அதை பார்த்த அனைவருக்கும் ஆதியின் இந்த பொறுமையை கண்டு பெரும் வியப்பாய் இருந்தது. அவர்களுக்கு தெரிந்த ஆதி எப்பொழுதும் பரபரப்பாய் தான் இருப்பான். நிமிடம் கூட மயூவுக்காக காத்திருக்க மாட்டான். நேரம் தவறி விட்டது என்றால் கிளம்பி விடுவான்.
அதை பற்றி எந்த கவலையும் பட மாட்டான். அவனுக்கு நேரத்துக்கு அவனுடைய வேலை நடந்து ஆகணும். அப்படி நடக்க வில்லை என்றால் பொல்லாத கோவம் வரும். மயூவிடமும் கொஞ்சமும் தயங்காமல் தன் கோவத்தை காட்டுவான்.
ஆனால் இன்று அவளுக்காக காத்துக்கொண்டு இருக்கிறான்... அதுவும் பொறுமையாக... அவனிடம் காணும் இந்த மாற்றம் மெய் தானா...? இல்லை கண்கள் போய் சொல்லுகிறதா...? என்று தடுமாறி போனார்கள் அனைவரும்.
‘என்ன நடக்குது இங்க..’ என்று அனைவரும் மயூவை கண்களிலே மொய்த்து கேள்வி கேட்க...
“எனக்கும் தெரியல ப்பா...” என்றவள் விரைந்து உணவை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் ஆதியோடு...
சரியாய் அவனது காரில் ஏறும்போது ரஞ்சனியிடமிருந்து அவளுக்கு கால் வந்தது.
ஆதியின் அருகில் அதை எடுக்க முடியாமல் தடுமாறியவள், சைலண்டில் போட்டுவிட்டு ஆதியின் மிக முக்கிய அசைண்மென்ட்க்காக கிளம்பி சென்றாள்.
“என்ன என்னோட வரத்துல்ல விருப்பம் இல்லாத மாதிரி வர...” என்றபடி ஆதி பாட்டு போட்டுவிட்டான்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்ல ஆதி... என்ன சைன் அப்படின்னு கொஞ்சம் யோசனையா இருக்கு... கேட்டா நீங்க எதுவும் சொல்ல மாட்டிகிறீங்க...” என்றாள் தாங்களாக.
“நிஜமா வேற எதுவும் இல்லையா...?” கொக்கி போட்டான்.
“ப்ச்... எனக்கு உங்களை விட வேற எதுவும் முக்கியம் இல்லன்னு தெரியாதா...?”
“ம்ஹும்... அப்படி நினைக்கிறவ தான் என்னை மொத்தமா தூக்கி குடுக்க நாள் பார்த்துக்கிட்டு இருக்க... ரொம்ப அன்னியப்பட்டு நிக்கிற டி...” என்றான் எரிச்சலாய்..
“ஆதி...”
“ஆன்னா ஊன்னா இத மட்டும் சொல்லி வாயை அடைச்சிடு...” என்றவன்,
“எனக்கு கார் ஓட்ட மூடு இல்ல.. நீயே ஓட்டு” என்று காரை நிறுத்திவிட்டு, அவளை அலேக்காக தூக்கி தன் மடியில் வைத்து, ஒரு நிமிடம் அவளை இறுக்கி அனைத்து அவளது இடுப்பில் கிச்சு முச்சு மூட்டிவிட்டு கோலங்களையும் இட்டுவிட்டே அவன் தாவி பக்கத்து சீட்டில் அமர்ந்தான்.
அவனது செயல்களில் தடுமாறியவள் சற்றே நிலை சரிந்தாள். திரும்பி அவனை பார்க்க...
“என்ன பார்வை வேண்டி கிடக்கு... நேரமாகுது... சிக்கிரம் போ...” என்று விரட்டினான். அவனது அடவாடியில் மனம் சிவந்து போனது.
‘திருத்தவே முடியாது...’ முணகியபடி வண்டியை இலாவகமாக செலுத்தினாள் அவனது வழிகாட்டுதலின் படி...
அவன் சொன்ன இடத்தில் காரை நிறுத்திவிட்டு அவனை பார்க்க...
“ம்ம் கீழ இறங்கு...” என்றான் அதிகாரமாய்.
“ரொம்ப தான்..” மனதுக்குள் சடைத்தவள் அவனுடன் இணைந்து நடந்தாள் உயர் தரம் வாய்ந்த இந்தியாவில் மிக முக்கியம் வாய்ந்த ஹோட்டலின் உள்ளே...
போனவுடன் பத்திரிகை நிருபர்களின் கேமரா ப்ளாஷில் இருவரும் நனைந்தார்கள். சட்டென்று எறிந்த விளக்குகளில் ஒரு நொடி மயூவின் நடை தேங்கியது... ஆனாலும் இவர்களது வாழ்வில் இது பழக்கப்பட்டது என்பதால் நொடியில் இன்னும் முகத்தை மலர விட்டாள்.
அவளது அந்த நொடி நேர சுதாரிப்பு கூட ஆதியை வெகுவாக ஈர்த்தது.
“எதுக்குன்னு ஒரு ஹிண்ட் கூட குடுக்காம இப்படி கூட்டிட்டு வந்துட்டீங்களே ஆதி...” முணக..
“யூ டோன்ட் ஒரி... நான் எதுக்கு இருக்கேன்...” என்றவன் அவளது கரங்களை அழுத்தி பற்றிக்கொண்டான்.
ஆதியும் சிரித்தே முகத்துடன் பத்திரிகை நிருபர்களை தலையசைத்து வரவேற்றவன்,
“இந்த மீட் எதுக்குன்னு உங்களுக்கு ஒரு ஹின்ட் வந்து இருக்குமே...” என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினான்.
“ஆமா சார்... உங்க பியே சொன்னாரு...” என்றவர்கள் தொடர்ந்து
“திடிர்னு ஏன் உங்க ரெண்டு பேரோட பங்குகளையும் ஒண்ணா இணைக்கனும்னு முடிவு எடுத்தீங்க...? இதுல எதுவும் உள்நோக்கம் இருக்கா...? உங்க இருவருக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்காங்களா...? அதனால தான் இந்த முடிவுக்கு வந்து இருக்கீங்களா...?” என்று சரமாரியாக கேள்விகள் தொடுத்தார்கள்.
அவர்கள் கேட்ட கேள்வியில் திகைத்து போய் ஆதியை பார்க்க தோன்றியது... சிறிதே சினமும் எழுந்தது ஆதியின் மீது... ஆனால் அவர்களின் முன்பு எதையும் காட்ட முடியாதே...
இல்லையென்றால் இன்னும் பல கேள்விகள் எழும். அதோடு ஆதியை அந்த இடத்தில் விட்டுகொடுத்த மாதிரியும் போய்விடும். அவளால் அவனை விட்டு கொடுக்க முடியுமா என்ன...? அதனால் அமைதியாக நின்றாள்.
“மேடம் இதை பத்தி நீங்க என்ன நினைகிறீங்க...? இதுல உங்களுக்கு பரிபூரண சம்மதமா...? ஆதி சார் உங்களை இதுக்கு வற்புருத்தலையா...? ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு தானா...?” என்று மயூவிடமும் கேள்விகள் எழுப்பினார்கள்...
அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அழகு புன்னகையுடன் மிக தெளிவாக பதிலளிக்க தொடங்கினாள்.
“இது எங்க ரெண்டு பேரோட முழு மனதோட, சம்மதத்தோட சேர்ந்து எடுத்த முடிவு... இதுல சந்தேக பட என்ன இருக்கு... ஆதி பியே உங்க கிட்ட என்ன சொன்னாரோ அது அத்தனையும் நிஜம். மேலும் ஏதாவது உங்களுக்கு தெரியணும்னா ஆதி சாரையே கேளுங்க... என்னை விட அவர் மிக தெளிவா பதில் கொடுப்பாங்க” என்று சொல்லிவிட்டு ஆதியை முன்னிலை படுத்த, மயூவை மனதில் மேச்சிக்கொண்டவன்...
“உங்க ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் சொல்றேன்...” என்றவன்,
“ஏன் திடிர்னு இந்த முடிவு எடுத்தேன்னு கேட்டீங்க இல்லையா...? இது இப்போ எடுத்த முடிவு இல்ல.. எங்க ஆரம்ப காலத்துல நாங்க நட்பா இருக்குற வயசுலேயே ரெண்டு பேரும் ஒண்ணா நிர்வாகம் செய்யனும்னு முடிவு எடுத்தோம். அதை தான் இப்போ செயல் படுத்திக்கிட்டு இருக்கோம்... அதற்க்கான முதல் அடி தான் இது.” என்றான்.
“அது சரி சார்... அப்போ இவங்க தான் உங்க முதலாளியா...? இதுக்கு முன்னாடி நட்பா இருந்த காலம்னு சொன்னீங்க... அப்போ ப்ரசன்ட்ல நீங்க லவ்வர்சா...? எப்போ சார் கல்யாணம்...? தேதி டிசைட் பண்ணீட்டீங்களா...?”
“உங்க ரெண்டு பேரோட தோற்றமும் ஒருவருக்கு ஒருவராய் அமைந்தது போல இருக்கு... மேட் பார் ஈச் அதர்... அப்படி இருக்கு. அது உங்க உடைகளில் கூட தெரியுது...” ஆர்வமாய் ஒரு நிருபர் சொல்ல
ஆதியின் வதனத்தில் மெல்லிய புன்னகை ஒன்று தவழ்ந்தது...




