Notifications
Clear all

அத்தியாயம் 27

 
Admin
(@ramya-devi)
Member Admin

“அத்தை அதுக்குன்னு இப்படி ஒட்டு இல்லாம உறவில்லாம எங்கேயோ போக சொல்றது நியாயமா...?” குழந்தை போல கேட்டவளை பார்க்க பார்க்க சீதாவின் நெஞ்சில் ரத்தம் கொட்டியது. ஆனால் அவருக்கு வேறு வழி இல்லை. இதை இவர் செய்து தான் ஆகவேண்டும்.

“சோ... உன்னால போக முடியாது... இல்லையா..?”

“ஆமா அத்தை. அதோட உங்க மகனுக்கு சத்தியம் வேற செய்து குடுத்து இருக்கேன்...” என்றாள்.

‘அவன் யாரு என்னோட மகனாச்சே... பின்ன வேற எப்படி யோசிப்பான். நான் என்ன செய்ய போறேன்னு நல்லா தான் கணிச்சி இருக்கான்... எனக்கு முன்னாடியே காயை நகர்த்திட்டான். இனி நான் நிதானமா தான் காயை நகர்த்தணும்.’ என்று சற்று பெருமையாகவே தன் மகனை எண்ணியவர் அவனுக்கு அடுத்த செக்கை வைத்தார் சீதா...

“ஒண்ணு நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ... இல்லையா இங்க இருந்து யாருக்கும் தெரியாம எங்காயாவது போ... ஆனா நீ எங்க போறன்னு எனக்கு மட்டும் தெரிவிச்சுக்கிட்டே இருக்கணும்.”

“இதெதுவும் வேணான்னு நீ முடிவு பண்ணினா ஆதியை கல்யாணம் பண்ணிக்கோ... இதை தவிர உனக்கு வேறு எந்த ஆப்சனும் இல்ல...” சீதா சொல்ல...

மயூவுக்கு கண்ணை கட்டிக்கொண்டு வந்தது. ஆரம்பித்தது இவள் தான் என்றாலும், இதில் பல சிக்கல் இருப்பதை இப்பொழுது தான் புரிந்துக்கொண்டாள்.

ஆதிக்கும் ரஞ்சனிக்கும் கல்யாணம் செய்துவைத்தால் போதும் என்று எண்ணியவளுக்கு ஒரு நாள் ஒரு பொழுது நகருவதே பெரிய போராட்டமாய் இருந்தது. ஆதி ஒரு புறம் படுத்தினான் என்றால், சீதா ஒரு புறம் அவளை வாட்டி வதைத்தார்.

அவருக்கு மயூவை ஆதிக்கு கட்டி தர தான் விருப்பம். அதுவும் இருவரும் பிறந்த போதே இருவரது பெற்றவர்களின் சம்மதத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. அதனால் சீதா அவளை தன் மருமகளாகவே எண்ணி அவளை வளர்த்தார்.

ஆனால் அவரது எண்ணத்தை அடியோடு சாய்த்து போட்டுவிட்டு அவரின் முன்னாடியே வந்து நின்றவளை கண்டவருக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.

மயூவை அவரால் எப்பொழுதுமே விட்டு தரவே முடியாது. ஆதியை போலவே அவளின் மீது தன் உயிரை வைத்து இருப்பவர். அப்படி பட்டவர் எப்படி மயூவை விட்டு கொடுக்க முடியும். அதனால் அவரால் என்ன முடியுமோ அதை செய்துக்கொண்டு இருக்கிறார்.

அவருக்கு ஆதியை பற்றியும் தெரியும், மயூவை பற்றியும் தெரியும். அதனால் அவர் வேறு ஒரு கணக்கை போட்டார். அதில் ஆதியின் சினம் தூண்டபடும் என்று கணித்தே செயலில் ஈடுபட்டார்.

அதன் படி தன் மருமகளிடம் பேசினார். சீதாவின் வாயிலிருந்து வந்த செய்தியை கேட்டு துடித்து போனவள்,

“எனக்கு இரண்டு நாள் குடுங்க... நான் யோசிச்சு சொல்றேன்..” என்று சொல்லிவிட்டு சென்றாள். அவள் போன பின் அடைத்து வைத்து இருந்த மூச்சை வெளியிட்டவர் ‘அப்பாடா...’ என்று ஆசுவாசமானார்.

“என்ன நாரதரே.... கலக்கம் பயங்கரமா இருக்கே...” கேட்டபடி மனுவும், முகிலனும் உள்ளே நுழைந்தார்கள்.

“டேய் நான் பேசுறதா ஒட்டு கேட்டீங்களாடா...?”

“ஆமா அப்படி கேக்க போய் தான் நீங்க செய்யிற கலக்கம் எங்களுக்கு தெரியவந்தது... இருங்க உங்களை பத்தி அண்ணா கிட்டே சொல்றேன்..” என்ற முகிலனை முறைத்து பார்த்தார்.

“இந்த விஷயம் உன்னை தாண்டி வேற யாருக்காவது தெருஞ்சது... சொத்துல விஷம் வச்சுடுவேன்... மகன்னு கூட பார்க்க மாட்டேன்.” என்றார் கடுப்பாக.

“அம்மா... நான் உன் புள்ள...”

“அதனால தான் இந்த வார்னிங்...”

“இல்லன்னா...”

“இந்நேரம் நீ பொணமா இருந்து இருப்ப...” சொல்லிவிட்டு அவர் செல்ல

“டேய் என்னடா உன்னோட அத்தை இப்படி சொல்லிட்டு போறாங்க... நீ எதுவுமே சொல்லாம இருக்க...” மனுவை பிடித்து உலுக்கினான்...

“இதுல நான் சொல்ல என்ன இருக்கு... மூணு பேரும் அவங்கவங்க இஷ்டத்துக்கு என்னென்னவோ செஞ்சுகிட்டு இருக்காங்க... பெரியவங்களுக்கு புத்தி சொல்ல கூடிய இடத்துல நாம இல்ல... போற வரைக்கும் வேடிக்கை பார்ப்போம்... வா” என்றவன் முகிலனை அழைத்துக்கொண்டு அன்றைக்கு செய்த மீட்டிங்கை பற்றி சொல்லி இருவரும் டிஸ்கஸ் பண்ண... முகிலனின் எண்ணம் சட்டென்று வியாபாரத்திற்கு தாவியது.

ஆனால் மனுவின் எண்ணம் தன் அக்காவை பற்றியே சுற்றிக்கொண்டு இருந்தது... அவள் என்ன முடிவு எடுப்பால் என்று...

தன் வாழ்க்கையே பரிப்போக இருக்கிறதை பற்றி அறியாமல் ஆதியோ சுகமான நித்திரையில் ஆழ்ந்து இருந்தான்...

அவனுக்கு எப்படியும் மயூ அவனது கைவசம் வருவாள் என்று பூரண நம்பிக்கை இருந்தது. அதனால் கொஞ்சம் மெத்தனமாகவே இருந்தான். ஆனால் அவனது நம்பிக்கை ஆட்டம் காணும் என்று அறியவில்லை அவன்... அதும் அவனது உயிர் காதலியே அதை செய்வாள் என்று கிஞ்சித்தும் அறிந்து இருக்கவில்லை.

--

அடுத்த நாள் காலை இயல்பு போல விடிந்தது... சீதா தன் மருமகளின் முகத்தையே பர்த்துக்கொண்டு இருந்தார். அவரது பார்வையில் தடுமாறியவள்,

“இன்னும் நேரம் இருக்கு அத்தை...” மெதுவாக முணகினாள்.

“தெரியுமே...” என்றவர் தன் பார்வையை அவளது முகத்திலிருந்து எடுக்கவே இல்லை. அது இன்னும் பெரிய சங்கடத்தை கொடுக்க எழுந்து சென்றுவிட்டாள் மயூ...

“ஓடு ஓடு... நீ ஒத்துக்குற வரை உன்னை விட போவது இல்லை... நீயும் வாழனும், என் மகனும் வாழனும்... அது சேர்ந்து என்றாலும் சரி, இல்லை பிரிந்து என்றாலும் சரி... ஆனா இருவரும் நன்றாக வாழ வேண்டும்.” எண்ணியவர் மேலும் மேலும் சகுனி வேலையை செய்ய தொடங்கினார்...

ஆதி உண்ண வரும்பொழுது, “ஆதி, மயூவுக்கு பீவேரா இருக்கு... அதனால நீயே போட்டு சாப்பிட்டுக்கோ...” என்று சொல்ல திகைத்து போனாள் மயூ...

ஆதி சாப்பிட வருவதை அறிந்து வேக வேகமாய் படியிலிருந்து கீழே இறங்கி வந்துக்கொண்டு இருந்தாள். அப்பொழுது தான் சீதா இதை சொல்ல அப்படியே நின்றுவிட்டாள்.

அவளின் பின் வந்து நின்ற மனு, “நீ தள்ளி போகணும்னு நினைச்ச... இப்போ விதியே உன்னை ஆதி மாமா கிட்ட இருந்து தள்ளி வைக்குது... இல்லையா அக்கா...?” என்று கேட்டவனை நிமிர்ந்து கூட பார்க்கமால் விறுவிறு வென்று மாடி ஏறினாள்.

ஏனெனில் அடுத்தட நொடி ஆதி மயூவை பார்க்க விரைந்து வருவான் என்று உணர்ந்து இருந்தாள்.

அதை போலவே ஆதி வேகமாய் எழுந்து மயூவை தேடி அவளது அறைக்கு வந்தான்...

Loading spinner

Quote
Topic starter Posted : October 6, 2026 10:17 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top