பெருமூச்சு விட்ட முரளி மகளிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் படத்தை பற்றி கமென்ட் சொல்லி அவளை திசை திருப்பினார். அவளும் அவருடன் இணைந்துக் கொள்ள முரளிக்கு மனம் சற்றே ஆறியது.
“வீட்டுக்கு போகவாடா?” படம் முடிந்து அவளிடம் கேட்டார்.
“இல்லப்பா.. ஸ்கூலுக்கு போகணும். கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க கூப்பிடவும் அப்படியே போட்டுட்டு வந்துட்டேன். மீட்டிங் என்ன ஆச்சுன்னு பார்க்கணும்” என்றவளை ஸ்கூலில் விட்டுட்டு அவர் கம்பெனிக்கு கிளம்பி விட்டார்.
அவரின் மனதில் ஏதோ சொல்ல முடியாத துக்க உணர்வு வந்தது. தன் மகளுக்கும் கங்குவனுக்கும் இடையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் திணறிப் போனார். குறிப்பாக தன் மகளின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியவருக்கு மகளிடம் வெளிப்படையாக எதையும் கேட்க முடியவில்லை.
ஸ்கூலில் நுழைந்த வேரல் பிஏவிடம் மீட்டிங்கில் என்ன நடந்தது என்று கேட்க ஆரம்பித்த நேரம் கதவை படார் என்று திறந்துக் கொண்டு கங்குவன் உள்ளே நுழைந்தான். அவனது கண்கள் ஏகத்துக்கும் சிவந்துப் போய் இருந்தது.
“என்ன சார் இது.. இப்படி தான் அனுமதி இல்லாம கதவை திறந்துக் கொண்டு உள்ளே வர்றதா?” என்று பியே அவனிடம் கேள்வி கேட்க, அவளை எல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாமல் வேரலை தீர்க்கமாக பார்த்தான்.
போன் பண்ணி பண்ணி பார்த்து பொறுமை இழந்துப் போய் அவளை தேடி நேராகவே வந்து விட்டான் கங்குவன்.
அவன் முகத்தில் தெரிந்த சீற்றத்தில் சற்றே அச்சம் பிறந்தாலும் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல்,
“என்ன வேணும்” என்று நிதானமாக கேட்டாள்.
அவனது பார்வை பிஏவை பார்க்க,
“கொஞ்சம் வெளில இருங்க.. நான் கூப்பிடுறேன்” என்று அவளை வெளியே நிறுத்தி விட்டு “உட்காருங்க” என்றாள் வேரல்.
“உன்கூட உட்கார்ந்து கதை பேச ஒன்னும் நான் வரல” என்றவனை இயலாமையுடன் பார்த்தவள்,
“சரி எதுக்காக வந்தீங்க. அதையாவது சொல்லுங்க” என்றவளை கடுப்புடன் பார்த்தவன்,
“என்னடி நீ கேட்ட உடனே நான் சொல்லணுமா?” என்று எகிறினான்.
இப்படி பேசுபவனிடம் என்னத்தை பேச, எதுவும் சொல்லாமல் தன் மேசை மீது இருந்த கோப்புகளை பார்வை இட ஆரம்பிக்க, கங்குவனுக்கு வந்த ஆத்திரத்தில் அவள் பார்த்துக் கொண்டு இருந்த பைலை வாங்கி பறக்க விட்டான்.
“ப்ச் ஏன் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க.. உட்காருங்கன்னா அதயும் செய்ய மாட்டிகிறீங்க, சரி வந்த விசயத்தை சொல்லுங்கன்னா அதையும் சொல்ல மாட்டிக்கிறீங்க. பிறகு எதுக்கு தான் வந்தீங்க..?” இயலாமையுடன் கேட்டவளை கூர்ந்துப் பார்த்தவன்,
“எதுக்காக என் போனை எடுக்கல, எதுக்காக மீட்டிங் அட்டென் பண்ணல?”
“ப்ச் இதுக்கா இந்த அக்கப்போர்” என்றவள்,
“அப்பா மூவி கூட்டிட்டு போய் இருந்தார். அதனால மீட்டிங் அட்டென் பண்ண முடியல.. உங்க போனும் எடுக்கல”
“என்னைய விட உனக்கு மூவி ரொம்ப முக்கியமா போயிடுச்சா?” என்று விவரமில்லாமல் கேட்டவனை கண்டு மலைத்து நின்றவள்,
“ப்ளீஸ்..” என்று அவனிடம் வாட்டரை நீட்டினாள்.
அவனுக்கு இருந்த எரிச்சலில் அதை ஒரே மொடக்கில் குடித்து முடித்து விட்டு அவள் மேசை மீது நங்கென்று வைத்தான். கண்ணாடி கிளாஸ் வீரலே விட்டுப் போனது அவன் வைத்த அழகில்.
அதை ஒரு பார்வை பார்த்தவள் அவனை பார்த்தாள். அவள் முன்பு இருக்கையில் பொத்தென்று அமர்ந்தவன்,
“சைக்காட்ரிஸ்ட் கிட்ட இன்னைக்கு ஒரு சிட்டிங் இருக்கு.. அவனை கிளப்புனா வர மாட்டிக்கிறான். நீ கூட வந்து அவனை கிளப்பி விடு” என்றான்.
அப்படி சொன்னவனை ஆழ்ந்துப் பார்த்தவள்,
“அவன் ஒன்னும் நான் வலிக்க வலிக்க பெத்த பிள்ளை இல்லையே.. நீங்க தானே பெத்தீங்க.. அவன் உங்க பிள்ளை. அவனுக்காக இனி நான் எதுவும் செய்யிறதா இல்லை” என்றவளை தீர்க்கமாக பார்த்தவன்,
“என்னடி திமிர் காட்டுறியா?”
“யாரு நானா?” என்று கேட்டவள், நேற்றைக்கு அவன் பேசியதை ரெகார்ட் செய்ததில் போட்டு காட்ட, கேட்டவன் நெற்றியை பிடித்துக் கொண்டான்.
“ப்ச் தண்ணி போட்டுட்டு உளறுனா அதை எல்லாம் பெருசா எடுத்துப்பியா?” என்றவனை முறைத்துப் பார்த்தவள்,
“நீங்க என்ன மாதிரி பேசி இருக்கீங்கன்னு உங்களுக்கு புரியுதா இல்லையா? நீங்க பேசுனதுல நான் எவ்வளவு ஹெர்ட் ஆகி இருக்கேன்னு கொஞ்சம் கூடவா தெரியலை” கேட்டவளை எரிச்சலுடன் பார்த்தவன்,
“அதெல்லாம் எனக்கு தெரிய வேண்டாம். அவன் டாக்டர் கிட்ட வர மாட்டேன்னு அடம் பண்றான். நீ வா.. நீ வந்தா அவன் வருவான்” என்றான் உடும்பு பிடியாய்.
“கடுப்பேத்தாதீங்க கங்குவன்”
“யாருடி கடுப்பு ஏத்துறா.. நீ தான் கடுப்பு ஏத்திட்டு இருக்க.. அவன் டாக்டர் கிட்ட வர மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கான். உனக்கு அது பெருசா தெரியல. ரெண்டு வார்த்தை சொன்னதுக்கு மூஞ்சை தூக்கி வச்சுட்டு திரியிற” என்றவனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் தலையை பிடித்துக் கொண்டாள்.
“கிளம்பு” என்றான்.
“நீங்கல்லாம் மனுசனே இல்ல”
“ஐ நோ” என்று அவளை அடக்கினான்.
அதில் கடுப்பானவள், “எனக்கு வேலை இருக்கு நான் வரல” என்றாள்.
“உன் சம்மதத்தை யாரும் இங்க கேட்டு நிக்கல.. நீ வர்ற” என்றான் அத்தனை அதிகாரமாய்.
அதில் எரிச்சல் மூல,
“நாளைக்கு எனக்கு கல்யாணம் ஆகி என் புருசன் வீட்டுல இருப்பேன். அப்ப கூட இப்படி தான் வந்து கூப்பிடுவீங்களா?” எரிச்சலில் கேட்டு விட்டாள்.
ஒரு நிமிடம் மௌனம் காத்தவன்,
“எனக்கு தேவைன்னா கண்டிப்பா வந்து கூப்பிடுவேன்” என்றவன் அவளை ஆழ்ந்துப் பார்த்து,
“இன்க்லூடிங் நீ ஹனிமூன்ல இருந்தா கூட வந்து கூப்பிடுவேன்” என்றான் ரொம்ப அசால்ட்டாக.
“அப்படி எல்லாம் வர முடியாது.. அதுவும் முன் பின்ன தெரியாத அறிமுகம் இல்லாத ஒரு மூன்றாவது மனுசன் வந்து கூப்பிட்டா போக கூடாதுன்னு சொல்லி இருக்காங்க” என்றாள் வெடுக்கென்று.
“யாருடி மூணாவது மனுசன்” நெற்றிக் கண்ணை திறந்து விட்டான்.
“நீங்க தான்.. அந்த மூன்றாவது மனுசன்..” என்றவள், “மரியாதையா இனி என்னை பார்க்க வராதீங்க.. இனி உங்களுக்கும் உங்க மகனுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இதோட நீங்களாச்சு உங்க மகனாச்சு. உங்களுக்கு இடையில என்னை இழுக்காதீங்க சொல்லிட்டேன்” என்றாள் கடுமையாக.
அவளை கடுப்புடன் பார்த்தவன்,
“இப்ப நீ வரல இங்க நடக்குறதே வேறையா இருக்கும்டி” பல்லைக் கடித்தான்.
“என்ன வேணா நடந்துட்டு போகட்டும். எனக்கு அதை பத்தி எந்த கவலையும் இல்லை.. நேத்திக்கு என்னவோ என்கிட்ட இருந்த உங்க மகனை அவ்வளவு வெடுக்குன்னு புடுங்கி கூட்டிட்டு போனீங்கள்ல அப்படியே போய் இருக்க வேண்டியது தானே. எதுக்காக இப்ப மறுபடியும் என்கிட்டே வந்து நிக்கிறீங்க” என்றவளுக்கு நேற்றைக்கு அவன் வெடுக்கென்று மகனை கூட்டி சென்றதில் அத்தனை வேதனை குவிந்து இருந்தது.
“இப்ப என்னடி நேத்திக்கு அவனை கூட்டிட்டு வந்தது தப்புன்னு சொல்றியா?”
“இல்லையா பின்ன” என்றாள்.
“ஏய் அறிவு கெட்டவளே அவன் உன்னை அம்மான்னு சொல்றான்”
Aiyooo intha kanguvanods mudiyala pa
Super ma. Waiting eagerly for next epi
Wow........ Writer ji...,,... Veralloda decision ok. but she is not going to resist for samar or kanguvan.




