“ஏன் தெரியாம உங்களை பத்தி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். பாவம் உங்களுக்கு தான் என்னை தெரியாது...” என்றார் அவர்.
“நீ” என்று அண்ணனும் தம்பியும் அவரை கூர்ந்து பார்க்க அவரை சுத்தமாக அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை.
“என்ன பார்க்குறீங்க உங்க முதல் தங்கச்சியோட உயிர் தோழி... மிச்செஸ் சோபனா.. என்னை நீங்க பார்த்தது இல்லை. ஆனா உங்கள பத்தி எனக்கு எல்லாமே தெரியும். என் தோழியை உயிரோட சாகடிச்சு அவ கணவனை அவ கண்ணு முன்னாடியே அரக்கத் தனமா கொன்னதும் எனக்கு தெரியும்” என்றார் அவர் ஆக்ரோஷமாக.
“ரொம்ப அதிர்ச்சியா இருக்கா முப்பது வருடத்துக்கு முன்னாடி நடந்ததை அப்படியே சொல்லவும்... அந்த பலி பாவத்துக்கு எல்லாம் உங்களுக்கு கணக்கு எழுத ஒருத்தன் கண்டிப்பா வருவான். அது வேற யாரும் இல்லை இதோ இங்க படுத்து இருக்கானே இவன் தான். நீங்க செய்யிற அத்தனைக்கும் இவன் கணக்கு வச்சு இருக்கான்...” என்று ஆவேசமாக ராசசிங்கனை சுட்டிக் காட்டி சொன்னவர்,
“உங்களுக்கு இன்னொரு அதிர்ச்சி தரட்டுமா?” என்று ஏளனமாக அவர்கள் இருவரையும் பார்த்து கேட்டார் அவர்.
கண்ணனும் சுந்தரமும் என்ன என்பது போல பார்த்தார்கள்.
“அதை நான் சொல்றதை விட சொல்றவங்க சொன்னா தான் இன்னும் கிக்கா இருக்கும்” என்றார் டாக்டர் சோபனா.
“இந்த பூச்சாண்டி காடுற வேலையெல்லாம் இங்க வேணாம் டாக்டரு. நீ யாரா வேணா இருந்துட்டு போ அது எங்களுக்கு அனாவசியம். உன் வேலையை மட்டும் பார்த்துட்டு போனா உனக்கு நல்லது. அதை விட்டுட்டு என் வீட்டு விசயத்துல நீ தலையிட்ட உனக்கு உன் தலையே இருக்காது பார்த்துக்க” எச்சரித்தவர்,
“ஆமா உன் தோழியோட அகோர முடிவு தெரிஞ்சும் எங்க கிட்ட வாலாட்ட நினைக்கிறனா நீ லேசுபட்ட பொம்பள கிடையாது. சம்பவம் செஞ்ச எங்களுக்கே அதெல்லாம் மறந்து போயிடுச்சு. அதுவும் இத்தனை வருடம் கழிச்சு நடந்து போனதை எல்லாம் நினைவு வச்சு இருகன்னா உன் மனசுல ஏதோ ஒரு திட்டம் இருக்கும்னு நிக்கிறேன்” என்று கண்ணன் சொல்ல,
“ஆமாம் திட்டம் வச்சு இருக்கேன் தான். என்னடா செய்வீங்க.. உங்களால ஒரு மயிரை கூட புடுங்க முடியாது. ஏந்திழை வயித்துல வளர்ற பிள்ளையை உங்களால ஒன்னும் செய முடியாது. அதை விட ராசசிங்கனை உங்களால ஒன்னும் செய்ய முடியாதுடா பாவிங்களா. தெய்வம் நின்னு கொள்ளும்னு கேள்வி பட்டது இல்ல.. இப்போ எங்க டேர்ன்.. உங்களை கருவருக்கமா உங்க வினை முடியாது. உங்க வினை அதோட பயனை காட்ட ஆரம்பிச்சுடுச்சு” என்று இருவரையும் வன்மமாக பார்த்து சொன்னார் சோபனா.
“அதையும் பார்க்கத்தானே போற... என்ன சொன்ன வயித்துல வளர்ற பிள்ளையை அழிக்க முடியாதா...? உன் கண்ணு முன்னாடியே அழிச்சு காட்டுறேன்டி” என்ற சுந்தரம் தன் அண்ணன் கையில் இருந்த கட்டையை வாங்கியவர் மிக ஆவேசமாக ஏந்திழையாளை நெருங்கினார்.
அவரின் கண்களில் தெரிந்த பழிவெறியை கண்டு உயிர் சருகாகிப் போக,
“அப்பா ப்ளீஸ் ப்பா... என் பிள்ளையை விட்டுடுங்க ப்பா... அது இன்னும் இந்த உலகத்தையே பார்க்கல.. என்ன நம்பி வந்து இருக்கு. அதுக்கு எல்லாமே நான் தான். அதை தயவு செய்து விட்டுட்டுங்க ப்பா” என்று கையெடுத்து கும்பிட்டு கதறினாள்.
அவளின் கதறலை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் கட்டியை ஓங்கி அவளின் வயிற்றில் அடியை இடி என இறக்க அம்மா என்று கதறினாள்.
இந்த முறையும் யுகேஷ் வந்து இடையில் நின்றுக் கொண்டான்.
தன் முழு பலத்தையும் பிரயோகித்து தந்தையின் கையில் இருந்த கட்டையை வாங்கி தூர எறிந்தவன்,
“யோவ் நீயெல்லாம் மனுசனாய்யா.. பச்ச மண்ணுன்னு கூட பார்க்காம உன் ஜாதி வெறிக்கும் பணக்கார திமிருக்கும் பழி எடுக்க பார்க்குறியே த்தூ. உன் மகன்னு சொல்லிக்க அருவெறுப்பா இருக்கு. ஒழுங்கா பின்னாடி போயிடு. இல்லன்னா பெத்த அப்பான்னு கூட பார்க்கமாட்டேன்...” என்று கண்களை மறைத்த உதிரத்தை உதறிக் கொண்டே மிக அழுத்தமாக சொன்னான்.
“டேய் நீ என்னடா எனக்கு பாவம் பார்க்குறது. நான் உனக்கு பாவம் பார்க்கிறேன். முடிஞ்சா இருங்க இருந்து ஓடிடு. இல்ல அவளோட சேர்த்து உனக்கும் சமாதி கட்டிடுவேன்” என்று சொன்னவர் தன் இடுப்பில் சொருகி இருந்த துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டார்.
அதை யாருமே எதிர் பார்க்கவே இல்லை. ஸ்தம்பித்து போயினர்.
“ஒழுங்கா அந்த ஓடுகாலியை என்கிட்டே விட்டுட்டு நகர்ந்து போயிடு.. இல்லன்னா இதுல பலியாகுற முத உயிர் உன்னதாதா இருக்கும்” என்றவர் தன் மகனுக்கு துப்பாக்கியில் குறி பார்த்தார்.
அவர் அப்படி செய்யவும் பயந்துப் போன ஏந்திழையாள்,
“அப்பா ப்ளீஸ் அண்ணனை எதுவும் செய்யாதீங்க.. உங்களுக்கு நானும் என் பிள்ளையும் தானே வேணும். எங்களை சுட்டுடுங்க. ஆனா அவரையும் அண்ணனையும் எதுவும் செய்யாதீங்க ப்பா” என்று அண்ணனை மறைத்துக் கொண்டு வந்து நின்றாள்.
“பாப்பா நீ இங்க இருந்து போயிடு... இந்த கிழட்டு நயவஞ்சக நரிங்களை நான் பார்த்துக்குறேன். நீ போயிடு பாப்பா” என்று அவளை அங்கிருந்து அப்புறப்படுத்த பார்த்தான் தமையன்.
“ம்ஹும் உன்னையும் அவரையும் விட்டுட்டு என்னால ஒரு அடி கூட இருங்க இருந்து எடுத்து வைக்க முடியாதுன்னா... எனக்கு நீங்க ரெண்டு பெரும் வேணும்” என்றவள் தன் அண்ணனை மறைத்து நின்றாள்.
“ரொம்ப சென்டிமென்ட் காட்டாதீங்கடா” என்றவர் புல்லட்டை தன் மகளின் வயிற்றில் இறக்கினார் கொஞ்சமும் இரக்கமில்லை.
“அய்யோ என் பிள்ளை போச்சே...” என்று தேவகி கதற,
எங்கிருந்து தான் வந்தானோ கார்த்திக்... இந்த முறை இவன் இடையில் புகுந்து அவனது தோளில் அந்த புல்லட்டை வாங்கிக் கொண்டான்.
அவனை அங்கு எதிர் பாராதவர்கள் திகைத்தார்கள்.
“அய்யோ” என்று எல்லோரும் பதற, பதற வேண்டிய இரு தகப்பன் மார்களும் கொஞ்சம் கூட பதறவில்லை. மாறாக ஆணவமும் அகங்ராமும் போட்டி போட தன் இலக்கு இந்த முறையும் தவறிப் போய் விட்டதே என்ற ஆத்திரத்தில் தான் அவர்கள் இருந்தார்கள்.
தன் கூலி ஆட்களுக்கு கண்ணை காட்டிய சுந்தரம் யுகேஷையும் கார்த்தியையும் பிடிக்க சொல்லி சொல்ல வேகமாய் இருவரையும் பிடித்து வைத்துக் கொண்டார்கள். அவர்களின் பிடியில் துள்ளிக் கொண்டு இருந்தவர்களுக்கு உதிரம் வெள்ளமென வெளியே போனது. முதலுதவி செய்ய கூட யாரையும் அனுமதிக்கவே இல்லை.
“இப்படியே கிடந்து செத்து போகட்டும்...” என்று கொஞ்சமும் இரக்கமில்லாமல் சொன்ன கண்ணனை அருவெறுத்துப் போய் பார்த்தார்கள் அங்கிருந்த அத்தனை பேரும்.
வீட்டு ஆட்களை அழைத்துக் கொண்டு சென்ற கார்த்திக்குமனம் என்னவோ போல இருக்க வருணிடம் அவர்களை ஒப்படைத்து விட்டு மீண்டும் கார்த்திக் மருத்துவமனைக்கு திரும்பி விட்டான். வந்த உடனே அங்கிருந்த சூழலை கண்டு திகைத்துப் போனவன் தன் தங்கையின் வயிற்றில் புல்லட்டை இறக்கவும் அவனால் பார்த்துக் கொண்டு அப்படியே நிற்க முடியாமல் பாய்ந்து வந்து அந்த புல்லட்டை தன் தோளில் வாங்கிக் கொண்டான்.
ஒரு முறை நன்றாக அங்கிருந்த அத்தனை பேரையும் பார்த்துக் கொண்ட சுந்தரம், இனி தடுக்க யாரும் இல்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டு,
“இனி உன்னை யாரும் என்கிட்டே இருந்து காப்பாத்தவே முடியாது இழை.. சீக்கிரமா செத்துப் போயிடு... உன்னால எனக்கு ஏகப்பட்ட மன உளைச்சல். எங்க கெளரவம் போச்சு, மானம் மரியாதை எல்லாம் போச்சு. சொத்து போச்சு... குடும்ப கெளரவத்துக்காக எதையும் செய்வாங்க அண்ணன் தம்பிங்க அப்படின்ற பேரு உன்னால போயி போச்சு.. ஊருல கண்டவனும் நாக்கு மேல பல்லை போட்டு பேச ஆரம்பிச்சுட்டாங்க.. அதனால நீ செத்துப் போயிடு.. மானத்துக்காக பெத்த பொண்ணையே காவு வாங்கிட்டான்ற பேர் போதும் எனக்கு.. ஊரு பேரு தெரியாதவன் பிள்ளையை வயித்துல சுமந்துக்கிட்டு அவனை நெஞ்சுல சுமந்துக்கிட்டு இருக்க உன்னை கொன்னா தான் எங்க ஆத்திரம் தீரும்..” என்றவர் துப்பாக்கியை மீண்டும் இடுப்பில் சொருகி விட்டு, அருகில் இருந்த கட்டையை எடுத்து ஏந்திழையாளை நோக்கி சென்றார்.





