“பார்க்க தான் ஜென்டில் மேன்.. மத்தபடி இவன் சரியான காட்டுமிராண்டி” வாய்க்குள் முணுமுணுத்த வேரல்,
“வெல்கம் மிஸ்டர் கங்குவன்” என்று பொக்கேயை நீட்டினாள் அவனிடம். அவன் அதை வாங்கி தன் பியே விடம் குடுத்து விட்டான் அடுத்த நொடியே.
அதை கண்டு கொள்ளாமல்,
“ஹார்ட் வெல்கம் மிஸ்டர் சாம் பாய்..” என்று அவனின் உயரத்துக்கு மண்டியிட்டு அமர்ந்தவள், அவனது கையில் சாக்லேட் பொக்கேயை நீட்டினாள்.
“தேங்க்ஸ் ஆன்டி” என்றவன் சட்டென்று அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.
அதை எதிர் பார்க்காத கங்குவன்,
“என்னடா பண்ற?” அடிக்குரலில் மிரட்டினான்.
“அவனை அவன் போக்குல விடுங்க மிஸ்டர் கங்குவன்.. அவன் அப்படி ஒன்னும் பெரிய தப்பு பண்ணிடல. சும்மா எதுக்கு எடுத்தாலும் அவனை கண்ரோல் பண்ணி ரூல் பண்றதை விடுங்க” பிள்ளைக்கு சப்போர்ட்டுக்கு வந்தவள், அவனை கைகளில் அள்ளிக் கொண்டாள்.
“அவனை கீழே இறக்கி விடு. அவன் ஒன்னும் கைப்பிள்ளை இல்லை” யாருக்கும் கேட்கா வண்ணம் உறுமினான்.
“அவன் கைப்பிள்ளை தான். அப்படி ஒன்னும் அவன் பெரியாவனா வளர்ந்துடல.. மூணு வயசு உங்களுக்கு பெரிய ஆளா தெரியுறானா” கடுப்புடன் சொன்னவள்,
“சாரி மிஸ்டர்..” அவனை போலவே யாருக்கும் கேட்கா வண்ணம் சொன்னவள்,
மற்றவர்கள் அவர்களை பார்ப்பதை கண்டு “ப்ளீஸ் பீ சீட்டட்” என்று இன் முகமாக அவனை வரவேற்று அமர வைக்க, கடுப்பின் உச்சத்தில் நின்றான் கங்குவன்.
பப்ளிக் பிளேசில் வலுக்கட்டாயமாக பிள்ளையை அவளிடம் இருந்து பிடுங்க முடியாதே. அமைதியாக போக வேண்டிய சூழல் அவனுக்கு. அதுவும் சிஎம் முன்னால் இப்படி அநாகரீகமாக நடந்துக் கொள்ள முடியாதே..
எனவே பல்லைக் கடித்துக் கொண்டு சிஎம் போகிற வரை இந்த பள்ளியில் இருந்தான்.
சிஎம்முடன் அன்றைக்கு மத்திய லஞ்ச்.. எனவே அவனால் மறுக்க முடியவில்லை. மத்திய நேரம் வரை அவள் சொல்வதை தான் செய்ய வேண்டி இருந்தது.
அது மட்டுமா அவனின் பிள்ளை அவளின் முந்தானையை பிடித்துக் கொண்டு அல்லவா சுற்றுகிறான். அவள் எங்கும் போனாலும் இவனும் கூடவே செல்கிறான்.
நில்லுடா என்று சொன்னதற்கு அவன் நிற்கவே இல்லையே.. அவள் போகும் இடமெல்லாம் இவனும் போய்க் கொண்டு இருந்தான்.
“நீ யாருய்யா இடையில” என்கிற ரேஞ்சில் தான் பிள்ளை தகப்பனை பார்த்து வைத்தான்.
அதுவே அவனின் கடுப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஆனாலும் வெளிய எதையும் காட்டிக் கொள்ளவில்லை அவன்.
ஒரு வழியாக நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடந்து முடிந்தது. கங்குவனுக்கு ஒதுக்கப்பட நேரத்தில் தன் நேர்த்தியான பேச்சை சபை எங்கும் தெறிக்க விட்டான்.
“உங்க அப்பா ஸ்பீச் மாஸ் தான்டா கண்ணா” என்றாள் மடியில் வைத்து இருந்த பிள்ளையிடம். அவன் திரும்பி அவளை பார்த்து,
“ஆனா நேக்கு இல்ல” என்று அவன் சொல்ல, இவளுக்கு உருகிப் போனது.
“விடு கண்ணா எங்க போயிடுவாரு.. உன்கிட்ட தானே வந்து ஆகணும்” என்று சொன்னவள் அவனை அதன் பிறகு கீழேயே விடவில்லை.
உணவு உண்ணும் நேரம் கூட அவனை கீழே இறக்கவில்லை.
“கீழ விடேன்டி” அடிக்குரலில் சீறினான்.
“உங்களுக்கு என்ன வந்தது?” முறைத்தாள்.
“உன் குடும்பமே இங்க நம்மளை தான் பார்த்துட்டு இருக்கு.. என்னவோ உனக்கும் எனக்கும் லிங்க் இருக்க மாதிரி எல்லோரோட பார்வையும் இருக்கு.. ஒழுங்கா தள்ளி இருடி” என்றான் அடிக்குரலில்.
“ஹலோ நான் ஒன்னும் உங்களை ஒட்டி ஒரசி நிக்கல.. நீங்க அதன் நான் இருக்குற இடத்துக்கு தேடி வந்து பேசிட்டு இருக்கீங்க.. சாரி முறைச்சுட்டு இருக்கீங்க” என்றாள்.
“நான் என் பையனை வாங்க வந்தேன்”
“அது உங்களுக்கும் எனக்கும் மட்டும் தானே தெரியும்”
“ஏன் நீ தான் போய் தம்பட்டம் அடியேன்”
“எனக்கு வேற வேலை இல்ல பாருங்க” முறைத்தவள்,
“அன்னைக்கு இவனை என்கிட்டே இருந்து பிரிச்சு வெளியே தள்ளி விட்டீங்களே.. அதுக்கு பதலடி தான் இது. இன்னைக்கு முழுக்க இவன் என் கூட தான். உங்களால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோங்க” சிலுப்பினாள் வேரல்.
“உன் பேரன்ட்ஸ் கிட்ட சொல்லுவேன்டி”
“ஐய இப்படி சின்ன பிள்ளை தனமா பிஹேவ் பண்ணாதீங்க. நீங்க சொன்னாலும் எனக்கு நோ அப்ஜெக்ஷன்” தோளை குலுக்கி விட்டு சென்றாலே தவிர பிள்ளையை அவனிடம் குடுக்கவே இல்லை.
அதில் பல்லைக் கடிக்க மட்டுமே அவனால் முடிந்தது. மத்திய உணவு முடிந்து சிறிது நேரம் எல்லோரும் அளவளாவி விட்டு கிளம்ப ஆயத்தம் ஆக, ரிட்டேர்ன் கிப்ட் கொடுத்தாள்.
மகிழ்ச்சியுடன் அனைவரும் வாங்கிக் கொண்டார்கள். கங்குவனுக்கு மட்டும் தான் உள்ளம் எரிந்தது. வேரல் தன்னை மிகவும் கார்னர் பண்ணி விட்டதாக அவன் உணர்ந்தான்.
அன்றிரவு அதீதமாக போதையில் ஆழ்ந்தான்.
“என்னை தோற்கடிக்க நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் என்னை உன்னால வெல்லவே முடியாது. என் கால் தூசிக்கு சமம் ஆகுவியாடி.. கங்குவனை யாருன்னு நினைச்ச, கிங் ஆப் தி கிங்டி.. உன்னை என் காலுக்கு கீழே கொண்டு வரல நான் கங்குவன் கிடையாது..” மது போதையில் உளறி தள்ளினான்.





