அத்தியாயம் 2

 
Admin
(@ramya-devi)
Member Admin

கங்குவனின் பேச்சை கேட்கவே கூடாது என்று அத்தனை வைராக்கியமாக நின்று இருந்தவளை மேலிருந்து கீழாக அவன் பார்க்கத் தொடங்க, இவளுக்கு அத்துமீறி கோவம் வந்தது.

“மிஸ்டர் என்ன பார்வை இது.. பார்வையை திருப்புங்க” பல்லைக் கடித்தாள்.

“என் முன்னாடி எது இருந்தாலும் பார்க்க தான் செய்வேன். உனக்கு என் முன்னாடி இருக்க விருப்பம் இல்லன்னா தாராளமா வெளிய போகலாம்..” என்று நிறுத்தியவன்,

“நான் சொன்னதை செஞ்சுட்டு நீ வெளியே போகலாம்” என்று நிதானமாக அவன் சொல்ல, அவனது பேச்சில் அத்தனை கோவம் வந்தது.

“நான் என்ன தப்பு செஞ்சேன் என்னை எதுக்கு நீல்டவுன் போட சொல்றீங்க?”

“என்னை எதிர்த்து பேசுனியே, என் பேச்சை ஸ்டாப் பண்ண சொன்னியே.. இதெல்லாம் தப்பு இல்லையா? வெளில கேட்டுப் பார் என் கண்ணை பார்த்து கூட பேச மாட்டாங்க.. அத்தனை பயமும் மரியாதையும் என் மேல இருக்கு. ஆனா நீ ஆப்ட்ரால் ஒரு டீச்சர்.. எதுக்கும் உதவாத என்கிட்டே கைக்கட்டி மாச சம்பளம் வாங்குற ஒரு டீச்சர். சர்வ சாதாரணமா என்னை எதிர்த்து பேசுற, கொஞ்சமும் பயம் இல்லாமல் என் கண்ணை பார்த்து பேசுற, என் பேச்சை ஸ்டாப் பண்ண சொல்ற.. அதுக்கெல்லாம் உனக்கு தண்டனை குடுக்க வேண்டாமா? அது தான் இந்த நீல்டவுன்” என்றான்.

“வாட்? உங்களை எதிர்த்து பேசுனா நீங்க தண்டனை குடுப்பீங்களா?”

“அப்கோர்ஸ்.. நீ பொம்பளையா போனதுனால தான் உன்னை இவ்வளவு ப்ளபியா ஹேண்டில் பண்றேன்.. இதே உன் இடத்துல வேற யாராவது இருந்து இருந்தா என் பனிஷ்மென்ட்டே வேற மாதிரி இருந்ந்து இருக்கும்” அத்தனை கர்வத்தோடு அவன் சொல்ல,

“அப்போ முன்ன பின்ன தெரியாத என்னை மட்டும் நீங்க இடியட்னு திட்டலாமா?”

“இடியட்டை இடியட்னு திட்டாம வேற எப்படி திட்டுறது..?” அழுத்தமாக அவளை பார்த்து சொன்னவனை முறைத்தவள்,

“நான் ஒன்னும் இடியட் கிடையாது.. இந்த ஸ்கூலோட டீச்சர்.. செர்டிபிகேட்ஸ் எல்லாம் பார்க்கலையோ?” நக்கலாக சொன்னவளை அழுத்தமாக பார்த்து முறைத்தவன்,

“நீ வரம்பு மீறி பேசிட்டு இருக்க.. என் ரேன்ஜ் என்னனு தெரியாம ஆடிட்டு இருக்க.. நீ பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும் நீ பதில் சொல்லியாகனும்.. ஞாபகம் வச்சுக்கோ” எச்சரித்தான்.

“ஏன் சார் என் குவாலிபை என்னன்னு செக் பண்ணாம இடியட்னு திட்டுனது நீங்க... அதை சொன்னதுக்கு ரிவென்ஜ் எடுக்குற மாதிரி பேசிட்டு இருக்கீங்க” அவளுக்கு கொஞ்சமும் பயம் இல்லை போல.. மேற்கொண்டு மேற்கொண்டு அவனிடம் எதிர்த்து பேசிக்கொண்டே இருந்தாள் அவனின் உயரம் எதுவும் அறியாமல் அவள் பேச பேச ஒருத்தன் கோதி நிலையில் நின்றான்.

“லாஸ்ட் வார்னிங்” என்றான்.

“என்னால முட்டி போட முடியாது.. உங்களால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிக்கோங்க” என்றவளை நிதானம் மில்லாமல் அவளின் முன்னழகை அவன் பார்க்க, அதில் அவளின் தேகம் மொத்தமும் கூசிப் போனது.

“சீ என்ன பார்வை இது.. நீங்க ஒரு கரஸ்பாண்டன்ட் அதை முதல்ல நினைவு வச்சுக்கோங்க” அவள் சத்தமிட, இவனோ எதற்கும் அசையவில்லை. அவளை தான் இடை விடாது பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனது பார்வையின் வீரியம் அவளை நிலைக்க்குலைய செய்ய,

“பொருக்கி மாதிரி பிகேவ் பண்றீங்க” என்றாள்.

அவனிடம் இப்பொழுதும் எந்த வார்த்தையும் இல்லை.  விழிகளால் அவளின் அழகை பார்த்துக் கொண்டே இருந்தான்.

இது அவளை அடி பணிய வைக்கும் ஒரு நோக்கு. மற்ற படி அவளிடம் அவனுக்கு எந்த சலனமும் இல்லை. ஜஸ்ட் ஒரு ஸ்லேவை அதிகார திமிருடன் பார்க்கும் ஒரு பார்வை. அந்த அதிகார திமிர் பார்வையில் அவளின் எழில் மிகு வனப்புகளை கொஞ்சமும் தயக்கமில்லாமல் பார்க்கிறான்.

“ஜஸ்ட் ஸ்டாப்” என்று அவள் கத்த, முன்பை விட இன்னும் அதிகமாக அவளை பார்த்தான் கங்குவன். அவனது பார்வையில் கூசி குறுகிப் போனவள் அவனுக்கு முதுகு காட்டி நின்றாள்.

அவளின் முதுகில் ஊசி தைக்கும் உணர்வு. திரும்பாமலே அவளுக்கு புரிந்துப் போனது அவன் விடாமல் தன்னை தான் பார்க்கிறான் என்று.

“காட்” என்று மருண்டுப் போனவள்,

“ஒரு பெண்ணை இழிவுப் படுத்த இந்த மாதிரி சீப் டெக்னிக்கை தானே காலம் காலமாக நீங்க எல்லாம் பையன் படுத்திட்டு இருக்கீங்க..” அவள் ஆவேசமாக வெடிக்க,

கங்குவன் இப்பொழுதும் கொஞ்சம் கூட அசையவில்லை. அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். முன்பு முன்புற அழகை பார்வையிட்டான். இப்பொழுது பின்புற அழகை பார்வையிடுகிறான் தட்ஸால். அவனிடம் எந்த மாறுதலும் இல்லை.

அவனின் பார்வை வீரியத்தில் ஒரு பெண்ணாய் அவள் தான் கூனி குறுகிப் போய் நிற்க வேண்டி வந்தது.

கலங்கி நின்றவள் முன்புறம் திரும்பி அவனை தீர்க்கமாக பார்த்தாள். அவன் கொஞ்சமும் அவளை கண்டுக் கொள்ளவே இல்லை. அவனது வேலை அவளை பார்ப்பது என்ற ஒன்றிலே நின்றான். அவனது பார்வையில் இருந்து தப்பிக்க முடியாமல் ஒளிந்துக் கொள்ள ஒரு இடம் கிடைக்காமல் அல்லாடிப் போனாள்.

அவன் விடாத பார்வையில் எரிச்சலுற்றவள், “லுக் மை ஐஸ்” என்றாள். அது கட்டளையாக இருக்க கங்குவனின் முடி கூட அசையாதே அதற்கு.

அவன் இன்னும் தோரணையாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டு அவளின் பின்னழகை பார்க்க,

“உங்கக்கிட்ட தான் சார் சொல்றேன்” என்று பல்லைக் கடித்தாள்.

ம்ஹும்.. அவனிடம் ஒரு ரெஸ்பான்ஸ் கூட இல்லை. ஆனால் பார்வை மொத்தமும் அவளின் தேகத்தை கூறுப் போட்டுக் கொண்டு இருந்தது. அவனின் பார்வையாலே பெண்ணவளை அடிமைபடுத்த முடிவெடுத்து விட்டான் போல..

அவளை அடிமையாக்கிய பிறகே தன்னை விடுவான் என்று புரிந்துக் கொண்டவளின் முகம் அவமானத்தால் கூனிக் குறுகிப் போனது.

“உன்னை வேலை விட்டு தூக்கிடுவேன், உனக்கு வேற எங்கயும் வேலை கிடைக்காத மாதிரி பண்ணிடுவேன்” என எந்த மிரட்டலும் அவன் விட்டுக்கவில்லை.

மாறாக அவன் முன்பு மண்டி போட வேண்டுமாம். தான் ஒரு டீச்சர் என்பது தெரிந்தும் தன்னை முட்டி போடவைத்து அவமானப்படுத்த நினைக்கும் இவனை போல ஒரு அரக்கனை அவள் வாழ்நாள் முழுவதும் பார்த்து இருக்கவே மாட்டாள்.

உச்சக்கட்ட அவமானம் என்பது தன்னை அசிங்கப்படுத்த, அவமானப்படுத்த நின்னைப்பவர் முன்பு மண்டியிடுவது தானே பெரிதினும் பெரிய அவமானம். அந்த அவமானத்தை தான் கங்குவன் நறுவேரளுக்கு தர துடித்தான்.

நல்ல பெண்ணவளுக்கு ஒரு ஆணின் பார்வை தின்பது போல, அங்கங்களை கூறுப் போடுவது போல, இருந்தால் அவ்விடத்தை விட்டு நகர்வதே சாலச்சிறந்தது.

ஒளிந்துக் கொள்ள கூட இவ்விடத்தில் எந்த மறைவிடமும் இல்லாமல் போக இன்னும் எவ்வளவு நேரம் ஆனாலும் அவன் தன்னை வெளியே விடப் போவாது இல்லை. அதே நேரம் தன்னையே தான் கண்கள் வலிக்க வலிக்க அவன் பார்த்துக் கொண்டு இருப்பான் என்ற நிதர்சனம் புரிய, ஒரு கணம் யோசித்தாள்.

இந்த அவமானதுக்கு நிச்சையம் உன்னை பழிவாங்குவேன்டா” மனதுக்குள் சபதம் போட்டுக் கொண்டவள்,

முகம் கருகிப் போக அவனின் முன்பு பட்டென்று முட்டிப் போட்டாள் வேரல்.

அவள் முட்டிப் போட்டதை சில நிமிடங்கள் இரசித்துப் பார்த்த கங்குவன், அதன் பிறகு அவ்விடத்தில் ஒருத்தி இல்லை என்பது போல தன் வேலையை பார்க்கத் தொடங்கி விட்டான்.

அவன் பார்வை தன் மீது படாமல் போனதில் ஒரு கணம் நிம்மதி எழுந்தாலும் அவன் முன்பு இப்படி அவமானப்பட்டு விட்டோமே என்று உள்ளுக்குள் கொதித்துப் போனாள்.

சரியாக அரைமணி நேரம் முட்டிப் போட்டவள் எழுந்து கதவு பக்கம் சென்றாள். ஆனால் கதவு திறக்கப் படாமல் போக திரும்பி அவனை பார்த்தாள்.

அவன் அவளை கண்டுக் கொள்ளவே இல்லை. வேலையில் படு பிசியாக இருந்தான்.

“ப்ச் இவன் கிட்ட பேச வேண்டிய சூழல் இருக்கே...” என்று இயற்கையை நிந்தித்தவள்,

“ஹாப்னவர் முடிஞ்சு சார்” என்றாள்.

கோப்புகளை பார்த்துக் கொண்டு இருந்தவன், தலையை நிமிர்த்தாமல்,

“நீ பேசுன பேச்சுக்கு ஹாபனவர் எக்ஸ்டேர்ன் பண்ணி இருக்கேன்” என்றான்.

“வாட்? சார் இதெல்லாம் டூ மச்.. கதவை திறங்க.. நீங்க சொன்னபடி நான் செஞ்சுட்டீன் ல்ல” அவள் ஆர்பாட்டம் பண்ண,

தலையை தூக்கி அவளை பார்த்தான். அடுத்த சில நிமிடங்களும் அவன் அவளை பார்த்துக் கொண்டே இருக்க, எரிச்சல் ஆனவள் அவனது பார்வையில் இருந்து தப்பிக்க மீண்டும் நீல்டவுன் போட்டாள்.

இவனும் கோப்புகளை பார்வையிட ஆரம்ம்பித்தான். ஏசி ஓடும் சத்தம் மட்டுமே அவ்விடத்தில் நிறைந்து இருந்தது.

சரியாக அரைமணிநேரம் கழித்து ரிமோட் மூலமாக கதவை திறந்து விட்டான்.

பட்டென்று அவள் வெளியேப் போக,

“ஏய் நில்லு” என்றான். அவனது இந்த அழைப்பில் கடுப்பனவள் எதோ பேசவர,

“ஜஸ்ட் ஸ்டாப்பிட்...” அத்தனை கர்ஜனையாக அவனது வாய் மொழி வர, ஒரு கணம் மிரண்டு தான் போனாள்.

“இங்க பாரு.. இதோட உன் முகத்தை நான் எங்கையும் பார்க்கவே கூடாது.. ஒழுங்கா வந்தமா பிள்ளைங்களுக்கு பாடம் எடுத்தமான்னு போயிட்டே இருக்கணும். அதை விட்டு விட்டு ஏதாவது துள்ளிக்கிட்டு திருஞ்சன்னு வை.. அன்னைக்கு தான் உனக்கு கடைசி நாள்.. கொன்னு கூறு போட்டுட்டு போயிக்கிட்டே இருப்பேன்..”

“இன்னைக்கு ஜஸ்ட் ஒரு சின்ன செம்பில் தான் பார்த்த.. அதுல இருந்து வெளில வரவே ஆறு மாசம் ஆகும். அதுக்குள்ள மெயின் பிக்சர் காட்ட வச்சிடாத தாங்க மாட்ட” என்று அப்பட்டமாக அவளை மிரட்டியவன்,

“இது ஒன்னும் நீ படிச்ச எளிமன்ரி ஸ்கூல் கிடையாது.. இண்டர்நேஷனல் ஸ்கூல்.. இங்க இருந்து படிச்சுட்டு போற ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் வெளிநாட்டுல போய் செட்டில் ஆகுற பெர்சென். சோ இந்த கீரை எடுத்துட்டு வா கையில ஸ்டார் போடுறேன்னு சீப்பா பிகேவ் பண்ணிட்டு இருக்காத.. இந்த கிறுக்கு தானத்தை எல்லாம் உன்கிட்ட நூறுக்கும் இருநூறுக்கும் டியூஷனுக்கு வர்றவாங்கக்கிட்ட வச்சுக்க.. அதை விட்டுட்டு இங்க ஏதாவது வேண்டாத வேலை பார்த்துக்கிட்டு இருந்த தோளை உறிச்சுடுவேன்..” என்று அப்பட்டமாக மிரட்டினான் கங்குவன்.

அதில் கொஞ்சம் மிரண்டு தான் போனாள் நறுவேரல். முகம் அவமானத்தில் மிதந்தது, நெஞ்சமோ அவனின் மிரட்டலில் பயந்துப் போனது..

முதல் சந்திப்பே இருவருக்குள்ளும் தீராத பகையை கொடுத்து விட்டது இனி என்ன ஆகுமோ...

Loading spinner

Quote
Topic starter Posted : August 20, 2026 11:10 am
(@suganyarangasamy)
New Member

Nice update mam...

 

Hero sir too much ah panraru ...

Loading spinner

ReplyQuote
Posted : August 20, 2026 3:31 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top