Notifications
Clear all

அத்தியாயம் 38

 
Admin
(@ramya-devi)
Member Admin

வேரலின் பெற்றவர்களுக்கு தான் மிகவும் தடுமாற்றமாய் இருந்தது. ஆனால் இளமாறன் பவித்ரா இருவருக்கும் அந்த தயக்கம் இல்லை போல..

ட்ரிங்க்ஸ் எடுத்துக் கொண்டு வந்த கங்குவனிடம்

“இன்னும் எவ்வளவு நாளுக்கு தான் இப்படி தனியாவே இருப்பீங்க.. உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.. ஆனா சின்னவனுக்கு ஒரு அரவணைப்பு வேணும் கங்குவன். இப்படி தனியாவே வளர்ந்தா அவனுக்குள்ள தானாகவே ஒரு இறுக்கம் படர்ந்திடும். அது அவனோட எதிர் காலத்துக்கு நல்லது இல்ல..” என்று இளமாறன் பேச்சை ஆரம்பித்தார்.

பூனைக்கு யாரு தான் மணி கட்டுவதாம். அதனால் அவரே தொடங்கி விட்டார் கோலாகலமாக.

“எனக்கு இதுல எல்லாம் பெருசா ஈடுபாடே இல்ல சார். நான் ஒரு முறை பட்டதே எனக்கு போதும். மறுபடியும் அந்த குப்பையில போய் விழ நான் தயாரா இல்ல.. மனசெல்லாம் மறுத்து போயிடுச்சு சார். மகனுக்காகன்னு கூட என்னால இன்னொரு வாழ்க்கையை நினைச்சுக் கூட பார்க்க முடியல” என்றவனின் பேச்சில் இருந்த வெறுப்பு அங்கிருந்த அத்தனை பேருக்கும் மேலும் வேதனையை கூட்டியது.

அவர்களையும் அறியாமல் அவர்களது பார்வை வேரலிடம் குவிய, திடுக்கிட்டுப் போனாள் வேரல்.

பின் அவர்கள் சுதாரித்து அவளின் மடியில் இருந்த பிள்ளையை பார்த்தார்கள். அதன் பிறகே அவளுக்கு இயல்பாய் மூச்சு விட முடிந்தது.

ஒரு நிமிடம் அவளுக்கு வேர்த்து விறுவிறுத்துவிட்டது. இளந்திரையனே இதை எதிர்பார்த்து இருக்கவில்லை. ஆனால் பெரியவர்கள் நால்வரும் சுதாரித்து சமரனை பார்க்கவும் தான் இவனுக்கு அடைத்த மூச்சே வெளி வந்தது.

“கொஞ்ச நேரத்துல பயத்தை காட்டிட்டாங்களே” என்று எண்ணியவன்,

“நீ இப்படியே யோசிச்சுட்டு இருந்தா உன் பிள்ளையோட எதிர்காலம் இப்ப இருக்கிறதை விட மோசமா தான்டா போகும். பெட்டர் நீ ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ” என்று அவன் சொல்ல,

“டேய் புரியாம மடத்தனமா பேசாதடா..” கங்குவன் பல்லைக் கடித்தான்.

“உன் கிட்ட பேசுனா வேலைக்கு ஆகாது..” என்ற திரையன்,

“டேய் கண்ணா இங்க மாமாட்டா வா” என்று தங்கையின் மடியில் இருந்த பிள்ளையை தன் மடிக்கு மாற்றிக் கொண்டவன்,

“உனக்கு அம்மா வேண்டாமாடா?” என்று கேட்டான். பிள்ளை புரியாது முழிக்க,

“உனக்கு அம்மா இருந்தா உன்னை இப்படி மடியில தூக்கி வச்சு கொஞ்சுவாங்க, உன்னை குளிக்க வைப்பாங்க, நீ கேக்குறதை எல்லாம் வாங்கி தருவாங்க.. நீ சொல்ற கதை எல்லாம் காது குடுத்து கேட்டு கமென்ட் பண்ணுவாங்க, அப்புறம் உனக்கு சாப்பாடு ஊட்டி விடுவாங்க, உனக்கு பிடிச்ச டிஸ் எல்லாம் செஞ்சு தருவாங்க, உன்கூடவே நைட் எல்லாம் தூங்குவாங்க, உனக்கு நைட் கதை சொல்லி தூங்க வைப்பாங்க அப்புறம் முழு நேரமும் உன் கூட வே இருப்பாங்க.. முக்கியமா உன்னை திட்டுற உன் அப்பாக்கிட்ட இருந்து உன்னை காப்பாத்துவாங்க” என்று அவன் சொல்ல,

அண்ணாந்து அவனின் முகத்தை பார்த்த சமரன்,

“எனக்கு தான் அம்மா இருக்காங்களே” என்றான்.

அவனது பதிலை கேட்டு எல்லோரும் திகைத்துப் போய் விட்டார்கள்.

“என்னடா கண்ணா சொல்ற?” இளமாறன் தான் கேட்டார்.

“இதெல்லாம் செஞ்சா அவங்க அம்மா தானே..” என்று சின்னவன் கேள்வி கேட்க,

“ஆமா..” என்று எல்லோரும் தலையை ஆட்ட,

“அப்போ எனக்கு தான் அம்மா இருக்காங்களே.. அப்புறம் எதுக்கு இன்னொரு அம்மா” என்றான்.

கங்குவனுக்கே புரியவில்லை.

“யாரைடா சொல்ற.. உன்னோட கேர் டேக்கரை சொல்றியா?” பிள்ளையிடம் கேட்டான் தகப்பன்.

“ச்சே ச்சே அவங்க இல்ல” என்றான் தெளிவாக.

“அப்புறம் யாரைடா சொல்ற.. உனக்கு பிடிச்ச டிஷை செஞ்சு குடுக்குற செப் அ சொல்றியா?”

“இல்லப்பா” என்றவனின் பேச்சில் லேசாக கோவம் எட்டிப் பார்த்தது.

“அப்புறம் யாரை தான்டா சொல்லற? கேக்குற யாரையும் இல்ல இல்லன்னுட்டு இருக்க.. இதுல உனக்கு கோவம் வேற வருதா?” கடுப்படித்தான் கங்குவன்.

தகப்பனை முறைத்தவன்,

“நீங்க அம்மாவை சொல்லாம வேற எல்லோரையும் சொன்னா கோவம் வராதா?” கேட்டவன்,

“என் அம்மா இவங்க தான்” என்று இளந்திரையன் மடியில் இருந்து எழுந்து வேகமாய் நறுவேரல் மடியில் போய் அமர்ந்து அவளின் கழுத்தை இறுக்கமாக கட்டிக் கொண்டான் பிள்ளை.

“என் அம்மா இவங்க இருக்கும் பொழுது எனக்கு இன்னொரு அம்மா எல்லாம் வேண்டாம்.. வேரல் அம்மாவே போதும்” என்று பிள்ளை மேலும் சொல்ல, அங்கிருந்த அத்தனை பேருக்கும் ஷாக் அடித்தது போல இருந்தது. அதுவும் கங்குவனுக்கு சொல்லவே வேண்டாம்.

ஹை வோல்ட்டேஜ் வந்து தாக்கியது போல அத்தனை அதிர்ந்துப் போய் விட்டான் கங்குவன்.

“டேய்” என்று பிள்ளையை அதட்ட வர, எங்கே அவனுக்கு குரலே வரவில்லை. அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் விட்டான்.

இப்படி ஒரு ட்விஸ்ட்டை அவன் எதிர்பார்த்து இருக்கவே இல்லை. தன் வீட்டில் வேலை பார்க்கும் யாரோ ஒருவரை கை காட்டுவான் என்று எதிர்பார்த்து இருந்தான். ஆனால் அவனின் பிள்ளையோ வேரலை கை காட்டுவன் என்று கொஞ்சமும் எதிர்பார்த்து இருக்கவே இல்லை.

“அடப்பாவி என்னடா இப்படி பண்ணிட்ட.. பழகுன பாவத்துக்கு அடி மடியிலேயே கை வச்சுட்டீங்கன்னு நினைப்பாங்களேடா..” என்று பிள்ளையை மனதுக்குள் திட்டியவனுக்கு வெளியே வார்த்தை வரவில்லை.

அங்கிருந்த யாருக்கும் அடுத்து என்ன பேசுவது என்ன செய்வது என்றே ஒரு கணம் புரியவில்லை. திக் பிரம்மை பிடித்தது போல ஆனது அனைவருக்கும்.

“இது சரி வராது” என்று எண்ணிய கங்குவன்,

“சாரி சார்...” என்று முரளியிடம் மன்னிப்பு கேட்டவனுக்கு மேற்கொண்டு பேசவே வார்த்தை வரவில்லை. ஆனால் பேசி தானே ஆகவேண்டும்.

“நான் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.. சமரன் இப்படி யோசித்து வைத்து இருப்பான் என்று..” கங்குவனுக்கு கோர்வையாக பேச வரவில்லை. இடைவெளி நிறைய வந்தது அவனது பேச்சில்.

“அவன் சின்ன பிள்ளை.. ஏதோ தெரியாம பேசிட்டான்.. அவன் பேசுனதுக்கு என்னை மன்னிச்சிடுங்க.. நான் அந்த கண்ணோட்டத்துல உங்க குடும்பத்துக்கூட பழகல சார்..” முரளியிடம் அவன் மேலும் மன்னிப்பு கோர,

“கங்குவன் என்ன இது.. சின்ன பிள்ளை ஏதோ அறியாமையில பேசுனா நீங்க மன்னிப்பு அது இதுன்னு பேசிட்டு இருக்கீங்க.. லீவிட் கங்குவன்” முரளி தான் அவனை சமாதானம் செய்ய வேண்டி வந்தது. அந்த அளவுக்கு கங்குவன் டிஸ்ட்ரப் ஆகி விட்டான்.

“இல்ல சார் நீங் என்ன சொன்னாலும் இது ஏற்புடையதா இல்ல..” என்றவன்,

“சாரி சார்.. தேவையில்லாம உங்க எல்லாரோட மனதையும் வேதனை படுத்தி விட்டேன்.. ப்ளீஸ் பெரிய மனசு பண்ணி எங்களை மன்னிச்சிடுங்க” என்றவன், வேரலின் மடியில் இருந்த பிள்ளையை அழைத்தான்.

ஆனால் அவனோ அவளின் கழுத்தை கட்டிக் கொண்டு வர மாட்டேன் என்று சொல்ல, வலுக்கட்டாயமாக அவளிடம் இருந்து பிள்ளையை பிடுங்கிக் கொண்டு போய் விட்டான்.

மற்ற எல்லோருமே அவனை இருந்துவிட்டு காலையில் போக சொல்லி வற்புறுத்த, அவன் யாரையும் சட்டை செய்யாமல் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு வேக வேகமாக அந்த பண்ணை வீட்டை விட்டு கிளம்பி விட்டான்.

Loading spinner

Quote
Topic starter Posted : October 28, 2026 10:21 am
(@nisha-hameed)
New Member



Yen ma intha kanguvan mattum ipdi irukan? Unga heroes la athiradi ya irupaangale..

Drinks pannina mattum tha ivanuku verala theduma? Yaaru ma ivan , 🤔 

Loading spinner

ReplyQuote
Posted : October 28, 2026 12:59 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top