கண்ணா அமைதியா இருக்கணும்.. நீ குட் பாய் தானே” கேட்ட வினாடி அவன் அமைதியாகி விட்டான். கங்குவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.
“என் மகனுக்கு என்னடி மந்திரம் போட்ட” என்றவனை முறைத்தாள் வேரல்.
“மந்திரம் போடுறாங்க.. ஏன் சார் இப்படி கேவலமா நடந்துக்குறீங்க.. சின்ன பையன் அவன்” கங்குவனை கடிந்துக் கொண்டவள்,
“நான் வரும் பொழுது ஊசிக்கு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருந்தான். சட்டுன்னு நான் இடுப்புல தூக்கிக்கிட்டேன். அவ்வளவு தான். என் இடுப்பை விட்டு இறங்கல அவன். போதுமா” கேட்டவள்,
“நீங்க கொஞ்சம் தள்ளி இருங்க..” என்றவளை முறைத்துப் பார்த்தவன்,
“அவன் என் பிள்ளை” என்றான்.
“நான் மட்டும் என்ன இல்லன்னா சொன்னேன்.. கொஞ்சம் தள்ளி நில்லுங்க. டாக்டர் ஜூஸ் குடிக்க வைக்க சொல்லிட்டு போய் இருக்காரு. நீங்க பக்கத்துல நின்னா கண்டிப்பா அவன் குடிக்க மாட்டேன்” அவனை சற்று தள்ளி நிறுத்தியவள்,
“கண்ணா” என்று அழைத்தாள் மிக மெல்லிய குரலில். தன்னிடம் முதல் முறையாக மிக மெல்லிய குரலில் காற்றுக்குக் கூட வலிக்கும் குரலில் பேசியவளை கண்களை சிமிட்டி சிமிட்டி பார்த்தான் பொடுசு.
“என்னடா கண்ணா.. ரொம்ப டையர்டா இருக்கா?” கேட்டுக் கொண்டே அவளை அமர வைத்து தன் நெஞ்சோடு அவனின் தலையை பிடித்து அணைத்துக் கொண்டவள்,
“நாம ஜூஸ் குடிக்கலாமா கண்ணா?” என்று கேட்டாள்.
“நேனாம்” என்று அவன் தலையை ஆட்ட,
“இங்க பாருடா இப்ப நீ ஜூஸ் குடிக்கல நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.. ஏகப்பட்ட வேலை தலை மேல குவிஞ்சு கிடக்கு.. அதை எல்லாம் யாரு உன் தாத்தாவா வந்து பார்ப்பாரு.. ஒழுங்கா ஜூஸ் குடிச்சுட்டு வீட்டுக்கு போற. அதை விட்டு இப்படி பண்ணிட்டு இருந்த கொன்னுடுவேன்டா உன்னை” அப்பட்டமாக கங்குவன் மிரட்ட, வேரலோடு இன்னும் அதிகமாக ஒட்டிக் கொண்டான் பிள்ளை.
“உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட அறிவே இல்ல சார்.. சின்ன பிள்ளைக்கிட்ட இப்படி தான் பிகேவ் பண்ணுவாங்களா? அவனே ரொம்ப டையர்டா பயந்து போய் இருக்கான். இப்ப போய் அவன் கிட்ட இப்படி சத்தம் போட்டா அவன் மிரள மாட்டானா..” என்று இவன் பிள்ளைக்காக பரிந்து வர,
“அப்போ நீயே இவனை வச்சு பார்த்து சீரட்டிட்டு இரு.. எனக்கு என்ன வந்ததுச்சு.. நான் கிளம்புறேன்” என்று வெளியே போய் விட்டான்.
“மனுசனே கிடையாது இந்த ஆள்... எப்படி தான் கண்ணா மூணு வருடம் இந்த ஆளோட இருந்த” கங்குவனை திட்டிக் கொண்டே, பிள்ளையின் வாயில் சூசை வைக்க, அவன் நிமிர்ந்து அவளை பார்த்தான்.
“என்ன செல்லம்?” சின்ன சிரிப்புடன் கேட்டவளை பார்த்து,
“அப்பாவை திட்டுறீங்க” என்றான்.
“அச்சோ உங்க அப்பாவை திட்டுனா உனக்கு பிடிக்காதா?” மழலை குரலில் கேட்டாள்.
“ம்ஹும்.. ரொம்ப பிடிக்கும்.. அப்பா பேட் பாய்” என்றான்.
“அச்சோ கண்ணா அப்பாவை அப்படி எல்லாம் சொல்ல கூடாது... நீங்க நல்லா இருக்கணும்னு தான் அப்பா கோவப்டுறாங்க.. விடாம உடம்பு தேய உழைக்கிறாங்க.. அவரை எதிரியா பார்க்க கூடாது தங்கம்” பிள்ளைக்கு அட்வைஸ் பண்ண, அவன் முகம் சுருங்கிப் போனது.
“சரி நமக்கு எதுக்கு அப்பா கதை.. வா உனக்கு நான் ஒரு கதை சொல்றேன்” என்றாள்.
“கதை” என்று அவன் புருவம் சுருக்கி கேட்க,
“ம்ம்.. கதை தான்.. என் கதையில டைனோசர், ட்ராகன் எல்லாம் வரும் தெரியுமா? அது புல்லு திங்கும்.. உன்னை மாதிரி குட்டி பையனை தூக்கி முதுகுல வச்சுக்கிட்டு இந்த உலகத்தை சுத்தி வரும்.. ரொம்ப ஜாலியா இருக்கும்” என்றாள்.
“டைனோசரா?”
“ம்ம்”
“அது கடிச்சு நம்மளை சாப்பிடுமே” மழலை மாறா மொழியில் பிள்ளை பேச, அவன் பேசுவதை சரியாக உணர்ந்துக் கொண்டு அதற்கு ஏற்றார் போல பதில் சொன்னாள்.
“ட்ராகன் நெருப்பு வரும்” மிரண்டான்.
“நோ நோ இந்த ட்ராகன் ரொம்ப நல்ல ட்ராகன்.. இது வாய் திறந்தா சாக்லேட் தான் வரும்”
“அப்போ நெருப்பு”
“அது கேட்ட ட்ராகன்க்கு தான்” என்றவள்,
“அந்த குட்டி ட்ராகன் உண்ண வச்சு இந்த உலகத்தை சுத்தி வந்துச்சாம்..”
“ஆமா ட்ராகன் மேல நீ இருக்கும் போது என்னென்ன பார்த்த கண்ணா” கேட்க,
அவன் மழலையில் தனக்கு தெரிஞ்ச கார் பெயர், கார்த்ட்டன்ஸ் நேம் என சொல்ல,
“ஐ அதை நானும் பார்த்தேன்.. எல்லோ கலர் டிரஸ் தானே..” இவளும் அருகில் இருந்து பார்த்தது போல சொல்ல, குட்டிக்கு ஒரே குசியாகிப் போனது.
அவனுக்கு கதையை சொல்லிக் கொண்டே ஜூசை குடிக்க வைத்து முடித்தாள்.
இதையெல்லாம் வெளியே பார்த்துக் கொண்டு இருந்த கங்குவனின் புருவம் யோசனையில் வளைந்தது. நீள் நெற்றி சுறுங்கியது.
ஜூஸ் குடித்து அவன் வாயை துடைத்து விட்டு அவனை படுக்க வைக்க,
“போறீங்களா?” என்று ஏக்கமாக கேட்டான். அவனது ஏக்கம் இவளது நெஞ்சை பிசைய வைக்க,
“இல்லடா கண்ணா நீ தூங்கு.. ரொம்ப டையர்டா இருக்கல்ல.. அது தான் உன்னை தூங்க வச்சேன்.. நான் உன்கிட்ட தான் இருப்பேன்.. இன்னொரு கதை சொல்லுட்டா” கேட்டாள்.
“ம்ம்” என்று தலையை ஆட்டி சோர்வாக சொன்னவனின் தோற்றம் அவளை வெகுவாக வருத்தியது.
“இந்த கதையில செடில எல்லாம் பொம்மை வரும்...” என்றாள்.
“பூ” என்று பிள்ளை கேட்க,
“இது மாயாஜாலம் நிறைந்த கதை..”
“அப்படின்னா நீ எதிர் பார்க்காத கதை எல்லாம் இதுல நடக்கும்..”
“ஹாங்”
“ம்ம் சிங்கம் புஷ் தான் சாப்பிடும்.. அதை சொல்லவா?” ஆர்வத்துடன் கேட்டவள் அவனுக்கு அதே ஆர்வத்தை தூண்டி விட்டாள்.
அவள் கதை பாதி சொல்லும் பொழுதே பிள்ளைக்கு கண் சொக்கி விட, ஆழ்ந்த நித்திரைக்கு சென்றான். அவன் தூங்கிய பிறகே உள்ளே வந்தான் கங்குவன்.
“குடிச்கிட்டானா?” கேட்டான்.
“ம்ம்..” என்றவள்,
“ஓகே சார் நான் கிளம்புறேன்.. கிளாசுக்கு டைம் ஆகிடுச்சு” என்று அவள் கிளம்ப பார்க்க,
“எழுந்த உடன் உன்னை தேடி அழுதா நான் என்ன பண்றது” கேட்டான்.
“பிள்ளை உங்க பிள்ளை. நீங்க தான் சமாதனம் செய்யணும். சண்டைக்கு வந்தீங்கள்ள.. சமாளிங்க” என்று விட்டு அவள் போய் விட்டாள்.
போகும் அவளை பெருகிய கோவத்துடன் பார்த்தவன்,
“போடி உன்னை வச்சா இவ்வளவு நாளும் என் பிள்ளையை வளர்த்தேன்.. என் பிள்ளையை வளர்த்துக்க எனக்கு தெரியும்.. ரொம்ப தான் பிகு பண்றா” என்றவன், அட்டுத்த இரண்டு பனி நேரத்திலே அவளின் போன் நம்பரை பச்சை பெருமாளிடம் கேட்டு அவளுக்கு அழைத்தான்.
“க்ளாஸ்ல இருக்கேன் சார்”
“எனக்கு என் பிள்ளை தான் முக்கியம். அவன் உன்னை கேட்டு ஒரே அடம்.. விடாம அழுதுட்டு இருக்கான். மூச்சு பிடிச்சுக்குச்சுன்னா போச்சுன்னு டாக்டர் வேற பயம் காட்டுறாங்க. நீ முதல்ல கிளம்பி வா” என்று அவளை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டான்.





