அவன் வேறு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் கட்டுக்காவல் மிக அதிகம் என்று சொல்லி இருக்க அவனை பற்றிய கவலை கொஞ்சம் குறைந்து இருந்தது.
இங்க தான் வெளிப்படையாக எதுவும் செய்ய இயலாது. ஆனாலும் மறைமுகமாக ராசசிங்கனின் காட்ஸ் அந்த சரவுண்டிங்கில் தான் இருந்தார்கள். கீர்த்தி அப்பாவின் கட்டளைக்கு ஏற்ப எல்லோரும் செயல் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று அறிந்துக் கொண்டவளுக்கு நிம்மதி பிறந்தது.
“ஆமா நீங்க எப்படி அவருக்கு பிரெண்ட் ஆனீங்க” என்று கீர்த்தி அம்மாவிடம் தன்னை செக் பண்ண வரும் பொழுது கேட்டாள் இழையாள்.
அவளை ஒரு பார்வை பார்த்தவர்,
“அதெல்லாம் உன் புருசனிடமே கேட்டுக்கோ” என்று முடித்து விட, சப்பென்று ஆனது..
“ம்ஹும் ரொம்ப தான்...” என்று சிலிர்த்துக் கொண்டவள், அன்றைக்கு இரவு அவனோடு பேசும் பொழுது “இந்த டாக்டர் ரொம்ப தான் ஓவரா பண்றாங்க ங்க.. எது கேட்டாலும் பதிலே சொல்ல மாட்டிக்கிறாங்க.. நீங்க எழுந்து வந்து என்னன்னு கேளுங்க” என்று அவனிடம் புகார் படித்தாள். அவள் புகார் படிப்பதை கைக்கட்டி முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தார் கீர்த்தியின் அம்மா.
திரும்பி பார்த்தவள்,
“அப்படி தான் கம்ப்ளைன்ட் பண்ணுவேன்... தைரியம் இருந்தா என் புருசன் எழுந்ததுக்கு பிறகு இப்படி என்னை முறைச்சு பாருங்களேன்” என்று அவரை முறைக்க,
“ஏன் எனக்கென்ன பயம்... எழுந்து வர சொல்லு இப்பவே அவன் முன்னாடி உன்னை முறைக்கிறேன்” என்றார் அவர்.
“அவர் தான் எழுந்து வர மாட்டிக்கிறாரே டாக்டர்” என்று அவள் அழ ஆரம்பிக்க, பெருமூச்சு விட்டவர்,
“ப்ச் நீ இப்படி அழுதா உன் பிள்ளைக்கும் சரி உன் புருசனுக்கும் பிடிக்காது. முதல்ல கண்ணை துடை... நாளைக்கு இந்நேரத்துக்கு அவன் எழுந்து உட்கார்ந்து இருப்பான். நான் தூங்கப் போறேன்.. நாளைக்கு ஒரு டெலிவரி கேஸ் இருக்கு” என்று விட்டு அவளின் கண்ணீரை பார்க்க பிடிக்காமல் வெளியே போய் விட்டார்.
முதல்நாள் வீட்டுக்கு போனதோடு சரி அதன் பிறகு அவரின் வாசம் எல்லாம் மருத்துவமனையில் தான். அவருக்கு தனியாக அறை இருக்க தன் பொருள்களை எடுத்துக் கொண்டு வந்து விட்டார். ஏனோ அவருக்கு ஏந்திழையாளையும் ராசசிங்கனையும் தனியாக விட்டு போக முடியவில்லை. அதையெல்லாம் அவர் வெளியே காட்டிக் கொள்ளவே இல்லை.
ஆனால் ஏந்திழையாளுக்கு தெரிந்து இருந்தது. மருத்துவர் போன பிறகு சிங்கனுடன் பேசிக் கொண்டே அவனது கையை எடுத்து தன் வயிற்றில் வைத்துக் கொண்டாள்.
“நான் பேசுறது எல்லாம் உங்களுக்கு கேட்குது... ஆனா சார் கண்ணை மட்டும் முழிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கீங்க...” என்று சொன்னவள், அவனின் காதோரம் இன்னும் சரிந்து,
“நெத்தி முத்தம் குடுக்க மாட்டேன்னு என்கிட்டே என்ன பிடிவாதம் பிடிச்சீங்க இப்போ உங்க நெத்தியில நான் முத்தம் முத்தமா வைக்கிறேன்.. உங்களால என்ன பண்ண முடியும்..” என்று சீண்டலாக பேசியவள்,
“ரொம்ப பயமா இருக்கு ங்க... உங்க நெஞ்சுல என்னை வச்சுக்கோங்க ப்பா.. எனக்கு எந்த பயமும் இருக்காது... என் தனிமையை பார்த்து தானே முன்னாடி ஊட்டிக்கு என்னை தேடி வந்தீங்க. இப்பவும் நான் தனியா தான் இருக்கேன். எழுந்து வாங்கங்க.. என்னவோ பாதுகாப்பு இல்லாத மாதிரியே இருக்கு” என்றவளின் கண்ணீர் அவனது முகத்தில் தெரித்தது.
“எப்போ கண் முழிச்சு என்னை பார்ப்பீங்க சிங்கன். ஏற்கனவே என் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் சந்தேகம் வந்திடுச்சு போலங்க.”
“டாக்டர் கிட்ட இன்னைக்கு கூட என் வயித்துல பேபி இருக்கான்னு அழுத்தமா கேட்டு இருங்காங்க. இத்தனைக்கும் நான் வாந்தி மயக்கம் எதுவும் எடுக்கல. இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே போகும்னு தெரியலங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.”
“வயித்து பிள்ளையை இவங்க கிட்ட இருந்து என்னால மறைக்க முடியுமான்னு தெரியல. அதனால நாளைக்கு மருந்து வந்து நீங்க குணம் ஆனா ஓகே. அப்படி இல்லன்னா உங்களை தூக்கிக்கிட்டு நான் இந்த நாட்டை விட்டே போகப்போறேன். எனக்கு வேற வழி இல்லங்க. உங்களையும் உங்க மகனையும் காப்பத்தணும். எங்க வீட்டு ஆட்கள் ஏங்க அப்பாவை மீறி யாரும் உதவிக்கு வர மாட்டாங்க. அதனால யாருக்கிட்டயும் சொல்லாமல் நாம கிளம்பிடலாம்” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே அவளின் பின்னந்தலையில் ஏதோ வந்து பலமாக மோதியது.
வலி உயிர் போனது.. “அம்மா” என்று பின்னந்தலையை பற்றிக் கொண்டாள்.
ஒற்றை நொடியில் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு திரும்பி பார்க்க அங்கே சுந்தரமும் கண்ணனும் கையில் உருட்டு கட்டையை வைத்துக் கொண்டு அவ்வளவு ஆக்ரோஷமாக நின்று இருந்தார்கள்.
அவர்களை அங்கு அந்த நிமிடம் எதிர் பார்க்காதவளுக்கு உயிரில் நீர் வற்றிப் போனது போல ஆனது. நெஞ்சே வெளில வந்து துடிப்பது போல இருக்க வேகமாய் தன்னவனை மறைத்தது போல எழுந்து நின்றுக் கொண்டாள்.
“எப்படி இவ்வளவு சீக்கிரம் தெரிந்துக் கொண்டார்கள்” என்று உள்ளுக்குள் பயந்துப் போனாள்.
அவள் எழவும் அவளின் வயிற்றில் இருந்த ராசசிங்கனின் கை துவண்டு படுக்கையில் விழுந்தது.
“ஏன் ப்பா?” என்று அவள் அதிர்ந்து அவர்களிடம் கேட்க,
“ஏன்டி ஓடுகாலி நாயே... எவ்வளவு தைரியம் இருந்தா எங்க கண்ணையே மறைச்சு இத்தனை நாள் நீ ஆடிட்டு இருப்ப... இவனை புடிக்காது புடிக்காதுன்னு இங்க உட்கார்ந்து இவன் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கியா? எவ்வளவு நெஞ்சழுத்தம்டி உனக்கு. இவன் இருக்கிற இடம் தெரிஞ்சும் வாயை திறக்கவே இல்லைல்ல நீ..” என்று கேட்ட சுந்தரம்
அவளின் வயிற்றை ஒரு பார்வை பார்த்தார். அந்த பார்வையில் பெண்ணவள் அடிவயிறே கலங்கிப் போனது. “அவனோட வாரிசை வயித்துல வச்சுக்கிட்டு என்னாம்மா எங்கக்கிட்ட கதை அளந்த. இரு இவங்க ரெண்டு பேருக்கும் நான் முடிவு எழுதுறேன்” என்று கட்டையை ஓங்கி அவளின் வயிற்றில் அடித்தார்.
அதை எதிர் பார்க்காதவள்,
“அம்மா” என்று அதிர்ந்து நிற்க, அவளின் வயிற்றில் வலி கொஞ்சம் கூட எடுக்கவில்லை. கண்களை மூடி இருந்தவள் பட்டென்று திறந்து பார்க்க, அந்த அடி மொத்தத்தையும் யுகேஷ் வாங்கி இருந்தான் பாய்ந்து வந்து.
கட்டைக்கும் ஏந்திழையாளுக்கு நடுவில் அவன் வந்து நின்றிருந்தான்.
“ண்ணா” என்று அவள் கதற,
“ஒன்னும் இல்ல பாப்பா. உனக்கும் சரி உன் வயித்துல வளர்ற என் மருமவனுக்கும் சரி ஒன்னும் ஆக விட மாட்டேன்” என்று சொன்னவன்,
தன் தந்தைமார்களை உருத்து விழித்தான்.
“ஒழுங்கா நீ நகர்ந்து போயிடுடா.. இல்லன்னா பெத்த மகன்னு கூட பார்க்க மாட்டேன். அடிச்சு சாவடிச்சுடுவேன்” என்று சுந்தரம் சொல்ல,
“உங்களுக்கு தான் மனசுல ஈரமே இல்லையே. பிறகு நீங்க பெத்த மகன்னு தான் பார்ப்பீங்களா இல்ல கரு சுமந்து இருக்கிற மகள்னு தான் பார்பீங்களா? அரக்கன் தானே நீங்க எல்லாம்” என்று பதிலுக்கு அவர்களை பேசினான் யுகேஷ்.
யுகி மேல ஏற்கனவே டவுட் இருந்தது....இப்ப clear ஆகிட்டு....
சிங்கன் பத்தி ஏதும் தெரிஞ்சி இருக்கும்..... தாத்தா சொல்லி இருக்கலாம்.....
இல்லைனா இழை ஓட காதலுக்காக நிற்கலாம்.....
ஏதோ இந்த மட்டில் இழைக்கு பாதுகாப்பு இருக்கே.....
இவர் இவ அப்பா தானா????





