“பொறு” என்பது போல அவனுக்கு சைகை செய்தவன் வேகமாய் எட்டு வைத்து போகும் பெண்ணவளை பார்த்தவன் சரியாய் அவள் கதவில் கை வைத்து திறக்கும் நேரம்,
“மிஸ் அதிரல்.. ஒரு நிமிடம்” என்றான் மரியாதையாய்.
“ஹாங் சார்..” என்று திகைத்து திரும்பிப் பார்த்தாள் அவனை.
“உனக்கு ஒருத்தனை அறிமுகம் செய்து வைக்கணுமே” என்று அவளை ஆழ்ந்துப் பார்த்தான்.
“எனக்கு யாருடைய அறிமுகமும் வேண்டாம் சார்..” என்று படபடப்பாக கூற,
“ஆனா எனக்கு வேணுமே..” நக்கலாக சொன்னவன்,
“இவன் என்னோட தம்பி.. இவனை இதுக்கு முன்னாடி எங்காவது பார்த்து இருக்கியா?” என்று கேட்டான்.
“இல்லங்க சார்.. இவங்க யாருன்னே எனக்கு தெரியாது.. நான் சென்னைக்கு கிளம்புறேன் இப்பவே லேட் ஆகிடுச்சு..” என்று அவள் வெளியே ஓடப் போக,
“என்ன அவசரம் அதிரல்.. பிளைட் நைட்டுக்கு தான் போட்டு இருக்கு. சோ ஆற அமர பேசிட்டு போகலாம்” சொன்னவன்,
“நல்லா யோசிச்சு சொல்லு.. இவனை இதுக்கு முன்னாடி எங்கயும் பார்த்ததே இல்லையா?” அவனது குரலில் இருந்த வீரியம் அவளை நிலைக்குலைய வைக்க, தலையை குனிந்துக் கொண்டாள்.
கண்களில் கண்ணீர் முட்டியது.
“சோ உனக்கு இவனை தெரிஞ்சு இருக்கு இல்லையா?” அழுத்தமாக அவன் கேட்க, அவளின் தலை தானாக ஆடியது.
“அண்ணா இவங்க தான்..” என்று வெற்றி சொல்ல வர, “ஐ நோ” என்றான் அதிரலை விழி எடுக்காது இடுங்கிய பார்வை பார்த்துக் கொண்டே.
“எப்படிண்ணா?” என்று அவன் அதிர்ந்துப் போனான். அவன் ஊட்டி வந்ததே எதார்த்தமாக தான். ஆனால் வந்த இடத்தில் தாங்கள் இத்தனை நாட்களாக தேடிக் கொண்டு இருந்த பெண் அகப்படுவாள் என்று கொஞ்சமும் எண்ணி இருக்கவே இல்லை.
“சொல்றேன் அதுக்கு முன்னாடி மேடம் கிட்ட கொஞ்சம் பேசணும்” ஏற்னான் நக்கலாக. அதில் பெண்ணவளின் உயிர் துடித்துப் போனது. இன்னும் தன்னோடு பிள்ளையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
“மிஸ் அதிரல் இந்த குழந்தை யாரோடதுன்னு தெரியுமா?” தீத்திரள் தீரன் எகத்தாளமாக கேட்க, அவளின் தலை இல்லை என்று ஆடியது. அவளுக்கு தான் யாருமே எதுவுமே சொல்லவில்லையே. பிறகு இது யாருடைய குழந்தை என்று அவளுக்கு எப்படி தெரியுமாம்.
“நேத்திக்கு ஒரு மனுசனை ஹாஸ்ப்பிட்டல்ல இருக்கக் கூடாதுன்னு துரத்தி அடிச்சீங்களே மேடம். அந்த மனுசனோட ஒரே ஒரு மகன் தான் உங்க கையில இருக்குற பிள்ளை” என்று சொன்னவனின் வார்த்தையில் அத்தனை வெப்பம் சூழ்ந்து இருந்தது.
அந்த சூடு மிகச்சரியாக அவளை வந்து தாக்க மொத்தமும் நிலை குலைந்துப் போய் விட்டாள் அதிரல். தீரனின் குடும்பத்தில் இருக்கும் யாரோ ஒருவரின் பிள்ளையை தான் தான் சுமந்து இருக்கிறோம் என்று ஓரளவு யூகித்து இருந்தாள். ஆனால் அந்த தீத்திரள் தீரனின் பிள்ளையையே தான் சுமந்து இருக்கிறோம் என்று அவன் வாயால் சொல்ல கேட்ட அந்த நிமிடம் நெஞ்சுக்குள் பய பந்து உருண்டது.
மிகுந்த அச்சத்துடன் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். அவனோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் கண்களில் கடுமை ஏறிப் போய் இருக்கையில் அமர்ந்து இருந்தான். அவனை பார்க்கும் போது வெகு சாதாரணமாக அமர்ந்து இருப்பது போல தான் இருந்தது. ஆனால் உள்ளுக்குள் பல எரிமலைகள் இந்த சில துளி நிமிடங்களுக்குள் வெடித்துக் கொண்டு இருப்பதை அவன் மட்டும் அறிவான்.
நேத்ரா வந்து தீரனிடம் பேசி விட்டு போனதில் இருந்து தீரன் எரிமலையாக குமுறிக் கொண்டு இருக்கிறான். அதுவும் நேத்ரா வெளியே செல்லும் பொழுது,
“நேத்ரா உனக்கு வேற எதுவும் பெயர் இருக்கா?” என்று இவன் கேட்க,
“அப்படி எல்லாம் எதுவும் இல்ல சார்..” என்றாள்.
“ஓ..” என்றவன், “ஆமா நேத்ரான்னா என்னன்னு தெரியுமா?” என்று அவளிடம் போட்டு வாங்க,
“நேத்ரான்னா கயல் சார்.. கண்ணு ன்னு பொருள்” என்று அவள் சொல்லி விட்டுப் போக, தீரனுக்குள் ஒரு முடிச்சு அவிழ்ந்தது. என்னெனில் கயல் என்கிற பெண்ணுக்கு தான் ஹார்ட் ஆப்ரேஷன் செய்து இருந்ததாக ரிபோர்ட் சொல்லி இருந்தது. கூடவே அவளின் ஹெல்த் இஷ்யூவில் இரண்டாவது முடிச்சும் அவிழ்ந்து இருந்தது.
அடுத்து அதிரல் வந்து பேசி எரிமைலையாய் வெடித்து சிதறி இருந்ததில் மொத்த முடிச்சும் அவிழ்ந்துப் போனது. கழுத்தில் தாலி இல்லாமல் பிள்ளையை கையில் வைத்து இருந்த விதம், கணவன் இருக்கிறான் என்று இவ்வளவு நாளும் சொன்னவள் இப்பொழுது திருமணமே ஆகவில்லை என்று சொன்னதில் அடைபட்ட எல்லா கதவுகளும் திறந்துக் கொண்டன தீரனுக்கு.
கூடவே ஏன் மனம் முன் பின் அறியாத பிள்ளையிடம் செல்கிறது என்று அந்த நிமிடம் தான் உணர்ந்துக் கொண்டான் அவன். என் உதிரம் அல்லவா? மீசையை முறுக்கிக் கொள்ள வெறி வந்தது.
சோ அதிரல்ன்னா மல்லிகை.. அதுவும் காட்டு மல்லிகை. என்று தெரிந்துக் கொண்டவன் அவளை ஆட விட்டு இறுதியாக அவளை அந்த பெயர் சொல்லி நிறுத்தி இருந்தான்.
அதோடு வெற்றியை பார்த்து அவள் அதிர்ந்த விதம் அவனுக்கு கண்ணாடியாய் எல்லாவற்றையும் தெளிவாக காட்ட உறுதியாகி விட்டான்.
அச்சத்துடன் தன்னை பார்த்த அதிரலை அலட்டிக் கொள்ளாமல் பார்த்த தீத்திரள் தீரன்,
“உள்ள பெட்ரூம் இருக்கு.. அங்க என் மகனை படுக்க வச்சிட்டு நீங்க போகலாம்” என்றான் ரொம்ப அசால்ட்டாக.
“சார்...” என்று உயிரை கையில் வைத்து கசக்கி எரிந்தது போல துடித்துப் போனாள்.
“நோ சான்ஸ் மிஸ் அதிரல்.. நேற்றைக்கு என்னை எப்படி துரத்தி அடிச்சீங்கன்னு ஞாபகம் இருக்கா?” குரூரமாக கேட்டவன்,
“என் மகனை பெத்து எடுக்க உன் தங்கச்சிக்கு ட்ரீட்மென்ட் குடுத்தாச்சு. இத்தனை வருடமா என் பிள்ளையை எந்த குறையும் இல்லாம வளர்த்ததுக்கு இந்தா பிளாங்க் செக். இதோட உனக்கும் என் மகனுக்குமான சம்மந்தம் எதுவும் கிடையாது. இனி நீ யாரோ அவன் யாரோ...” என்று மேசையில் தூக்கி எறிந்தான் வெற்று செக் லீபை.
அதை கேட்ட அதிரல் உள்ளம் துடிதுடித்துப் போனாள். விழிகளில் பொங்கிய நீருடன்,
“சார் ப்ளீஸ்.. என் மகனை என் கிட்ட இருந்து பிரிச்சிடாதீங்க... எல்லாமே எனக்கு அவன் தான். அவன் இல்லன்னா சத்தியமா என்னால உயிர் வாழ முடியாது. அவனை என் உயிர்ல சுமக்க ஆரம்பிச்சதுல இருந்து ரொம்ப நேசிச்கிட்டேன். இப்போ இடையில வந்து கேட்டா நான் என்ன பண்ணுவேன். நீங்க தான் அப்பவே அந்த பிராஸசை கேன்சல் பண்ண சொல்லி சொல்லிட்டீங்க தானே. அப்போ உங்களுக்கும் என் குழந்தைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை தானே.. ப்ளீஸ் எங்களை விட்டுடுங்க சார்.. நாங்க உங்க கண்ணுல படாம எங்காவது போயிடுறோம்” என்று அவனிடம் கைக்கூப்பி வேண்ட, தீத்திரள் தீரனோ கொஞ்சமும் அசையவே இல்லை.
“நான் சொன்னா சொன்னது தான். மரியாதையா உன் கையாலேயே பிள்ளையை தர்றியா? இல்ல நானே பிடுங்கிக்கவா?” என்றவன் இருக்கையில் இருந்து எழுந்து விருட்டென்று அவளிடம் வந்தவன், அவள் சுதாரிக்கும் முன்பே அவளின் கையில் இருந்த பிள்ளையை வாங்கி தன் தோளில் போட்டுக் கொண்டவன்,
“கெட்வுட்” என்று கர்ஜித்தான்.




