“அது உன்னோட பிரச்சனை.. ஓரளவு தான் உனக்கு இறங்க முடியும். ஒன்னு பண்ணு மகனை என்கிட்டே குடுத்துட்டு நீ இங்க இருந்து நிதானமா உன் தங்கச்சிக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுட்டு அப்புறமா சென்னை வந்து சேரு” என்றான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
அதை கேட்டு விக்கித்துப் போனவள்,
“இல்ல... இன்னைக்கே கிளம்பலாம் சார்” என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தாள்.
இன்று காலை வேலைக்கு கிளம்பாமல் இருந்த நேத்ராவை போன் செய்து வேலைக்கு வர வைத்தான் விஜயன்.
“எப்படிக்கா?” என்று இவள் ஆச்சரியப் பட, “தீரன் சாருக்கு கோவம் என் மேல தான் நேத்ரா.. அதனால தான் உன்னை வேலைக்கு வர சொல்றாரு. நீ மனசுல எதையும் நினைச்சுக்காம கிளம்பி வேலைக்கு போ” என்றவள் அதன் பிறகு வீட்டில் கொஞ்சம் வேலையை முடித்து விட்டு பிள்ளையை தூக்கிக் கொண்டு தீரனின் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தாள்.
வந்த இடத்தில் இவன் இப்படி சொல்ல வேறு வழியில்லாது விஜயனை பார்த்து நல்ல லேடிஸ் ஹாஸ்ட்டலாக பார்த்து தங்கையை அன்றைக்கே அங்கே தங்க வைத்து விட்டு சென்னைக்கு கிளம்பினாள் தீரனோடும் வெற்றியோடும்.
தீரன் வீட்டுக்கு போகும் பொழுதே வெற்றியிடம் கூறி விட்டான்.
“பிள்ளை கிடைச்ச விசயம் இப்போதைக்கு அம்மாவுக்கு தெரியவேண்டாம். எதுவும் சொல்லாத. நேரம் வரும் பொழுது சொல்லிக்கலாம்” என்றான்.
“ஏன் அண்ணா? சொன்னா அவங்க ஹெப்பியாவங்களே” என்றவனை பெருமூச்சு விட்டு பார்த்தவன்,
“என் பிள்ளைன்னு தெரிஞ்சா, அடுத்த நிமிடமே அதிரல் கிட்ட இருந்து பிள்ளையை பிடுங்கிடுவாங்கடா.. அவ பாவம். பிள்ளையை இழந்து அவளால வாழவே முடியாது” என்றான்.
“அப்போ அதிரலை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலையாண்ணா”
“ம்ஹும்.. ஆபிஸ் பக்கத்துல இருக்குற அப்பார்ட்மென்ட். நான் எப்பாவாவது போய் தங்குவேன் இல்லையா அந்த அப்பார்ட்மென்ட்லயே தங்க வைக்கிறேன். பிறகு பார்த்துக்கலாம்” என்றான்.
“சரியா வருமாண்ணா?”
“வேற வழியில்ல.. இந்த பொண்ணை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியாது. அம்மா ஸ்டேட்ஸ் பார்க்குறவங்க. இவ அவங்கக்கிட்ட ரொம்ப கஸ்ட்டப்பட்டுடுவா.. ஏற்கனவே ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்டா” என்றான்.
“அவங்களுக்காக நீங்க ரொம்ப பார்க்கிற மாதிரி இருக்குண்ணா” என்றான் வெற்றி.
“பார்த்து தானே ஆகணும்” என்று நெடுமூச்சு விட்டவன்,
“அந்த பொண்ணு நினைச்சு இருந்தா என் பிள்ளையை கருவிலே கலைச்சு இருக்க முடியும். அப்படி இல்லையா அந்த பிள்ளையை பெற்று குப்பை தொட்டியிலோ இல்ல எதாவது ஒரு அனாத ஆசிரமத்திலோ போட்டுட்டு போய் இருக்கலாம். ஆனா இது எதுவுமே செய்யாம அத்தனை வறுமையிலும் அந்த பொண்ணு என் மகனை பெத்து வளர்த்து இருக்கான்னா கண்டிப்பா அவ தாய்மையை நான் மதிச்சே ஆகணும். அந்த தாய்மையை நான் கொண்டாடனும்” என்றான் ஆழமான புரிதலோடு.
“கிரேட் ண்ணா நீங்க” என்று அண்ணனை கட்டிக் கொண்டான் வெற்றி.
“என்னை விட அந்த பொண்ணு ரொம்ப கிரேட்டுடா” என்றான்.
“இருந்தாலும் எனக்கும் என் அண்ணன் தான் கிரேட்” என்றான். அதில் சிரித்துக் கொண்டான் தீத்திரள் தீரன்.
அதன் படி அதிரலை அவனின் அப்பார்மென்டிலே தங்க வைத்தான்.
“இது என்னோட ரெஸ்ட் எடுக்குற வீடு.. கொஞ்ச நாளைக்கு இங்க தங்கு. பிறகு தனி வீடு பார்த்து உன்னை அங்க செட்டில் பண்ணிடுறேன்” என்றான் தீரன்.
வீட்டை சுத்தி பார்த்த அதிரல் மூன்று அரை இருக்க அதில் ஒன்றை எடுத்துக் கொண்டு,
“இதுவே போதும் சார். அலுவலகமும் பக்கமா இருக்கு.. சட்டுன்னு வரப்போக ஈசியா இருக்கும்” என்றாள்.
“ஓகே” என்று தோளை குலுக்கிக் கொண்டவன் அவன் வந்தால் எப்பொழுதும் தங்கும் அறைக்குள் நுழைந்துக் கொண்டான் பிள்ளையோடு.
அவனோடு போகும் பிள்ளையை ஏக்கத்துடன் பார்த்த அதிரலுக்கு கண்கள் கலங்கியது.
“இனி இதையும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும்” எண்ணிக் கொண்டவள் தங்கைக்கு அழைத்து தாங்கள் வந்து விட்டதாக சொல்லி முதல் முதல் விமானத்தில் பயணம் பண்ணியதை பற்றி சொல்லி, “ரொம்ப பயந்து போயிட்டேன்டி” என்று அந்த நிகழ்வுகளை பகிர்ந்துக் கொண்டாள்.
“கவனமா இருடா.. வாரத்தில் ரெண்டு நாள் விடுமுறைக்கு நான் அங்க கிளம்பி வந்திடுறேன்..” என்று தங்கைக்கு ஆறுதல் சொன்னவள்
குளித்து வேறு புடவை கட்டிக் கொண்டு வெளியே வந்தாள். மேசையில் உணவு தயாராக இருந்தது. ஆனால் அது யாருக்கு என்று தெரியாமல் எடுத்து சாப்பிட கூச்சம் கொண்டு அமைதியாக கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்துக் கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து தீரனின் அறைக்கதவு திறக்கப்பட்டது. நிமிர்ந்து பார்த்தவளுக்கு சங்கடமாய் போய் விட்டது.
தீத்திரள் தீரன் வெற்று மார்புடன் குட்டி பாக்சருடன் பிள்ளையை தூக்கிக்கொண்டு வந்தான். அவனையும் குளிக்க வைத்து இருப்பான் போல.. அவனின் இடுப்பிலும் சின்ன ஜட்டி மட்டுமே. அவனையும் வெற்று உடம்பாக தூக்கி வந்து இருந்தான்.
சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்துக் கொண்டவள்,
“தம்பிக்கு சட்டை மாத்திட்டு குடுக்குறேன் குடுங்க” என்று மகனுக்காக கையை நீட்டினாள்.
“ஊட்டில தான் சட்டை எல்லாம் போடனும். இங்க எதுவும் தேவையில்ல விடு. இப்படியே இருக்கட்டும்” என்று சொல்லி விட்டு அவனை மேசையில் அமரவைத்து உணவை பிரித்தான்.
“சாப்பிட வான்னு கூப்பிட மாட்டேன். உனக்கு பசிச்சா நீ தான் உன்னை பார்த்துக்கணும்” ஸ்ட்ரிக்ட்டாக சொல்ல, தலையை ஆட்டிக் கொண்டாள்.
“இன்னைக்கு ஒரு நாள் எதுவும் செய்ய வேண்டாம்.. நாளையில இருந்து சமைச்சுக்க.. வீட்டுல எல்லா திங்க்சும் இருக்கு. பசும் பால் கொண்டு வந்து குடுக்க சொல்றேன். யூஸ் பண்ணிக்க..” என்றான்.
எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டிக் கொண்டாள். மகனுக்கு அவனே ஊட்டி விட,
“பிக் மேன்” என்று அவனின் முகத்தோடு முகம் வைத்து இளைந்தான் பிள்ளை.
“சொல்லுங்க ஸ்மால் மேன்” என்று இவனும் அவனை கொஞ்சிக் கொண்டே ஊட்டி விட்டான். எப்படி பிள்ளை சமத்தாக அவனுடன் ஒட்டிக் கொண்டதோ தெரியவில்லை. எதற்கும் தாயை நாடவில்லை. நாட அவனின் தகப்பன் விட வில்லையோ என்னவோ..
தூக்கம் வர கண்களை கசக்கியவன் “ம்மா” என்று தாயின் முந்தானையை பற்றிக் கொண்டான்.
“ஸ்மால் மேனுக்கு தூக்கம் வருதா? சரி தூங்குங்க.. நான் ஆபிஸ் போயிட்டு வரேன்” என்று பிள்ளையிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
அதிரலை ஒரு பார்வை கூட அவன் பார்க்கவில்லை. அவளும் அதை எல்லாம் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. அவன் போன பிறகு கதவை தாழிட்டுக் கொண்டவள் பிள்ளையோடு படுத்து நன்றாக உறங்கிப் போனாள்.




