Notifications
Clear all

அத்தியாயம் 11

 
Admin
(@ramya-devi)
Member Admin

“ஏய் அறிவு இல்ல.. இப்படி தான் குழந்தையை தனியா விட்டுட்டு போவியா?” ஏகத்துக்கும் முறைத்தான் தீரன். அடித்து பிடித்துக் கொண்டு அவள் வந்ததை வைத்தே அவளின் குழந்தை தான் இவன் என்று யூகித்துக் கொண்டான் தீரன்.

“இல்ல சார்.. அது” என்று திகைத்துப் போனாள். தங்கையின் கையில் குடுத்த பிள்ளை எப்படி இவர் கையில் என்று குழம்பியவள்,

“தங்கச்சி கிட்ட தான் சார் பிள்ளையை குடுத்துட்டு போனேன்” தயங்கி தயங்கி சொன்னாள் அதிரல்.

“உன் தங்கச்சியால இவனை சமாளிக்கவே முடியல. அறிவு இல்லாம இப்படி தான் நடந்துக்குவியா? பிள்ளையை பார்த்துக்க முடியலன்னா எத்துக்காக பெத்துக்கிட்ட” சுடு சொற்களை வீசினான்.

“சார்” என்று உதடு துடிக்க விழிகளில் நீர் கோர்த்து விட்டது. எவ்வளவோ துன்பம் வந்து அவளை போட்டு பாடாய் படுத்தி எடுத்த பொழுதும் இதுநாள் வரை யாரிடமும் ஒரு அவச்சொல் கூட வாங்கியது இல்லை. கண்ணும் கருத்துமாக பிள்ளையையும் அவளின் தங்கையையும் பார்த்துக் கொண்டு வந்து இருக்கிறாள். அதை பற்றி எதுவும் தெரியாமல் வார்த்தையயை வீசி அதிரலை காயமுற செய்து விட்டான் தீத்திரள் தீரன்.

அவளின் கண்ணீரை பார்த்து எரிச்சல் ஆனவன்,

“இந்த நீலி கண்ணீரை முதல்ல நிறுத்து.. பிள்ளையை தனியா தவிக்க விட்டுட்டு உனக்கு கண்ணீர் வேற வருதாக்கும்” முறைத்தவன்,

“ஒழுங்கா பிள்ளையை வளர்க்க பாரு.. இல்லன்னா நீ என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியது வரும்” அவளை எச்சரித்தவன், பிள்ளையை அவளிடம் இறுதி வரை குடுக்கவே இல்லை.

அதை உணர்ந்த அதிரல், “குழந்தை” என்று அவனிடம் கையை நீட்டினாள்.

“முதல்ல நான் சொன்னதை காதுல வாங்குனியா?” அதட்டல் போட்டான்.

“ம்ம்..” தலையை ஆட்டினாள்.

“ஒழுங்கா பார்த்துக்கல நீ தொலைஞ்ச” அவளை மீண்டும் ஒருமுறை எச்சரித்தவன்,

“டேய் உன் அம்மா உன்னை ஒழுங்கா பார்த்துக்கலன்னா என்கிட்டே சொல்லு.. நான் உன் அம்மாவுக்கு ரெண்டு அடி குடுக்குறேன்” என்றான்.

“ஈ.. ஈ..” என்று அவனின் மீசையை பிடித்து காட்டி, “ஏக்கு இய்ய..” உதட்டை பிதுக்கி பிள்ளை சொல்ல,

“இப்பவே உனக்கு இந்த மீசை வேணுமாடா..” என்று சிறு அதட்டல் போட, பிள்ளை மிரண்டுப் போனான்.

அவனின் மிரட்சியை பார்த்த தீரன், “நீயும் உன் அம்மா மாதிரி எல்லாத்துக்கும் பயப்படாதடா.. என்னை மாதிரி வாழ்க்கையில எதிர்நீச்சல் போட்டு பழகு.. எதுக்கும் பயப்படாத.. எவனாலையும் உன்னை அசைச்சுக்கவே முடியாத நிலைக்கு வரணும் புரியுதா?” என்றவன்,

தன் குரலை நெகிழ்த்தி, “இன்னொரு முறை உன்னை பார்க்கும் போது இதே மாதிரி உனக்கு ஒன்னு தரேன் சரியா..” என்று சொல்ல, தலையை ஆட்டினான் வாண்டு.  

“ஒழுங்கா அவனை வளரு.. உன்னை மாதிரியே அழு மூஞ்சி மாதிரி வளர்த்த.. தொலைச்சுடுவேன் உன்னை” என்று பெண்ணவளை மிரட்டி விட்டு அதன் பிறகே குழந்தையை அவளிடம் கொடுத்தான்.

வேகமாக குழந்தையை வாங்கியவள், தலையை ஒப்புக்கு ஆட்டிவிட்டு அங்கிருந்து ஓடிப்போனாள்.

அதுவரை கனத்து இருந்த கையும் தோளும் இப்பொழுது மிக இலகுவாக இருந்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக அவனின் இதயம் கணத்துப் போனது.

ஏன் இப்படி ஆகுது.. எண்ணியவன் நெஞ்சை நீவி விட்ட நேரம், அவனின் அன்னை தேவகி வேகமாய் அவனிடம் வந்தார்.

“என்னப்பா சாமி கும்பிடாம இப்படி பாதியில வந்துட்ட.. பூஜையே உனக்காகத்தானே செஞ்சோம்” அவர் வருத்தப்பட,

“தட்ஸ் ஓகே” இரு சொல்லோடு நிறுத்திக் கொண்டவனின் கண்கள் ஏனோ அதிரலை தேடியது. அதிரலோ வேகமாய் தங்கை எங்கு இருக்கிறாள் என்று தேடிப் போனாள்.

“அக்கா” என்று அவளும் பதட்டமாக தேடி வந்தாள்.

“பிள்ளை எப்படி அவர் கிட்ட போனது நேத்ரா?”

“உன்னை கேட்டான் அக்கா.. வந்திடுவாங்கன்னு சொல்லிட்டு இருக்கும் பொழுதே அதுக்குள்ள இடுப்புல இருந்து நழுவி கீழே வந்துட்டான். அந்த சார் இருந்துட்டு செம்ம திட்டு” என்றாள் பரிதாபமாய்.

“அவரு திட்டலன்னா தான் ஆச்சரியப்படணும்” முணகிக் கொண்டவள்,

“சரி வா கிளம்பலாம். நாளைக்கு காலையில பூஜைக்கு ஏற்பாடு பண்ண சொல்லிட்டேன். பணமும் கட்டிட்டேன்” என்றவள் மகனை மற்றும் தங்கையை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

அந்தே நேரம் தீரன் காரை கிளப்பிக் கொண்டு இருந்தான். அவனை தாண்டி போன நேரம்,

“அதிரல்” என்றான் சத்தமாக. திகைத்துப் போய் திரும்பி பார்த்தாள்.

“சொன்னது ஞாபகம் இருக்கட்டும்” என்றான். அவளையும் அறியாமல் தலை தானாக ஆடியது அவளுக்கு.

“பிக் மேன்” என்று குழந்தை அவனுக்கு கையை ஆட்ட,

“பாய் ஸ்மால் மேன்” இவன் அலட்டிக் கொள்ளாமல் கையை ஆட்டினான். ஆனால் அதை பார்த்துக் கொண்டு இருந்த அவனின் குடும்பத்தாருக்கு தான் நெஞ்சு வெடித்துப் போனது.

ஆவென்று அவனை பார்த்தார்கள். “நம்ம தீரனா இவன்” மூவரும் தங்களுக்குள் பார்வை பரிமாற்றம் செய்துக் கொண்டார்கள்.

இடுப்பில் இருந்த மகனை “சும்மா வாடா..” என்று அதட்டிய அதிரல், வேகமாய் தங்கையை கூட்டிக்கொண்டு அவ்விடத்தை விட்டு சென்றாள்.

“அக்கா உன் பேரு எப்படி அவருக்கு தெரியும்” நேத்ரா வியந்துப் போய் கேட்டாள்.

“அவரு தான் என்னோட பாஸ்” ரத்தின சுருக்கமாக சொன்னவள்,

“அவர் பேச்சை விடு நேத்ரா.. சீக்கிரம் ஆபிஸ் போகணும். இவனை கொண்டு போய் கிரச் விடுறியா?”

“வேணாம் க்கா.. நான் வீட்டுல தானே இருப்பேன். இனி அடுத்த வாரம் தான் நான் இண்டெர்வியூ போகணும். அது வரை நானே பார்த்துக்குறேன்” என்றாள்.

“சரி” என்றவள், வீட்டுக்கு வந்து அவசரமாக சமைத்து முடித்து விட்டு கிளம்பி அலுவலகம் வந்தாள். எவ்வளவு விரைவாக வந்தாலும் அவன் வருவதற்கு முன்பு அவளால் வர முடியவில்லை.

அவளுக்கு முன்பாக வந்து இருக்கையில் அமர்ந்து வேலையை ஆரம்பித்து இருந்தான் தீத்திரல் தீரன்.

“லேட்” என்றான் கடுப்பாக.

“சாரி சார்” என்று அவள் தலை குனிய,

“இடியட்.. வந்ததே லேட். இதுல அப்பாலஜி கேட்கிறேன்னு ஒரு மணி நேரம் ஆக்காத. போய் வேலையை பாரு..” என்றவன் என்னென்ன வேலை என்று அவன் பட்டியல் போட்டு சொல்ல, எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டவள் ஒன்றன் பின் ஒன்றாக செய்ய ஆரம்பித்தாள்.

வேலைக்கு இடையில் ஒரே ஒரு முறை தன் ஆர்வத்தை அடக்க முடியாமல்,

“மகன் என்ன பண்றான். யார் பார்த்துக்குறா?” என்று கேட்டான். அவன் திடுதிப்பென்று இப்படி கேட்கவும் ஒரு கணம் அதிர்ந்துப் போனாள்.

“ப்ச் இந்த ரியாக்ஷனை மாத்தவே மாட்டியா?” கடுப்படித்தவன் மீண்டும் அவளிடம் மகனை பற்றி கேள்வி கேட்க,

“அது தங்கச்சி பார்த்துக்குறா சார்” என்றாள்.

“என்ன அழகா அவ பார்த்துக்கிட்டான்னு தான் நேத்திக்கே நல்லா பார்த்தனே” என்றவன்,

“நாளையில இருந்து வரும் பொழுது உன் மகனை கூட்டிட்டு வந்திடு” என்றான்.

Loading spinner

Quote
Topic starter Posted : September 20, 2026 11:08 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top