Notifications
Clear all

அத்தியாயம் 12

 
Admin
(@ramya-devi)
Member Admin

“என்ன அழகா அவ பார்த்துக்கிட்டான்னு தான் நேத்திக்கே நல்லா பார்த்தனே” என்றவன்,

“நாளையில இருந்து வரும் பொழுது உன் மகனை கூட்டிட்டு வந்திடு” என்றான்.

“ஹாங்” என்று விழி விரித்து நின்றவள்,

“அது எப்படி சார்.. ஆபிஸ்ல.. அதுக்கு எல்லாம் யாரும் அலவ் பண்ண மாட்டாங்க சார்” என்று திணறிப் போனாள்.

“நீ கூட்டிட்டு வான்னா வா.. அதை மீறி என்னை கேள்வி கேட்கிற வேலை வச்சுக்காத..” முறைத்தவன் அவளை அன்றைக்கு முழுவதும் ட்ரில் எடுத்து விட்டான்.

அழுத்து கலைத்து இரவு வீடு வந்தவளுக்கு அப்பாடாய் என்று இருந்தது.

“நல்ல வேலைக்கு நாளைக்கு லீவு சொல்லியாச்சு” என்று எண்ணிக் கொண்டாள். மகனின் பிறந்த நாளை முன்னிட்டு அவனோடு நேரம் செலவிட முடிவு செய்து விஜயனிடம் விடுமுறை சொல்லி விட்டாள்.

ஆனால் அவளின் வரவையும் அவளின் பிள்ளையின் வரவையும் எதிர்பார்த்து அடுத்த நாள் காலையில் வெகு விரைவாக அலுவலகம் வந்து இருந்த தீரனுக்கோ பெரும் கோவம் மூண்டது இருவரும் வராமல் போனதில்.

--

தன் மீது ஒருவன் கடும் கோவத்தில் இருப்பது தெரியாமல் தங்கையுடன் கோயிலுக்கு வந்து இருந்தாள் அதிரல். மகனின் மூன்றாம் வயது கழிந்து நான்காவது பிறந்த நாள் ஆரம்பம் ஆகிறது.

அதை இறைவழிபாட்டோடு தொடங்கவே கோயிலுக்கு மகனோடு வந்தாள் அதிரல். ஊட்டியில் இருக்கும் இந்த முருகன் கோயில் அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மனம் அமைதி இல்லாமல் பெரும் கவலை சூழ்ந்து இருந்த பொழுது எல்லாம் இந்த கோயில் மட்டும் தான் அவளுக்கு துணையாக இருந்தது.

மனம் விட்டு பேசும் அளவுக்கு தங்கைக்கு வயது இல்லை. அவளே சிறுமியாக இதய அறுவை சிகிச்சை செய்து முடியாமல் இருக்கும் நேரத்தில் எதை அவளிடம் பகிர்ந்துக் கொள்ள.. எல்லாவற்றையும் தனக்குள் போட்டு பூட்டிக் கொண்டு இந்த முருகனிடம் வந்து கொட்டுவாள்.

அந்த முருகனோ புன்னகை முகத்துடன் அனைத்தயும் கேட்டுக் கொண்டு சிலையென நின்று இருப்பார்.

சுற்றிலும் இருக்கும் மலைப்பகுதியும் நிறைந்த பச்சை வண்ணமும் ஈர வாசனையும் அவளை வசப்படுத்திக் கொண்டு தன்னால் முடிந்த அளவுக்கு ஆறுதலை கொடுக்கும். அங்கு வந்தாலே அத்தனை இதமாக உணர்வால் அதிரல்.

அதனால் இந்த மலைக்கோயில் முருகன் அவளுடைய முதல் விருப்பம் என்று ஆனது. பூஜைக்கு சொல்லி இருக்க, இவர்கள் மூவரும் வந்த உடன் குருக்கள் பூஜையை செய்ய ஆரம்பித்தார்.

உளமார மகனின் எதிர்காலம் மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜைக்காக செய்து இருந்த வெள்ளம் சேர்த்த இனிப்பு பொங்களை நெய்வேதியம் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு தன் மகனின் கையால் கொடுத்தாள்.

அலுவலகம் வந்த தீரனோ அதிரல் வராமல் போகவும் அவளின் போனுக்கு அடித்தான். ஆனால் அவளோ எடுக்கவே இல்லை. விஜயனை அழைத்து கேட்க,

“சார் அவங்க இன்னைக்கு லீவ் சொல்லி இருக்காங்க” என்றான்.

“வாட் த ஹெல்” என்று ஒரு கெட்ட வார்த்தையை பிரயோகித்தவன்,

“அவங்களுக்கு நான் பாஸா இல்ல நீ பாஸா..?” முகத்தில் இறுக்கம் படர கேட்டான்.

“சார்..” என்று மிடறு விழுங்கியவன்,

“மறந்துட்டாங்க போல சார். எப்பொழுதும் போல அவங்க என்கிட்டையே லீவ் சொல்லிட்டாங்க.. ஐ அம் சாரி சார்.. இனி இந்த மாதிரி மிஸ்டேக் ஆகாம பார்த்துக்குறேன்” என்றவனை தீ விழி விழித்தவன்,

“கால் ஹேர்” என்றான்.

“இதோ சார்” என்றவன் வேகமாக அதிரலுக்கு போன் போட்டான்.

அவள் போனை வீட்டிலே விட்டுட்டு போய் இருந்த காரணத்தினால் போன் எடுக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவன் அழைத்துப் பார்க்க, எந்த பதிலும் அங்கிருந்து வராமல் போனது. தீரனோ பார்வையாலே அவனை சுட்டு பொசுக்கிக் கொண்டு இருக்க, சட்டென்று சமயோசித்து அதிரலின் தங்கை எண்ணை தேடி எடுத்து அவளுக்கு அழைத்தான்.

அலுவலகத்தில் வேலை செய்யும் அத்தனை பேரும் தங்களின் அலைப்பேசி என்னோடு குடும்ப உறுப்பினர்களின் அலைப்பேசி எண்ணையும் சேர்த்து வாங்கி வைப்பது வழக்கம். அதன் படி அதிரலின் தங்கை எண்ணும் சேமித்து வைக்கப்பட்டு இருக்க, அதை எடுத்து அழைத்தான்.

நேத்ரா போன் அடிக்கவும் எடுத்துப் பார்த்தாள். விஜயன் சார் என்று வர,

“அக்கா உனக்கு தான் போன்” என்று அதிரலிடம் நீட்டினாள்.

“சொல்லுங்க சார்” என்று அதிரலின் குரல் அந்த பக்கம் கேட்க, விஜயனின் கையில் இருந்த போனை பிடுங்கி இருந்தான் தீரன்.

“ஹலோ.. சார்.. கேக்குதா?” அதிரல் மீண்டும் பேச,

“ஹலோ” என்றான் முரட்டு குரலில். அந்த குரலை கேட்டு தூக்கிவாரிப் போட,

“சா...ர்..” என்றாள் அதிர்ந்து.

“உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு லீவ் போட்டு இருக்க.. ப்ராப்பரா ஒரு லீவை கூட இன்பார்ம் பண்ண தெரியாத உன்னை எல்லாம் யார் வேலைக்கு எடுத்தது” எடுத்த எடுப்பிலே எகிறினான் தீத்திரள் தீரன்.

“சார் நான் விஜயன் சார் கிட்ட இன்பார்ம் பண்ணி இருந்தேன்” தயங்கி தயங்கி அவள் சொல்ல,

“உனக்கு இப்போ யார் பாஸ்” பல்லைக் கடித்தான்.

“அது நீங்க” என்றாள் மென்று முழுங்கி.

“அப்போ நீ என்கிட்டே தானே இன்பார்ம் பண்ணி இருக்கணும்.. ஏன் உனக்கு நான் தான் பாஸுன்னு மறந்து போயிடுச்சா? சரியான யூஸ்லெஸ் பெல்லோ நீ” என்றவனின் குரலில் இருந்த காட்டம் பெண்ணவளை கண்கள் கலங்க செய்தது. வாயே திறக்கவில்லை அதிரல்.

“அக்கா என்ன ஆச்சு?” என்று நேத்ரா கேட்க,

“ஒன்னும் இல்ல.. ஒரு முக்கியமான விசயமா பேசிட்டு இருக்கேன். நீ தீராவை பார்த்துக்க.. நான் இப்ப வந்திடுறேன்” என்று அவர்களை விட்டு ஒதுங்கி போய் நின்றாள்.

அக்காவின் முகத்தில் தெரிந்த வருத்தம் கண்டு இவளுக்கும் வருத்தமாகிப் போனது.

குட்டி பையன் அம்மாவிடம் போக அடம் பிடிக்க,

“அம்மா வந்திடுவாங்க இருடா செல்லம்.. நாம போய் அங்க பூத்து இருக்க பூக்களை எல்லாம் பார்த்துட்டு வரலாம்” என்று அவனை தூக்கிக்கொண்டு சென்றாள் நேத்ரா.

“என்ன யூஸ்லெஸ்ன்னு சொல்லவும் அம்மணிக்கு ரோஷம் வந்திடுச்சா? உன்னை எல்லாம் ட்ரைனிங் பீரியட்ல போட்டு இருக்க கூடாது. ஸ்ட்ரெயிட்டா வேலையை விட்டே தூக்கி இருக்கணும்” என்று அவன் மேலும் பேச,

அதிரல் ஒன்றுமே பேசவில்லை. மௌனமாக இருந்தாள். அவளின் மௌனம் அவனுக்கு உருத்தியதோ என்னவோ

“ஏதாவது பேசு..” என்றான்.

“ஐ குவைட் மை ஜாப்” என்றாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : September 25, 2026 10:18 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top