Notifications
Clear all

அத்தியாயம் 15

 
Admin
(@ramya-devi)
Member Admin

“நிச்சையம் இந்த கங்குவனை தோற்கடிக்காம விட மாட்டேன்.. இட்ஸ் ய சேலஞ்..” என்றவள் அவன் ஒரு சீட்டுக்கு கோட் பண்ணிய அமவுண்ட்டை விட இருபது பெர்சென்ட் கம்மியாக கோட் பண்ணினாள்.

அதோடு டொனேஷன் பீஸ் கிடையாது என்று விளம்பரம் செய்ய அட்மிஷன் வந்து குவிந்தது.

ஸ்கூலை திறந்து வைக்க முதல் அமைச்சர் வருவர் என்று விளம்பரம் பண்ண யார் தான் ஸ்கூல்ல அட்மிஷன் போட வரமாட்டார்கள்.

வேலைக்கு எடுத்த டீச்சர்ஸ் எல்லாமே பக்கா எலிஜிபில். அவர்களுக்கு குடுக்க வேண்டிய ஊதிய தொகையை கணிசமாக ஏற்றி இருந்தாள்.

அதில் பெரும்பாலான எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டாப் வந்து இணைந்துக் கொள்ள ஸ்கூல் நேம் மிகவும் பிரபலமானது.

அவள் எந்த கமிஷனும் வைக்கவில்லை. ரெண்டு பிள்ளைகள் மூணு பிள்ளைகளை சேர்த்து விட்டால் அவர்களுடைய பிள்ளைகளின் பீஸ் குறையும். என்ற எந்த டிமேண்டும் அவள் வைக்கவில்லை. எல்லோருக்கும் ஒரே பீஸ் தான்.

இதோ இந்த வார இறுதியில் அவளின் முதல் பள்ளிக்கூடம் திறப்பு விழா.

பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு கங்குவனை பார்க்க சென்றாள்.

பச்சை பெருமாளுக்கு போன் பண்ணி கேட்டாள்.

“சார் இன்னைக்கு ஸ்கூலுக்கு வரல மேடம்.. வீட்டுல தான் இருக்காங்க” என்றார் அவர்.

வீட்டுக்கு நேரடியாக சென்றாள்.

வந்தவளை அமர வைத்த பணியாளர் கங்குவனிடம் இன்பாம் செய்தார்.

விழிகள் இரண்டும் செக்க செவேல் என சிவந்து இருக்க கலைந்த தலை முடியோடு, வெறும் பாக்சரோடு கீழே இறங்கி வந்தான்.

“ஆளும் தலையும் பாரு.. எப்படி வராருன்னு” வாய்க்குள் முணகிக் கொண்டாள்.

“வேற யாராவதுன்னா நீட்டா வந்து இருப்பேன்டி.. நீ தானே.. உனக்கு இந்த அளவுக்கு மரியாதை போதும்” என்று அவளுக்கு எதிரில் வந்து அமர்ந்தான். கொஞ்சமும் டீசென்சி இல்லாமல் வந்து அமர்ந்தவனை கடுப்புடன் பார்த்தவளின் விழிகள் மேலே பார்த்து அலைப்பாய,

“நீ தேடுறவன் இங்க கிடையாது” என்றான் அமர்த்தலாய்.

“நான் யாரையும் தேடலையே..” பட்டென்று பார்வையை கீழே இறக்கிக் கொண்டவளுக்குள் சின்ன பிள்ளையின் மீதான தேடல் மிக அதிகமாக இருந்தது. அதை அவனிடம் இருந்து மறைத்துக் கொண்டு,

“வார்ம் வெல்கம் மிஸ்டர் கங்குவன்.. இந்தாங்க” என்று அவனிடம் பத்திரிக்கையை நீட்டினாள் வேரல்.

“ப்ச்” என்று வாங்கி ஒரு பார்வை கூட பார்க்காமல் அதை விசிறி அடித்தான்.

“நீங்க இதை தான் செய்வீங்கன்னு எனக்கு தெரியும்..” என்றவள், டைம் டேட் என அவனுக்கு சொல்லியவள்,

“சீப் கெஸ்ட் யாருன்னு தெரியுமா?”

“என்ன உன் தாத்தனா”

“இல்ல.. சீப் மினிஸ்டர்”

“வச்சுக்கோ” என்றான் ஏக கடுப்பாக.

“கூடவே இன்னொரு ஸ்பெஷல் கெஸ்ட் வராங்க.. அது யாருன்னு தெரியுமா?”

“எவனா இருந்தா எனக்கு என்னடி. பத்திரிக்கை வச்கிட்டல்ல மரியாதையா கிளம்பு” பல்லைக் கடித்தான்.

“தோ.. இப்படி நீங்க பல்லைக் கடிக்க தான் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன் வேலை மெனெக்கெட்டு” என்றவள்,

“அந்த இன்னொரு ஸ்பெஷல் கெஸ்ட் நீங்க தான்.. கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரம் நீங்க ஸ்பீச் குடுக்கணும்.. அதையும் இன்விட்ஷன்ல மென்ஷன் பண்ணி இருக்கேன். சோ அன்னைக்கு லீவ் போடாம இந்த மாதிரி ட்ரவுசரோட வராம நீட்டா கோர்ட் சூட் போட்டுட்டு வாங்க,. மறக்காம உங்க பிள்ளையையும் கூட்டிட்டு வாங்க” சொன்னவள்

“ஆமா கோட் வாங்க காசு இருக்கா.. இல்ல அன்னைக்கும் வெறும் ட்ரவுசர் மட்டும் தானா?” நக்கலாக கேட்டவள், வீட்டை விட்டு வெளியேறப் பார்க்க அவளை போக விடாமல் செய்தவன்,

“யாரை கேட்டுட்டு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க.. கொழுப்பாடி” இரைந்தான் கோவத்தில்.

பின்ன அவனுக்கு எதிராக ஸ்கூலை திறந்தது மட்டும் அல்லாது அவனையே மோட்டிவேஷன் ஸ்பீச் குடுக்க சொல்லி சொன்னால் யாருக்கு தான் கோவம் வராது.

அதுவும் ஒரு இடத்தில் இல்லை. அவன் ஸ்கூல் வைத்து இருக்கும் இடங்களில் மிக செலக்டிவாக மூன்று இடத்தை இவள் தேர்ந்தேடுத்து சரியாக அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்கூலை திறக்க இருக்கிறாள்.

மேலோட்டமாக பார்த்தாலே அவனுக்கு எதிராக தான் இவள் ஸ்கூல் திறந்து இருக்கிறாள் என்று தெரியும். அப்படி இருந்தும் அவனையே தலைமை ஏற்று ஸ்பீச் குடுக்க இன்விட்டேஷனோடு வந்து இருக்கும் இவளுக்கு எவ்வளவு கட்ஸ் இருக்கும் என்று அத்தனை ஆக்ரோஷம் கொண்டான்.

அந்த ஆத்திரத்தையும் ஆக்ரோஷத்தையும் அவளிடம் அப்படியே காட்ட,

அவளோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், “இந்த ஆத்திரத்தையும் அகம்பாவத்தியாயும் கடைசியா ஒரு முறை பார்த்துட்டு போகலாம்னு தான் இந்த இன்விடேஷன் வைக்க வந்தேன்” என்றவள்,

“இந்த அகம்பாவம் ரொம்ப நாளைக்கு நீடிச்சு நிலைக்காது மிஸ்டர். அதனோட முதல் படி தான் இந்த ஸ்கூல் ஓப்பெனிங். ரெண்டாவது படி இந்த இன்விடேஷன்.. இதுல உங்களையே தலைமை தாங்குமாரு அடிச்சேன் பாருங்க. அது தான் என்னோட சக்சஸ்.. சிஎம்மே வரும் பொழுது ஆப்ட்ரால் சியின் ஆப் ஸ்கூல்ஸ் கரஸ் வர மாட்டாரா என்ன.. நிச்சியம் வருவாரு.. வந்து தானே ஆகணும்.. அடுத்த வருடம் எந்த குளறுபடியும் இல்லாம எல்லா ஸ்கூலையும் ரன் பண்ணுமே.. எனக்கு பயம் இல்லன்னாலும் சிஎம்முக்கு பயம் வரும் தானே” நக்கலாக சொன்னவளை விழிகள் சிவக்க வெறித்துப் பார்த்தான்.

“கையாலாகாத தனம்னா என்னன்னு ஒவ்வொரு நொடியும் என் கிட்ட இருந்து கத்துப்பீங்க.. லெசன் கொஞ்சம் டப் தான். பட் ஈசியா நடத்துவேன்.. நீங்க பிக்கப் பண்ண தான் கொஞ்சம் சிரமம்” வார்த்தையிலே அவனிடம் விளையாடியவள்,

“கொழுப்பு அது ஏகத்துக்கும் இருக்கு தான். ஆனா அதுக்காக உங்களை அப்படியே விட முடியாது இல்லையா மிஸ்டர் கங்குவன்..” என்றவளை உறுமும் வெறியோடு பார்த்தவன்,

“இந்த கங்குவன் யாருன்னு முழுசா தெரியாம ஆடிப் பார்க்காதடி.. ரொம்ப பாவமா போயிடுவ”

“அது என்னோட கஷ்ட்டம் நான் பார்த்துக்குறேன். நீங்க எனக்காக கவலை பட வேண்டாம்.. ஓகே”

“யுவர் விஷ்” சொன்னவன் அலட்டிக் கொள்ளவே இல்லை. பிள்ளை பூச்சி என்றே அவளை எண்ணினான். ஆனால் அவள் பிள்ளை பூச்சி என்று அறியாமல் போனான்.

“உங்களால என்னை அடக்கவே முடியாது மிஸ்டர்.. இட்ஸ் ய சேலன்ஞ்” என்றவள் ஸ்கூல் திறப்பு விழாவை மிக சிறப்பாக ஏற்பாடு செய்தாள். அன்றைக்கு வந்து இருந்த அணைத்து பேரன்சுக்கும் காலை உணவு ஏற்பாடு செய்து இருந்தாள்.

பத்து அமைச்சர்கள் புடைச்சூழ வந்தார் சிஎம். கட்சி மீட்டிங்காய் இது இருக்கக் கூடாது என்று முன்பே அவள் திட்ட மிட்டு இருந்தாள். அதற்காக சில எழுத்தாளர்களையும் பேச்சாளர்களையும் வர வைத்து உரை ஆற்ற ஏற்பாடு செய்து இருந்தாள்.

நேற்றிலிருந்து கொஞ்சமும் தூக்கமில்லை வேரலுக்கு. என்ன தான் கங்குவனுக்கு எதிராக ஸ்கூலை தொடங்கி விட்டு இருந்தாலும் அதை சிறப்பாக நடத்த இயலுமா என்கிற பதட்டம் அவளை மிகவும் ஆட்க்கொண்டு இருந்தது.

லேசான பதட்டம் உள்ளுக்குள் இருந்துக் கொண்டே இருந்தது. லேசான ஒப்பனையோடு சில்க் காட்டன் புடவையில் கம்பீரமாக ஸ்கூலுக்கு வந்தாள்.

எல்லா ஏற்படும் சரியாக இருந்தது. எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்தவள், வந்த கெஸ்ட்டை அவரவர்களுக்கு உரிய இடத்தை காண்பித்து அமரச்சொல்ல வாலண்டியர்களுக்கு முன்பே அறிவுறுத்தி இருந்தாள். எனவே என்னை போட்டு சுழலும் சக்கரம் போல எந்த தங்கு தடையுமில்லாமல் எல்லாமே பக்காவாக நகர்ந்துக் கொண்டு இருந்தது.

எல்லோரும் வந்திட்டாங்க ஆனா கங்குவன் மட்டும் இன்னும் வந்து இருக்கவில்லை.

“நீ தேவை இல்லாமல் ரிஸ்க் எடுத்துட்டியோன்னு தோணுது கண்ணா” என்றார் தந்தை.

“இல்லப்பா அவர் வருவாரு..” என்றாள் அத்தனை உறுதியாக.

அவளின் நம்பிக்கையை பொய்யாக்காமல் அந்த நேரம் கருப்பு வண்ண கோட் சூட்டில் மிகவும் மிடுக்காக வந்து இறங்கினான் கங்குவன். கண்களில் கூலர்ஸ், கையில் ரோலேக்ஸ் வாட்ச், கழுத்தில் மின்னியது தங்க சங்கிலி. இன்னொரு கையில் தங்க காப்பு மின்ன, முடி காற்றில் அசையாது ஜெல் வைத்து தடவி முறுக்கேறிய சிங்கத்தின் தோரணையுடன் நடந்து வந்தான். கூடவே அவனது தோரணையை அப்படியே பிரதிபலிப்பது போல குட்டியாய் வந்து இறங்கினான் அவனது மகன். அப்பாவை போல கருப்பு வண்ண கோட் சூட், கண்ணில் கண்ணாடி, இரு கையிலும் அவன் அப்பாவை போலவே நகை அணிந்து காலில் ப்ளாக் ஷூ பளபளத்தது இருவருக்கும்.

இருவரும் ஒரு சேர நடந்து வருவதை பார்த்த வேரலுக்கு ஒரு கணம் கண்களை அகற்றவே முடியவில்லை.

“நல்ல தோரணை தான்” முணகிக் கொண்டாள். ரேபர்ன் அணிந்து இருந்த பொழுதும் கங்குவனின் விழிகள் தன்னை ஊடுருவிக் கொண்டு தான் இருக்கிறது என்பதை உணர்ந்துக் கொண்டவள், சட்டென்று பார்வையயை அவனுக்கு கீழே கொண்டுப் போனாள்.

இவளை பார்த்த உடனே வேகமாய் கண்ணில் அணிந்து இருந்த கண்ணாடியை கழற்றி தன் கோட் பட்டனில் தொங்க விட்டுக் கொண்டவன்,

ஆசையாக ஆன்டி என்று அழைத்தான். அழைக்கும் பொழுதே அவளிடம் ஓடிவிட துடித்தான். அதை பொறுக்க இயலுமா இந்த காட்டானுக்கு.

“கீப் கொயிட்” அதட்டினான்.

Loading spinner

Quote
Topic starter Posted : September 7, 2026 3:06 pm
(@nimala19)
Active Member

Interesting 

Loading spinner

ReplyQuote
Posted : September 7, 2026 3:42 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top