அத்தியாயம் 65

 
Admin
(@ramya-devi)
Member Admin

“ப்ளீஸ் டாக்டர்... என்னால அவரை பார்க்காம போகவே முடியாது. அதோட இந்த ஹாஸ்பிட்டலுக்கோ இல்ல வெளிய வருவதற்கோ இது தான் கடைசி வாய்ப்பு. அதுக்கு பிறகு என்னை வெளில விடவே மாட்டாங்க... கோயிலுக்கு போறதுக்கே அவ்வளவு செக்யூரிட்டி” என்று பட்டென்று அவரது காலில் விழுந்தே விட்டாள்.

“ப்ச் என்ன பொண்ணே நீ இப்படி இக்கட்டுல மாட்டி விடுற...” என்று சங்கடப்பட்டவர்,

“இந்த விசயம் கீர்த்தியோட அப்பாவுக்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுடுவாரு” என்று யோசித்தவர்,

“சரி நான் எதவது ஏற்பாடு பண்றேன்” என்றவரிடம், “எங்க அப்பாவை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா? அவங்களால நீங்க எதுவும் பாதிக்கப்பட்டு இருக்கீங்களா மேடம்” என்று தயக்கத்துடன் கேட்டாள்.

எதுவும் பேசாமல் தீர்க்கமான விழிகளால் அவளை பார்த்தவர் வாயை திறக்கவே இல்லை. அதை கண்டு பெருமூச்சு விட்டவள்,

மேற்கொண்டு தோண்டி துறுவாமல்,

“டீன் ரூம்ல தான் அப்பாவும் பெரியப்பாவும் இருக்காங்க மேடம்..” என்றாள் தகவலாய்.

“வாட்?” என்று அதிர்ந்துப் போனவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனடியாக கீர்த்திக்கு போனை போட்டு விவரம் சொன்னார். அதோடு கீர்த்தியை இந்த ஹாஸ்பிட்டலுக்கு வரவேணாம் என்றும் சொல்லிவிட்டு அவளுடம் கலந்து ஆலோசித்தார்.

இடையில் இவளுக்கு போட வேண்டிய ஊசியையும் போட்டு விட்டு இருக்கிற பேஷன்ட்ஸ் அத்தனை பேரையும் வேற ஒரு கைனோ கிட்ட பார்க்க சொல்லி கை மாத்தி விட்டவர் முழு மூச்சாக ஏந்திழையாளிடம் இருந்தார்.

தனக்கு என்னென்ன செய்யணுமோ அதை எல்லாம் செய்துக் கொண்டு இருந்தவரையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் இவள்.

“ஹே கேர்ள் ப்ளீஸ் ஸ்டாப் யுவர் சைட்” என்றார்.

“ஏன் ரொம்ப டிஸ்ட்ரப் ஆகுறீங்களா?”

“கண்டிப்பா ஆமாம்” என்றார்.

“எனக்கு குழப்பமா இருக்கு மேடம்”

“இப்போதைக்கு நீ இந்த குழப்பத்துலையே இரு. அது தான் உன் புருசனுக்கு பெட்டர்”

“மேடம்” என்று இவள் அதிர,

“இதுக்கு மேல என்ன எதையும் பேச வைக்காத” என்றவர் உனக்கு செப்பரெட் ரூம் ரெடியா இருக்கு.. இன்னும் டூ மினிட்ஸ்ல உன் டுப்ளிகேட் ரிப்போர் வந்திடும். ரொம்ப சீரியஸ்னு சொல்லி இருக்கேன். ஆக்சுவலி நீ சிரியஸ் தான். பட் பேபி சுமந்துக்கிட்டு இருக்கிறதுக்கும் கட்டி வயித்துல இருக்குறதுக்கும் வித்யாசம் இருக்கு. வாமிட்டிங் சென்சேஷன் இருந்தா எப்படி சமாளிப்ப” என்றார்.

“அது ஒன்னும் பிரச்சனை இல்லை மேடம்.. இன்னும் சில நாள்ல அண்ணிக்கு வளைகாப்பு. சோ எல்லாரும் அதுல பிசி ஆகிடுவாங்க. அதுக்குள்ள நான் எப்படியும் இந்த ஊரை விட்டு அவரையும் கூட்டிட்டு போயிடுவேன்” என்றாள் திடமாக.

“அவங்களை மீறி உன்னால ஒன்னும் செய்ய முடியாது பொண்ணே”

“என் வயித்து பிள்ளையையும் என் புருசனையும் காப்பாத்த என் உடம்புல வலு இருக்கு டாக்டர்.. அதோட என் புருசன் ஒன்னும் சாதாரண ஆள் இல்லையே... என்னால முடியும்” என்று உரம் அதிகமாக அவள் சொல்ல பெருமூச்சு விட்டவர்,

“சிங்கனை நல்லா பார்த்துக்க. அவனோட உலகமே நீ மட்டும் தான்” என்றார்.

“ம்ஹும்.. என் பையனும் அவரோட உலகம் தான்” என்று தன் வயிறை தொட்டுக் காட்டினாள்.

அதில் மெலிதாக சிரித்தவர்,

“இந்த மருத்துவமனையில என் கண் பட தானே இருப்ப.. சோ அவசரப் பட வேணாம்... பொறுமையா உன் புருசனை நான் காட்டுறேன். நீயா ஏதாவது செய்து வச்சி மாட்டிக்காத.. ப்ளீஸ். ராசசிங்கன் எங்களுக்கு உயிரோட வேண்டும்” என்றார் தவிப்பாக.

“எனக்கும் அவர் வேண்டும் டாக்டர்... நான் எமோஷனலா இருக்கேன் தான். பட் தெளிவு இல்லாம இல்ல... நீ சொன்ன பிறகே நான் அவரை பார்த்துக்குறேன். நோ ப்ராப்ளம்” என்றவள்,

“அவரு நல்லபடியா குணம் ஆகிடுவாரா டாக்டர்” என்று கண்களில் உயிரை வைத்துக் கேட்டவளை வாஞ்சையாக பார்த்தவர்,

“இந்த காதலை அவன் நல்லா இருக்கும் பொழுதே காட்டி இருக்கலாமே” என்றார்.

“நான் காட்டாம ஒன்னும் இல்ல.. அவரு தான் திமிர் பிடிச்சு போய் யாரோ என்னவோ சொன்னாங்கன்னு என்னென்னவோ செய்து வச்சு இருக்கார். நான் வெறும் சொத்தை மட்டும் தான் அவருக்கு குடுக்க நினைச்சேன். ஆனா எங்க நேரம் ஒன்னுகெடக்க ஒன்னு பேசி இப்போ இந்த நிலையில வந்து நிக்கிறோம்” என்று கண்கள் கல்ங்கியவள்,

“அவரை நல்லா பார்த்துக்கோங்க டாக்டர்...” என்று நெஞ்சம் விம்ம சொன்னவள்,

“கதிர்... கதிர் எப்படி இருக்கான் டாக்டர்... அவனுக்கு ரொம்ப சீரியஸ்னு சொல்லி டிவில சொன்னாங்க” அவனையும் விசாரித்தாள்.

“ராசசிங்கனை வீழ்த்த நினைப்பவர்கள் அவனோட தம்பியை மட்டும் விட்டு வைப்பாங்களா... அவனும் சீரியஸ் தான். பட் சேப் பண்ணியாச்சு” என்றார்.

“அது போதும்...” என்று சொன்னவளுக்கு,

“என் புருசனுக்கு எப்போ டாக்டர் சரியாகும்... மாற்று மருந்து எதுவும் குடுத்தீங்களா?” தெறிக்கும் விம்மலை கட்டுப் படுத்திக் கொண்டு கேட்டாள்.

“அதெல்லாம் குடுக்காமலா இருப்போம். எல்லாம் குடுத்தாச்சு. பட் அவனோட உடம்பு செயல் பட மாட்டேங்குது... மூளை விழித்து தான் இருக்கு. மூளை சொல்ற கட்டளையை உடம்பு கேட்கணும் இல்லையா? எந்த ரியாக்ட்டும் செய்ய மாட்டேங்குறான். அது தான் இப்போ பிரச்சனை” என்றார் பெருமூச்சு விட்டு.

“இப்படியே போனா மூளையும் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்து போயிடும். பிறகு அவனை சரி செய்யிறது ரொம்ப ரொம்ப கடினம்” என்றவர்,

“இப்போ உங்க அப்பாவை வர சொல்லி ரிபோர்ட் பண்ண போறேன். என்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத” என்று எச்சரித்தவர்,

டீன் அறையில் இருந்தவர்களை வரச்சொல்லி சொல்லி விட்டு முகத்தில் எதையும் காட்டிக்கா வண்ணம் தன்னை தயார் செய்துக் கொண்டார்.

“நான் சொல்லும் பொழுது நீ அவங்களை பார்த்தா போதும். எக்காரணம் கொண்டும் படுக்கையை விட்டு எழக்கூடாது. ப்ளீடிங் ஸ்டாப் ஆகணும். நீ எழுந்தா நடந்தா ஸ்டாப் ஆன ப்ளீடிங் மறுபடியும் வந்திடும். சோ ஒரு டூ வீக்ஸ் கவனமா இரு” என்று எச்சரித்தவர் மறைத்து போட்டு இருந்த ஸ்க்ரீனை விட்டு வெளியே வந்து அவருடைய இருக்கையில் நன்றாக அமர்ந்துக் கொண்டு மருத்துவருக்கு உரிய பாவனையுடன் அமர்ந்துக் கொண்டார்.

நர்சோடு சேர்த்து சுந்தரமும் கண்ணனும் உள்ளே நுழைந்தார்கள்.

“சோ நீங்க தான் பெஷண்டோடோட அட்டெண்டரா?” என்று கேட்டவர், அவர்களின் பதிலை எதிர் பார்க்காமல்,

“அவங்க வயித்துல கட்டி ஒன்னு வளர்ந்துட்டு இருக்கு... கொஞ்சம் சீரியஸ் தான். அதை ஆபரேட் பண்ணி எடுக்கணும். பட அதுக்கு அவங்க உடம்பு ரெடியா இல்லை... ஒரு ஒன் வீக் அவங்க ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகணும். அதுக்கு பிறகு தான் ஆபரேஷன் செய்யணும்...”

இடையில் அவர்கள் பேச வர, அதை தடுத்து விட்டு,

“நீங்க வேற ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனாலும் இதை தான் சொல்லுவாங்க. அதோட இப்ப அந்த கட்டி ரொம்ப சிவியரா இருக்கு. பேஷன்ட்டுக்கு ப்ளீடிங் வேற ஸ்டாப் ஆக மாட்டிக்கிது.. இந்த ப்ராபலமோட நீங்க அவங்களை வெளில கூட்டிட்டு போறது அவங்களோட உயிருக்கே ஆபத்த முடியலாம்” என்று எச்சரித்தார்.

“டாக்டர் என்ன சொல்றீங்க?” தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடியது சுந்தரத்துக்கு.

Loading spinner

Quote
Topic starter Posted : May 5, 2026 6:26 pm
Sowmya reacted
(@gowri)
Reputable Member

இழை...உன்ன என்ன சொல்றது????

உன் குடும்பத்தை நம்பினதுக்கு இது தேவை தான் ......

பாவம் சிங்கன்🤧🤧🤧🤧🤧

 

Loading spinner

ReplyQuote
Posted : May 6, 2026 1:19 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top