குட்டி எபி.. தான்.. டீசர்னு கூட சொல்லலாம் தோழமைகளே..
இடைவிடாத வேலை..
அதனால தான் இந்த கதை குடுக்க முடியவில்லை..
சாரி நட்பூக்களே
வேரலின் நெஞ்சோடு பதுங்கி கொண்ட சிறுவன்,
“ஏன் ஆன்டி என்னை விட்டுட்டு போனீங்க.. நைட் எல்லாம் நீங்க பக்கத்துல இல்லாம பயமா இருந்தது” என்றான்.
“பயமா இருந்ததா அப்பா தான் உன் கூடவே இருந்தாங்களே கண்ணா”
“அவரை பார்த்து தான் பயம்” என்றான் கங்குவனை கை காட்டி.
பட்டென்று சிரிப்பு வந்து விட்டது அவளுக்கு. நிமிர்ந்து கங்குவனை பார்த்தாள். அவன் பார்த்த பார்வையில் விரிந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் அடுத்த நிமிடம்.
“அப்படி எல்லாம் சொல்லக் கூடாது கண்ணா. உன்னோட அப்பா தானே”
“ம்ஹும்...” என்று தலையை ஆட்டிவிட்டு மீண்டும் அவளின் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டான்.
“டேய் கண்ணா” என்றவள் அவனை சமாதனம் செய்ய முடியாமல்,
“சரி என்ன சாப்பிட்ட” என்று கேட்டாள்.
“நேனாம்”
“அப்படி சொன்னா ஆன்டி அப்புறம் தம்பியை பார்க்க வரவே மாட்டேன்”
“நேனாம்.. நேனாம்ம்” என்று அவன் அடம் பிடிக்க,
“அப்படின்னா ஆ வாங்கிக்கணும்” என்று அவள் டீல் போட,
தலையை ஆட்டினான்.
“குட் வா சாப்பிடலாம்” என்று கங்குவனை பார்த்தாள்.
“சாப்பாடு இன்னும் வரல”
“வாட்?” என்று அதிர்ந்தவள்,
“உங்க மெய்ட் யாரும் சரியே இல்லை..” கடிந்துக் கொண்டவள், தன் பேக்கில் இருந்த டிபன் பாக்சை எடுத்து பிள்ளைக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.
“ஹலோ என்ன கொஞ்சம் இடம் குடுத்தா ரொம்ப தான் ஓவரா போற?”
“யாரு ஓவரா போறா.. உடம்பு சரியில்லாத பிள்ளைக்கு நேரத்துக்கு சாப்பாடு குடுக்கணும்னு உங்களுக்கே தெரியாதப்பா நீங்க எப்படி உங்க மெயிட் கிட்ட இன்பார்ம் பண்ணுவீங்க..” என்றவள்,
“அவங்க சரியில்லன்னு சொல்ல மாட்டேன்.. நீங்க தான் சரியில்ல” அவனை நேருக்கு நேராக பார்த்து குற்றம் சுமத்தினாள்.
“ஏய்..” என்று அவளை அடிக்க கை ஓங்கி இருந்தான். பிள்ளை மிரண்டு போய் வேரலின் நெஞ்சோடு ஒண்டிக் கொண்டான்.
ஆனால் வேரல் கொஞ்சமும் பயப்படவில்லை. “இந்த மிருக குணம் தான் ஆகாது.. சின்ன பிள்ளை முன்னாடி எப்படி நடந்துக்குறதுன்னே தெரியல.. இதுல நீங்க செயின்ஸ் ஆப் ஸ்கூலோட ஓனர்.. வெளில சொல்லிடாதீங்க மிஸ்டர் கங்குவன்.. சத்தியமா உங்க ஸ்கூல்ல யாரும் வந்து அவங்க பிள்ளையை சேர்க்க மாட்டாங்க” என்றாள் கொஞ்சமும் அசராமல்.
“ஏய் என்னடி இருக்க இருக்க விட்டா ரொம்ப தான் பேசிட்டு போற.. என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்.. இல்ல என் மேனேஜ்மென்ட பத்தி தான் உனக்கு என்ன தெரியும். என்னவோ இஷ்ட்டத்துக்கு பேசிட்டு இருக்க” ஏகத்துக்கும் எகிறினான்.
“உண்மைய சொன்னதுல உங்க ஆணவம் ரொம்ப அடி வாங்கி இருக்கு மிஸ்டர் கங்குவன்.. அதை கம் போட்டு ஓட்ட வச்சு சரி செய்ங்க.. அப்ப தான் இன்னும் ஆணவத்துல ஆட முடியும்” என்றாள்.
“ஏய் அவ்வளவு தான்டி உனக்கு மரியாதை.. முதல்ல என் மகனை விட்டு எழுந்திரி.. வெளில போ.. உன்னை யாரு இங்க கூப்பிட்டா.. என் மகனை பார்த்துக்க எனக்கு தெரியும். நீ ரொம்ப அலட்டிக்காத” என்றவன்,
“என்ன இவன் எலிஜிபில் பேச்சுலரா இருக்கானே.. இவனை வளைச்சு போட்டா நாலு தலைமுறைக்கு சொத்து வரும். அதுக்கு என் மகனை மயக்கி என்னை வளைச்சு போட்டு காரியம் சாதிக்க பார்க்குறியா? இவனை கட்டிக்கிட்டா வசதியா காலம் பூரா காலாட்டிக்கிட்டு சாப்பிடலாம்னு நினைச்சியா?” வார்த்தையில் வன்மம் தெறிக்க அவன் பேசிவிட,
தீச்சுட்டார் போல ஆனது பெண்ணவளுக்கு. நெஞ்சோடு சேர்த்து பிடித்து இருந்த பிள்ளை அது வரை இறகு போல சுமை இல்லாமல் இருந்தவன் கங்குவனின் பேச்சை கேட்டு இரும்பு குண்டை போல கணத்துப் போனான்.





