Notifications
Clear all

அத்தியாயம் 11

 
Admin
(@ramya-devi)
Member Admin

 

சரியாக லஞ்ச் பீரியட்கு முன்னாடி அவளை அழைத்து விட, அவளும் தன் ஹென்ட் பேகை எடுத்துக் கொண்டு பதறிக் கொண்டு வெளியே வர, அவளுக்காக கார் தயாராக இருந்தது. ஏறி அடுத்த கொஞ்ச நேரத்திலே ஹாஸ்பிட்டல் வந்து விட்டாள்.

வந்தவளை பிடி பிடியென்று பிடித்துக் கொண்டான் கங்குவன்.

“நீ எல்லாம் ஒரு பெண்ணா? இதுல டீச்சர் வேற.. உனக்கு கொஞ்சம் கூட ரெஸ்பான்சிபிலிட்டியே கிடையாது. அப்படி இருந்து இருந்தா என் பிள்ளையை இப்படி மூச்சு முட்டிப் போகும் அளவுக்கு அழவிட்டு இருப்பியா? உனக்கு எல்லாம் டீச்சர் வேலை எந்த மாங்கா மடையன் போட்டு குடுத்தான்” ஆத்திரத்தில் கண் மண் தெரியாமல் அவன் பாட்டுக்கு திட்டிக் கொண்டு இருக்க,

அவனை ஒரு பார்வை நிமிர்ந்துப் பார்த்தவள் பிள்ளையிடம் ஓடினாள். அவள் உள்ளே வருவதை பார்த்த உடனே பிள்ளை இன்னும் பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பிக்க,

“இல்லடா கண்ணா.. ஆன்டி சும்மா இங்க பக்கத்துல தான் போனேன்.. பிரின்ஸ் தூங்கி எழுந்து எழறதுக்குள்ள வந்துடலாம்ன்னு போனேன்.. ஆனா என்னோட பிரின்ஸ்  அதுக்குள்ள எழுந்துட்டீங்க” என்று அவனை தூக்கிக் கொண்டவள்,

“நான் ப்ரின்சா..” மழலையில் கேட்டவனை பார்த்து சிரித்தவள்,

“ஆமா” என்றவள், “ஆமா பிரின்ஸ்னா என்னன்னு தெரியுமா என் தங்கத்துக்கு” கேட்டாள்.

“ம்ம் ராஜா பிக் மேன்” என்றான்.

“யா குட்.. மிகப்பெரிய சாம்ராஜ்யத்துக்கே முடி சூட்டிய இளவரசன் தான் இந்த பிரின்ஸ்..” என்றாள்.

பிள்ளைக்கு புரியவில்லை அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

“சாம்ராஜியத்துக்கு மட்டும் இல்ல என்னோட மனசுக்கும் நீங்க தான் லிட்டில் பிரின்ஸ் மை பாய்” என்று கொஞ்சியவள், அவனின் கண்ணீர் முகத்தை துடைத்து கண்களின் இமை முடிகளில் முத்து போல துளிர்த்து நின்ற கண்ணீரையும் சேர்த்து துடைத்தவள்,

“என்ன கண்ணா இப்படி அழுது இருக்க.. பிக் பிரின்சஸ் எதுக்கும் அழ மாட்டாங்க தெரியுமா?” என்றவள்,

“கண்ணா இப்படி எல்லாம் அழுதா ஆன்டிக்கு கஷ்ட்டமா இருக்கும் தெரியுமா? அப்புறம் நான் தம்பியை பார்க்கவே வர மாட்டேன்” சொன்னவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் சின்னவன்.

அவனிடம் எழுந்த விசும்பல் அவளை நிலைகுலைய செய்தது.

அவனின் முதுகை தடைவி விட்டு நீவி விட்டு என அவள் செய்துக் கொண்டு இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக அவனது விசும்பலும் தேம்பலும் நின்றது.

அவளின் மார்பில் தலை சாய்த்து இருந்தவனின் முகத்தை நிமிர்த்தி அவனின் நெற்றியில் முத்தம் வைத்தவள்,

“ஆமா சாப்பிட்டியா?” என்று கேட்டாள்.

அவன் இல்லை என்று தலையை ஆட்ட,

“சாப்பிடலாமா?” கேட்டாள்.

“நேனாம்”

“ஏனாம்?” ரைமிங்கா அவள் கேட்க சின்னவன் முகத்தில் சின்ன புன்னகை வந்தது.

“ஓ என் பிரின்ஸுக்கு ரைமிங்கா பேசுனா ரொம்ப பிடிக்குமோ” கேட்டு அவனின் மூக்கில் லேசாக திருகி கொஞ்சியவள்,

“சாப்பிட்டா தான் பாடி பார்ட்ஸ் எல்லாம் பிக் பிக்கா ஆகும்.. இல்லன்னா இப்படி சுறுங்கி போயிடும். அப்புறம் உன்னால நடக்க கூடாது தங்கம்.. ரெண்டு சாப்பிடலாமா?” கேட்டவளை மறுத்துப் பார்த்தான்.

“என்ன ஆச்சு கண்ணாவுக்கு சாப்பாடு பிடிக்காதா?”

“ம்ம்” என்றான் தலையை ஆட்டி.

“ஏன் பிடிக்காது..”

“தெர்ல” உதட்டை பிதுக்கி சொன்னவனை அப்படியே அள்ளிக் கொள்ள நெஞ்சம் தவித்தது.

“சரி இன்னைக்கு நீ சாப்பிடுறியோ உன் கூட நானும் சாப்பிடுறேன். ஏன் தம்பிக்கு பிடிக்கலன்னு நாம ரெண்டு பேரும் ஆராய்ச்சி செய்யலாமா?” கேட்டுக் கொண்டே அங்கு அடுக்கி இருந்த கெரியரில் உணவை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டு சின்னவனிடம் வந்தாள்.

தட்டை பார்த்த உடனே முகத்தை திருப்பிக் கொண்டான். அதை பார்த்து சிரிப்பு வந்தது வேரலுக்கு.

“செம்ம சேட்டை” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் திரும்பி பார்க்க அங்கே கையை கட்டிக் கொண்டு இருவரையும் முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் கங்குவன்.

இதுவரை அவனை இருவரும் கண்டுக்கொள்ளவே இல்லையே..

அவனது முறைப்பில் சட்டென்று திரும்பிக் கொண்டவள்,

“இது ஆன்டி ப்ரிப்ரேஷன்..” என்று தன்னுடைய டிபன் பாக்சை எடுத்து வைத்தாள்.

அதை ஒரு பார்வை பார்த்தவன் மீண்டும் திரும்பிக் கொள்ள,

“அச்சோ கண்ணாவுக்கு எதுவும் பிடிக்காதா? ஆன்டி எல்லாம் எல்லாமே சாப்பிடுவேன் தெரியுமா?” என்றாள்.

லேசாக திரும்பி அவளை பார்த்தான் வாண்டு.

“உண்மையா நான் சாப்பிடலன்னா அம்மா என்கிட்ட பேச மாட்டாங்களா? எனக்குன்னா அம்மா ரொம்ப பிடிக்குமே. சோ என்ன பண்றது. அம்மாவுக்காக எனக்கு பிடிக்கலன்னா கூட சாப்பிடுவேன். அப்ப தான் அம்மா சிரிப்பாங்க.. இல்லன்னா சோகமா இருப்பாங்க. அம்மாவை சோகமா பார்க்க எனக்கு மனசு வராதா.. அதனால அம்மாவை ஊட்ட சொல்லி நான் வயிறு நிறைய சாப்பிட்டுடுவேன்.. அம்மாவும் ஹேப்பியா என் கூட சிரித்து விளையாட வருவாங்க” என்று அவள் சொல்ல,

“ஏக்கு ம்மா இல்ல” என்று அவன் மழலை பேச்சு கூட சரியாக வராமல் சொன்ன மறுகணம் பட்டென்று உள்ளுக்குள் ஒரு நரம்பு விண்டது வேரலுக்கு.

“அதனால என்ன ஆன்டி இருக்கேன் தானே.. எனக்கு எங்க அம்மா மாதிரி உனக்கு நான்.. நீ சாப்பிட்டா நான் சிரிப்பேனாம். இல்லன்னா ஆன்டி முகம் உம்முன்னு ஆகிடுமாம். செக் பண்ணி பார்க்குறியா?” கேட்டவள் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள்.

அவன் கைக்கொண்டு அவளின் வாயை சிரிப்பது போல வைக்கப் பார்க்க அவளின் உதடுகள் அவனின் இழுப்புக்கு சென்று மறுபடியும் இயல்பு நிலைக்கு சோகமாக திரும்பி விட, இவனும் அலுக்காமல் நான்கு ஐந்து முறை செய்து விட்டு, பின் கை வலிக்க சோகமாக வேரலை பார்த்தான்.

“பார்த்தியா ஆன்டி முகம் சோகமா போயிடுச்சு” என்றவள் “நீ ஒரு வாய் வாங்குனா ஆன்டி முகம் சிரிக்கும். ட்ரை பண்றியா?” கேட்டவளை ஒரு கணம் யோசனையாக பார்த்தான்.

பின் தலையை ஆட்ட, அவனுக்கான உணவை எடுத்து ஊட்டி விட்டாள்.

ஊட்டி விட்ட அடுத்த நேரம் “ஷ்ஷ்ஷ்... ப்பா” என்று பிள்ளை அனத்தினான்.

“என்ன ஆச்சு?” என்று கங்குவன் வீட்டு டிஷ்ஷை எடுத்து வாயில் வைக்க அது அத்தனை உறைப்பாக இருந்தது அவளுக்கு.

அவளுக்கே அப்படி இருக்கையில் சின்ன பிள்ளைக்கு எப்படி இருக்கும்.. சட்டென்று கோவமாக கங்குவனை பார்த்தாள் வேரல்.

“என்ன இது சாப்பாடு.. இப்படி தான் பிள்ளைக்கு தருவீங்களா? அவ்வளவு காராம். இத்தனை காரம் பிள்ளை சேர்த்துக்கிட்டா வயிறு வெந்து போயிடாதா? இதெல்லாம் கவனிக்க மாட்டீங்களா மிஸ்டர் கங்குவன்” பொறிந்து தள்ளியவள்,

“கண்ணா உனக்கு அந்த சாப்பாடு வேண்டாம்.. வா நாம இந்த சாப்பாடு சாப்பிடலாம்” என்று அவளுக்கு தான் கொண்டு வந்ததை ஊட்டி விட்டாள்.

“இது எப்படி இருக்கு கண்ணா? உனக்கு பிடிச்சு இருக்கா?” கேட்டவளை தலை அசைத்து பதில் சொன்னவன்,

“ஸ்மைல்” என்றான்.

“ஓ... ஞாபகம் இருக்கே” என்றவள் அவனுக்கு ஊட்டி விட்டுக் கொண்டே அவள் ஸ்மைல் பண்ண, அதை அழகாக உள்வாங்கிக் கொண்டு சின்னவன் குருவி வாயை திறப்பது போல திறந்து அவள் கொடுத்த உணவினை வாங்கிக் கொண்டாள்.

இங்கே இவர்கள் இருவரும் தான். கங்குவனுக்கு நோ என்றி. அவன் வெறுமென பார்த்துக் கொண்டே தான் இருந்தான். எதிலும் இண்டர்பியர் ஆகல.. ஆக தோணல போல..

Loading spinner

Quote
Topic starter Posted : September 1, 2026 1:27 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top