அத்தியாயம் 74

 
Admin
(@ramya-devi)
Member Admin

ஊரு பேரு தெரியாதவன் பிள்ளையை வயித்துல சுமந்துக்கிட்டு அவனை நெஞ்சுல சுமந்துக்கிட்டு இருக்க உன்னை கொன்னா தான் எங்க ஆத்திரம் தீரும்..” என்றவர் துப்பாக்கியை மீண்டும் இடுப்பில் சொருகி விட்டு, அருகில் இருந்த கட்டையை எடுத்து ஏந்திழையாளை நோக்கி சென்றார்.

அவர் வர வர இவள் போன்னோக்கி அடி எடுத்து சென்றாள்.

“ப்ளீஸ் ப்பா... எங்களை விட்டுட்டுங்க ப்பா..” என்று கெஞ்சிக் கொண்டே அவள் நகர,

“எங்க கௌரவத்தை குழி தோண்டி புதைத்த உன்னை எப்படி சும்மா விடுறது இழை. நீ செத்துப் போனா தான் எங்க கெளரவம் எங்களுக்கு மீண்டும் கிடைக்கும். அதனால நீ என்ன பண்ற செத்துப் போ.. அப்படி இல்லன்னா உன் வயித்துல இருக்கிற பிள்ளையை கலைச்சிடு” என்றார்.

அதை கேட்டு விக்கித்துப் போனவள்,

“என் பிள்ளையை எப்படிப்பா கலைக்கிறது. அது என்னை நம்பி மட்டுமே வந்த பிள்ளை.. அம்மாவே அதை கலைச்சா அது எப்படி இந்த உலகத்தை நம்பும். வேணாம் ப்பா இந்த பாவத்தை பண்ண சொல்லாதீங்க” என்று அவள் கெஞ்ச,

“அப்போ உன் புருசனை கொன்னுடலமா?” நெஞ்சில் இரக்கம் என்பதே இல்லாமல் கேட்ட தகப்பனை பார்த்து மிரண்டுப் போனாள்.

தாலி கொடியா தொப்புள் கொடியா என்று பேரம் பேசும் தன் தகப்பனை கண்டு நெஞ்சு மடிந்துப் போனது அவளுக்கு.

“எனக்கு அவங்க ரெண்டு பேருமே வேணும் ப்பா... அவங்களை ஒன்னும் செய்துடாதீங்க.. உங்களுக்கு எவ்வளவு சொத்து வேணாலும் எடுத்துக்கோங்க. என் புருசன் சொத்து எல்லாமே உங்க பேருக்கு மாத்தி வச்சிடுறோம். எங்களை வாழ விடுங்க ப்ளீஸ்...” என்று இரக்கமில்லாதவர்களிடம் கெஞ்சினாள்.

மனதில் கொஞ்சமாச்சும் ஈரம் இருப்பவர்களிடம் கேட்கலாம். ஆனால் இங்கே மனம் என்பதே இல்லாமல் இருக்கும் மிருகங்களிடம் கெஞ்சி என்ன புண்ணியம். அதை அப்படியே தன் சொற்களில் பிரதிபலித்தார் சுந்தரம்.

“அதனால தான் உன்னை கொல்றேன்னு சொல்றேன் புரியுதா... உன்னை கொன்னுட்டா எல்லாம் சரியா போயிடும்” என்று எகத்தாளமாக சொன்னவர்,

“உன் பிள்ளையோட சேர்த்து நீயும் செத்துப் போ” என்று கட்டையை கொண்டு அவளின் வயிற்றில் ஓங்கி அடித்து இருந்தார்.

“அவ்வளவு தான் எல்லாம் அவ்வளவு தான். போச்சு என் பிள்ளை போச்சே” என்று அவள் கதற, கட்டை அவளை சமீபத்திருந்தது. ஆனால் படவில்லை. விழிகளை திறந்து பார்த்தவளுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர் வழிந்தது. மூச்சு கூட ஒரு நிமிடம் அடங்கிப் போனது.

“எங்க என்னை மீறி என் பொண்டாட்டி மேலையும் என் பிள்ளை மேலையும் கை வச்சி பாருடா” என்று விழிகள் சிவக்க முகம் இறுகிப் போய் நிற்க முடியாமல் தள்ளாட்டத்துடன் நின்றாலும் அவனது பிடியில் அவ்வளவு உறுதி தெரிந்தது.

ஏந்திழையாள் மீது பட இருந்த கட்டையை தன் உரம் வாய்ந்த கையால் பற்றி இருந்தான் ராசசிங்கன்.

அவனை அங்கிருந்த யாரும் இப்படி எழுந்து வருவான் என்று கொஞ்சமும் எதிர் பார்க்கவே இல்லை. இரண்டு வாரத்திற்கு மேலாக படுக்கையில் அசையாது உணர்வு இருந்தும் செயலாற்ற முடியாமல் இருந்தவனால் எப்படி எழுந்து வர முடிந்தது என்று மலைத்து போய் பார்த்தார்கள். குன்றென நிமிர்ந்து மலை போல எழுந்து வந்து திடகாத்திரமாக நின்றவனை கண்டு எல்லோருமே ஒரு கணம் ஆடி தான் போனார்கள்.

அதுவும் அவனது கண்களில் தெரிந்த ரௌத்திரத்தில் அனைவருக்கும் உயிரின் குழை அறுந்தது போல இருந்தது.

“என்ன தைரியம் இருந்தா நான் இருக்கும் பொழுதே என் பொண்டாட்டியை சாகடிக்க பார்பீங்க” என்று கட்டையை இழுத்த வேகத்தில் சுந்தரமும் அவனை நோக்கி வர ஒரே எத்து தான். ராசசிங்கன் எட்டி விட்ட உதைத்ததில் தொப்பென்று சுவரில் போய் முட்டி மண்டை உடைந்துப் போனது சுந்தரத்துக்கு.

“ஏய்.. யாரு மேலடா கையை வச்ச” என்று ஆங்காரமாய் ஓடி வந்து அவனை அடிக்க வந்த கண்ணனை கொஞ்சமும் தயவு பார்க்காமல் தன் இடது காலால் அவரின் நெஞ்சை எட்டி விட்டான் ஒரு உதை.

“கை இல்லடா கால் வைக்கிறேன்.. என்ன புடுங்க முடியுமோ புடுங்குங்க” என்று அந்த கட்டிடமே அதிர கர்ஜித்தவன், தன் மனைவியை திரும்பி பார்த்தான்.

அவள் கண்களில் கண்ணீர் வழிய உதடுகள் எல்லாம் நடுங்க உடல் விதிர் விதிர்க்க தான் காணும் காட்சி மெய் தானா என்று ஐயம் கொண்டாள். அந்த ஐயம் மெய்பட வேண்டும் என்று மனம் முழுதும் வேண்டுதல் வைத்தாள்.

அவளின் தவிப்பு, துடிப்பு, கதறல் என எல்லாத்தையும் பார்த்தவன்,

“வா” என்று இரு கை விரிக்க, அவள் வர மாட்டேன் என்று தலையாட்டினாள். அவளின் விழிகளில் நிற்காமல் கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது.

“ப்ச்... வாடி” என்று அவன் கர்ஜிக்க,

“மாட்டேன் போங்க” என்று மறுத்தவளுக்கு வாய் விட்டு கதற வேண்டும் போல இருந்தது... ஒரு வாரமாய் அவனுக்காக அவள் துடித்த துடிப்பு அவள் மட்டும் தானே அறிவாள்.

அப்படி பட்டவளின் முன்பு எந்த முகாந்திரமும் இல்லாமல் இப்படி மலையென எழுந்து அமர்ந்தால் அவளும் என்ன தான் செய்வாள். பாவம். அவன் எழுந்ததை அவளால் நன்கு உணரக் கூட முடியாத சூழலில் விழிகளில் நீர் மட்டும் அவளின் மொழியாய் ஆனது..

“இவளை...” என்று முணகியவன் தானே வந்து அவளை இறுகக் கட்டிக் கொண்டான். அவனது கை அணைவுக்காக காத்து இருந்தாளோ என்னவோ “ஓ..” வென்று ஒரே அழுகை.

இவ்வளவு நாளும் அவனுக்காக தேக்கி வைத்திருந்த கண்ணீர் ஒரே நாளில் கொட்டி தீர்ப்பது போல அவள் அழுது வைக்க அவளை அவன் எந்த சமாதானமும் செய்ய முன் வரவில்லை. மாறாக அழும் அவளின் முகத்தை நிமிர்த்தி வன்மையாக மிக மிக வன்மையாக அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.

தேன்னூரும் அவளின் இதழ்களில் தன் இதழ்களை புதைத்தவன் அவளில் மூழ்க சுற்றி இருந்த அனைவரும் தான் பே வென்று முழிக்க வேண்டி இருந்தது.

இந்த காட்சியை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சுந்தரத்திற்கும் கண்ணுக்கும் கட்டுக் கடங்காமல் ஆவேசம் பிறக்க தங்களின் கையாட்களுக்கு சைகை செய்ய அத்தனை பேரும் ராசசிங்கனை சுற்றி நின்று அவனை தாக்க முனைய, அதை அறிந்தவன் போல தன்னவளை இழுத்து தனக்கு பின்னே நிறுத்திக் கொண்டவன் சுற்றி இருந்த அத்தனை பேரையும் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அடித்து சாய்த்தான். ஒருவர் கூட மிச்சமில்லாமல் அத்தனை பெரும் வேரறுந்த மரம் போல தரையில் சரிந்தார்கள்.

ராசசிங்கனின் வீரத்தை பார்த்து எல்லோருமே மலைத்துப் போனார்கள். “அப்பாடி இந்த மனுசனா இந்த ரெண்டு வாரமா இந்த படுகையில் அசைவு இல்லாம கிடந்தாரு..” என்று ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

ராசசிங்கன் இந்த அளவுக்கு பலசாலியா இருப்பான் என்பதை எதிர் பார்க்காத கண்ணன் ஒரு கணம் திகைத்துப் போனார். ஆனால் தன் வியப்பை ஓரமாக மூட்டை கட்டி வைத்து விட்டு சுவரில் முட்டி மோதியதால் ஏற்பட்ட வலித்த தன் மண்டையை அழுத்தாமாக தேய்த்து விட்டுக் கொண்டு எழுந்த சுந்தரம் தன் இடுப்பில் இருந்த கன்னை எடுத்து அவனை குறிப் பார்த்தார்

Loading spinner

Quote
Topic starter Posted : May 5, 2026 6:40 pm
(@gowri)
Reputable Member

Aww சிங்கன் இஸ் பேக் 🔥🔥🔥🔥🔥

கண்டிப்பா எழுவான்னு தெரியும் பட் இப்படி🤩🤩🤩🤩🙈🙈🙈🙈🙈🙈

சூப்பர் சூப்பர்..... அப்ப இவனுங்க எல்லாம் இவனுக்கு தாய் மாமாஸ் ஆ 😳😳😳😳😳

இவன் அம்மா, அப்பாவையும் இல்லாம பண்ணிட்டீங்களா டா பாவிகளா?????

 

Loading spinner

ReplyQuote
Posted : May 12, 2026 3:20 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top