Notifications
Clear all

அத்தியாயம் 30

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவளின் வாழ்க்கையில் ஒரு ஆணின் வருகையை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தனக்கு என்று ஒரு நாள் கூட அவள் வாழ்ந்ததாக நினைவில் இல்லை. பிள்ளை வரும் வரை தங்கைக்காக வாழ்ந்தாள். பிள்ளை வந்த உடன் இந்த நான்கு வருடங்களாக அவனுக்காக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறாள்.

ஐவிஎப் பண்ணி இரண்டாவது மாதத்திலே அவள் கார்ட் போட்டு செக் பண்ணி விட்டாள். குழந்தை உறுதியாகி இருந்தது. கலைக்க சொல்லி அவளின் அறிவு உந்தி தள்ளியது என்றாலும் மனமோ வயிற்றை தடவிப் பார்த்து “எனக்காக கடவுள் குடுத்த இன்னொரு உறவு. இதை எப்படி நான் கலைப்பேன். உன்னை கலைக்க எனக்கு மனசு வரலடா கண்ணா.. நீ ஆணோ பெண்ணோ நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை நல்லபடியா வளர்ப்பேன். இனி என் உலகமே நீ தான்” என்று வயிற்றில் இருக்கும் பிள்ளையோடு பேசியவள், கலைக்கும் முடிவை அந்த நிமிடமே விட்டொழித்தாள்.

“எனக்கும் கல்யாண வாழ்க்கை பற்றிய கனவு இருந்தது தான். ஆனா இப்ப அதுக்கெல்லாம் அவசியமே இல்லை. கை பிள்ளையோடு எந்த உத்தமனம் கரம் பிடிக்க வருவான். அதுவும் எந்த சீர்வரிசையும் இல்லாமல்” என்று கலைந்துப் போன கனவுகளை பற்றி வேதனையாக இருந்தாலும் தங்கையின் நலன், கைப்பிள்ளை என அவளின் கனவுகளை எல்லாம் தூக்கி தூர எரிந்து விட்டு இவர்கள் இருவருக்காக மட்டுமே வாழ ஆரம்பித்து இருந்தாள் இந்த நான்கு வருடங்களாக.

தங்கைக்கு நல்ல இடத்தில் கல்யாணம் பார்த்து முடிவு செய்துவிடனும். இப்போதைக்கு அதிரலின் பெரிய ஆசையே அது மட்டும் தான்.

இவளின் காலம் இவனின் மகனோடு கழித்து விடலாம் என்று எண்ணி இருக்க தேவையில்லாமல் அவளின் வாழ்க்கையில் உள்ளே புகுந்து இருக்கிறான் தீத்திரள் தீரன்.

அதை கொஞ்சமும் தாங்கிக் கொள்ள முடியாமல் நெருப்பில் நிற்பது போல நின்றுக் கொண்டு மருத்துவமனையில்.

உள்ளே இருந்து தீத்திரள் தீரனின் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. பிள்ளையின் சத்தம் மிக முணகலாக கேட்டது.

தீத்திரள் தீரனின் கையை இறுக்கமாக பற்றி இருந்தான் குழந்தை. அந்த மெல்லிய ஸ்பரிசத்தில் தன்னை இழந்தவனுக்கு பிள்ளையின் காய்ச்சல் அப்பட்டமாய் தெரிய உள்ளம் துடித்துப் போனான்.

“என்ன டாக்டர் ஹாஸ்பிட்டல் வந்து ரெண்டு மணி நேரம் ஆகுது. இன்னும் காய்ச்சல் கொஞ்சமும் குறையாம இருக்கு..” அதட்டலாக அவன் கேட்க,

“பிளாட் ரிப்போர்ட்டை செக் பண்ணி பார்த்ததுல பேபிக்கு லேசா வைரல் பீவர் மாதிரி இருக்கு.. அதனால தான் காய்ச்சல் குறையல சார். அதுக்கு ஏற்றார் போல மருந்து குடுக்கணும்.. இப்போதைக்கு ஒரு  குளுக்கோஸ் மட்டும் போட்டு விட சொல்றேன். தேவை பட்டா அதுலையே நாம மெடிசின் இன்ஜெக்ட் பண்ணிடலாம். அட்மிஷன் போட்டுடுங்க” என்றார்.

“வேற ஒன்னும் இல்லையே. பிள்ளை சேப் தானே..” என்று அவரை குடைந்து குடைந்து கேள்வி கேட்டான்.

“நத்திங் சார்” என்று சில அறிவுரைகளை கொடுத்தவர் வெளியே வர, அங்கு தவிப்புடன் கண்கள் கலங்க நின்று இருந்த அதிரலை பார்த்து,

“உங்க ஹஸ்பென்ட் கிட்ட எல்லாத்தையும் சொல்லி இருக்கேன் மிசெஸ்.. கேர்புல்லா பார்த்துக்கோங்க” என்று சொல்ல, அதிர்ந்துப் போனாள். குழந்தையை பாந்தமாக தூக்கிக்கொண்டு வெளியே வந்த தீரன், மருத்துவர் சொன்னதை கேட்டு கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவே இல்லை.

“நைட் டியூட்டிக்கும் மாத்திக்கோங்க. உங்க டீன் கிட்ட பேசிட்டேன். பிள்ளை ரெக்கவர் ஆகுறவரை கூட இருக்கணும்” என்று அவன் கட்டளையாக சொல்ல, மருத்துவர் தலையை ஆட்டுவதை தவிர வேறு வழியில்லை. ஏனென்னில் அவனது பவர் அப்படி. அதிரலுக்கு தான் நெஞ்சுக்குள் என்னவோ போல இருந்தது. ஆனால் வாயை திறக்கவே இல்லை.

பேசினால் கடித்து குதறாத குறையாக கத்துபவனிடம் என்னத்தை பேசறது. அதனால் மௌனமாக இருந்துக் கொண்டாள் பிள்ளையிடம்.

எல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது என்று எண்ணிய நேரம் பிள்ளைக்கு பிக்ஸ் வந்து விட்டது அதீத காய்ச்சலில்.

--

குழந்தை சோர்வுடன் படுக்கையில் படுத்து இருந்தான். அவனின் தலையை வருடியபடி பக்கத்தில் அமர்ந்து இருந்தாள் அதிரல். தீரனோ பிள்ளைக்கு அந்த புறம் அமர்ந்து அவனின் கையை பிடித்துக் கொண்டு, சின்ன குரலில் அவனுடன் என்னவோ பேசிக் கொண்டே இருந்தான்.

நர்ஸ் ட்ரிப்ஸ் போட ஸ்டேண்டில் பாட்டிலை மாட்டிக்கொண்டு இருந்த நேரம் பிள்ளைக்கு வெட்டி வெட்டி இழுத்து பிக்ஸ் வந்து விட்டது.

“ஐயோ என் பிள்ளை” என்று அவள் அலற, தீரன் வேகமாய் பிள்ளையை தூக்கிக்கொண்டு அங்கு இருந்த பைப்பில் நீரை பிடித்து உடம்பு முழுக்க தெளித்து விட ஆரம்பிக்க, உதவிக்கு நேர்சும் வந்து விட்டார்.

பரபரப்பாய் நகர்ந்த அந்த நிமிடங்களில் அதிரலுக்கு மூச்சே எடுக்க முடியவில்லை. தீரனை மீறி அவளால் பிள்ளையிடம் போகவே முடியவில்லை. அனைத்துமாக இருந்து அவனே பார்த்துக் கொள்ள இவள் கண்ணீருடன் எட்டியே நிற்க வேண்டிய நிலை.

அதுவும் மருத்துவரிடம் அவன் போட்ட சண்டை தன் மகனுக்காக அவன் ஏன் இந்த அளவு துடிக்க வேண்டும் என்ற சிந்தனை எல்லாம் பின்னுக்கு போய் விட்டது.

“ஹாஸ்பிட்டல்ல வச்சு இருக்கும் போதே குழந்தைக்கு இந்த நிலைன்னா நீங்க எல்லாம் என்ன டாக்டர். என்ன  படிச்சி கிழிச்சிங்க.. ஆங்.. கொஞ்சம் கூட அக்கறை இல்லாம ட்ரீட்மென்ட் குடுத்தா பேஷன்ட் இந்த மாதிரி நிலைக்கு ஆளாவாங்க.. முதல்ல மெடிகல் போர்ட்ல பேசி உங்களை வேலையை விட்டு தூக்கினா தான் வழிக்கு வருவீங்க. உங்க லைசன்சை இப்பவே கேன்சல் பண்ண சொல்றேன்” என்று வானத்துக்கும் பூமிக்குமாய் அவன் நின்றான்.

“சார் ப்ளீஸ்.. அதை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் இப்போ ட்ரீட்மென்ட் பண்ண விடுங்க. இல்லன்னா பிள்ளைக்கு இன்னொரு பிக்ஸ் வந்திடும்” என்று அவர் கெஞ்சி பிள்ளைக்கு மருத்துவம் பார்க்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கினான் தீரன்.

அடுத்த நிமிடங்கள் எல்லாம் மிகுந்த பரபரப்பில் சென்றது. அதிரலுக்கோ கண்ணீருடனும் வேண்டுதலுடனுமே நகர்ந்தது.

வேறு வழியில்லாமல் மிகுந்த பவர் புல்லான மருந்தை பிள்ளைக்கு குடுக்க வேண்டி இருந்தது. வயிறு புண்ணாகிப் போகும் என்றாலும் வேறு வழியில்லை. மருத்துவர் அதை கொடுத்த கொஞ்ச நேரத்திலே காய்ச்சல் கணிசமாக குறைய ஆரம்பித்தது.

“இனி காய்ச்சல் படி படியா குறையும். டெம்பரேச்சர் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை செக் பண்ணிட்டே இருங்க.. சப்போஸ் இடையில அதிகமான டெம்பரேச்சர் காட்டுச்சுன்னா இன்பார்ம் பண்ணுங்க. நான் கேபின்ல தான் இருப்பேன்” என்று சொல்லி விட்டு மிகுந்த அயர்வுடன் மருத்துவர் அவரின் அறைக்கு சென்றார்.

Loading spinner

Quote
Topic starter Posted : October 10, 2026 11:21 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top