Notifications
Clear all

அத்தியாயம் 42

 
Admin
(@ramya-devi)
Member Admin

“கொஞ்ச நேரம் சும்மா தான் இரேன்டா.. அவன் சந்தோசமா சிரிச்சு பேசிட்டு இருந்தா உனக்கு பொறுக்காதே..” கங்குவனை அடக்கியவன், சாமை கையில் தூக்கிக் கொண்டு காருக்கு சென்றான். அவனின் பின்னோடு கங்குவனும் வந்தான்.

இவர்கள் இருவரும் பின் இருக்கையில் அமர்ந்துக் கொள்ள, இவன் தான் காரை ஓட்ட வேண்டி வந்தது.

“காரை ஓட்ட வேண்டியது தானேடா.. பின்னாடி என்ன புடுங்க போனியா?” சரமாரியாக கெட்ட வார்த்தை பேசினான்.

“ஆமாண்டா நான் புடுங்க வந்தேன்.. நீ டேஷ் பண்ணு” என்று அவனும் பதிலுக்கு பதில் கெட்டவார்த்தை பேசினான்.

“சின்ன பிள்ளையை வச்சுட்டு என்ன வார்த்தை பேசிட்டு இருக்கீங்க.. கொஞ்சம் கூட மேநேர்ஸ் இல்ல.. படிச்சவங்க தானே ரெண்டு பேரும். இப்படியா அவனுக்கு முன்னாடி பேசிக்கிவீங்க..” போனில் இருவரையும் திட்டினாள்.

“அப்படி தான்டி பேசுவேன் உன்னால என்ன புடுங்க முடியுமோ புடுங்கு” என்றான் கங்குவன்.

“உங்கக்கிட்ட பேசுறதே வேஸ்ட்.. அரக்கன் போல இருக்குற உங்களுக்கு என்ன சொன்னாலும் ஏறாது..” என்று சொன்னவள்,

“கண்ணா போனை ஸ்பீக்கரில் இருந்து எடுத்து காதுல வச்சு பேசு. அம்மா சொல்றதை மட்டும் கேட்டுட்டு வரணும் புரியுதா? அந்த தடிமாடுங்க என்ன பேசுனாலும் அதை காதுல வாங்கக் கூடாது சரியா?” என்று கேட்டு வரும் வழி எல்லாம் அவனுடன் பேசிக் கொண்டே வந்தாள்.

“டேய் அவ ரொம்ப ஓவரா போறாடா” அவளின் அண்ணனிடம் புகார் சொல்ல,

“நாம பேசுனதும் தப்பு தானேடா”

“மண்ணாங்கட்டி.. நீ என்ன எதுக்கெடுத்தாலும் அவளுக்கே சப்போர்ட் பண்ற.. பின்ன அவ ஆடாம என்ன பண்ணுவா” இவனுக்கு நாலு மண்டகபடி போட்டுக் கொண்டே ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்தான்.

அதற்குள் வந்து இருந்தாள் வேரல். வேரலை பார்த்த உடன் போனை தூக்கி இளாவிடம் எரிந்து விட்டு ஒரே பாய்ச்சலில் அவளிடம் ஓடிவிட்டான்.

“கொழுப்ப பார்த்தியாடா இவனுக்கு..” என்று பல்லைக் கடித்தான் கங்குவன்.

“ப்ச் நீ அவனை ஏதாவது சொல்லலன்னா தூக்கமே வராதாடா உனக்கு” என்ற நேரம் அவனது போன் அடிக்க, எடுத்து பேசியவன்,

“டேய் ஒரு இம்ப்பார்டன்ட் ஒர்க்.. இப்பவே கிளம்பனும். என் வண்டி உன் வீட்டுல இருக்கு. நான் வேரல் வண்டியை எடுத்துட்டு போறேன் நீ அவளை டிராப் மட்டும் பண்ணிடு..” என்று விட்டு வேரலிடம் சொல்லிக் கொண்டு அவளின் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான் இளா.

மருத்துவமனையில் வெயிட்டிங் ஹாலில் இவர்கள் மூவரும் அமர்ந்து இருந்தார்கள். அவர்களோடு இன்னும் சிலர் அமர்ந்து இருந்தார்கள்.

கங்குவனை கண்டு கொள்ளாமல் வேரலிடம் வளவளத்துக் கொண்டு இருந்தான் சாம். அவனுக்கு இணையாக இவளும் பேசிக் கொண்டு இருக்க, இவனுக்கு கடுப்பானது. இளா இருந்து இருந்தால் அவனுக்கு ஒன்றும் தெரிந்து இருக்காது.

ஆனால் இப்பொழுது அவனும் இல்லாமல் போக, போனை நோண்டவும் கடுப்பாக இருக்க, இவர்கள் இருவரையும் முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனின் பார்வையை சட்டை செய்யாமல் இருவரும் கதை பேசிக் கொண்டே இருக்க, பார்க்க பார்க்க உஷ்ணம் உச்சிக்கு ஏறியது அவனுக்கு.

“ம்க்க்கும்...” தொண்டையை செருமி அவளின் கவனத்தை தன் பக்கம் திருப்பப் பார்க்க, அவள் திரும்பினாள் தானே.. அவளின் மொத்த கவனமும் பிள்ளையிடம் குவிந்து இருந்தது.

தகப்பன் பக்கம் அமர மாட்டேன். பூச்சாண்டி என்னை தூக்கி காருல போட்டு அடிச்சு வச்சுட்டாரு..ன்னு சொல்லி வேரலுக்கு அந்த பக்கம் அமர்ந்துக் கொண்டான். மற்ற இருக்கையில் வேற வேற ஆட்கள் அமர்ந்து இருக்க, இவனுக்கு வேறு வழியில்லாது வேரலுக்கு இன்னொரு பக்கம் அமர்ந்துக் கொண்டான்.

ஆனால் அவனை வெறுப்பேற்றுவது போல இருவரும் பேசிக் கொண்டே இருக்க, ஒரு கட்டதுக்கு மேல் தாங்க முடியாமல் வேரலின் கவனத்தை தன் திருப்ப முனைந்து முடியாமல் போக, சட்டென்று அவளின் தோளை சுற்றி கையை போட்டு விட்டான்.

அதை எதிர் பார்க்காதவள் திகைத்துப் போய் அவனை திரும்பி பார்த்தாள்.

அவளின் பார்வை உணர்ந்தும் கையை எடுக்காதவன், தன் உள்ளங்கையால் அவளின் தோளை அழுத்தமாக பிடித்து விரல்களால் மசாஜ் செய்வது போல பிடித்து பிடித்து விட, இவளுக்கு மூச்சு திணறிப் போனது.

“என்ன பண்றீங்க?” அடிக்குரலில் உறுமினாள்.

“நீ ஏன் திரும்பல” என்றான்.

“நீங்க எப்ப கூப்பிட்டீங்க?” என்றாள்.

“தொண்டையை செருமினேனே”

“பேர் சொல்லி கூப்பிட்டீங்களா?” என்றவளை முறைத்துப் பார்த்தவன் தன் பார்வையை அவளிடம் இருந்து விலகிக் கொண்டவன் வேறு எங்கோ பார்த்தான். ஆனால் அவள் தோளின் மீது இருந்து கையை மட்டும் எடுக்கவே இல்லை.

“கையை எடுங்க” என்றாள்.

“முடியாது” என்றான் அடங்காமல்.

“பப்ளிக் பிளேஸ்.. அதுவும் ஹாஸ்பிட்டல்” என்றாள்.

“நான் என்னடி உன் இடுப்பையா பிடிச்சேன்.. ரொம்ப தான் பண்ற?” என்றவனை என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்த நேரம், மகன் அவளின் மோவாயை பிடிச்சு தன் பக்கம் திருப்பினான்.

“ம்மா” என்று அதட்டல் வேறு அவனிடம். நீ எப்படி அந்த ஆள் பக்கம் திரும்பலாம் என்று.

“ஐயோ” என்று வந்தது அவளுக்கு. இதுங்க ரெண்டு கிட்டயும் மாட்டிக்கிட்டு முழித்தாள் வேரல்.

“சொல்லு கண்ணா” என்று மகன் பக்கம் அவள் திரும்ப, கங்குவனின் கை முன்பை விட அழுத்தமாக அவளின் தோளை அழுத்திப் பிடித்தது. அதில் வலியே எடுத்து விட்டது அவளுக்கு.

“வலிக்கிறது ப்ளீஸ்” என்று சன்னமாக அவள் சொல்ல,

“அப்போ என் பக்கம் திரும்பு. நான் கொஞ்சம் பேசணும்” என்றான்.

அதற்குள் அவனின் மகன் அவளை தன் பக்கம் திருப்பி முறைக்க, தலைவலியே வந்து விட்டது அவளுக்கு.

“ரெண்டு பெரும் இப்ப சும்மா இருக்க போறீங்களா? இல்லையா?” என்ற நேரமே அவர்களை அழைக்க வேகமாய் உள்ளே நுழைந்தார்கள். மருத்துவர் சாமிடம் பேசிக் கொண்டு இருக்க, அவளின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு அமர்ந்து இருந்தான் கங்குவன்.

அவளுக்கும் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. மருத்துவர் என்ன சொல்வாரோ என்று. பிள்ளையிடம் பேசி முடித்து விட்டு புன்னகையுடன் வந்தவர்,

“சாமுக்கு புது அம்மா கிடச்சுட்டாங்களாமே.. அதை பத்தி ஒரே அமர்க்களமா பேசிட்டு இருந்தான். அவனுக்கு ரொம்ப ஜாலியா இருக்காம்..” என்று அவர் சொல்ல சொல்ல கங்குவனும் வேரலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்  கொண்டார்கள்.

“அங்கிள் அவனுக்கு பழசு எதுவும்” தயக்கத்துடன் வேரல் தான் கேட்டாள். கங்குவன் நடுங்கும் நெஞ்டன் அமர்ந்து இருந்தான்.

“அவன் அதை எல்லாம் மறந்து போயிட்டான் வேரல்.. அவனோட நினைவில் இப்ப இருப்பது எல்லாம் அவனோட அம்மா மட்டும் தான்” என்றவர்,

“அந்த அம்மா யாருன்னு நான் தெருஞ்சுக்கலாமா?” கேட்டார்.

அதற்கு மட்டும் வாயை திறந்தான் கங்குவன்.

“இவ தான் டாக்டர்” என்றான்.

“வேரல்” என்று அவர் அதிர,

“நாங்க யாரும் சொல்லி தரள அங்கிள். அவனாவே நினைச்கிக்கிட்டான்” என்றாள் தயக்கமாக.

“ஓ... அப்பா நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்க போறீங்களா?” என்றார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்..” என்று வேகமாக மறுத்தான் கங்குவன்.

அவர் வேரலை அழுத்தமாக பார்க்க,

அவள் மௌனமாக தலையை ஆட்டினாள் இல்லை என்று.

“சீரியஸ்லி” என்றவருக்கு அப்படி ஒரு கோவம் வந்தது.

“என்ன பேசுறீங்க ரெண்டு பேரும். இதனோட சீரியஸ்னஸ் என்னன்னு தெரியுமா?” என்று இருவரையும் அதட்டினார்.

Loading spinner

Quote
Topic starter Posted : November 11, 2026 3:53 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top