அத்தியாயம் 1

 
Admin
(@ramya-devi)
Member Admin

கங்குவன் பெயருக்கு ஏற்ப நெருப்பாக கொதித்துக் கொண்டு இருந்தான்.. அவனின் விழிகள் இரண்டும் ஏகத்துக்கும் சிவந்துப் போய் இருந்தது.

முகத்தில் கட்டுக் கடங்காத கோவம் முகிழ்த்து இருந்தது. அதை கொஞ்சமும் அடக்க எண்ணாமல் தன் எதிரில் இருப்பவர்களிடம் முழுமையாக கொட்டிக் கொண்டு இருந்தான்.

அந்த அறையில் ஏசி மைனஸில் இருந்தாலும் அவனின் கோவத்தால் அந்த அறையில் வெப்பக்காற்று தான் வீசியது. அவனுக்கு முன்னாடி இருந்தவர்கள் தலையை குனிந்துக் கொண்டு லேசான நடுக்கத்துடன் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.

அவனை விட வயதில் பெரியவர்கள்.. மூப்பு அப்பட்டமாய் அவர்களுக்கு தெரிந்தது. ஆனாலும் அவர்களை அவன் அமரச்சொல்லவே இல்லை.

“எனக்கு முன்னாடி நீங்க எல்லாம் உட்கார்ந்து விடுவீங்களா? அப்போ எனக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம்..” அதிகார திமிர் ஏகத்துக்கும் நிரம்பிக் கிடந்தது அவனிடம்.

“சாரி சார்” என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்க,

“வாட் சாரி... எனக்கு சாரி சொல்றது எப்பவும் பிடிக்காதுன்னு தெரியாதா மிஸ்டர் பச்சை பெருமாள்..” நரம்புகள் புடைக்க அவன் பேச,

அவரின் தலை இன்னமும் தாழ்ந்து இருந்தது.

“இப்படி தலை குனிஞ்சு சாரி சொன்னா எல்லாம் சரியா போயிடுமா? இது என்ன அஞ்சுக்கும் பத்துக்கும் நடத்திக்கிட்டு இருக்க எலிமெண்ட்ரி ஸ்கூல்னு நினைச்சீங்களா? இண்டர்நேஷனல் க்ரேட் லெவெல்ல ஸ்கூல் நடத்திட்டு இருக்கேன்.. யூ நோ.. இங்க வந்து கீரை சாப்பிடு கையில ஸ்டார் போடுறேன்னு வாட் த ஹெல் மிஸ்டர் பச்சை பெருமாள்..”

“இல்ல எனக்கு புரியல.. இங்க படிப்புக்கு தான் முதல் இடம்னு வேலையில ஜாயின் பண்ணும் பொழுதே அறிவுறுத்தி தானே அப்பாயின்ட்மென்ட் ஆடர் குடுத்து இருக்கீங்க.. பின்ன எப்படி அந்த இடியட் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கா..” என்று அவன் இன்னும் கொதித்து பேசியவன்,

“டைம் என்ன ஆச்சு.. கரஸ்பாண்டன்ட் நான் வந்துட்டேன். பிரின்சிபால் நீங்கலும் வந்துட்டீங்க.. ஆனா அந்த மேடம் மட்டும் இன்னும் வரல.. என்ன நினைச்சுக்கிட்டு இருக்கா அவ மனசுல.. இப்பவே அவளை வேலையை விட்டு தூக்கிடுவேன்” என்ற நேரம்,

“மே ஐ கமின் சார்..” என்ற குரலில் படக்கென்று கழுத்து நரம்பே உடைத்துக் கொள்ளும் அளவுக்கு அத்தனை வேகமாக திரும்பிப் பார்த்தான் வாயிலை.

இளம் குருத்தாக பசுமையில் மிளிரும் வேரல் போல ஒரு பெண் நின்று இருந்தாள். அவளின் பெயரும் வேரல் தான். நறுவேரல்...

திரும்பி பச்சை பெருமாளை ஒரு பார்வை பார்த்தான். அவர் இந்த பெண் தான் என்று தலையை ஆட்ட, அடுத்த நிமிடம் என்ன ஏது என்று எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் “ஏய் இடியட்” என்று வசைமழை பொழிய,

அவள் வந்தும் வராததுமாக கோட் சூட் போட்ட மனுசன் அவளை பார்த்து திட்ட ஆரம்பிக்க, ஒரு கணம் திகைத்துப் போனாள்.

“ஹலோ மிஸ்டர் ஸ்டாப் தி நான்சென்ஸ் டாக்கிங்..” என்று தைரியமாக அவள் அவனை எதிர்த்துப் பேச, பச்சை பெருமாள் அதிர்ந்துப் போனார்.

“மேடம் அவர் தான் கரஸ்பாண்டன்ட்”

“சோ வாட்...?” என்ற பெண்ணவளை இன்னும் அதிர்ந்துப் போய் பார்த்தார் அவர்.

“மேடம் அவர் கரஸ்பாண்டன்ட்.. நீங்க வேலை பார்க்கிறது அவர்கிட்ட தான்.. சோ மரியாதையா பேசுங்க” பச்சை பெருமாள் எடுத்துரைக்க,

“அதை அவர் கிட்டயும் கொஞ்சம் சொல்லுங்க சார்... முன்ன பின்ன தெரியாத ஒரு பெண்ணை இடியட்னு பேச இவர் யாரு” என்றாள் அத்தனை கோவமாக.

முதல் முறையாக தன் பேச்சையே நிறுத்த சொல்லி சொன்ன பெண்ணவளை அழுத்தம் திருத்தமாக பார்த்தான். அதுவும் தன் முன் குரல் உயர்த்தி கோவப்படும் பெண்ணை அத்தனை ஆக்ரோஷத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான் கங்குவன்.

தன்னை ஆவேசத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கும் ஒருவனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் பச்சை பெருமாளிடம் தன் நியாயத்தை பேசிக் கொண்டு இருந்தாள் நறுவேரல்.

“மேடம் ப்ளீஸ்..” என்று அவர் காம்ப்ரமைஸ் பண்ண பார்க்க,

“நீங்க கூப்பிட்டதா சொன்னாங்க சார்.. அது தான் வந்தேன்.. சொல்லுங்க சார் எதுக்கு கூப்பிட்டீங்க.. பர்ஸ்ட் பீரியட் ஸ்டார்ட் ஆகிடும்” என்று அவள் வாட்ச்சை பார்த்தாள்.

அவளின் ஆட்டிட்டியூட்டில் பல்லைக் கடித்த கங்குவன்,

“மிஸ்டர் பச்சை பெருமாள் கெட் அவுட்” என்றான்.

“சார்.. அவங்களுக்கு உங்களை பற்றி தெரியாது..” என்று அவர் எதோ சொல்ல வர,

“ஜஸ்ட் கெட்டவுட்” என்று அவனது ஒற்றை விரல் வாசலை காண்பிக்க,

“என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க.. இதனோட பின் விளைவுகள் ரொம்ப பயங்காரமா இருக்கும்.. கேர்புல்லா இருங்க ம்மா” என்று விட்டு அவர் வெளியே போய் விட, நறுவேரல் திரும்பி தீயாய் காய்ந்துக் கொண்டு இருந்த கங்குவனை கொஞ்சமும் அசராமல் பார்த்தாள்.

அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். ஆழாக்கு சைஸ்.. ஸ்கூல் யூனிபாம் சேரியில் நீண்ட தலைமுடியை பின்னி முன்னாள் விட்டு இருந்தாள். அதில் மல்லிகைப்பூ வேற..

இது போதாது கண்களில் மையும் காஜலும் கூடவே கொஞ்சமாய் மேக்கப் வேற, காதில் ஆடிய ஜிமிக்கி, கழுத்தில் மூன்று நான்கு பவுனில் சங்கிலி.. ஒரு கையில் பிரேஸ்லெட், இன்னொரு கையில் வாட்ச் மாடர்ன் டீச்சர் என்று சொல்லும் அளவுக்கு அத்தனை தகுதியும் இருந்தது அவளிடம்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவனின் கூர் பார்வையில் இவள் தான் முகத்தை திருப்ப வேண்டி இருந்தது..

“எதுக்கு சார் என்னை கூப்பிட்டீங்க?” நேரடியாக விசயத்துக்கு வந்தாள்.

“டைம் என்ன ஆச்சு?” என்று கேட்டான். சலிப்புடன் அவனை பார்த்தவள்,

“டைம் கரெக்டா நைன் டென்” என்றாள்.

“இது தான் வர்ற டைமா?” நிதானமாக கேட்டான். அவனது நிதானம் எதிராளிக்கு வெட்டும் சவக்குழி என்று அவனுக்கு மட்டும் தான் தெரியும்.

“என் டைம் நைன் பிப்டீன்.. பர்ஸ்ட் பீரியட் ஸ்டார் அட் நைன் பிப்டீன்.. சோ என் டைம் கரெக்ட் தான். நீங்க தான் என்னை கூப்பிட்டு வச்சு என் டைமை வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க” என்றாள் கொஞ்சமும் பயப்படாமல்.

“ஓ...! நான் உன் டைமை வேஸ்ட் பண்றேன் இல்லையா?” நிதானமாக கேட்டவனை ஆமாம் என்பது போல பார்த்தாள் வேரல்.

“குட்..” என்றவன் “நீல்டவுன்” என்றான்.

“வா..ட் சே அகைன்” என்று அவள் ஒரு நிமிடம் படபடத்துப் போனாள். பின்ன சொல்லிக் குடுக்கும் டீச்சரையே நீல்டவுன் போட சொன்னால் யாருக்கு தான் திகைப்பு வராது.

“ஜஸ்ட் நீல்டவுன்” என்றான் மீண்டும் பொறுமையாக.

“ஆர் யூ மேட்.. நான் டீச்சர்.. நாட் ஸ்டுடென்ட்.. என்னவோ தப்பு செஞ்ச ஸ்டுடென்ட் மாதிரி நீல்டவுன் போட சொல்றீங்க” அவள் கோவப்பட, தன் சேரில் இன்னும் நன்றாக சாய்ந்து அமர்ந்தவன்,

“இன்னும் ஒரு முறை தான் சொல்வேன் அதுக்குள்ள நீ நீல்டவுன் பண்ணனும். சப்போஸ் நீ பண்ணலன்னா” என்று அவான் முடிக்கும் முன்பே அவள் கதவு பக்கம் செல்ல தொடங்கி விட்டாள்.

“போடா லூசு” என்று வாய்க்குள் அவனை திட்டியவள் கதவை திறக்கப் பார்க்க, கதவு கொஞ்சம் அசையவில்லை.

“டேமிட்” என்று கதவை எட்டி உதைத்தாள்.

அதில் அவளுக்கு தான் வலி எடுத்தது.

“மிஸ்டர் ஒழுங்கா கதவை திறங்க” படபடத்தாள்.

“கீப் ஒபிடியன்ட்.. நீ நீல்டவுன் பண்ணா ஜஸ்ட் ஹாப்பனவர்ல வெளில போகலாம்.. இல்லன்னா இந்த அறையை விட்டு இன்னைக்கு முழுசும் இங்கே தான் இருக்கணும்” என்று அவன் அசால்ட்டாக சொல்ல,

“சைக்கோ” என்று திட்டியவள் தன் போனை எடுத்து யாருக்கோ அழைக்கப் போக, அத்தனை வேகமாக அவளிடம் வந்தவன் அவளின் கையில் இருந்த போனை பறித்துக் கொண்டான்.

“மரியாதையா என் போனை குடுங்க.. இல்லன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..” அவள் மிரட்ட, இவன் கொஞ்சமும் அசையவில்லை.

தன் சேரில் அத்தனை தோரணையாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து விழி எடுக்காது அவளை தான் பார்த்தான்.

தன்னை அவமரியாதையாக பேசியவளை அடுத்து என்ன செய்வது என்று அவனின் புத்தி யோசித்தது.

எக்காரணத்தை கொண்டு அவன் கட்டளையை மட்டும் நிறைவேற்றவே கூடாது என்று சிலை போல நிற்கத் தொடங்கினாள்.

ஆனால் அவன் இட்ட கட்டளையை அரை மணி நேரம் கடந்து ஒரு மணி நேரமாக நீல்டவுன் செய்து விட்டே அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். வந்தவளின் முகம் பெரும் அவமானத்தை சுமந்து இருந்தது.

 

Loading spinner

Quote
Topic starter Posted : August 19, 2026 5:02 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top