கதிரவன் அமர்த்தலாக மங்கையை பார்த்தான். அவனது பார்வையின் பொருள் நீ மன்னிப்பு கேட்டு தான் ஆகனும் என்று இருந்தது.
தேவனும் அவரை இழுத்து வந்து விட்டார் கதிரவன் முன்பு.
“இங்க பாரு மங்கை.. இந்த வீட்டோட ஆலமரமே கதிரவன் தான். ஆனா நீ அவனையே தப்பா பேசி இருக்க.. கலாவுக்கு சொன்னது தான் உனக்கும். நீ மன்னிப்பு கேளு.. இல்லையா உன் வீட்டுக்கு போயிடு.. அண்ணியை நீ பேசி பேசியே அண்ணன் கிட்ட அடி வாங்கி வச்சு இருக்க. இதுக்கு எல்லாம் நீ மன்னிப்பு கேட்காம இங்க இருந்து போக முடியாது” தேவன் உறுதியாக சொல்லிவிட,
சிங்காரத்துக்கு பொறுக்க முடியவில்லை.
“மச்சான்” என்று அவர் வர,
“நீங்க இருங்க மாப்பிள்ளை.. நான் என் தங்கச்சி கிட்ட பேசிட்டு இருக்கேன்” என்று முடித்து விட்டார்.
மங்கைக்கும் வேறு வழியில்லாது கதிரவான் நிலா இருவரிடமும் மன்னிப்பு கேட்டவர்,
உள் அறையை பார்த்தார். இன்னும் அண்ணனும் அண்ணியும் வெளியே வரவில்லை.
“அவங்க வந்த பிறகு கேட்டுக்குறேன்” என்று தன் அறைக்குள் வேகமாக புகுந்துக் கொண்டார். அவமானத்தில் அவருக்கு முகம் கன்றி போய் விட்டது.
மற்றவரை மனம் நோக பேசும் பொழுது கன்றாத முகம், மன்னிப்பு கேட்கும் பொழுது மட்டும் கன்றி போகிறது.. என்ன லாஜிக்கோ தெரியல..
நிலாவிடம் இருவரும் மன்னிப்பு கேட்ட பிறகே அவளின் கையை விட்டான். விட்ட அடுத்த நிமிடம் வேகமாய் தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டு அப்படி ஒரு அழுகை நிலா.
“எதுக்கு தான் இப்படி அழிச்சாட்டியம் பன்றாரோ.. நன் தான் எதுவும் வேணான்னு சொல்றேனே.. எதையும் கேட்கக் கூடாதுன்னு இருக்கிறாரே.. இவரை நம்பி வந்தேன் இல்லையா என்னை சொல்லணும்” என்று கட்டிலில் குப்புறப் பாடுதுக் கொண்டு அபப்டி ஒரு அழுகை.
“அழுதது போதும்.. சளி பிடிச்கிக்கப் போகுது.. வா சாப்பிடலாம்” என்று எதுவுமே நடக்காதது போல அழைத்தவனை கண்டு பனி தான் பல்லைக் கடித்தாள்.
--
“உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல மாமா” கோவத்தில் வெடித்து நின்றாள். அவளின் கோவத்தை ஆழ்ந்துப் பார்த்த கதிரவன்,
“நீ வந்து வாழ்ந்து பார்த்தியா என் கூட எனக்கு மனசாட்சி இருக்கா இல்லையான்னு” என்று கேட்டவனின் கேள்வியில் விக்கித்துப் போனாள் பனி..
“ஹாங்” என்று மிரண்டு விழித்தவளை நெருங்கி வந்தவன்,
“வாழ்ந்து பார்த்துட்டு அப்புறம் சொல்லு எனக்கு மனசாட்சி இருக்கா இல்லையான்னு” என்று மேலும் அவன் சொல்ல,
அவளுக்கு உடலில் இரத்த ஓட்டம் எல்லாம் உறைந்துப் போனது போல ஆனது..
“என்ன பேச்சு பேசுறீங்க?” திகைத்து போய் கதிரவனிடம் கேட்டாள் பனிநிலவு.
“என்ன இப்ப சொல்லிட்டேன்னு குதிக்கிற.. வந்து ரெண்டு மூணு நாள் கூட ஆகல.. அதுக்குள்ள எனக்கு மனசாட்சி இருக்கான்னு கேட்கிற.. இதுக்கு நான் வேற என்ன பதில் சொல்லனும்னு நீயே சொல்லு..” என்றான்.
“அதுக்காக வாழ்ந்து பாருன்னு சொல்றீங்க?”
“இதுல தப்பு என்ன இருக்கு? எப்படியும் நீ இங்க ஒரு மாதம் இருக்க போற இல்லையா.. எங்க கூட எல்லாம் அதை தான் சொன்னேன். எங்க ன்றதுல நானும் உண்டு தானே..?”
“ஆனா நீங்க அப்ப சொன்னப்ப இந்த மீனிங்ல வரலையே”
“நீ தான் எல்லாத்தையும் தவறா புருஞ்சுக்குற.. நான் கரெக்ர்ட் மீனிங்ல சொன்னேன்” என்றான் அலட்டிக் கொள்ளாமல். இவளுக்கு தான் அவனது பேச்சை கேட்டு குழப்பமாய் போனது.
“சரி அதை எல்லாம் விடு.. இப்போ வா சாப்பிடலாம்.. வெளில போயி சாப்பிடலாம்னு நினைச்சேன்.. ப்ளான் மாறி போயிடுச்சு.. இன்னைக்கு வீட்டு சாப்பாடு தான். நாளைக்கு போகலாம்..” என்றான்.
“நான் வரல”
“உன்கிட்ட பெர்மிஷன் கேட்கலையே நானு”
“ஆனா உங்க ப்ளானுக்கு என்னோட விருப்பம் முக்கியம் இல்லையா?” ஆற்றாமையுடன் கேட்டாள்.
“உன் விருப்பத்துக்கு இந்த ஒரு மாதமும் தடை விதித்துள்ளேன். சோ நீ நான் சொல்றதை மட்டும் தான் கேட்கணும்”
அவனது திமிரில் இவளுக்கு பத்திக் கொண்டு வர,
“என்னை கைதி மாதிரி ட்ரீட் பண்றீங்க?”
“இசிட்” என்று கேட்டவன், “அப்படியே நினைச்சுக்கோ.. ஐ டோன்ட் மைன்ட்.. இப்ப வா சாப்பிட” அவளை இழுத்துக் கொண்டு சென்றான்.
வீடே பெரும் கலோபரத்தில் மூழ்கி இருக்க, கதிரவன் மட்டும் எதையும் கண்டு கொள்ளவில்லை.
பணியாளரை வர வைத்து இருவருக்கும் தட்டு வைக்க சொல்ல, அவர்களும் பரிமாற வர,
“நான் பார்த்துக்குறேன்” என்று அவர்களை அனுப்பி வைத்தவன், பனிக்கு அவனே பரிமாறினான்.
அவளுக்கு தொண்டைக்கு கீழ் உணவு செல்ல மறுத்தது. குச்சி வைத்து குத்தினால் கூட போகாத அளவுக்கு உணர்வுகள் எல்லாம் அடைத்துக் கொண்டு நின்றது.
ஆனால் அதை எல்லாம் சட்டை செய்யாமல் கதிரவன் தன் வேலையை பார்த்தான். கண்ணும் கருத்துமாக அவன் உண்டதை பார்த்து இவள் தான் மலைத்து நின்றாள்.
தேவனும் சிங்காரமும் அவரவர் அறையில் இருந்தார்கள். தாத்தாவும் பாட்டியும் முன்புற கூடத்தில் பேச்சுகளற்று அமைதியாக அமர்ந்து இருந்தார்கள். சேகரன் தன் அறைக்கு சென்று கிளம்பி வெளியே வந்தார்.
அவர் வரவும் இயல்பாய் இருந்த பனி அட்டென்ஷனில் அமர, அதை பார்த்த கதிரவனுக்கு இதழ்களில் குறுநகை முகிழ்த்தது.
“மாமா சாப்பிட வாங்க” என்று அழைத்தான்.
“வரேன் மாப்பிள்ளை. என்ன ஸ்பெஷல்” என்றவர்,
“இன்னைக்கு ஒரு மீட்டிங்கை போடு மாப்பிள்ளை.. கொஞ்சம் பேசணும்” என்றார் வந்து அமர்ந்தபடி.
“அதுக்கென்ன மாமா.. போட்டுட்டா போச்சு. பட்ஜெட் எவ்வளவு? எந்த இடம்” அவருக்கு மட்டும் கேட்பது போல கேட்டான்.
“வழக்கம் போலதான். இந்த முறை ஸ்பான்செர் நீ தான். சோ நீயே உன் பட்ஜெட்டை போட்டுக்க” என்றார் அவரும் இரகசியமாக.
சிரிப்புடன் “சரி மாமா” என்றவன் அவருக்கு அவன் பரிமாற, சேகரன் திருப்தியாக உண்டார்.
“சரி நேரமாச்சு.. நான் கிளம்புறேன் மாப்பிள்ளை..” கிளம்பி விட்டார்.
கதிரவன் பனிக்கு பரிமாற வர, அவள் தட்டில் எல்லாமே அப்படியே இருந்தது.
“நான் ஊட்டி விடணும்னு எதிர் பார்க்குறியா?” நறுக்கென்று அவன் கேட்க,
“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? ரொம்ப வரம்பு மீறுறீங்க” சட்டென்று கண்கள் கலங்கி விட்டது.
“நீ இப்படி பண்ணா வேற எப்படி பேச சொல்ற? நீ சாப்பிட்டா நான் ஏன் கேட்க போறேன். அதோட.. நான் சிங்கிள் மீனிங்ல தான் கேட்கிறேன் பேசுறேன். ஆனா உனக்கு தான் ஆரம்பத்துல இருந்து எல்லாமே தப்பா தெரியுது..”
“நான் வெறும் டைலரை தான் சஜஸ்ட் பண்ணேன். ஆனா நீ என்ன பண்ண ஏன் வரைமுறை தாண்டுறீங்கன்னு கேட்கிற. நான் என்னவோ உன் உடல் அளவுகளை சொன்ன மாதிரி பதறிப் போற.. அடுத்து என் கூட வாழ்ந்து பார்த்தியா இருந்து பார்த்தியா என்னை பத்தி ரொம்ப ஈசியா ஜட்ஜ் பண்ற மீனிங்ல கேட்டேன். ஏன்னா கூட வாழ்ந்து இருந்து பார்த்தா மட்டும் தான் ஒருத்தவங்களை பற்றி முழுசா தெரிஞ்சுக்க முடியும். ஆனா உனக்கு என்னை பற்றி எதுவுமே தெரியாம எனக்கு மனசாட்சியே இல்லன்னு சொல்ற.. அப்போ உன் கிட்ட நான் வேற எந்த கேள்வியை கேட்கிறது.. ஆனா நீ அதை வேற மாதிரி புரிஞ்சி கோவப்படுற.. இதோ இப்ப கூட அப்படி தான். சாப்பிடாம யார் இருந்தாலும் என்ன ஊட்டி விடனுமான்னு நக்கலாக கேட்பாங்க.. அது போல தான் நானும் கேட்டேன். ஆனா அது உன் பார்வையில தவறா படுது நான் என்ன செய்யட்டும்” என்றவனின் பேச்சில் அதிர்ந்துப் போனாள்.
ஒட்டு மொத்தமாக தன் மீது அவன் திருப்பி விட்ட குற்றச்சாட்டுகளை கண்டு அயர்ந்துப் போனாள்.





