Notifications
Clear all

அத்தியாயம் 41

 
Admin
(@ramya-devi)
Member Admin

“ஏய் அறிவு கெட்டவளே அவன் உன்னை அம்மான்னு சொல்றான்டி”

“சோ வாட்?” என்றவளை அழுத்தமாக பார்த்து முறைத்தவன்,

“உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.. மைன்ட் இட்” என்றான் கங்குவன்.

“புரியல” என்றாள்.

“உனக்கு இனிமேல் தான் கல்யாணமே ஆக போகுது. அதுக்குள்ள அவன் உன்னை அம்மான்னு சொன்னா, நாளைக்கு வரப்போற மாப்பிள்ளையும் சரி அவனோட வீட்டுலையும் சரி எப்படி ஏத்துக்குவாங்க.. மடச்சி மாதிரி இருக்க.. கொஞ்சம் யோசி” என்றவனை தலையில் அடிக்காத குறையாகப் பார்த்தவள்,

“கல்யாணம் ஆகிட்டா அவன் என்னை அம்மாவா ஏத்துக்க நீங்க அனுமதிப்பீங்களா?” கேட்டாள்.

“உன் வீட்டுக்காரர் ஓகேன்னா எனக்கு ஓகே தான்” என்றவனை கடுப்புடன் பார்த்தவள்,

“சரியான மாங்கா மண்டையன்” தனக்குள் சொல்லிக் கொண்டவள்,

“பரவாயில்ல.. எனக்கு வரப்போற புருசன் யாரையும் மகனா ஏத்துக்குற அளவுக்கு பிராட் மைன்டட் கிடையாது. சோ இப்பவே உங்க மகன் கிட்ட இருந்து தள்ளி இருக்குறது தான் என்னோட எதிர் காலத்துக்கு நல்லது. அதனால இனி உங்க மகனை நீங்களே மேனேஜ் பண்ணிக்கோங்க. என்னை இழுக்காதீங்க.. என்னோட எதிர் காலத்துக்கு நல்லது இல்ல” முகத்தில் அடிப்பது போல சொன்னவள் அறையில் சிதறி இருந்த பேப்பர்களை எல்லாம் எடுக்க ஆரம்பித்தாள்.

அவன் அவளை சிவந்துப் போன கண்களுடன் சில கணங்கள் பார்த்தவன், விருட்டென்று எழுந்து வெளியே போய் விட்டான்.

அதுவரை தாள்களை எடுப்பது போல தலை குனிந்து இருந்தவள் அவன் வெளியே போன பிறகு தான் நிமிர்ந்தாள். அவளின் விழிகளில் ஈரத்தின் சுவடுகள் அதிகம் இருந்தது.

கையில் இருந்த பேப்பரை அப்படியே போட்டு விட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தவளுக்கு இன்னும் கண்ணீர் பெருக்கெடுக்க சிறிது நேரம் தன்னை மறந்து அழுது கரைய, வெளியே அவளின் பியே அழைக்கும் சத்தம் கேட்க, முகத்தை கழுவிக் கொண்டு வெளியே வந்தாள்.

அதன் பிறகு வேலை அவளை இழுத்துக் கொள்ள, முழு மூச்சுடன் வேலை பார்த்தாள். ஆனால் அவளின் மனம் என்னவோ கங்குவனிடமும் அவனின் மகனிடமும் மட்டுமே சுற்றிக் கொண்டு இருந்தது.

வேகமாக தன் அண்ணனுக்கு போன் போட்டு,

“சின்னவனை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயாச்சான்னு கேட்டு சொல்லுண்ணா” என்றாள்.

“ஏன் பாப்பா என்ன ஆச்சு?” ஆவான் விசாரிக்க,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. இன்னைக்கு சின்னவனுக்கு சிட்டிங். அது தான் கேட்டேன்” என்றாள்.

“சரி இரு விசாரிச்சுட்டு சொல்றேன்” என்றவன் கங்குவனுக்கு போனை போட்டான்.

“சொல்லுடா” என்றான் கங்குவன்.

“சின்னவனுக்கு இன்னைக்கு சிட்டிங்காமே கூட்டிட்டு போயிட்டியாடா”

“யாரு உன் தொங்கச்சி சொன்னாளா?” கடுப்புடன் கேட்டான்.

“ஆமாண்டா.. இப்ப எங்க இருக்க? சாம் என்ன பண்றான்?” விசாரித்தான்.

“வீட்டுல தான் இருக்கேன். கிளம்ப மாட்டேன்னு ஒரே அடம்.. தோள்ள தூக்கி போட்டுட்டு கார்ல உட்கார வைக்கிறேன். உட்கார மாட்டேன்னு சீட்டை எல்லாம் பிராண்டி வைக்கிறான்டா.. அது மட்டுமா போட்டு இருக்குரற்றசை எல்லாம் கழட்டி போட்டுட்டு ரோதனை பண்றான்” என்றான் எரிச்சல் மிகுதியில்.

“ஏன் என்னவாம்?”

“அவ வேணுமாம்” என்றான்.

அந்த அவ என்பது யார் என்று புரிய “வர சொல்லவாடா” அமைதியாக கேட்டான் இளா.

“வர மாட்டேன்னு சொல்லிட்டாடா” என்றான் இவன் அதற்கு மேல் அடங்கிப் போன குரலில்.

“போன் பண்ணி பார்த்தியா?”

“நேர்லயே போய் கூப்பிட்டேன்” என்றான்.

“அடப்பாவி” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன்,

“சரி இரு நான் வரேன்” என்றவன் அடுத்த அரை மணி நேரத்தில் வந்து விட்டான்.

அவனிடமும் வர மாட்டேன் என்று ஒரே அழுகை. அழுதழுது வாந்தி எடுத்து ஜொள்ளு வடிந்து கண்ணு மூக்கு முக எல்லாம் சிவந்துப் போய் காய்ச்சலே வந்து விடும் அளவுக்கு சின்னவன் அலப்பறை பண்ண, இரண்டு ஆண் மகன்களுக்கும் என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.

இளா தான் வேரலுக்கு போன் போட்டான்.

“ரொம்ப அடம் பண்றான் பாப்பா”

“அவர் தானே நேத்திக்கு அத்தனை வலுகட்டாயமா தூக்கிட்டு போனாரு.. அவரையே ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போக சொல்லுண்ணா” என்றாள்.

போன் ஸ்பீக்கரில் இருக்க, அவளின் குரளை கேட்ட கங்குவன்,

“என்னடி ர்ர்ர்ரொம்ப தான் திமிர் காட்டிட்டு இருக்க.. என்னவோ வர மாட்டேன் வர மாட்டேன்னு சொல்லிட்டு இருக்க.. இப்ப என்ன உன்கிட்ட இருந்து அவனை கூட்டிட்டு வந்தது தப்புன்னு உன் காலுல விழணுமா? இல்ல நான் நேத்திக்கு பேசுனது தப்புன்னு உன் காலுல விழணுமா? சொல்லுடி எதுக்கு காலுல விழணும்னு சொல்லு.. விழுந்து தொலைக்கிறேன். அப்பவாச்சும் வருவியா? இல்ல இப்படியே திமிர் காட்டிட்டு இருக்கப் போறியா?” ஆத்திரமாக கத்தினான்.

அதிலே தெரிந்துப் போனது போன் ஸ்பீக்கரில் இருக்கிறது என்று.

“அண்ணா கண்டவங்க கிட்ட எல்லாம் என்னால பேச முடியாது.. நீ போனை சாம் கிட்ட குடு” என்றவள்,

“சாம் கண்ணா” அத்தனை ஸ்வீட்டாக சின்னவனை அழைத்தாள். அவனும் அங்கே தான் இருந்தான்.

“ம்மா” என்று அவன் விசும்பலுடன் அழைத்தான். அவனின் அழைப்பிலும் கண்ணீரிலும் கரைந்துப் போனவள்,

“அம்மா சொன்னா என் பிள்ளை கேட்கும் தானே” பெண்ணவளின் குரலில் ஒருவனுக்கு தீப்பிடிக்காத குறையாகிப் போனது.

“ம்ம்” என்று பிள்ளை முணக,

“குட் பாய் என்னோட சாம்” என்றவள்,

“இப்ப நல்ல பிள்ளையா கிளம்பி ஹாஸ்பிட்டல் வருவியாம். உன்னோட உன் மாமா வருவான். நான் இங்க உனக்காக ஹாஸ்பிட்டல்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன். வருவியா மாட்டியா?” என்று கேட்டாள்.

“நிஜமா அங்க இருக்கீங்களா?” பிள்ளை விசும்பலுடன் உறுதி படுத்திக் கொண்டான்.

“உன்கிட்ட என்னைக்காவது பொய் சொல்லி இருக்கேனாடா கண்ணா” பிள்ளையிடம் கெஞ்சலுடன் அவள் கேட்க,

“ம்ஹும்...” என்றான் அடுத்த நொடியே.

“நீ வா.. நான் இங்க தான் இருப்பேன்” என்றாள். அவனிடம் கொஞ்சம் மௌனம் நிலவியது. பின் மெல்ல தன் வாயை அசைத்து, “ம்மா” என்றான்.

அதில் இவளுக்கு நெஞ்சில் பாலூரியது.

“சொல்லுடா கண்ணா”

“ம்மா” என்றான் மீண்டும்.

“என்ன வேணும் என் கண்ணனுக்கு?” கொஞ்சினாள்.

“இன்னைக்கு எனக்கு கதை சொல்லி தூங்க வைக்கிறீங்களா?” பிள்ளை கெஞ்ச, உருகிப் போனாள் வேரல்.

“நீ கேட்டு நான் என்னைக்கு இல்லன்னு சொல்லி இருக்கேன். நிச்சியமா உன்னை கதை சொல்லி தூங்க வைக்கிறேன் போதுமா?”

“ம்ம்” என்றவனுக்கு இன்னும் அவளுடன் பேச ஆசையாக இருக்க,

“ம்மா” என்றான்.

“என்னடா தங்கம்”

“ம்மா” என்றான் மீண்டும்.

“சொல்லு தங்கம் நான் கேட்டுட்டு தான் இருக்கேன்” இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்த கங்குவன்,

“பாருடா இதுங்க ரெண்டையும்.. ரொம்ப தான் ஓவரா பண்ணிட்டு இருக்குங்க. முதல்ல அவன் கிட்ட இருந்து போனை வாங்கு..” குதித்தான் கங்குவன்.

Loading spinner

Quote
Topic starter Posted : November 11, 2026 9:25 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top