Notifications
Clear all

அத்தியாயம் 14

 
Admin
(@ramya-devi)
Member Admin

வேரலுக்கு ஏன்டா இங்க வந்தோம் என்று தோன்றியது. நெஞ்சில் இருந்த பிள்ளையின் சுமை அதுவரை தெரியாது பாசத்தில் ஒன்றிப் போய் இருந்தவளுக்கு பிள்ளை அதிகமாக கனப்பது போல தோன்றியது.

தீச்சுடுவது போல இருந்தது. ஆனால் அதற்காக பிள்ளையை தூக்கி அவனிடம் கொடுத்து விட முடியுமா? பிள்ளையின் நெஞ்சு காயம் பட்டு போய் விடாதா..

நிதானமாக கங்குவனை ஏறிட்டு பார்த்தாள்.

“உங்க சீப்பான குணம் இப்ப தெரியுதா மிஸ்டர் கங்குவன்.. வார்த்தைகள் எப்படி வருதுன்னு பாருங்க.. உங்களை மயக்கி எனக்கு என்ன ஆகப் போகுது. சொல்ல போனா உங்கக்கிட்ட இருக்குற பணத்தை விட என் அப்பாக்கிட்ட ரெண்டு மடங்கு இருக்கு”

“என் பார்வையில இப்ப நீங்க தான் பிச்சைக்காரன் மாதிரி தெரியுறீங்க” அவளும் வார்த்தையை சாட்டையாக சுழற்றினாள்.

கங்குவனை கண்டு கொஞ்சமும் அவள் அச்சப் படவில்லை.

“ஏய் என்னடி திமிரா.. யாரை பார்த்து பிச்சைக்காரன்னு சொன்ன” அவளை அடிக்கவே பாய்ந்து விட்டான். பிள்ளை மிரண்டுப் போனான். அவனை தன் நெஞ்சோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டவள்,

“உங்களை தான் மிஸ்டர் இதுல உங்களுக்கு என்ன சந்தேகம்” கேட்டவள்,

“பணத்துலையும் சரி குணத்துலையும் சரி நீங்க பிச்சைக்காரன் தான். அதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்..” என்றவளை கை நீட்டி அடித்தே விட்டான்.

அதில் வேரலின் முகம் சிவந்துப் போய் விட்டது. ஆனாலும் அவள் கொஞ்சமும் அசரவே இல்லை.

“இப்படி மிருகமா நடந்துக்க தான் தெரியும் உங்களுக்கு. எங்க அன்பா ஒரு பார்வை பாருங்க, இல்ல கனிவா ஒரு சொல் சொல்லிடுங்க பார்க்கலாம்.. சுட்டு போட்டா கூட உங்களுக்கு அதெல்லாம் வராது.. ஏன்னா நீங்க சரியான சேடிஸ்ட்” என்றாள்.

“ஏய் அவ்வளவு தான்டி உனக்கு.. என்ன விட்டா ரொம்ப பேசிட்டு இருக்க.. முதல்ல என் பிள்ளையை குடுடி” என்று வலுக்கட்டாயமாக அவளிடம் இருந்து பிள்ளையை பிடுங்கி கதவை திறந்து வெளியே தள்ளி விட்டான். கீழே போய் விழுந்தவள்,

“மிருகம் மிருகம்.. மிருகத்துக்கு கூட கொஞ்ச நஞ்ச அன்பு இருக்கும். ஆனா உங்கக்கிட்ட எள்ளு முனையளவு கூட இல்ல.. அப்படியாப்பாட்ட உங்கக்கிட்ட வளர்ற இந்த பிள்ளை தான் பாவம். ஆனா நான் அவனை உங்கக்கிட்ட வளர விட மாட்டேன்” என்றாள் சவாலாய்.

“என்னடி பண்ணுவ.. உன்னால என்ன பண்ண முடியும்” அத்தனை ஆணவமாய் கேட்டான்.

“என்னால என்ன பண்ண முடியும்னு நான் காட்டுறேன்” என்றவள்,

“கண்ணா ஆன்ட்டிட்ட இருக்க உனக்கு ஓகேயா.. இல்ல உனக்கு உன் அப்பா தான் வேணுமா?” என்று கேட்டாள்.

பிள்ளைக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவன் தலையை குனிந்துக் கொள்ள,

“அவன் என் பிள்ளைடி.. என்னை தாண்டி வர மாட்டான்.. போ போய் வேற ஸ்கூலை தேடு.. உனக்கு இனி என் ஸ்கூல்ல இடமே இல்லை” அவளை முழுமையாக உதறி தள்ளிவிட்டான் தன் பிள்ளையிடம் இருந்து.

கொஞ்சம் கூட வேரல் அலட்டிக் கொள்ளவே இல்லை.

“போடா.. என் டொமேட்டோ” என்று விட்டு வீட்டுக்கு வந்தவள், முதல் வேலையாக தன் தந்தையிடம் போய் நின்றாள்.

ஆனால் பிள்ளையை அப்படி தனியாக விட்டுட்டு வந்து இருக்கவே கூடாது என்று அவளின் மனம் அடித்துக் கொண்டது.

“என்னடா கண்ணா” என்று அவர் வாஞ்சையாக விசாரித்தார்.

“ப்பா எனக்கு ஸ்கூல் ஆரம்பிக்கணும்” என்றாள்.

“டேய் நிஜமாவா? இதை தான் நான் முன்னவே சொன்னேன். யாரோ ஒருத்தர் கிட்ட வேலைக்கு போறதை விட அப்பவே உனக்கு ஸ்கூல் கட்டி தரேன். நீ பார்த்துக்கனு சொன்னேன். ஆனா கேட்டியா?” என்றவர்,

“இப்பவாச்சும் என் தங்கத்துக்கு புத்தி வந்ததே..” அகமகிழ்ந்துப் போனவர்,

“ஆமா என்ன திடிர்னு மாற்றம்”

“அதெல்லாம் தெரிஞ்சுக்க வேணாம் ப்பா.. பட் எனக்கு ஸ்கூல் வேணும்” என்றாள் பிடிவாதமாய்.

“உனக்கு இல்லாததாடா கண்ணா.. இன்னைக்கே பில்டர்சை வர சொல்றேன். எந்த இடம்னு நீ பார்த்து சொல்லு”

“எனக்கு” என்று அவள் ஒரு இடம் சொல்ல, முரளி யோசனையுடன் மகளை பார்த்தார்.

“இது அவசியமா கண்ணா”

“எனக்கு அவசியம் ப்பா அந்த ஆளு ஸ்கூலுக்கு முன்னாடி என் ஸ்கூல் அங்க இருக்கணும்.. என் ஸ்கூலை சுத்திட்டு தான் அந்த ஆள் ஸ்கூல் போகனும்” என்று அவள் அழுத்தமாக சொல்லிவிட, மகள் சொன்னதன் பிறகு அப்பீல் ஏது.

இன்றைக்கே சிட்டிக்குள் பல இடங்களில் வாங்கி போட்டு இருந்த எம்ப்டி கிரவுண்ட் பலவற்றை பில்டர்ஸ் வந்து பார்த்து விட்டு ஒரே நேரத்தில் மூன்று இடத்திலும் அஸ்த்திவாரம் போடுவதற்கு எற்பாடு செய்து விட்டார்கள்.

அது எல்லாமே கங்குவனின் ஸ்கூலுக்கு வெகு அருகாமையில் இருந்ததோடு அவளின் இடத்தை தாண்டி தான் போகிற மாதிரி இருந்தது.

“உனக்கு ஆப்பு வைக்க ஆளில்லாம தானே ஓவரா ஆடிட்டு இருக்க.. இனி உனக்கு எதிரா நிக்கிறது நான்.. இந்த வேரலை உன்னால எதுவும் செய்ய முடியாது. என் வளர்ச்சியை பார்த்து சாகு” மனதுக்குள் கருவிக் கொண்டே அடுத்த ஒன்பது மாதங்களை கடந்தாள்.

அவள் ஸ்கூல் கட்டுவதை தெரிந்துக் கொண்டு கடுப்பானவன் நேரடியாகவே அவளை எச்சரித்தான்.

ஆனால் அவளோ,

“என்ன மிஸ்டர் பயமா? நான் இப்ப தான் பர்ஸ்ட் ஸ்டேப் எடுத்தே வச்சு இருக்கேன். அதுக்குள்ள அலறி அடிச்சுட்டு இப்படி  ஓடி வர்றீங்க..”

“யாருக்குடி பயம்”

“வேற யாரு உங்களுக்கு தான்” என்றாள் அழுத்தமாய்.

“நீயல்லாம் எனக்கு ஒரு ஆளாடி.. நினைச்ச நேரம் உன்னை கிள்ளு கீரை மாதிரி கிள்ளி போட்டுட்டு போயிக்கிட்டே இருப்பேன்”

“அப்ப கிள்ள வேண்டியது தானே..” என்று அவள் சொல்ல,

“வாட் யூ மீன்” என்றான் ஒரு கணம் திகைத்து.

“நீங்க தானே கிள்ளிடுவேன்னு சொன்னீங்க.. அதை தான் நான் மேன்ஷன் பண்ணேன்” என்று அவள் சொல்ல, இவனுக்கு தான் உள்ளுக்குள் ஒரு கணம் தடுமாற்றம் நிகழ்ந்தது.

அதுவும் சரியாக அவளின் இடுப்பு எடுப்பாக தெரிய நின்று இருந்த நேரம் அவள் சொன்னதை அவளின் இடுப்போடு இணைத்து வைத்து பார்த்த தன் புத்தியை அதட்டி ஒடுக்கி விட்டு அவளை ஆத்திரமாக முறைத்தான்.

“உங்களுக்கு போட்டியே நான் தான் மிஸ்டர்.. ரொம்ப தலை கணத்தோட ஆடிட்டு இருக்கீங்களே.. கொஞ்சமாச்சும் உங்களை தட்டி வைக்க வேண்டாம்..” என்றவளை துச்சமாக எண்ணிய கங்குவன்,

“வெத்து வேட்டுடி நீ” என்றான்.  

“இருந்துட்டு போறேன். ஆனா இந்த வெத்து வேட்டு தான் உங்களை கவிழ்க்கப் போகுது மிஸ்டர்.. அதை மைண்டல் வச்சுக்கோங்க” சவால் விட்டவள் தீயாய் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

தாத்தா மினிஸ்டர், அப்பா பிசினெஸ் மேன் என்பதால் அவளுக்கு வெகு சுலமபமாக ஸ்கூலுக்கு அப்ரூவ்ட் கிடைத்தது. ஒரே வளாகத்தில் தமிழ் மீடியம், சிபிஎஸ்சி, மேட்ரிக்லேஷன் என தொடங்கினாள்.

அதுவரை ஒன்றும் செய்யாமல் இருந்தான் கங்குவன்.

இட வசதி ரொம்ப அதிகம் என்பதால் ஒரே வளாகத்ததில் கல்லூரியையும் கூட சேர்த்து கட்டலாம். ஆனால் அவள் கல்லூரி கட்டுவதை விட்டுட்டு கங்குவன் ஆரம்பித்த இண்டர்நேஷனல் ஸ்கூலை ஆரம்பித்தாள்.

அதில் சீற்றம் கொண்டு அவளிடம் வந்து நின்றான்.

“நான் சொன்னனே மறந்து போயிடுச்சா?” நக்கலாக கேட்ட வேரல்,

“நிச்சையம் இந்த கங்குவனை தோற்கடிக்காம விட மாட்டேன்.. இட்ஸ் ய சேலஞ்..” என்றவள் அவன் ஒரு சீட்டுக்கு கோட் பண்ணிய அமவுண்ட்டை விட இருபது பெர்சென்ட் கம்மியாக கோட் பண்ணினாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : September 7, 2026 10:10 am
(@nimala19)
Active Member

Sabash sariyana potti

Loading spinner

ReplyQuote
Posted : September 7, 2026 3:37 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top