Notifications
Clear all

அத்தியாயம் 18

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவள் போன சிறிது நேரத்திலே அவள் இல்லாமல் திடுக்கிட்டு கண் விழித்த ஆதி வேகமாய் அவளை தேடி அவளின் வீட்டுக்கு விரைந்து வந்தான்.

அவனது முகத்தில் ஏகத்துக்கும் கோவம் சூழ்ந்து இருந்தது.

ஆதி வீட்டுக்கு வந்த நேரம் ராஜா வீட்டில் இருந்தான்.

“வா ஆதி” என்று அவன் வரவேற்க,

“எங்க உன் தங்கச்சி” என்று கேட்டான் கோவமாக.

“நான் வீட்டுக்கு வரும் போதே அவ தூங்கிட்டு தான் இருந்தா. மேல அவ அறையில இருக்கா. ஏன்டா அவளை தேடுற?” கேட்டான்.

“ம்ம்ம் அவளோட வரவு செலவு கணக்கு இருக்கு.. அதை பேச தான்” என்றவன்,

“பெட்டர் நீ கம்பெனிக்கு கிளம்பிடு” என்றான்.

“என்னடா நீ பாட்டுக்க வந்த, மகரியை கேட்ட, இப்போ என்னை  கிளம்ப சொல்ற? என்ன தான்டா ஆச்சு” புரியாமல் கேட்டவனை பார்த்த ஆதி,

“அடுத்து எது நல்ல நாளோ அன்னைக்கே கல்யாணத்தை வச்சுடு” என்றான்.

“யாருக்கு டா கல்யாணம்?” விழித்தவனை இன்னும் முறைத்தவன்,

“சரியான ட்யூப்லைட்” திட்டினான்.

“டேய் ஸ்க்ரிப்டே குடுக்காம நீ பாட்டுக்க பேச சொன்னா நான் என்னடா பேச முடியும்?” பாவமாய் அவன் விழிக்க,

“உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கிறேன் போதுமா? அதுக்கு தான் நாள் பார்க்க சொன்னேன்” என்றவன்,

“நீ வெளில போ” ராஜாவை அடித்து துரத்தாத குறையாக விரட்டி விட்டவன், மகரி இருந்த அறைக்குள் புயலாய் விரைந்தான்.

தன்னை தேடி ஒருவன் வருகிறான் என்று தெரியாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் மகரி. வந்தவன் அவள் குளித்து விட்டு தலைமுடியில் இருந்த ஈரத்தை கூட காய வைக்காமல் அப்படியே அசந்து போய் இருப்பதை பார்த்து அவளுக்கு அருகில் வந்து நின்றான்.

அவனின் அரவம் கூட அவளை கலைக்கவில்லை. அப்படி அயர்ந்துப் போய் இருந்தாள். அவளின் வடிவான முகத்தை பார்த்து ஒரு சில நொடிகள் நின்றவன் அவளின் இதழ்களில் இருந்த காயத்தை கண்டு தன் முரட்டுத் தனத்தை எண்ணிக் கொண்டான்.

அது மட்டுமா.. கழுத்துவரை மூடி படுத்து இருந்தவளின் மீதி அழகையும் காண எண்ணி போர்வையை விலக்கிப் பார்த்தான். பார்த்தவன் இனிதாக அதிர்ந்துப் போனான். வெறும் பருத்தி டவலால் முழுமையாக போர்த்தி படுத்து இருந்தாள்.

உடுப்பு போட வில்லையா? ஆணின் மனம் ஆணாய் யோசித்தது.

அவளின் துண்டை விலக்க ஆவல் வர, வேகமாய் அதை செயல் படுத்தினான். விலக்கிப் பார்த்தவன் பட்டென்று மீண்டும் அவள் மீது அந்த துண்டை போர்த்தி விட்டான்.

அவனின் முரட்டு தனத்தை எல்லாம் அவளின் உடல் அலுங்காமல் வாங்கி இருப்பதை பார்த்து தலையை அழுந்தக் கோதிக் கொண்டான்.

“ப்ச்...” தன்னையே சலித்துக் கொண்டவன், அவளுக்கு அருகில் படுத்து  அவளை தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அவன் பற்கள் பட்டு அவளின் தேகம் அங்கும் இங்குமாய் கன்னிப் போய் இருந்ததை பார்த்து “ரொம்ப வேதனை படுத்திட்டனோ” உள்ளம் குமுறிய போதும் அவளை விட்டு அவனால் நீங்க முடியவில்லை. அவளின் கழுத்து வளைவில் தன் முகத்தை அழுத்தமாக புதைத்துக் கொண்டு படுத்து விட்டான்.

முழுக்க முழுக்க அவளோடு புதைந்துக் கொண்டான் ஆதி. கடல் எப்படி அந்தி கதவரனையும் காலை கதிரவனையும் ஏந்தி தாங்கிக் கொள்ளுமோ அந்த மாதிரி மகரியும் ஆதியை தனக்குள் தாங்கி இருந்தாள்.

ஆரம்பத்தில் மகரியை பார்த்து எரிந்து எரிந்து விழுந்துக் கொண்டு இருந்தவன் இப்பொழுது அவளிடமே அடைக்கலமாகி சகலமும் அவள் என மாறத் தொடங்கி இருந்தான் அவனறியாமலே.

ராஜா துளசிநாதனை சந்தித்து ஆதி சொன்ன விசயத்தை சொல்ல, அவருக்கு தலை கால் புரியவில்லை.

“உண்மையா தான் சொல்றியா ராஜா.. அவன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டானா?” என்று கேட்டவரை மகிழ்வுடன் அணைத்துக் கொண்ட ராஜா,

“ஆமா பெரியப்பா அவனே சொன்னான். அதனால தான் இங்க ஓடி வந்தேன். அவன் மனசு மாறுறதுக்குள்ள நாம கல்யாணத்தை செஞ்சு வச்சுடணும்” என்றான்.

“சரியா சொன்ன” என்றவர் அன்றே அவனை அழைத்துக் கொண்டு நாள் பார்க்க கோயிலுக்கு சென்றார். அங்கே இன்னும் ஒரு வாரத்தில் நல்ல முகூர்த்த நாள் இருப்பதாக சொல்ல,

அதே நாளில் தடாபுடாளாக திருமண வைபவத்தை ஏற்பாடு செய்தார்கள் ஆதியின் நட்புகள். கேசவும் ராஜாவும் முன் நின்று எல்லாவற்றையும் கவனித்து செய்ய, ஆதி எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் மகரிக்கு தான் உள்ளுக்குள் அத்தனை பயமாக இருந்தது.

ஏனெனில் ஆதி அன்றைக்கு மட்டும் அல்லாது அடுத்து வந்த நாட்கள் அனைத்திலும் அவளுடன் கூடி களித்தான்.

“கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு. அதுக்குள்ள இது எல்லாம் வேணுமா? பிறகு வச்சுக்கலாமே” என்று மகரி தடை போட பார்த்தும் ஆதியை அவளால் அடக்க முடியவில்லை.

கிடைக்கும் குட்டி குட்டி கேப்பில் எல்லாம் அவளை கதி கலங்க வைத்தான். மேக்கப் போடும் பொழுது கூட பாதி மேக்கப்பில் இருந்த சமயம் அதிரடியாய் அறைக்குள் புகுந்து அனைவரையும் வெளியேற்றியவன் அவளின் இதழ்களுக்குள் தன்னை புகுத்தி அவளின் இடை சேலைக்குள் கையை விட்டு தனக்கு மிக நெருக்கமாக இழுத்துக் கொண்டவன், அவளின் இடையை இறுக்கி கசக்கிப் பிடித்து டிஷ்யூ பேப்பராய் மாற்றினான்.

அதில் மடிப்பெடுத்து கட்டி இருந்த சேலை கசங்கிப் போனது. அங்கு மட்டுமா? அவளின் மாராப்புக் கூட கசங்கிப் போய் இருந்தது.

“அச்சோ ப்ளீஸ். வேணாம்” என்று அவள் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் ஆதி கொஞ்சம் அடங்கவில்லை.

“எனக்கு வேணும் அவ்வளவு தான்” என்று அதே பிடிவாதத்தில் நின்றான்.

அவன் எண்ணியதை எல்லாம் சாதித்துக் கொண்டவன் வெளியேறி விட, புயல் கண்ட பூந்தோட்டமாய் மாறி இருந்தாள் மகரியாள்.

மேக்கப் போட்டு விட வந்த பெண்களோ தங்களுக்கு கேலி கிண்டல் செய்து அவளை கேலிக்கு உள்ளாக்க, கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது மகரிக்கு.

அபிராமி தான் அதட்டி உருட்டி அவளை இயல்புக்கு கொண்டு வந்தாள். அபிராமியும் அவளின் கணவனோடு வந்து இருந்தாள். பெண் தோழியாக அவள் இருந்தாள்.

குறித்த நேரத்தில் மங்கள வாத்தியம் முழங்க, வரிசங்கு முழங்க, மகரியாளின் கழுத்தில் ஆதித்யன் தாலி கட்டினான்.

தலை குனிந்து அவள் வாங்கிக் கொள்ள, அவளின் கால் பிடித்து மெட்டி போட்டு விட்டு அருந்ததி பார்த்து கல்யாண கலாட்டாக்கள் எல்லாவற்றையும் கேசவும் ராஜாவும் முன் நின்று செய்ய சொல்லி சொல்ல, ஆதி கடுப்படித்தான்.

ஆனால் அவனை விடாமல் இருவரும் வற்புறுத்தி, “மச்சான் இதெல்லாம் ரொம்ப நார்மல் தான். சோ பண்ணு” என்று சொல்லி இரு பக்கமும் ஊக்கம் கொடுத்து அந்த நிகழ்வுகளை எல்லாம் ஒன்று விடாமல் அழகாக படம் எடுக்க சொல்லி ஏற்பாடு செய்து இருந்தான் ராஜா.

அப்பளம் உடைத்து, தேங்காய் உருட்டி, மோதிரம் எடுத்து என கலகலப்பாக நேரம் சென்றது. அதை தொடர்ந்து வீட்டுக்கு அழைத்து வந்து, விளக்கு ஏற்ற சொல்லி, பால் பழம் கொடுத்து உபசரித்து என அன்றைய நாள் மாலை வரை நேரம் சரியாக இருந்தது.

துளசிநாதன் கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிப்பாடு நடத்திவிட்டு வீட்டிற்கு அழைத்து வந்தார்.

எல்லோரும் ராஜாவின் வீட்டில் தான் இருந்தார்கள். பிறகு பொண்ணு மாப்பிள்ளையை மட்டும் தனிக்காரில் ஆதியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

வேறு ஒரு காரில் மற்றவர்கள் கிளம்பி சென்றார்கள். அதன் பிறகு அங்கு முதல் இரவுக்கு உண்டான அணைத்து வேலைகளையும் செய்து இருக்கக் கண்டு ஒரு முறை சரி பார்த்து விட்டு எல்லோரும் கிளம்பி விட, வீட்டில் ஆதி மகரி இருவர் மட்டும் தான்.

அந்த தனிமையான நேரம் பெண்ணவளுக்குள்ளு பயத்தையும் படபடப்பையும் கொடுத்தது.

அவாளின் பயந்த சுபாவத்தை பார்த்த ஆதி,

“இன்னும் எவ்வளவு நேரம் இதே புடவையில இருப்ப.. போ போய் குளிச்சுட்டு வா” என்று அவளை தன் அறைக்கு அனுப்பியவன் தான் வேறு ஒரு அறையில் குளிக்கச் சென்றான்.

Loading spinner

Quote
Topic starter Posted : February 11, 2026 11:30 am
(@megalaveera)
Trusted Member

nice

Loading spinner

ReplyQuote
Posted : February 11, 2026 12:55 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top