‘காலையிலயே வந்து மயக்குறா...” கடுப்படித்தவன் இன்னும் அதி வேகமாக இயக்க... அதையும் ரசித்து பார்த்தவள், பின் அவளும் இன்னொரு இயந்திரத்தில் அமர்ந்து வொர்கவுட் பண்ண இப்பொழுது பித்தம் கொள்வது இவனது முறையாயிற்று..
தெறித்து விழும் கண்ணை அடக்க முடியாமல் இமைகள் இரண்டையும் விரித்து வைத்த படி தன் மனம் கொண்டவளை இரசித்து பார்த்தான். அவனது ரசனையான பார்வையை கண்டு கொள்ளாமல் இயங்கிகொண்டு இருந்தாள்.
அந்த புறக்கணிப்பில் கோவம் கொண்டவன், எழுந்து வந்து அவளது பின் புறம் அமர்ந்து அவள் செய்யும் உடற்பயிற்சியை அவனும் மேற்கொள்ள, மயூவின் வதனத்தில் மெல்லிய புன்னகை வந்து அமர்ந்தது. அதை ஆடியில் கண்டவனுக்கும் மென் புன்னகை ஒன்று உதயமானது.
“என்ன வேலை... காலையிலயே...” கேட்டாள்.
“ம்ம்... ஒரு ப்ராஜெக்ட் ஒன்னு சைன் ஆகுற சூழல்... சோ நீ வந்தா இன்னும் பெட்டரா பீல் பண்ணுவேன்... உன் ப்ரெசென்ட் வேணும். அதான்...” என்றான் அவளது கூந்தலின் வாசனையை நுகர்ந்தபடி.
அதில் கூச்சம் எழுந்தாலும் “வரேன் ஆதி... எங்க சைன் பண்றீங்க...” என்றாள்.
“நீ சொல்லு எங்க பண்ணலான்னு...” என்றவன் தன் இதழ்களை அவளது கழுத்தில் புதைத்துக்கொண்டான்.
“ப்ச் கொஞ்ச நேரம் கூட சும்மா இருக்க மாட்டிகிறீங்க ஆதி... வெரி பேட் பெல்லோ...” என்றவள் எழுந்து அவனுக்கு முன் புறம் திரும்பி அமர்ந்துக்கொண்டாள்.
அமர்ந்தவள் அவனின் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டாள். கலக்க வந்த அவளது கண்களின் பார்வையை மிக கணக்காக கவ்விக்கொண்டவன் இயக்கியின் கைபிடியை பற்றிக்கொண்டே அவளை ஆழ்ந்து பார்க்க தொடங்கினான்.
அவனது பார்வையில் தெரிந்த காதல் தீயில் மனம் சுகமாக குளிர் காய... நான்கு விழிகளும் கவி பாடியதை காவியம் வடிக்க கவிஞர்கள் யாரும் இல்லாமல் போனது தான் சிறிதே வருத்தம்...
ஆன போதும் அந்த காவிய நிகழ்ச்சியை இன்னும் அதிக படுத்தும் படி கண்களோடு கண்கள் இணைந்து... உறைந்து... கலந்து... நிறைந்து போனது... அங்கே வேறு எந்த நிகழ்வும் இல்லாமல், அவர்களை கலைக்க அங்கே எந்த சூழலும் இல்லாமல் போக, அவர்களது பார்வை தவம் இன்னும் சிறப்பு பெற்று விளங்கியது காதலின் கால சுவடுகளில்...
உறைந்து போன நிமிடங்களில் இருந்து சற்றே சுதாரித்த ஆதி தன் முன் இருந்தவளை முறைத்து பார்த்தான்...
“இப்போ எதுக்கு ஆதி என்னை முறைக்கிறீங்க...” என்றவள் இன்னும் அவனை ஆழ்ந்து பார்க்க,
“காலையில எவ்வளவு முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னேன்... இப்படியாடி காலையிலேயே வம்பு பண்ணுவ... எழுந்து போய் குளி...” கடுப்படித்தான். அதில் சிரித்தவள்,
“இந்த யோசனை என்னை பார்க்கிறதுக்கு முன்னாடி வந்து இருக்கணும்..” சற்றே குரல் உயர்த்தி சொன்னவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவன்,
“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல... இன்னைக்கு முழுசும் லீவு போட்டுட்டு உன்னை பார்த்துக்கிட்டே இருப்பேன்... என்ன உங்க மாமனாருக்கு தான் பதில் சொல்லணும்...” சொல்லியவனை முறைத்து பார்த்தவள்,
“ஒண்ணும் தேவையில்ல.... ஒழுங்கா கிளம்புங்க. தெரியாம உங்களை சீண்டிட்டேன்... தப்பு தான். வாங்க” என்றவள் அவனை அழைத்துக்கொண்டு அவனது தளத்தில் கொண்டு வந்துவிட்டவள் விரைவாக கிளம்பி அவனுக்கு முன் டைனிங் ஹாலில் வந்து காத்திருந்தாள்.
இல்லையென்றால் காலையிலே அவனிடம் கச்சேரி கேட்க வேண்டியது வரும். அதற்க்கு இது எவ்வளவோ தேவலை...
மயூ வந்த கொஞ்ச நேரத்தில் ஆதியும் வந்துவிட்டான். இருவரது ஜோடி பொருத்தத்தையும் கண்டு தூள் என்பது போல ரோகிணி கை காட்டி சொல்ல... ரேணு திருஷ்டி கழிப்பது போல செய்தாள்.
இருவரையும் கண்டு ‘அடி’ என்பது போல மென் புன்னகை சிந்தியவள் மூவருக்கும் பரிமாற... அதே நேரம் முகிலும் மனுவும் வர அவர்களுக்கும் மயூவே பரிமாற ஆதி எதையும் கண்டுக்கொள்ளாமல் அவன் பாட்டுக்கு சாபிட்டுக்கொண்டு இருந்தான்.
அதே நேரம் சீதா வர.. அவருக்கும் எடுத்து வைக்க
“நேரமாச்சு... நீ உட்கார்ந்து சாப்பிடுடி...” என்று ஆதி சொல்ல சீதாவுக்கு பத்திக்கொண்டு வந்தது.
“ஏண்டா இவ்வளவு நேரம் இவங்களுக்கு எல்லாம் பரிமாறும் போது நேரமாவது தெரியலையா..? எனக்கு பரிமாறும் போது தான் உனக்கு தெரியுதா...?” கோவமாக கேட்டார்.
அதற்க்கு ஆதியோ காதில் தன் சுண்டு விரலை நுழைத்து லேசாக ஆட்டி “காதுக்குள்ள ஒரே குடைச்சலா இருக்கே... முதல்ல END பார்க்கணும்..” என்று சொல்லிவிட்டு உணவில் கவனமாக...
“டேய் நான் உன்கிட்ட பேசிகிட்டு இருக்கேன்” சிறுபிள்ளை போல அவர் காலை உதைக்க...
“மயூ... உன் பக்குவமே பக்குவம் டி... தனியா எடுத்து வச்சு இருக்கியே உன் மாமியாருக்குன்னு அந்த டிஸ்சை இங்குட்டு தள்ளு...” என்றவன், சீதாவுக்கு என்று மயூ தனியாய் சமைத்து எடுத்து வைத்து இருந்த பதார்த்தத்தை கேட்க, மயூ பாவமாய்
“விட்டுடுங்க ஆதி... அத்தை பாவம்.” என்று கண்களிலே கெஞ்சினாள்.
அவனோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் “குடுக்குறியா... இல்ல பாதி சாப்பாட்டுல எழுந்திரிக்கவா...?” அவளை படுத்தினான்.
மயூ சீதாவை பாவமாய் பார்க்க...
“குடுத்துடாதடி... ராட்சஸன் மொத்தத்தையும் சாப்பிட்டுடுவான்..” கெஞ்சோ கெஞ்சுன்னு சீதா கெஞ்ச... அவருக்கு மனசு இறங்கினாலும், ஆதியின் கோவத்துக்கு பயந்து,
“சாரி அத்தை...” என்றபடி ஆதிக்கு பரிமாற வந்தாள்...
“என்ன இவ்வளவு ஸ்லோவா போடுற... கொண்டா நானே போட்டுக்குறேன்.” ன்னு சொல்லி அவளிடமிருந்து வாங்கி தானே போட்டுக்கொள்ள பார்க்க, சீதா வேகமாய் ஆதியிடமிருந்து பிடுங்கி கொண்டு
“இங்க பாரு சாப்பாட்டு விசயத்துல எல்லாம் நீ கணக்கு எடுத்துக்க கூடாது சொல்லிட்டேன்... எதா இருந்தாலும் நேரா டீல் பண்ணு சொல்லிட்டேன்..” என்றவன் மொத்தத்தையும் தன் தட்டில் கவிழ்த்துக்கொண்டார்.
அதை பார்த்துக்கொண்டு இருந்த அனைவருக்கும் அவரது சின்ன பிள்ளை தனத்தை கண்டு புன்னகை எழுந்தது.
ஆதி அவரை முறைத்துவிட்டு மயூ வேறு பரிமாறி இருந்ததை சுவைத்து உண்டுவிட்டு மயூவையும் உண்டுவிட்டு வர சொல்லி வெளி கூடத்தில் காத்திருந்தான்.




