Notifications
Clear all

அத்தியாயம் 37

 
Admin
(@ramya-devi)
Member Admin

 

பற்களை கூட துலக்காமல் வேரலுக்கு போன் போட்டான். அந்த பக்கம் அடித்த போனை எடுக்காமல் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் நறுவேரல்.

“என்னடா?” என்று அவளின் அருகில் வந்து அமர்ந்தார் அவளின் பாட்டி.

“ஒன்னும் இல்ல ஆச்சி” என்றவள்,

“தூக்கம் வருது கொஞ்ச நேரம் தூங்கட்டுமா?” என்று கேட்டவள் அவரின் மடியிலே முகம் புதைத்து தூங்க ஆரம்பித்தாள்.

அழுகை எல்லாம் வரவில்லை. நேற்றைக்கே அழுது தீர்த்ததாலோ என்னவோ இன்றைக்கு மனம் நிர்மலமாக இருந்தது.

ஆழ்ந்து உறங்கினாள். மாளவிகா தன் மாமியாரிடம் என்ன ஏது என்று விசாரிக்க,

“எனக்கும் ஒன்னும் தெரியல மாளவிகா. ரெண்டு நாள் இருந்துட்டு வரேன்னு தான் கிளம்பி போனா.. ஆனா என்ன ஆச்சுன்னு தெரியல. திரும்பு வந்துட்டா. இளாவுக்கு போன் பண்ணி கேட்டா அவன்னுக்கும் ஒன்னும் தெரியலன்னு சொல்றான்” என்றார் கவலையாக.

“அதெல்லாம் ஒன்னும் இருக்காது அத்தை. நீங்க தேவை இல்லாம கவலை படாதீங்க.. நான் பார்த்துக்குறேன். நீங்க இவளை மட்டும் பார்த்துக்கோங்க” என்றவர் வேலைக்கு போகும் முன்பு தன் மகனுக்கு போன் போட்டு பேசினார்.

இளந்திரையன் வாயில் இருந்து எதையும் தெரிந்துக் கொள்ள முடியாமல் போக,

“திரையா” என்றார் அழுத்தமாக.

“ம்மா அவ என் சிஸ்டர் எனக்கும் அவ மேல முழு அக்கறையும் இருக்கு.. உரிமையும் இருக்கு.. சோ நான் பார்த்துக்குறேன்” என்றவன்,

“இன்னைக்கு நைட் கிளம்பி எல்லாரும் நம்ம பன்னை வீட்டுக்கு வாங்க” என்றான்.

“எதுக்கு தம்பி”

“வாங்க ம்மா.. நாம எல்லோரும் சேர்ந்து ஒண்ணா இருந்து ரொம்ப நாள் ஆனா மாதிரி இருக்கு.. ஜஸ்ட் என்ஜாய் மட்டும் பண்ணிட்டு நைட் கிளம்பிடலாம்” என்றான்.

“சரிப்பா” என்றவர், பெருமூச்சுடன் தன் வேலையை பார்க்க கிளம்பி சென்றார்.

அன்று மாலை வேரலை கிளம்பி தங்களுடன் வர சொல்ல,

“இன்னைக்கு காலையில தானேம்மா அங்க இருந்து வந்தேன்.. மறுபடியும் எதுக்கு அங்கேயே” என்றவளை கிளப்பி கையோடு அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

அங்கே வந்த பிறகும் பெரிதாக அவள் ஆக்டிவாக இல்லாமல் இருந்தாள். பிள்ளையை மட்டும் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அமைதியாக எல்லோரும் கலந்து உறவாடுவதை உரையாடுவதை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவளின் அண்ணனையும் நிமிர்ந்துப் பார்க்கவில்லை. காதலனையும் நிமிர்ந்துப் பார்க்கவில்லை. இருவரையுமே தவிர்த்து விட்டாள்.

அதை உணராத கங்குவனோ தன்னை மட்டும் அவள் தவிர்க்கிறாள் என்று புரிந்துக் கொண்டு அவள் மீது கோவத்தை வளர்த்துக் கொண்டான்.

அதுவும் காலையில் இருந்து அவளுக்கு இதோடு இருபது முறைக்கு மேல் போன் செய்து விட்டான். ஆனால் ஒரு முறை கூட அவள் காலை அட்டென் செய்யவே இல்லை. அதில் உள்ளுக்குள் எரிமலை பொங்க தொடங்கி இருந்தது.

அதுவும் அவளை கேட்டு கேட்டு அழுது அழுது களைத்துப் போய் விட்டான் சமரன்.

அவன் அழுவதை பெரியவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இளந்திரையன் தான் சின்னவனை தூக்கிக் கொண்டு வேடிக்கை காண்பிப்பது, குதிரையில் சவாரி செய்ய வைத்து மகிழ வைப்பது என எல்லாவற்றையும் செய்துக் கொண்டு இருந்தான்.

கூடவே நீச்சல் பழகி தருகிறேன் என்று சொல்லி அவனை குளத்தில் தள்ளி விட்டு பயம் காட்டி, பின் அவனோடு இவனும் குளத்துக்குள் விழுந்து தண்ணீரில் ஆட்டம் போட்டு என சின்னவனை கொஞ்சம் என்கேஜுடாகவே வைத்துக் கொண்டான்.

இருந்த பொழுதும் சின்னவனின் தேடல் எல்லாம் வேரலிடம் இருந்தது.

அப்பன் மவன் ரெண்டு பேருக்கும் என் தங்கச்சி வேணும். ஆனா அதை முறை படி உன் அப்பன் கேட்க மாட்டான். என்று பல்லைக் கடித்த திரையன் அன்று முழுவதும் கங்குவனை நோட்டம் விட்டுக் கொண்டே இருந்தான்.

ஏதாவது ஒரு கட்டத்தில் தன் தங்கையை பற்றி தன்னிடம் கேட்பான் என்று அவன் எதிர் பார்த்துக் கொண்டு இருக்க, ம்ஹும் இரும்பு மலை அசையவே இல்லையே..

“இவ்வளவு அழுத்தம் ஆகாதுடா உனக்கு” என்று சொல்லிக் கொண்ட திரையனுக்கு தன் தங்கையை எண்ணி மனதுக்குள் இறக்கம் சூழ்ந்தது.

“உன் பாடு ரொம்ப கஷ்ட்டம் பாப்பா.. இந்த கல்லை கரைச்சு நீ எப்படி தான் குடும்பம் நடத்த போறியோ..” எண்ணிக் கொண்டவனுக்கு பிள்ளையின் ஏக்கம் புரிய அம்மாவுக்கு போன் போட்டு அனைவரையும் வர சொல்லி சொல்லி விட்டான்.

அனைவரும் வந்த பிறகு சமரனின் உற்சாகம் மீண்டும் வந்து விட்டது. அதுவும் வேரலை கண்டவனுக்கு சொல்லவும் வேண்டுமா? தாயை பிரிந்த கன்றாக அவளிடம் அவன் முட்டிக் கொண்டு இருந்தான்.

அவனை இரண்டு கையாளும் பற்றிக் கொண்டவளுக்கு நெஞ்சில் நீங்காத வேதனை சூழ்ந்தது. பிள்ளையின் ஆராவராம் பெரியவர்களை யோசிக்க வைத்தது.

அதுவும் வேரலின் அமைதியும், பிள்ளையிடம் மட்டுமே அவள் பேசும் பாங்கும் என்னவோ எதையோ உணர்த்தியது போல இருந்தது.

கங்குவன் அவர்கள் இருவரிடமும் கொஞ்சம் கூட பார்வையை திருப்பவில்லை. அவனின் பெரியவர்களோடு சரி. தப்பி தவறி கூட வேரலை அவன் நிமிர்ந்துப் பார்க்கவில்லை.

அவனின் கண்ணியத்தை பெரியவர்களும் உணர்ந்துக் கொண்டார்கள். ஆனால் என்னவோ தங்களின் பெண்ணிடத்தில் குறைவாக உள்ளது என்று புரிய, பெண்ணவளை சற்றே ஆராய ஆரம்பித்தார்கள். அவள் உணராதவாறு பெரியவர்கள் ஆராய பெரிதாக அவளிடம் எந்த மாற்றமும் இல்லை.

யாரையும் நிமிர்ந்துப் பார்க்கவில்லை. பிள்ளையோடு அவள் ஐக்கியமாகி விட்டாள்.

என்னடா இது என்று அவர்கள் அசந்த நேரம், வேரலின் பார்வை ஒரே ஒரு கணம் கங்குவனை தொட்டு மீண்டது. அந்த பார்வையில் குவிந்து இருந்த உணர்வுகளை இன்னது என்று புரிந்துக் கொண்ட பெரியவர்களுக்கு தொண்டையில் மீன் முள் சிக்கியது போல துடித்துப் போய் விட்டார்கள்.

அதற்கு நேர் மாறாக இருந்தது கங்குவனின் கண்டு கொள்ளா(ல்லா)த பார்வை.

சட்டென்று மாளவிகா தன் கணவனின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டார். என்னவோ கண்கள் எல்லாம் கலங்கிக் கொண்டு வருவது போல இருந்தது.

அவருக்கே அப்படி என்றால் தகப்பனாய் அவருக்கு எப்படி இருக்கும்.

மெதுவாக இளந்திரையனை பார்த்தார் முரளி. அவன் கண்ணை மூடி அமைதியாக இருக்குமாறு சொல்ல, அவரால் முடியவில்லை.

“திரையா வா கீழ போய் ட்ரிங்க்ஸ் எடுத்துட்டு வரலாம்” என்று அவனை கீழே அழைத்தார்.

“அவன் இருக்கட்டும் சார்.. வாங்க நான் வரேன்” என்று எழுந்துக் கொண்டான் கங்குவன்.

அவனை தடுக்க முடியாமல் அவனுடன் இணைந்து கீழே சென்றார் முரளி. மற்ற எல்லோருமே நிலா சோறு உண்ண மொட்டை மாடியில் அமர்ந்து இருந்தார்கள்.

மாளவிகா தன் மகனை பார்த்தார். அவன் வேரலை கண் கட்டினான் வேண்டாம் என்று.

அவரின் விழிகளில் நீர் மின்ன, பெருமூச்சு விட்டவன்,

“வாங்க நாம கிளாஸ் எடுத்துட்டு வரலாம்” என்று அம்மாவை அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.

நால்வரும் கீழே வர, கங்குவன் எதை பற்றியும் யோசிக்காமல் அவன் பாட்டுக்க முரளியிடம் பேசிக் கொண்டு வர, அவர் தான் மிகவும் தடுமாறிப் போனார்.

“என்ன ஆச்சு சார்.. எப்பவும் என்னை விட நீங்க தான் நல்லா பேசுவீங்க.. இன்னைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு?” யோசனையாக கேட்டவனை கண்டு இயலாமையில் சிரித்தவருக்கு அவனிடம் பேசவே அத்தனை தயக்கமாக இருந்தது.

ஏனெனில் மகளின் பார்வை தான் அவன் மீது இருந்ததே தவிர, அவனின் பார்வை மகள் மீது படியவே இல்லையே..

அதனால் அவனிடம் என்னவென்று கேட்பது. அதோடு திரையன் வேற கண்ணை காட்டி இருக்க தனக்குள் புழுங்கிப் போய் விட்டார் முரளி.

Loading spinner

Quote
Topic starter Posted : October 26, 2026 1:06 pm
(@nimala19)
Eminent Member

Interesting 

Loading spinner

ReplyQuote
Posted : October 26, 2026 5:20 pm
(@niharaj)
Active Member

Welcome back💐💐💐💐 kanguvan  and veral👍👍👍👍👍👍👍 super 👌👌👌👌👌👌 

Loading spinner

ReplyQuote
Posted : October 26, 2026 7:21 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top