Notifications
Clear all

அத்தியாயம் 19

 
Admin
(@ramya-devi)
Member Admin

“என் கிட்ட மட்டும் மல்லுக்கு நிற்க வேண்டியது.. இதே அவ அம்மாக்கிட்ட பேசுனா வாயை பசை போட்டு மூடி வச்சுக்க வேண்டியது” என்று தனக்குள் முணகிக் கொண்டவன் பில்லை செட்டில் பண்ணி விட்டு வீட்டுக்கு விட்டான் வண்டியயை.

வீட்டுக்கு வந்த உடனே மங்கையும் கலாவும் அவர்களை பிடித்துக் கொள்ள, கதிரவன் பனியை தன்னோடு மேலே அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

“ரொம்ப தான் பாதுகாப்பு” என்று முணகிக் கொண்டவர்கள், மற்ற மூன்று பெண்களையும் சூழ்ந்துக் கொள்ள முழி பிதுங்கிப் போனார்கள் அவர்கள்.

“ஏன் எங்களை எல்லாம் கூட்டிட்டு போய் வாங்கி தர மாட்டானாமா” மங்கை வம்புக்கு என்று வர, அதானே என்று கலாவும் ஒத்து ஊத, காமாட்சிக்கு ஐயோ என்று வந்தது.

அதை மேல இருந்து பார்த்த பனிக்கு பாவமாய் போனது.

“பாவம் உங்க அம்மா அவங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க” என்றாள்.

“சமாளிக்க கத்துக்கணும்.. இத்தனை வருடம் ஆகியும் அது வரலன்னா நான் என்ன பண்றது” தோளை குலுக்கி விட்டு அவன் கூடத்தில் அங்கேயே அமர, இவள் தான் அவனை தாண்டி அறைக்கு போக முடியாமல் சுவரில் சாய்ந்ந்து நின்றாள்.

கடைக்குள் அலைந்ததே பெரும் அயர்ச்சியை அவளுக்கு கொடுத்து இருக்க, அவன் முன்னாடி அமரவும் முடியாமல் கடுகடுத்த காலோடு நின்றுக் கொண்டு இருந்தாள்.

அவளின் அவஸ்த்தையையும் வலியையும் கண்ணுற்றவன்,

“வலிக்கிதுன்னு கூட சொல்ல மாட்டியா.. நான் போன்னு சொல்ற வரை இப்படியே தான் நின்னுட்டு இருப்பியா?” கோவமாக கேட்டவன்,

“உள்ள போடி.. போய் கொஞ்ச நேரம் படுத்து எந்திரி” என்று விட்டு போனில் மூழ்க, அதன் பிறகே இவள் அறைக்குள் நுழைந்தாள்.

“ஏன் தான் இவ இப்படி இருக்காளோ” சலித்துக் கொண்டவன் தன் வேலையில் ஈடு பட்டான்.

அறைக்குள் நுழைந்த பனிக்கு காலெல்லாம் ரொம்ப வலித்தது. இத்தனை நேரமாக அவள் ஷாப்பிங் செய்ததே இல்லை. அவளின் கையில் இருந்த பொருள்கள் எல்லாம் பொதிகை மலையாய் கனத்தது.

இவ்வளவு ஆடம்பர துணிகள் நகைகள் எல்லாம் தனக்கு தேவையா? அதுவும் இத்தனை நாள் எதுவும் இல்லாமல் புதிதாக இப்படி வாங்குவது அவளுக்குள் பெரும் சோர்வை கொடுத்தது.

கதிரவனிடம் அவளால் மறுக்க முடியவில்லை. வாங்கிக் கொண்டாள். ஆனால் போகும் பொழுது இதை எல்லாம் இங்கேயே வைத்து விட்டு தான் செல்லனும் என்று முடிவெடுத்த பிறகே வாங்கிக் கொண்டாள். இல்லை என்றால் இதை எல்லாம் விழிகளால் கூட ஸ்பரிசித்து இருக்க மாட்டாள்.

அவ்வளவு சுயம் பார்ப்பவள். இன்று இவன் காட்டும் அன்புக்கு தலை வணங்கி நிற்க வேண்டி இருந்தது. கால்களை நீட்டி விட்டு அமர்ந்தவளுக்கு குதி கால் வலி எடுத்தது.

லேசாக கால்களை மடக்கி அதை அழுத்தி விட்டுக் கொண்டு இருந்த நேரம்,

சுடுநீரோடு உள்ளே வந்தாள் துளசி. கூடவே கதிரவனும். அவன் தனியாக இதுவரை அவளின் அறைக்குள் நுழையவே இல்லை என்பதை கவனித்துக் கொண்டாள்.

“காலை இதுல வை பனி.. கொஞ்சம் உப்பும் லெமனும் பிழிஞ்சு விட்டு இருக்கேன்” சொல்ல,

“எதுக்கு துளசி இதெல்லாம்” சங்கடப் பட்டாள்.

“அதெல்லாம் எதுவும் பேசாத.. கடையிலையே பார்த்தேன். உன் கால் ரெண்டும் வீங்கி இருந்தது..” என்று கதிரவன் சொல்ல, வலியின் பொருட்டு இவளும் கால்களை அந்த வெந்நீரில் விட்டுக் கொண்டாள்.

“பக்கெட் பெருசா தானே இருக்கு.. நீயும் வாயேன்” என்று அழைக்க சங்கடப்பட்டு இருந்த சமயம்,

“நானும் வச்சுக்குறேன். எனக்கும் கால் வலிக்கிற மாதிரி இருக்கு பனி.. உனக்கு ஓகேயா?” துளசியும் அவளுடன் சேர்ந்து காலை வைத்துக் கொள்ள, கதிரவன் தலையசைப்புடன் அங்கிருந்து போய் விட்டான்.

இருவரும் தங்களை பற்றி பேசிக் கொள்ள ஆரம்பிக்க அதை வெளியே இருந்து கேட்டுக் கொண்டு இருந்தவனின் இதழ்களில் மெல்லிய மலர்வு.

“என் காலேஜ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. அண்ணா அது மாதிரி தான் சேர்த்து விட்டாங்க.. சோ நோ என்ஜாய் மென்ட்.. ஒன்லி படிப்ஸ் தான்” என்றாள் துளசி.

“ஓ.. நானும் அந்த மாதிரி தான் துளசி.. நான் சேர்ந்த கல்லூரியும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்..” என்று கல்லூரி பெயரை சொன்னாள்.

“ஹேய் நானும் அதே கல்லூரி தான். ஆனா ப்ரெஞ் மட்டும் வேற” என்று இவள் சொல்ல,

“வாவ்.. நான் சென்னை” என்றாள் பனி.

அதன் பிறகு இருவருக்கும் இன்னும் நெருக்கம் அதிகம் ஆனது.

“நான் பைனலியர் பண்ணும் பொழுது நீ ஜாயின் பண்ணி இருப்ப ரைட்டா” என்று துளசிகேட்டாள்.

“அதே தான்.. அடிக்கடி இன்டர் காலேஜ் பங்சன்ற பெயர்ல லூட்டி தான்.. அதுவும் மதுரை பிரெஞ்சும் திருச்சி பிரெஞ்சும் தான் அடிக்கடி முட்டிக்கும்” என்றாள் பனி.

“ம்ஹும்.. அவங்களை மட்டும் அடக்கவே முடியலன்னு ஒரு டைம் போலீஸ் கூட உள்ள வந்து கைகலப்பா போயிடுச்சுன்னு கேள்வி பட்டேன்”

“ஆமா துளசி அதுவும் சென்னைல வச்சு” என்று அந்த நிகழ்வை இருவரும் பேசிக்கொள்ள,

“கேர்ல்ஸ் மே ஐ கமின்” என்று மகா வந்து நின்றாள் அறை வாசலில்.

“அடடே.. வாம்மா மின்னல் எங்க உன் அம்மா உன்னை மேல விட்டுட்டாங்க.. அதிசயம் தான் போ” என்று துளசி கிண்டல் பண்ண,

“ம்கும் தெருஞ்சா அப்படியே விட்டுடுவாங்கலாக்கும். தெரியாம பால்கனி வழியா குதிச்சு வந்து இருக்கேன்” என்றவள் இவர்களோடு ஐக்கியம் ஆகி விட்டாள்.

“ஹாய் பனி ஐயம் மகா” என்றாள்.

“வாங்க” என்று அவள் தடுமாற,

“ஏதே வாங்களா.. உங்களை விட நான் சின்ன பொண்ணு தான். அதனால வா போன்னே கூப்பிடு பனி. எனக்கு இந்த மரியாதை எல்லாம் அலர்ஜி” என்றவள் அவர்களோடு கட்டிலில் உள்ளுக்குள் தாவி ஏறி அமர்ந்தவள், அங்கு வைக்கப் பட்டு இருந்த பைகளை இலகுவாக எடுத்து பார்த்து,

“பர்சேசிங் எல்லாம் பலமா இருக்கு.. ஆனா எல்லாமே நல்லா இருக்கே” என்று சிலாகித்தாள்.

“உனக்கு எதுவும் வேணும்னா நீ எடுத்துக்கோ மகா”

“அட நீ வேற பனி எங்கம்மா புடவை கட்டு பூவை வைன்னு ஒரே அக்கப்போரு.. எனக்கு அதெல்லாம் பிடிக்கல.. இதுல நீ வேற எட்டுமுழ புடவையை குடுக்குற.. ஓடிடு.. ஏதோ ஆசையா இருந்தா ஒரு அனார்கலி, மசக்கலி வாங்கி குடு” என்றாள்.

“ஏதே.. மங்கை உனக்கு மங்களம் பாடாம விடாதுடி” துளசி கிண்டல் பண்ண,

“நீ வேணா பார்த்துக்கிட்டே இரு.. என் ரிஷப்ஷனுக்கு அனார்கலி மசக்கலி தான்” என்று கண் சிமிட்டினாள் மகா.

“அப்ப விளக்குமாறு பிய்ய பிய்ய அடி கன்பார்ம்” துளசி வார,

அதுகெல்லாம் பயந்தா ஆச்சா.. நீ சொல்லு பனி புடவை எல்லாம் அவுட் ஆப் பேஷன் தானே..” கூட்டுக்கு ஆள் சேர்க்க இவள் திருதிருதித்தாள்.

“முழிக்காத உன் திருட்டு முழியே சொல்லுது நீ என்னை விட பேஷனான பொண்ணுன்னு” என்றாள்.

“அதுக்காக இடுப்பு தெரியிற மாதிரி எல்லாம் உடை போட முடியாது மகா”

“என்னவோ போன பனி அந்த அனார்கலி மேல ஒரு கண்ணு..” என்றவள் படுத்தே விட்டாள்.

“அடியேய் ப்ராஜெக்ட் இருக்குன்னு சொன்னியே..”

“ஹும் எழுதணும்.. நீ எழுதி தர்றிய துளசி” கெஞ்ச,

“பின்னிடுவேன்டி நானே இப்ப தான் கொஞ்ச நாளா அந்த எழுத்துல இருந்து தப்பிச்சு இருக்கேன். ஓடிடு”

அப்படியே பேசி பேசி மூவருக்குள்ளும் நல்ல பாண்டிங் வந்து இருந்தது.

Loading spinner

Quote
Topic starter Posted : April 28, 2026 9:08 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top