக்குள் அடைத்தே வைத்து இருந்ததால் இந்த வெட்ட வெளியை பார்த்ததும் அவனுக்கு அத்தனை சந்தோசமாக இருந்தது.

செடியை பிடித்து உலுக்குவது, இலையை பறிப்பது பூப்பறித்து கொண்டு வந்து அவனின் அன்னையிடம் தருவது, சில நேரம் அவளின் கூந்தலிலே சூட்டி விடுவான்.

என்ன பூ என்று கூட தெரியாது. பிள்ளை ஆசையாக குடுத்த உடனே தலையில் வைத்துக் கொள்வாள். அவள் செய்வதை பார்த்த குட்டி வாண்டு தானே இப்பொழுது  எல்லாம் அன்னையின் தலையில் சூட்டி விட்டுடுவான்.

இன்றைக்கும் அப்படி தான் எங்கோ ஓடிப்போய் பூக்களை பறித்து வந்து அப்படியே அவளின் தலையில் சொருகி விட்டுட்டு ஓடி விட்டான் விளையாட.

அக்கம் பக்கத்து பிள்ளைகள் அவனை தூக்கிக் கொண்டு கொஞ்ச, இவனும் அவர்களோடு ஒன்றிப் போய் விட்டான். மகன் மீது ஒரு கண்ணை வைத்துக் கொண்டே தங்கைக்கு அழைத்து பேசினாள்.

வீடியோ கால் வந்து பிள்ளையை கேட்க, அவளுக்கு பிள்ளையை காட்டி அவளுடன் பேச வைத்தவள் எட்டு மணி ஆகவே பிள்ளையை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள்.

கேர்டேக்கரிடம்,

“நீங்க கிளம்புங்க சிஸ்டர்.. நான் பார்த்துக்குறேன்” என்று சொல்ல,

“இல்ல மேடம் என் டியூட்டி பத்து மணிக்கு தான் முடியும்” என்று அவர் தயங்க,

“இனிமேல் நான் சாப்பிட்டுட்டு தூங்குறது தான் வேலை சிஸ்டர். வேற ஒன்னும் இல்ல நான் பார்த்துக்குறேன்” என்றவளிட,

“இல்ல மேடம் நீங்க சாப்பிடுங்க. அப்புறமா நான் போறேன்” என்று அவளின் கையில் இருந்த பிள்ளையை வாங்கிக் கொண்டவர்,

“குழந்தைக்கு நான் ஊட்டிவிடவா மேம்?” தயக்கத்துடன் கேட்டார்.

“ஓகே” என்றவள் குழந்தைக்கு உரிய உணவை போட்டு கொடுத்து விட்டு,

“உங்களுக்கும் சேர்த்து சப்பாத்தி போட்டேன். சாப்பிட்டுட்டு போங்க” என்று ஒரு ஹாட்பாக்சை அவர் பக்கத்தில் வைத்து விட்டு இவாள் சாப்பிட ஆரம்பித்தாள்.

பிள்ளைக்கு உணவு ஊட்டி விட்டுட்டு “வீட்டுல போய் சாப்பிட்டுக்குறேன் மேம்” என்று சொல்லி கிளம்பி விட்டார். அவர் போன பிறகு முன் கதவை சாற்றி பூட்டியவள், தன் அறைக்குள் வந்து கதவை பூட்டியவள் ஏசி போட்டுவிட்டு படுக்கையில் பிள்ளையை படுக்க வைத்து அவனுடன் தானும் படுத்துக் கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தாள்.

கதை சொன்னால் தான் தூங்குவான். இல்லை என்றால் தூங்கவே மாட்டான். அதுவும் எல்லாமே காட்டு விலங்கு கதைகள் தான். அதனால் தினம் தினம் கற்பனையாக ஏதவது கதை சொல்லி தூங்க வைப்பாள். இன்றைக்கும் அப்படி கதை சொல்லி அவனை தூங்க வைக்க, மகன் தூங்குவதற்குள் இவளுக்கு தூக்கம் சொக்கியது.

“தூங்கு கண்ணா” என்று சொல்லி மகன் தூக்கத்தில் சொக்கும் வரை கடினப்பட்டு விழித்து இருந்தவள் அவன் தூங்கியவுடனே இவளும் தூங்க தொடங்கி விட்டாள். அத்தனை அலுப்பாக இருந்தது போலும். அடித்து போட்டது  போல தூங்கினாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : November 13, 2026 9:09 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top