Notifications
Clear all

அத்தியாயம் 37

 
Admin
(@ramya-devi)
Member Admin

தீரனின் அறைக்குள் நுழைந்த அதிரலுக்கு அங்கே அவளின் மகன் தீரனின் கையில் இருந்தபடி விளையாடிக் கொண்டு இருந்தது கண்ணில் பட வெடித்துக் கொண்டு விம்மல் தெரித்தது. சட்டென்று முந்தானையை வாயில் வைத்து அடக்கிக் கொண்டு மகனை பார்த்தாள்.

அவள் படும் பாட்டை பார்த்த வெற்றிக்கே நெஞ்சு கலங்கிப் போனது. உயிரை குடுத்து பிள்ளையை பெற்று எடுத்து, கண்ணுக்கு கண்ணாக மொத்த உயிரையும் பாசமாக கொட்டி வளர்த்து யாரோ ஒருவருக்கு பிள்ளையை தூக்கி குடுக்கும் நிலை ஏற்பட்டால் எந்த தாய் தான் கதறி துடிக்க மாட்டாள். யாருக்கு தான் சிந்தை தொலையாது.

அண்ணனிடம் பேச வர, அவனோ காது குடுத்து எதையும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. பிள்ளையை அவன் கையில் வாங்கியதில் இருந்தது அவனுடனே பேசிக் கொண்டு இருந்தான். மரம் போல ஒரு ஆள் அந்த அறையில் இருக்கிறான் என்று கூட பார்க்கவில்லை. தீரனின் மொத்த கவனமும் பிள்ளையிடம் மட்டுமே இருந்தது.

நேற்றைக்கு காய்ச்சலில் அவன் பட்ட அவஸ்த்தை தீரனுக்கு கண் முன் வர அவனை நெருங்க முடியாமல் செய்த அதிரலின் செயலில் ஏகத்துக்கும் மூர்கமாகி இருந்தான். அதன் வெளிப்பாடே அவளை துரத்தி அடித்தது.

நேற்றைக்கு அவன் பட்ட அவமானத்துக்கு பழி தீர்த்துக் கொண்டான் அவ்வளவே.. தன் நிலை நேற்றைக்கு எப்படி இருந்து இருக்கும் என்று காட்டினான். ஆனால் அது எல்லாம் வெற்றிக்கு தெரியாதே..

அதிரல் வந்த நொடியில் இருந்து பிள்ளையை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளின் விழிகளில் வேறு எதுவுமே படவில்லை. அவன் ஒருவனே அவளின் மொத்த உலகமாய் மாறிப் போய் இருந்தான்.

“ம்கும்..” என்று தீரன் தொண்டையை செருமி அவளின் கவனத்தை திசை திருப்பினான். ஆனால் அதிரலின் கவனம் கொஞ்சம் கூட கலையவில்லை. பிள்ளையையே விழி எடுக்காது பார்த்தாள்.

என்னவோ ஆயிரம் ஆண்டு கழித்து இப்பொழுது தான் பிள்ளையை முதல் முறையாக பார்ப்பது போல அவள் பார்த்து வைத்தாள்.

தான் அழைத்தும் அவள் கண்டுக் கொள்ளாமல் இருப்பதை பார்த்து கோவம் வர, கடுப்பானவன் நேத்ரவை ஒரு முறை முறைத்தான்.

அதில் அக்காவை உலுப்பி விட்டு தீரனை கை காட்டினாள் அவள்.

அதிரல் கண்ணீருடன் அவனை பார்த்தாள். அவளின் கண்ணீர் அவனை உசுப்பியதே என்னவோ,

“சென்னைக்கு வர்றியா?” என்று கேட்டான் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அவள் வேகமாய் தலையை ஆட்டினாள்.

“கு...ழ...ந்தை” என்று திக்கி திணறி அவனை பார்த்தாள்.

“உன் குழந்தை உன் கிட்ட தான் இருக்கும். ஜஸ்ட் என்னை என் பிள்ளையை பார்க்க பேச அலவ் பண்ணு” என்றான் அதை கேட்ட அதிரலுக்கு மயக்கம் வரதா குறை தான்.

“சார் நீங்க...” என்று அவள் நம்பாமல் அவனை பார்த்தாள்.

“இப்போ உன்னை துரத்தி விட்டது நேற்றைக்கு என்னை ஹாஸ்பிட்டல்ல இருந்து நீ துரத்தி விட்டல்ல அதுக்கு பழி வாங்கிக்கிட்டேன் தட்ஸால். பட் எனக்கு உன்கிட்ட இருந்து உன் பிள்ளையை பிரிக்கிற எண்ணம் கொஞ்சமும் இல்லை” என்றான்.

நெஞ்சம் அந்த சொற்களில் நெகிழ மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று தெரியாமல் பொத்தென்று அவனின் காலிலே விழுந்து விட்டாள் அதிரல். விழிகளில் நன்றி உணர்ச்சி கொட்டிக் கிடந்தது அவளுக்கு.

அதை கொஞ்சமும் எதிர் பார்க்காத தீரன்,

“ஏய்.. என்ன பண்ற நீ” என்று விலகி நின்றவன் அவளுக்கு முன்னாடி குத்துக் காலில் அமர்ந்து,

“முதல்ல எழுந்திரு உன் மகன் உன்னை தான் பார்க்கிறான் பாரு” என்று அவன் சொல்ல, வேகமாய் கீழே இருந்து நிமிர்ந்துப் பார்த்தாள் அதிரல். தீரனின் கையில் இருந்த பிள்ளை அவளை பார்த்தவுடன் அவளிடம் தாவ வர, வேகமாய் இரு கரம் நீட்டி அவனை வாங்கிக் கொண்டவள் அவன்னின் முகம் முழுக்க முத்தம் வைத்து நெஞ்சோடு இழுத்து அணைத்துக் கொண்டாள். இனி உன்னை ஒரு நொடி கூட பிரிய மாட்டேன் என் தங்கமே என்று கணகளில் இருந்து கண்ணீர் கரகரவென்று வழிந்தது.

“ம்மா நோ” என்று அவளின் கண்ணீரை பிஞ்சு விரல்களால் துடைத்து விட்டு, பெரிய மனிதனாய் முறைத்தான் தாயை. அழக்கூடதாம் அவனின் அம்மா.

இங்கோ அவனின் அப்பனுக்கு நெஞ்சில் பாரம் வந்து அமர்ந்து விட்டது. என் கூடயும் இவன் இப்படி பழகணுமே, இருக்கனுமேன்னு பொறாமை வந்து ஒட்டிக் கொண்டது தகப்பனாய். 

--

தீரனிடம் சென்னைக்கு வருகிறேன் என்று சொல்லி விட்டாள் தான். ஆனால் தங்கையை தனியாக விட்டுட்டு எப்படி சென்னைக்கு போவது என்று இரவெல்லாம் ஒரு பொட்டு தூக்கம் இல்லாமல் விழித்தே கிடந்தாள் அதிரல்.

தீரன் அவன் கையாலே பிள்ளையை தூக்கி அவளிடம் கொடுத்து விட்டான். அவனை வாங்கிக் கொண்டதில் இருந்து இதோ இப்பொழுது வரை அவனை அவளை விட்டு கீழே இறக்கவே இல்லை.

தூங்கும் பிள்ளையை தூக்கி மடியில் கிடைதிக் கொண்டு அமர்ந்து இருக்கிறாள். அருகில் தங்கை அவளின் கையை பற்றிக் கொண்டு தூங்கிக் கொண்டு இருந்தாள். அவளின் தலையை வருடிக் கொடுத்த அதிரலுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.

வயது வந்த பிள்ளையை தனித்து எப்படி விட என்று மனமெல்லாம் பாரமாகி இருந்தது. தினம் தினம் வயது வித்தியாசம் இல்லாமல் பெண் பிள்ளைகளை கற்பழித்து கொன்று துண்டு துண்டாக்கி வீசும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டு இருப்பவளுக்கு தங்கையை பிரிய மனமே இல்லை. அவளுக்கு ஒரு நல்லது பார்த்து செய்து வச்சுட்டன்னா அப்புறம் கவலையே இல்லையே.. எண்ணியவள் அடுத்த நாள் தீரனிடம் சென்று பேசினாள்.

“குட் மார்னிங் சார்” என்று வந்து நின்றவளிடம்,

“இன்னைக்கு கிளம்பலாம் தானே” என்று அவன் கேட்டான். நேற்றைக்கே ஒரு நாள் அவகாசம் கேட்டு தங்கையுடன் இருக்கவேண்டும் என்பதற்காக கேட்டு இருந்தாள். அவனும் சரி போ என்று குடுத்தான். ஆனால் இப்பொழுது அவளுக்கு திருமணம் ஆகும் வரை கூட இருக்கிறேன் என்று சொன்னால் என்ன செய்வானோ என்று எண்ணினாள்.

தன் கோரிக்கையை எப்படி அவனிடம் பேசுவது என்று திக்கி திணறியவள்,

“சார் ப்ளீஸ்.. நான் உங்களை ஏமாற்றனும்னோ இல்ல இங்க இருந்து ஓடிபோகவோ நான் நினைக்கல..” என்று சொன்னவள் அவனின் புரியாத பார்வையை பார்த்து,

“எங்களுக்கு அப்பா அம்மா யாரும் இல்ல சார். என் தங்கச்சிக்கு நான் தான் கல்யாணம் செய்து வைக்கணும். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்பாடு செய்து குடுத்துட்டன்னா நீங்க எங்க கூப்பிட்டாலும் நான் வருவேன். ஆனா இப்போ அவ தனியா எப்படி  இருப்பான்னு தான்” என்று அவள் பேச்சை முடிக்காமல் பாதியிலே நிறுத்தி அவனின் முகத்தை பார்த்தாள்.

“அது உன்னோட பிரச்சனை.. ஓரளவு தான் உனக்கு இறங்க முடியும். ஒன்னு பண்ணு மகனை என்கிட்டே குடுத்துட்டு நீ இங்க இருந்து நிதானமா உன் தங்கச்சிக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுட்டு அப்புறமா சென்னை வந்து சேரு” என்றான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.

Loading spinner

Quote
Topic starter Posted : October 26, 2026 9:26 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top